Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Varai
Kadaisi Varai
Kadaisi Varai
Ebook153 pages56 minutes

Kadaisi Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குணசீலன், ரத்னா இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த இருவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக குணசீலன் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். இப்பழக்கத்தால் இவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த துயரங்கள் என்ன? அதன் பின் நடந்தது என்ன? என்பதை வாசித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580155610617
Kadaisi Varai

Read more from Lakshmi

Related to Kadaisi Varai

Related ebooks

Reviews for Kadaisi Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Varai - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடைசி வரை

    Kadaisi Varai

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    மாலை, அலுவலகம் மூடும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது.

    வெகு நேரம் குனிந்தபடியே கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவின் கழுத்து வலித்தது.

    அன்றைய வேலையைச் செவ்வனே முடித்துவிட்ட திருப்தியுடன் உள்ளங்கையால் கழுத்தைத் தாங்கிக்கொண்டு நிமிர்ந்தாள்.

    இன்னும் இரண்டு நிமிடம்தான் இருக்கிறது என்று கடிகார முள் காட்டியது. முகத்தைக் கழுவி, கூந்தலைச் சீராக்கிக்கொள்ள, பின்பக்கம் இருந்த பெண்கள் அறைக்குச் செல்ல அவள் அவசரமாக எழுந்தாள்.

    தட்டெழுத்துப் பகுதியில் புதிதாக வந்து சேர்ந்துள்ள அந்த இளம் பெண் பற்களைக் காட்டி மெதுவாகச் சிரித்தபடி அருகே வந்தாள்.

    குழந்தைகள் ஆண்டு அதுக்காக நம்ம ஆபீசிலே ஒரு நிதி வசூலிச்சு அடையாறு ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்புவதுன்னு திட்டம். தெரியுமில்லியா? எல்லோரும் தங்கள் பங்கைக் கொடுத்திட்டாங்க. நீங்களும் தலைமைக் கணக்கரும்தான் பாக்கி... நோட்டுப் புத்தகத்தை ரத்னாவின் முன் நீட்டினாள்:

    ஐந்து,

    பத்து,

    இருபது,

    ஐம்பத்தொன்று...

    பெயர்களின் எதிர்ப்புறம் எழுதியிருந்த தொகை, அவளைத் திகில் கொள்ளச் செய்தது.

    மாதத்தின் கடைசிவாரம், அது. போகவர பஸ் செலவிற்குப் போதுமா என இழுத்துப் பிடித்து, வீட்டுச் செலவையும் சமாளிக்க வேண்டிய நிலை. இப்போது இந்த நிதிக்கு வேறு ஏதாவது வழங்கியாக வேண்டுமே!

    கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு, அவசரமாகப் பையை எடுத்து இழுப்பை நீக்கித் துழாவினாள்.

    ஐந்து ரூபாய் நோட்டாக முப்பது ரூபாயும், கொஞ்சம் சில்லரையும் எஞ்சியிருந்தன.

    ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டிவிட்டு, நோட்டுப் புத்தகத்தில் தன் பெயரை எழுதித் தொகையைக் குறிப்பிட்டுக் கொடுத்தாள்.

    இந்தப் பகுதிக்கே உதவி மேற்பார்வையாளர், ஐந்து ரூபாய்தானா...? இளம் பெண் முகத்தைக் குலுக்கினாள்.

    உதவி மேற்பார்வையாளர்தானே, அதனால் இந்த உதவிதான். தற்சமயம் என்னால் ஆகும் கசப்பை நெஞ்சில் அழுத்தியபடி, லேசாகச் சிரித்துக்கொண்டே எழுந்து பின்னால் சென்றுவிட்டாள்.

    உங்கள் கணவரும் சம்பாதிக்கிறார். நீங்கள் எல்லோரும் தாராளமாக உதவலாம்.

    அந்தப் பெண் முணுமுணுத்துக்கொண்டே சென்றதைக் காதில் போட்டுக் கொள்ளாதவள் போல கைக் குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள், ரத்னா.

    அவள் கணவன் சம்பாதிக்கிறான். கை நிறையச் சம்பாதிக்கிறான் உண்மைதான். ஒழுங்காக அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தால் அவள் விட்டுப்போன அதே வேலைக்கே மறுபடியும் வந்திருக்க வேண்டாமே! அதை அந்தப் புதிதாக வேலையில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் சொல்லிக்கொள்ள முடியுமா?

