Explore 1.5M+ audiobooks & ebooks free for days

From $11.99/month after trial. Cancel anytime.

Kanavum Kalyanamum
Kanavum Kalyanamum
Kanavum Kalyanamum
Ebook167 pages1 hour

Kanavum Kalyanamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பெண்கள் கனவு காண்பது தவறா? தன் வாழ்க்கை இப்படி அமைந்தால் நல்லது என்று அவள் ஆசைப்படக்கூடாதா? இது எந்தவிதத்தில் தவறு?” என்று கேட்டேன். காலத்துக்கேற்ப பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே போகின்றனர் என்பது தெளிவாகப் புரிந்தது. கனவு காண எந்தப் பெண்ணுக்கும் உரிமை உண்டு. ஆனால் எல்லா கனவும் நினைவாகுமா...? இந்தக் கேள்விதான் இந்த நாவலுக்குக் கருவாக அமைந்திருக்கிறது.இந்நாவலின் நாயகி விஜயாவுக்கு ஆசைகள் நிறைய உண்டு. அந்த ஆசைக்கனவுகளை, அவளைச் சென்னைக்கு அழைத்துவந்து, கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கிய சித்தப்பா குடும்பத்தின் மூலமே நிறைவேற்றிக் கொள்ளக் கனவு காண்பதுதான் விபரீதமாகிவிடுகிறது. இதனால் சித்தப்பா குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவளும் பாதிக்கப்படுகிறாள். அவளது நடவடிக்கைகள் அவளை எங்கே கொண்டு செல்கின்றன என்பதுதான் இந்நாவலின் கதையோட்டம். ஆசைக்கு அளவேயில்லை. ஆசைப்படுவதற்குக்கூட ஒரு எல்லை உண்டு என்பதை இந்த நாவல் மூலம் இந்தக் காலப் பெண்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறேன்.

Languageதமிழ்
PublisherPustaka Digital Media
Release dateJun 25, 2022
ISBN6580132608278
Kanavum Kalyanamum

Read more from Kamala Sadagopan

Related authors

Related to Kanavum Kalyanamum

Related ebooks

Related categories

Reviews for Kanavum Kalyanamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavum Kalyanamum - Kamala Sadagopan

    https://www.pustaka.co.in

    கனவும் கல்யாணமும்

    Kanavum Kalyanamum

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    வழக்கமாக எனது நாவல் ஒன்று வெளிவந்தவுடன் பெரும்பாலும் பெண் ரசிகைகள்தான் தொலைபேசி மூலமோ, நேரிலோ விமர்சிப்பார்கள். அண்மையில் வெளிவந்த ‘மேகலாபரணம்’ நாவலுக்கும் பெண் ரசிகைகளிடமிருந்துதான் நிறைய விமர்சனங்கள் வந்தன. ஆண் ரசிகர்களிடமிருந்து விமர்சனம் வருவது அபூர்வம்!

    ஒருநாள் வங்கியில் பணிபுரியும் ஓர் இளைஞர் எனது ரசிகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்கள் நாவல்களில் எப்பவும் பெண்களை ஆக்கபூர்வ கண்ணோட்டம் உள்ளவர்களாகக் காட்டி வருகின்றீர்கள். பெண்கள் மட்டும்தான் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வருவது போலவும், ஆண்கள் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது போலவும் எல்லா நாவல்களிலும் சித்திரித்து எழுதுகிறீர்கள். ஆனால், இப்போது எந்தப் பெண் கோட்பாடுகளை மதித்து நடக்கிறாள்? மனத்தில் வீண் கனவுகளைச் சுமந்துகொண்டு, அவை நிறைவேறும் என்ற எண்ணத்தில் நிஜத்தைக் காணத் தவறுகின்றனர் என்று விமர்சித்துப் பேசினார்.

    பெண்கள் கனவு காண்பது தவறா? தன் வாழ்க்கை இப்படி அமைந்தால் நல்லது என்று அவள் ஆசைப்படக்கூடாதா? இது எந்தவிதத்தில் தவறு? என்று கேட்டேன்.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை தேவை என்ற பெண்கள், அடுத்த சில ஆண்டுகளில் வங்கி வேலை பார்க்கும் வரனுக்காக அலைந்தனர். கடந்த பத்து வருடங்களில் சி.ஏ. மாப்பிள்ளைக்கு ஏங்கினர். இப்போது யு.எஸ்.ஸில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் தேவை என்கின்றனர். கனவு காண வேண்டியதுதான்; அதற்காகக் ‘கனவு மாப்பிள்ளை’ போல் இல்லை என்று மற்ற ஆண்களை எதற்குக் கேவலப்படுத்த வேண்டும்? என்றார்.

    பிறகுதான் தெரியவந்தது வங்கியில் வேலை பார்க்கும் அந்த இளைஞரை, பெண் பார்க்கச் சென்ற இடத்தில் ஒரு பெண் நிராகரித்து அனுப்பிவிட்டாள் என்று.

