Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennodu Oru Kanavu
Pennodu Oru Kanavu
Pennodu Oru Kanavu
Ebook146 pages55 minutes

Pennodu Oru Kanavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவித்ரா பெயருக்கேற்றார்போல் அருமையான குணவதி. அவளுக்கு அமைந்ததும் நல்ல அத்தை, மாமா. வாழ்க்கை சீரான நீரோட்டமாய் இருந்தால் சுவாரசியம் இல்லை. ஆங்காங்கே சுழல்கள் இருப்பதில் தான் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு என்பதைப் புத்திசாலிகள் அறிவார்கள். தேர்ந்தெடுத்து வைத்த ஒரு சில கதாபாத்திரங்களுடன் அழகாய், உணர்ச்சியாய், தெளிவாய் சொல்லிப் போகிறார்.

பவித்ரா வாழ்க்கையில் ஜெயிக்கிறாளா என்பதை அறியத் தவிக்க வைக்கும் எழுத்து. ஒவ்வொருவர் மனதிலும் இரு சக்திகளின் போராட்டம். எதன் கை ஓங்குகிறது என்பதில் குணாதிசயம் புரிபடுகிறது.

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580153210005
Pennodu Oru Kanavu

Read more from R. Subashini Ramanan

Related to Pennodu Oru Kanavu

Related ebooks

Reviews for Pennodu Oru Kanavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennodu Oru Kanavu - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெண்ணோடு ஒரு கனவு

    Pennodu Oru Kanavu

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    என்னுரை

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    சமர்ப்பணம்

    என் அன்புச் செல்வங்களான பேத்திகள் அத்விகா, ஆத்யா மற்றும் அனன்யாவுக்கு...

    முன்னுரை

    (எழுத்தாளர் ஜி.ஏ. பிரபா)

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    பெண்ணோடு ஒரு கனவு- உங்கள் கைகளில் தவழும் அற்புதமான நாவலுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    சங்கப் பலகையில் திருமதி சுபாஷிணி ரமணன் எழுதிய மற்றொரு நாவல். அழகான, இயல்பான குடும்பக் கதை, ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்ய திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நகர்கிறது.

    அறியாப் பருவத்தில் ஏற்படும் காதல் ஒரு சுழல் மாதிரி நம்மை இழுத்துப் போய்விடும். ஆனால் தெய்வ அருளால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்க்க சிலர் வருவார்கள். கல்லூரி வாழ்க்கையில் ஒருவனின் பேச்சை நம்பி, காதல் என்று வீட்டைவிட்டு ஓடி வந்த பவித்ராவை, அவளின் அத்தை, மாமா காப்பாற்றி அவளின் திறமைகளைப் பளிச்சிட வைக்கிறார்கள்.

    மீண்டும் தவறு ஏற்படக் கூடாது என்ற பவித்ராவின் புத்திசாலித்தனம், அன்பான அனுசரணையான தாய், வழிகாட்டும் தோழி என்று அழகான உறவுகள் அவளுக்கு. மீண்டும் வரும் விக்னேஷ், அவளிடமிருந்து வீட்டைக் கைப்பற்ற நினைக்கும் பொறுப்பில்லாத அண்ணன் குமரன்.

    சுயநலக் கும்பல்களிடமிருந்து பவித்ரா தப்பிக்க வேண்டுமே, மீண்டும் விக்னேஷ் வலையில் அவள் விழுந்து விடக்கூடாதே என்ற தவிப்புடன் நம்மைக் கடைசி வரை அழைத்துச் செல்கிறது கதை. இயல்பான வசனங்கள். அனாவசிய அறிவுரைகள் இல்லாமல் மெதுவாக, நகர்ந்து கதையே, தன்னை நமக்குப் புரிய வைத்துவிடுகிறது.

    முடிவில் பவித்ரா எடுக்கும் முடிவும், அவளின் தீர்மானமும் நம்மை ஒரு மிகப்பெரிய திருப்தி, நிறைவில் ஆழ்த்திவிடுகிறது. இதுதான் ஓர் எழுத்தாளரின் வெற்றி. கதை நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்.

    பெண் குனியக் குனியக் குட்டப்படுகிறாள்.

    பிறந்ததிலிருந்து பெண் பிள்ளைகளுக்கு என்ன கட்டுப்பாடு. இதெல்லாம் அவளை பக்குவப்படுத்துவதற்குப் பதிலாக, உலகைப் பார்த்துப் பயப்படச் செய்கின்றன.

    ஒரு ஆண் எப்படிச் சீரழிந்தாலும் சமுதாயம் தன் பேச்சாலேயே அவளைக் குத்திக் கிழிக்காதா? சாதனைகள் செய்யவோ, தனக்கான வாழ்க்கையை தேர்வு செய்யவோ பொதுவாழ்வில் ஜெயிக்கவோ முடியும் என்ற அனுபவ வரிகள் அங்கங்கே ஜொலிக்கிறது.

    தன் வாழ்க்கை தவறான வழியில் போக இருந்தும், அனுபவம், புத்திசாலித்தனத்தால் அதை மாற்றி, செம்மைபடுத்திக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை தன் எளிமையான எழுத்தால் அழகாகக் கூறியுள்ளார்.

    அடுத்தடுத்து அவரின் கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது இக்கதை. சலிப்பூட்டும் வர்ணனைகள், காதைச் சுற்றி வளைக்கும் கருத்துகள் இல்லாமல், நேராக ராஜபாட்டையில் போகும் கதை படிக்கும் நமக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. முடிவில் அப்பாடா என்று நமக்குள் பவித்ரா ஏற்படுத்தும் திருப்தி, ஒரு எழுத்தாளராக திருமதி சுபாஷினி ரமணனுக்குக் கிடைத்த வெற்றி.

