Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velichathai Thedi...
Velichathai Thedi...
Velichathai Thedi...
Ebook135 pages45 minutes

Velichathai Thedi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவனை பிரிந்து இரு குழந்தைகளை வைத்து போராடும் சாரதா. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு நிகழ்ந்தது என்ன? தனிமையின் இருளில் மாட்டிக்கொண்ட சபரிநாதன் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்தாளா வசந்தா? வாருங்கள் நாமும் வெளிச்சத்தை தேடி போவோம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155608544
Velichathai Thedi...

Read more from Lakshmi

Related to Velichathai Thedi...

Related ebooks

Reviews for Velichathai Thedi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velichathai Thedi... - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெளிச்சத்தைத் தேடி...

    Velichathai Thedi...

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    நடு இரவுக்குப் பின்னும் உறக்கமின்றி அவன் படுக்கையில் புரண்டான்.

    மண்டை வெடித்துவிடும் போன்ற கவலைகளின் இறுக்கத்தில் அவனுக்குத் துளிகூட தூக்கமே வரவில்லை. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அடுத்த வீட்டு பால் குக்கர் ஓங்கிய ஒலியில் சீட்டியடித்துக் கொண்டிருந்தது துல்லியமாகக் கேட்டது.

    அப்படியென்றால் விடியற்கால வேளை. அவனையுமறியாது உடல் அயற்சியால் உறங்கி விட்டிருக்கிறானே.

    இடையே இருந்த ஒட்டுச் சுவரைத் தாண்டி தொடர்ந்து அந்த அடுத்த வீட்டு அம்மாள் கூப்பாடு போட்டதும் காதுகளில் நன்றாக விழுந்தது.

    ஞாயிற்றுக்கிழமையில் கூட காப்பிக்கு இப்படி ஏன் பறக்கறீங்க? சித்த படுத்துக்கிடக்கிறதுதானே? எதுக்கு அவசரமா எழுந்து என் பிராணனை வாங்கிகிட்டு... மேலே முணுமுணுத்த அவள், பாத்திரங்களை 'ணங்' என்று வைப்பது கேட்டது.

    ஆமாம்! இன்று ஞாயிற்றுக்கிழமை. அவன் ஏன் அவசரமா எழுந்திருக்க வேண்டும்? பல ஆண்டுகள் ஏற்பட்ட பழக்கத்தின் பாதிப்பு, அவனையுமறியாது கண்கள் சமையல் அறைப்பக்கம் திரும்பின.

    இருட்டு அப்பிக்கிடந்த அந்தஅறை முகத்தில் அறைவதைப் போன்ற நினைவை உள்ளத்திலே உண்டாக்கவே கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

    அம்மா இறந்துபோய் சில மாதங்களுக்கு மேலாகி விட்டன. ஆனாலும் அவள் அந்த வீட்டிலே எங்கேயோ இருப்பதைப் போன்ற அந்த நினைவை அந்தப் பரிவை உதற முடியவில்லையே!

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மா சொல்வாள். வார முழுக்க ஓடா உழைக்கிறே. இன்னிக்காவது சித்த நிம்மதியாகத் தூங்கி ஆற, அமர எழுந்து குளியேன். என்ன அவசரம்? அதற்குள்ளே நான் இட்லி வார்த்து வெங்காய சாம்பார் பண்ணி உனக்குப் பிடிச்ச தேங்காய் சட்டினி அரைச்சு தயாரா வச்சுடறேன். சூடா பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வச்சுட்டு கூப்பிடறேன். இந்தக் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டாம். நான் சொல்றதக் கேளு. ஒரு சின்ன அண்டா தண்ணியை சுட வைக்க நாழியாகாது.

    அவனைப் பற்றி எல்லாவகையிலும் கவலைப்பட்ட ஒரே ஒரு உயிர் அவன் தாய். அந்த நெருங்கின பந்தமும் சொந்தமும் போனதும் அவன் தன்னந்தனியனாகி, அந்த வீட்டின் வெறுமையில், அதைச் சூழ்ந்து நின்ற வறுமையின் நடுவில் எப்படியோ சில மாதங்களைக் கடத்திவிட்டிருந்தான்.

