Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkey Uyiranean!
Unakkey Uyiranean!
Unakkey Uyiranean!
Ebook85 pages37 minutes

Unakkey Uyiranean!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேற்று மதத்தவளை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படும் கார்த்திக். அவனுடைய காதல் கைகூடியதா? கார்த்திக்கைவிட சிறியவளாயினும் தன்னுடைய அண்ணனின் நலனுக்காகவும், குடும்பத்துக்காகவும் தன்னுடைய திருமண வாழ்க்கையையே பணயம் வைக்கும் ஜனனி. இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை படிப்போம் உனக்கே உயிரானேன்...

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580132608258
Unakkey Uyiranean!

Read more from Kamala Sadagopan

Related to Unakkey Uyiranean!

Related ebooks

Reviews for Unakkey Uyiranean!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkey Uyiranean! - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உனக்கே உயிரானேன்!

    Unakkey Uyiranean!

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அன்பே... அமுதே... கனியே...

    ஜனனி எரிச்சலுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

    ‘திருமகள்’ எனும் பெயரைக் கொண்ட அந்த லைப்ரரிக்கு வந்து ஜனனி தனக்கு வேண்டிய புத்தகங்களை படிக்க எடுத்துப் போவது வழக்கம். அவள் ஆங்கில நாவல்களைப் படித்தாலே, வைதீகத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை நடத்தும் அவள் அப்பா முகம் சுளிக்க ஆரம்பித்து விடுவார். பெரும்பாலும் தமிழ்ப் புத்தகங்களையே அவர் வீட்டில் இருக்கும் போதும் எடுத்துப் போவாள். அப்பா வெளியூருக்குப் போகும்போதெல்லாம், ஆங்கில நாவல்களையும் எடுத்துப் போவாள்.

    இப்பொழுது அவள் ஆங்கில நாவல் புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழ் நாவல்களை எடுத்துப் போக வந்தாள். ஆனால்... இங்கே புதிதாக ஒரு தொல்லை ஏற்பட்டு அவளை பாடாய்ப் படுத்துகிறது? யார் இந்தப் படுபாவி? இதுவரையில் லைப்ரரியில் பார்த்ததே இல்லையே. கால்மணி நேரமாக இதே லைப்ரரியில் ஜனனி எங்கே போனாலும் அவனும் பின்தொடர்ந்து வந்து உபத்திரவம் செய்கிறான்.

    அவள் லைப்ரரியின் உரிமையாளன் சோமு உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தாள். அவன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். குனிந்து ஒவ்வொரு புத்தகத்தின் நம்பரையும் குறித்துக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தான். அவனைச் சுற்றி ஏழெட்டு நபர்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தனர்.

    ‘இவனிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது’ என்பதை சுலபமாகப் புரிந்து கொண்டாள். அதேசமயம், அவன் பெரிய குரலில் கனைத்தான். ஜனனி அவன் பக்கம் பார்த்து முறைத்தாள். அவன் தன் கையிலிருந்த புத்தகத்தைத் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துக் காட்டினான். ‘அன்பே... அமுதே... கனியே’ இந்த வார்த்தைகள்தான் அந்தப் புத்தகத்தின் தலைப்பாக இருந்தன. ‘சரியான பொம்பளை பொறுக்கி போலிருக்கிறது’ என்று பல்லைக் கடித்தாள் ஜனனி.

    காதலோ காதல் இந்தத் தடவையும் அவன் உரத்த குரலில் சப்தம் போட்டு வாசித்தான். ஜனனியால் அதைத் தாங்கமுடியவில்லை. வேகமாக அவனை நெருங்கினாள்.

    ஹலோ! லைப்ரரியில் மட்டும்தான் பெண்கள் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடிந்தது... இதுவரை! ஏன்னா, கொஞ்சமாவது கௌரவமானவர்கள்தான் இங்கு வருவார்கள்... என்றாள்.

    கரெக்ட் என்றவன், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, நானும் புத்தகம் படிக்கதான் இங்கே வந்தேன் என்றான். அவனுடைய குறும்புப் புன்னகை ஜனனியின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.

    கே.ஜி படிக்கிற பாப்பா போல உரத்த குரலில்தான் உங்களுக்குப் படிக்கத் தெரியும் போலிருக்கே என்றாள்.

    அவளுடைய கோபத்தை ரசித்து சிரித்தான் அவன்.

    அதுகூட, புத்தகத்தின் தலைப்பை மட்டும்தான் படிப்பீர்களாக்கும்! அந்த ஒரு வரியிலேயே உங்களுக்கு முழுக்கதையும் புரிஞ்சிடுமோ?

    அது மட்டும் இல்லீங்க. இந்தப் புத்தகத்தோட ஏ.பி,சி,டியையே இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் என்று அந்தப் புத்தகத்தை அவளிடம் தூக்கிக் காட்டினான்.

    ‘காதலோ காதல்’ என்ற தலைப்பு ஜனனியைப் பார்த்து கண் சிமிட்டியது. கோபத்தினால் ஜனனியின் முகம் மிகவும் சிவந்தது. அவள் சோமுவிடம் இவனைப் பற்றிப் புகார் செய்ய முடிவு செய்தாள். டேபிளைச்சுற்றி அவன் அருகில் இருந்த மிகச் சிலரும் சென்று விடுவார்கள் என்ற எண்ணத்துடன் அங்கே காத்திருந்தாள்.

    அவளுக்கு மிக அருகில் ஒரு மெல்லிய குரல் மேடம் என்று அழைத்தது. ஜனனி சட்டென்று திரும்பி பார்த்தாள். அதே வாலிபன் நின்று கொண்டிருந்தான். அவளுடைய முகத்துக்கு மிக அருகில் அவன் ஒரு புத்தகத்தைக் காண்பித்தான். ‘மீண்டும் வருவேன்!’ என்ற தலைப்புக் கொண்ட ஒரு நாவல், அவன் முகத்தை மறைத்துக்கொண்டு செங்குத்தாக அவன் கையில் ஊஞ்சலாடியது.

    ஜனனி சோமுவிடம் தன்னைச் சீண்டிய வாலிபனைச் சுட்டிக்காட்டி புகார் செய்தாள். சோமு தலையசைத்து அவள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டான். தன் எதிரில் நின்றவனிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அவன் போகும் வரையில் காத்திருந்தான்.

    "மேடம்,

    Enjoying the preview?
    Page 1 of 1