    இப்படிப்பட்ட வெற்றி அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மகாபெரியவாளை வணங்கி, வாழ்த்துகிறேன். இன்னும், இன்னும் நிறைய கதைகள் அவர் எழுத வேண்டும். பரிசுகளும், விருதுகளும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவர் எங்கள் சங்கப் பலகையின் பெருமைமிகு எழுத்தாளர் என்பதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி.ஏ. பிரபா.

    வாழ்த்துரை

    (எழுத்தாளர் ரிஷபன் அவர்கள்)

    மனிதர்களில் எப்போதும் இரண்டே வகை.

    நல்லவர்கள், நல்லவர்களாய் மாறப் போகிறவர்கள்!

    இது சாத்தியமா என்று கேட்டால் ஆம் என்றே நல்ல படைப்பாளிகள் சொல்வார்கள். சுபாஷிணி மேடத்தைப்போல்!

    பவித்ரா பெயருக்கேற்றார்போல் அருமையான குணவதி. அவளுக்கு அமைந்ததும் நல்ல அத்தை, மாமா. வாழ்க்கை சீரான நீரோட்டமாய் இருந்தால் சுவாரசியம் இல்லை. ஆங்காங்கே சுழல்கள் இருப்பதில் தான் உள்ளிருக்கும் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு என்பதைப் புத்திசாலிகள் அறிவார்கள்.

    தேர்ந்தெடுத்து வைத்த ஒரு சில கதாபாத்திரங்களுடன் அழகாய், உணர்ச்சியாய், தெளிவாய் சொல்லிப் போகிறார்.

    பவித்ரா வாழ்க்கையில் ஜெயிக்கிறாளா என்பதை அறியத் தவிக்க வைக்கும் எழுத்து. ஒவ்வொருவர் மனதிலும் இரு சக்திகளின் போராட்டம். எதன் கை ஓங்குகிறது என்பதில் குணாதிசயம் புரிபடுகிறது.

    சுவாரசியமான நாவலுக்கு சுபாஷிணி மேடம் கேரண்ட்டி.

    வாசித்து மகிழ நீங்கள் தயாரா?!

    வாழ்த்துகளுடன்

    ரிஷபன்

    என்னுரை

    என்னுடைய இரண்டாவது நாவல் இது. எழுத்தாளர் ஜி.ஏ. பிரபா நடத்திவரும் ‘சங்கப்பலகை’ என்னும் முகநூல் குழுமத்தில் தினம் ஒரு அத்தியாயமாக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றது.

    உரிமையுடன் நான் கேட்கும்போதெல்லாம் மனமுவந்தும், உடனேயும் தங்கள் வாழ்த்துகளையும், முன்னுரையையும் எழுதித் தந்து என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்திச் செல்லும் ரிஷபன் சார் அவர்களுக்கும், பிரபா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    புத்தகத்தை மின்நூலாகவும், அச்சுப் புத்தகமாகவும் நல்லமுறையில் வெளியிட்டு கௌரவிக்கும் புஸ்தகா.காம் பதிப்பக உரிமையாளர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அழகான அட்டைப்படத்தைத் தேர்வு செய்தும், சலிக்காமல் பொறுமையாக பதில் சொல்லியும் பதிப்பை அழகாக்கும் புஸ்தகா சசி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நாவலை வாசிக்கப் போகும் உங்களுக்கும் நன்றி.

    சென்னை.

    அன்புடன்,

    சுபாஷிணி ரமணன்

    அத்தியாயம் - 1

    அனுப்ப வேண்டிய மெயில்களை ஒருமுறை சரிபார்த்தாள் பவித்ரா. எல்லாம் சரியாக அனுப்பிவிட்டோம் என்று தெரிந்தது. எக்செல் ஷீட் வேலையையும் முடித்தாகிவிட்டது. மானேஜர் ஜெகதீஷ் கொடுத்த எல்லா வேலையையும் முடித்தாகிவிட்டது இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்று தோன்றியது.

    கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தாள். டைப் அடித்து ஓய்ந்த விரல்களை நெட்டி எடுத்தாள். கைகளை உயரத் தூக்கி சோம்பல் முறித்தாள். ரப்பர் பேண்டை அவிழ்த்து, கலைந்திருந்த போனிடெயிலை மறுபடி போட்டுக்கொண்டாள்.

    மணியைப் பார்த்தாள். ஏழரை. வேளச்சேரியிலிருக்கும் அலுவலகத்திருந்து, அவள் தன் வீடு இருக்கும் குன்றத்தூருக்கு போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

    பைபாஸ் வந்த பிறகு, முன்போல் அவ்வளவு டிராபிக் இல்லை என்றாலும், நடுவில் பல்லாவரத்தைத் தாண்டும்போது சிக்னலில் நேரமாகிவிடும். அதுவும் ஆறுமணியைத் தாண்டிவிட்டால் போதும். வீட்டிலேயே யாரும் இருக்கமாட்டார்கள்போல, தெருவில் அப்படி ஒரு கூட்டம்.

    இப்போதெல்லாம் தான் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற கணக்கே இல்லாமல் போய்விட்டதே!

    பள்ளி, கல்லூரி, அலுவலகம் விட்டு வீட்டுக்கு விரைய வேண்டும் என்ற அவசரத்தோடு, அவரவர் வசதிக்கேற்ப, எல்லாவித வாகனங்களிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1