    எவரிடமும் சொல்ல முடியாத சங்கடம். அண்ணனிடம் கூட மனம் விட்டுப் பேச முடியாது. தன்னுள்ளே தன் கவலைகளைப் புதைத்துக்கொண்டு அழுகையை அடக்கி, பொறுமையை வரவழைத்துக்கொண்டு அவள் வாழ்கிறாள். அவளது கவலைகளை யாரிடம் பங்கிட்டுக்கொண்டு மனம் விட்டுப் பேச முடியும்?

    பையில் கிடந்த பிளாஸ்டிக் குங்குமச் சிமிழைத் திறந்து, விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டபோது சுரீர் என்று ஞாபகம் அன்று வெள்ளிக் கிழமை. அந்தப் பொட்டு நிலைக்க வேண்டும் என்று அவள் கணவன் குணசீலன் மஞ்சள் காமாலை நோயில் வேதனைப்பட்டபோது, மாங்காடு காமாட்சியை வேண்டி, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விடியுமுன் எழுந்து பஸ்சில் பயணம் செய்தது நினைவில் எழுந்தது. தொடர்ந்து ஆறு வாரம், பொழுது புலரும் வேளையில் சென்று அம்மனின் கருணையை வேண்டி நின்ற நினைவு... நெஞ்சை என்னவோ செய்தது.

    கடுமையான காமாலை நோயிலிருந்து அவன் பிழைத்துவிட்டான். இப்போது...?

    சிந்திக்க முடியாமல் கண்கள் கலங்கின. உணர்ச்சிகள் தொண்டையை இறுக்கின. வேகமாகக் சீராக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

    நம் நிறுவனத்துத் தலைவர் இந்த நிதிக்குக் கணிசமாகப் பதினைந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கார். கிட்டத்தட்ட இருபத்தி நான்காயிரம் சேர்த்திட்டேன். கால் லட்சம் என் குறிக்கோள். கொடுத்தாலும் கணிசமாகக் கொடுக்கவேணும், இல்லையா? பாவம் குழந்தைகள்? அந்தப் பெண் நோட்டுப் புத்தகத்தை இரும்பு அலமாரியில் வைத்துப் பூட்டியபடியே பேசினாள்.

    பாவம், கண்ணன்! தன் நாலு வயது மகனின் நினைவு அவள் நெஞ்சை அடைத்தது. பக்கத்தில் இருந்த நர்சரி பள்ளியில் இருந்து பனிரெண்டு மணிக்கு வேலைக்காரி வீரம்மா அவனைக் கூட்டிக்கொண்டு வருவாள். வீட்டுச் சாவியைக் கூட வீரம்மாவிடம்தான் அவள் கொடுத்திருந்தாள்.

    வேலைக்காரியிடம் வீட்டுச் சாவியைக்கூடக் கொடுத்து வரீங்க? அந்தப் பகுதி நிர்வாகி கந்தசாமி வியப்புடன் கேட்டபோது, அசட்டையாகத் தோள்களை குலுக்கினாள் அவள்.

    நம் அருகில் இருப்பவங்களை நம்பித்தானே நாம் வாழணும்? வீரம்மா ஐந்து வருஷமா வேலை செய்கிறாள். ரொம்ப நல்ல குணம்.

    நல்லவளா இருக்கலாம். துணி... பணம், பாத்திரம்னு பல பொருள்களை அவங்க கைக்கு எட்டும்படி அசட்டையா போட்டு, அவங்க ஆசையைத் தூண்டிவிடறது தவறு இல்லியா?