    எந்தக் கிழமையாக இருந்தா என்ன? ஒரே சீரா காரியங்களை கவனிச்சாதான் உருப்பட முடியும். இன்னிக்கு ஓய்வுன்னு அதிக நேரம் தூங்கினா நாளைக்கு வேலைக்கு நான்தானே எழுந்து போகணும். பதிலுக்கு அடுத்த வீட்டுக்காரர், மனைவியை அதட்டியது கேட்டது.

    அவசரமாகத் தலையணையைத் தட்டி ஜமுக்காலத்தில் வைத்துச் சுருட்டி ஒரு பக்கம் வைத்தான். பொழுது வேகமாகப் புலர்ந்து புது வெளிச்சம். கம்பித் தடுப்புகள் வழியே முற்றத்திலே பளிச்சென்று பரவுவதைக் கவனித்தான்.

    சுவரில் தொங்கிய காலண்டரை திரும்பிப் பார்த்ததுமே பகீரென்ற உணர்வு.

    மாதம் பிறந்து முதல் ஞாயிற்றுக்கிழமை. விடிந்ததும் விடியாததுமாக வீட்டுக்காரர் வாடகைக்கு வந்து நிற்பாரே!

    ஈட்டிக்காரனைக்கூட ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம். ஆனால் அவனது வீட்டின் சொந்தக்காரரை சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பது லேசான காரியம் அல்லவே! அதுவும் மூன்றுமாத வாடகை பாக்கியாக நிற்கும்போது...

    எழுந்து அலமாரியைத் திறந்து துளியளவு ஒட்டிக்கொண்டிருந்த பேஸ்ட்டைப் பற்களைக் கடித்துக்கொண்டு பிரஷ்மீது பரப்பிக் கொண்டான்.

    பிளாஸ்டிக் வாளியையும் அலுமினிய சொம்பையும் தூக்கிக்கொண்டு பின்பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்திற்கு வந்தான். அடுத்த தெருவிலிருந்த ஒரு வீட்டின் கூரையோடு ஒட்டிய பின்சுவர் கொண்டதொரு சின்னஞ்சிறு தோட்டப்பகுதி. அதற்குள் ஒரு கிணறு, துணி துவைக்கும் கல், சிமெண்ட் தொட்டி, வீட்டுக் கூரைமீது ஓடி ஏறி வியாபித்துக் கொண்ட ஒரு நித்தியமல்லிச் செடி. இத்யாதிகள், கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் வசதியும் உண்டு.

    ஆண் பிள்ளை அழக்கூடாது என்ற சங்கல்பத்தையும் மீறி அவன் ரகசியமாக அம்மாவை நினைத்து அவ்வப்... போது உகுக்கும் கண்ணீர் போல தண்ணீர் எப்பொழுதாவது வரும்.

    சமையலிலிருந்து ஸ்நானம், குடிநீர் எல்லாவற்றிற்கும் தோட்டத்துக் கிணற்றையேதான் நம்பி அவன் அம்மாவும் வாழ்ந்தனர். தண்ணீர் கொஞ்சம் கசக்கத்தான் செய்தது.

    இருபத்தஞ்சு ரூபாய் வாடகைக்குத் தனிவீடு. இதுக்கு மேலே மீன, மேஷம் பார்க்கக்கூடாது என்று அப்பாவும், அம்மாவும் சேர்ந்து குடியேறிய வீடு அது. மெள்ள வாடகை விஷமாக ஏறி இப்போது நூற்றைம்பது ஆகிவிட்டிருந்தது.

    ஐநூறு கிடைக்கும். போகட்டும் பாவம்னு பார்க்கிறேன்! என் மகன் அமெரிக்காவிலிருந்து வரப்போகிறான்! இந்த வீட்டை இடித்து ஃபிளாட் கட்டிப் போட்டு விடலாம் என்பது என் கருத்து. இப்போ இந்த இடத்து விலை என்ன தெரியுமோ? வீட்டுக்காரர் வேலு முதலியார் அடிக்கடி அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

    ஃபிளாட் கட்ட அவரிடம் பணம் கிடையாது. விற்கவும் மனமில்லை. வெறும் வெத்து வேட்டு என்பதை உணர்ந்த அவனும் ஏதோ உங்கள் தயவு சார். எங்களைப் போன்றவங்க உங்களுடைய கருணையால் தானே வாழ்ந்து கொண்டு இருக்கோம் என்று புகழ்ந்து வைத்தான்.