    அந்த இளைஞரின் கோபத்தில் நியாயம் இருக்கிறதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் காலத்துக்கேற்பப் பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே போகின்றனர் என்பது தெளிவாகப் புரிந்தது. கனவு காண எந்தப் பெண்ணுக்கும் உரிமை உண்டு. ஆனால் எல்லா கனவும் நினைவாகுமா...? இந்தக் கேள்விதான் இந்த நாவலுக்குக் கருவாக அமைந்திருக்கிறது.

    இந்நாவலின் நாயகி விஜயாவுக்கு ஆசைகள் நிறைய உண்டு. அந்த ஆசைக்கனவுகளை, அவளைச் சென்னைக்கு அழைத்துவந்து, கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கிய சித்தப்பா குடும்பத்தின் மூலமே நிறைவேற்றிக் கொள்ளக் கனவு காண்பதுதான் விபரீதமாகிவிடுகிறது. இதனால் சித்தப்பா குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவளும் பாதிக்கப்படுகிறாள். அவளது நடவடிக்கைகள் அவளை எங்கே கொண்டு செல்கின்றன என்பதுதான் இந்நாவலின் கதையோட்டம்.

    ஆசைக்கு அளவேயில்லை. ஆசைப்படுவதற்குக்கூட ஒரு எல்லை உண்டு என்பதை இந்த நாவல் மூலம் இந்தக் காலப் பெண்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறேன்.

    எனது நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரித்து வரும் பெரியவர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவர் குமாரர் திரு. ராமநாதன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கமலா சடகோபன்

    1

    அப்பனே... ஆபத்பாந்தவா... பறவை ஏறும் பரம புருஷா...

    புருஷோத்தமன் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் படுத்துக்கொண்டார்.

    சாப்பாட்டுக் கூடத்தில் எச்சில் இலைகளை எடுத்துக்கொண்டிருந்த அலமேலு அங்கிருந்தபடியே உரத்த குரலில் கத்தினாள்:

    சாப்பிட்டவுடனேயே படுக்காதீங்க... அதுவும் சிரார்த்த சாப்பாடு... ஜீரணம் ஆகாது. உங்க தம்பியைப் பாருங்கோ... ஜம்முனு முற்றத்திலே ராஜநடை போடுகிறார்.

    முற்றத்தில் உலாவிக்கொண்டிருந்த ரங்கராஜன் சங்கடத்துடன் நெளிந்தான்.

    அலமு! எனக்கு வயசாகிண்டு வர்றதில்லையா? முடியல்லே... அது நினைவில்லாம பேசறியே. என் தம்பி என்னைவிடச் சின்னவன். பத்து வயசு வித்தியாசம். பட்டிணத்திலே குளுகுளு அறையிலே உடல் நலுங்காம வேலை செய்யறவன். நான் கிராமத்திலே மண்ணை நம்பி இருக்கிறவன். சுபம், அசுபம் எல்லாத்துக்கும் மந்திரத்தைச் சொல்லிப் பிழைக்கிறவன்.

    ரங்கராஜனுக்கு அவர் பேசும் விதம் பிடிக்கவில்லை.

    மன்னி, நீங்க சாப்பிட உக்காருங்க... நான் உங்களுக்குப் பரிமாறுகிறேன்.

    எல்லாம் கிடக்க எனக்கு என்ன அவசரம்? பாத்திரங்கள் மலையாகக் குவிஞ்சிருக்கு. தேய்க்கணும். குறை பட்சணங்கள் செய்து முடிக்கணும். சோத்தை முதலில் வயித்துக்குக் கொட்டிண்டா என்ன வேலை ஆகும்?

    ரங்கா, நீ கவலைப்படாதே... உன் மன்னிக்குக் காபி கிடைச்சாப் போதும்... எட்டு யானை பலம் வந்துரும்.

    மன்னி, நான் பாத்திரங்களை பிரமாதமா தேய்ப்பேன், என்னை விடறீங்களா?

    வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு சமையல் அறைக்குள் போக முயன்றான்.

    இளையபெருமாளே - அலமேலு, மைத்துனர் வயதில் சிறியவராக இருந்தாலும் பெயரைச் சொல்லிக் கூப்பிடமாட்டாள். தன் அப்போதைய மூடுக்குத் தகுந்த மாதிரி அழைப்பாள்.

    ‘மைத்துனரே’ ‘இளையபெருமாள்’ இல்லாவிட்டால் தன் பெண்கள் கூப்பிடுவதுபோல் ‘சித்தப்பா’ என்று கூட அழைப்பாள். ஆனால் மொத்தத்தில் குரலில் நக்கல் நிறைந்திருக்கும்.

    அலமேலு தொடர்ந்து கூறினாள்: வாசற்படி தாண்டி நீங்க வரக்கூடாது. உங்க பாரியாள் லக்ஷ்மி இங்கே வந்திருந்தால், ரெண்டுபேருமே வேலை செய்யற கஷ்டம் தெரியாம பேசிண்டே முடிச்சிடுவோம். எங்க மாமனாருக்கு ரெண்டு பேரும் கடமையை முடிச்ச புண்யமும் கிடைச்சிருக்கும்.