    அவள் பதில் பேசவில்லை. ‘ஐயா எங்கள் வீட்டில் வீரம்மா தட்டிக்கொண்டு போகக்கூடிய சாமான் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் வேறு ஓர் அரக்கன் முன்னமேயே தட்டிக்கொண்டு போய்விட்டான்’ என்று சொல்ல வேண்டும் போன்ற எரிச்சல். ஆனால் மெதுவாக முறு வலித்துவிட்டுப் பேச்சை அத்துடன் துண்டித்துக்கொண்டு, வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

    கந்தசாமி வயதானவர்தான். இருந்தபோதிலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து வேலைபார்க்கும் நிறுவனங்களில், பெண் ஊழியர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருப்பதுதான் சிறந்தது என்ற கொள்கை உடையவர். இல்லாமையை சமாளிக்கத்தான் மறுபடியும் அதே நிறுவனத்தில் அவள் வந்து வேலைக்கு அமர்ந்திருக்கிறாள். தன் சுயமதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டாமா? கல்யாணமானவள் அளவோடு பிற ஆண்களிடம் பேசுவதுதான் முறை என்ற கொள்கை அவளுக்கும் உண்டு.

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பிகளும் குழாய்களும் தயாரிக்கும் சுந்தரம் அண்டு பார்ட்னரின் மொத்த வியாபாரக் கடை, அலுவலகம் யாவும் அடங்கிய நிறுவனம் அது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையின் நடுவே, உள்ளே திரும்பிய அடைக்கலம் அம்மைத் தெருவின் முகப்பில் அந்தப் பெரிய இரண்டு மாடிக் கட்டடம் இருந்தது. கீழே கடை, மாடிப் பகுதியில் அலுவலகம்.

    பி.காம் தேர்வில் வெற்றியடைந்ததும் அவள் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் சேர்ந்தாள். தட்டெழுத்து, சுறுக்கு எழுத்து, செயலாளர் பயிற்சி அனைத்தும் பயின்று அதிக மதிப்பெண்களுடன் தேர்ந்து எடுக்கப்பட்டாள். வேலையும் அதே தனியார் கல்வி நிலையத்தாரின் சிபாரிசின் பேரில் அவளை தானாகவே தேடி வந்தது.

    அண்ணன் செந்திலுக்கு அவள் வேலைக்குப் போவது பிடித்தமாக இருக்கவில்லை. ஒரு மின்விசைப் பொருட்கள் விற்கும் கடையில் சாதாரண ஊழியராகச் சேர்ந்து இப்போது உதவி மானேஜர் பதவிக்கு உயர்ந்திருந்தார். கணிசமான சம்பளம் கட்டுச் செட்டான குடித்தனம் இரண்டே குழந்தைகள். சொந்த வீடு. போகவர ஸ்கூட்டர் என்ற வசதியான வாழ்க்கை அவருக்கு.

    கல்யாண செலவிற்காவது அவள் கொஞ்சம் சம்பாதித்து சேர்த்து வைக்கட்டுமே? அண்ணி பாலம்மாளின் யோசனை.

    எடுத்த எடுப்பிலேயே நானூற்றைம்பது ரூபாய் சம்பளம் என்றதும் ரத்னாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. சம்பாதிக்கிறோம் என்ற தெம்பு, அண்ணி சொன்னபடியே முதல் இரண்டு ஆண்டு அவள் வேலை செய்து குருவி சேர்ப்பதுபோல் ஏழாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தாள்.

    இப்போது அவசரத்திற்கு என்று அவள் கணக்கில் வங்கியில் ஒரு நூறு ரூபாய்கூடத் தேறவில்லை! அப்படி ஒரு நிலை. தொடர்ந்து அவள் வேலையில் இருந்தால் இப்போது அந்தப் பகுதிக்கே தலைமை மேற்பார்வையாளராகியிருப்பாள். சம்பளமும் ஆயிரத்துக்கு மேல் ஓடி விட்டிருக்கும், கணவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு திருமணம் ஆனதும் வேலையை உதறிவிட்டாள்.

    என்ன நடந்தது?

    அதே நிறுவனத்திற்கு நான்கு ஆண்டு கழித்து விண்ணப்பத்துடன் தலைவர் சுந்தரத்தைப் பார்க்க வர வேற்பறையில் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. சுந்தரத்திற்கு இளகிய மனம். தனது நிலையை அவள் எடுத்துச் சொன்னதும் உடனடியாக ஒரே வாரத்தில் மீண்டும் அந்தப் பகுதியில் அவளை வேலைக்கு அமர்த்திவிட்டார். ஆனால் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வந்ததில் அவள் அடியிலிருந்து தொடங்க

    Enjoying the preview?
    Page 1 of 1