    வாடகை வாங்க வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மனிதன் அம்மா போட்டுக்கொடுக்கும் காப்பியைக் குடித்துவிட்டுத் தமது சரிகை அங்கவஸ்திரத்தின் மடிப்புக் கலையாது அதைத் தடவிக் கொண்டபடி வீட்டை வளைய வருவார்.

    இந்த இடத்தில் ஆணி அடிக்காதீங்கன்னு முன்னமே சொல்லியிருந்தேனே ஏதாவது ஒரு குறையைக் கண்டு கோபத்துடன் மிரட்டுவார்.

    இந்த இடத்தில் முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஆணி அடிச்சதுதான். நீங்க ஏற்கனவே பார்த்து கண்டித்த விஷயம். அதுக்குப் பிறகு சுவத்திலே நாங்க கை வைத்ததே இல்லை அம்மா மெல்லிய குரலில் கூறுவாள்.

    போன மாதம் வாடகை வசூலுக்கு வந்தப்போ நீங்க கொடுத்த நெய்முறுக்கு ரொம்ப பிரமாதம்னு என் மனைவி புகழ்ந்தா.

    அம்மாவுக்கு உடனே புரிந்துவிடும். ஆசாமிக்கு வாடகையுடன் வகையாகத் தின்று ருசிக்க பலகாரம் வேறு மூட்டை கட்டித்தரக் கேட்கிறார்.

    தொலையட்டும். அந்தக் கல்யாண வீட்டு முறுக்கு, அதிரசம், லட்டு இவைகள் செய்யச் சென்ற இடத்தில் வீட்டுக்கார அம்மா அவள் பங்குக்குக் கட்டிக் கொடுத்த பொட்டலத்திலிருந்து இரண்டு லட்டுகளை எடுத்து பிளாஸ்டிக் பையில் போட்டுத் தந்து தொலைப்போம். என்று அவள் ஒரு சிறு பொட்டலத்தைக் கொண்டுவந்து கூடத்து முக்காலி மீது வைப்பாள். வாடகைப் பணத்துடன் வேலு முதலியார் லட்டுப் பொட்டலத்தை மறக்காது எடுத்துக் கொண்டு கிளம்புவார்.

    கல்யாண பட்சணங்கள் தயாரித்துத் தருவதுதான் அம்மாவின் வேலை. தங்கை சரோஜாவையும், அவனையும் அம்மாவையும் கைவிட்டு விட்டு அப்பா, தாம் வேலை செய்த பட்டுப்புடவைக் கடையில் பணத்தைக் கையாடி விட்டுத் தலைமறைவாக ஓடிவிட்டபோது அம்மாவின் சமையற்கலைதான் அவர்களைப் பட்டினியின்றிக் காத்தது.

    அப்பாவைத் தேடிப்பிடித்து சிறையில் அடைக்காதபடி, அவர் எடுத்துக் கொண்டு மாயமான ஐயாயிரம் ரூபாயைத்தான் தருவதாக ஒப்புக்கொண்டு ஜவுளிக் கடைக்காரர் காலில் விழுந்து கெஞ்சி அழுததை அவன் நினைத்த போதெல்லாம் நெஞ்சு கொதித்துப்போனான்.

    "என் கணவர் திருடன், ஒத்துக்கிறேன். இதோ பாருங்கோ, இந்தப் பிஞ்சுக் குழந்தைகள். இவர்கள் வருங்காலம் சூன்யமாகி விடக்கூடாது. ஏழையான எங்களுக்கு பெண் குழந்தைக்குக் கல்யாணம் செய்து வைத்து தலை நிமிருவதே பெரிய காரியம். ரொம்ப சிரமமான சங்கதி கடையில் திருடிட்டு அப்பன்

    Enjoying the preview?
    Page 1 of 1