    மன்னி, நான்தான் சொன்னேனே! லக்ஷ்மிக்கு வர முடியாத அசந்தர்ப்பம். வேண்டுமென்றே அவள் வராதிருப்பாளா?

    யாருக்குத் தெரியும்? ஒவ்வொரு வருஷமும் மாமியார் மாமனார் ரெண்டுபேர் சிரார்த்தத்திற்கும் அவள் வருவதில்லை!

    அவள் முணுமுணுப்புக் குரலில் கூறினாலும் ரங்கராஜன் செவிகளில் நன்றாக விழுந்தன.

    அவனுக்குக் கோபத்தினால் முகம் சிவந்தது. அவனுடைய மனைவி வேலைக்குச் சோம்பல் படும் குணம் உடையவள் இல்லை.

    இந்த மன்னியைவிட நன்றாகவே உழைக்கக் கூடியவள். வேலை செய்வதுகூடத் தெரியாமல் அமரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் செய்வாள். முணுமுணுப்பு, புலம்பல் நிஷ்டூரம் எதுவுமே அவளிடம் காண முடியாது.

    அவள் இங்கே வரத் தயங்குவதன் காரணம் இந்த மன்னியின் குணத்திற்கு பயந்துதான்.

    லக்ஷ்மி பட்டணத்தில் வசதியுடன் வாழ்வதைப் பற்றி மறைமுகமாக மன்னி ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

    ‘தன்னை மட்டும் இந்தக் குக்கிராமத்தில் மாட்ட வைத்திருக்கிறதே விதி’ என்னும் கோபம் அவளுக்கு.

    அண்ணா வைதீகம். கோயில் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்பா காலத்திலிருந்தே அப்பாவிடமே வேதம் பயின்றவர்.

    குடும்பத்திற்குச் சொந்தமாக மூன்று தலைமுறைகளாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அண்ணா குடும்பத்திற்கு சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லாமல் உதவுகிறது.

    ரங்கராஜனுக்கு அது எந்த திக்கில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. வீடும் சொந்தம்தான். ஆனால் அவன் அண்ணாவுக்கென்று விட்டுக் கொடுத்து ஒதுங்கி விட்டான்.

    அப்பா காலத்திலிருந்தே அண்ணாதான் அதைக் கவனித்துக் கொண்டார். எளிய குடும்பம் ஒன்றிலிருந்து அப்பாவே பெண்ணைத் தேர்ந்தெடுத்து அண்ணாவுக்குக் கல்யாணத்தையும் செய்து முடித்துவிட்டார்.

    ரங்கராஜன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா, இவனுக்குப் புத்தி தெரியும் முன்பே மறைந்துவிட்டாள்.

    ரங்கராஜன் ஏதோ ஒரு கல்யாண சத்திரத்து நிர்வாகஸ்தரின் கருணையினால் அந்த சத்திரத்தில் அவருடன் இருந்துகொண்டு காலேஜுக்குப் போனான். ஆனால் அந்த நிர்வாகஸ்தர் கல்யாணங்களில் சாப்பிட்டாலும் இவன் சாப்பிடமாட்டான்.

    அந்த அறையின் ஒரு மூலையில் தனக்காக எளிய முறையில் சமையல் செய்துகொண்டான்.

    கல்லூரி செலவுகளுக்கும் அந்த சத்திரத்திலேயே ஒழிந்த வேளைகளில் வேலை செய்து பணம் சம்பாதிப்பான்.

    கல்லூரிப் படிப்பு முடிந்ததும், வேலையில் இருந்து கொண்டு ஏ.ஸி.எஸ். படித்து முடித்தான். அந்தப் படிப்புக்குத் தகுந்த விதத்தில் ஒரு உயர்ந்த வேலையும் உடனே கிடைத்துவிட்டது.

    அண்ணாதான் இந்த லக்ஷ்மியை அவனுக்கு மணம் முடித்து வைத்தார். முதலில் மன்னிக்கு, லக்ஷ்மியை அவள்தான் தேடிக் கொண்டுவந்தவள் என்ற பெருமை அதிகமாகவே இருந்தது. லக்ஷ்மிக்கு மாமியார் பதவியை வகித்தாள். ஓர்ப்படியாக, ஒற்றுமையாக உறவாடவில்லை. லக்ஷ்மியும் மாமியாருக்கு அளிக்கும் மரியாதையை ஓர்ப்படிக்குக் கொடுத்து வந்தாள்.

    லக்ஷ்மியும் பட்டதாரி. திருமணம் முடிந்து ராகுலும், ராதாவும் பிறந்த பிறகுதான், அதுவும் அவர்கள் வளர்ந்த நிலையில் இருக்கும் போதுதான் அவளுக்குப் பொறுமை போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தாள்.

    "சிரார்த்தத்திற்காக கிராமத்திற்குப் போக வேண்டுமா? அவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1