Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neerodu Selkindra Odam
Neerodu Selkindra Odam
Neerodu Selkindra Odam
Ebook74 pages29 minutes

Neerodu Selkindra Odam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அண்ணன் தம்பிகள் மூவர். கணவனை இழந்த நடு மருமகள் புகுந்த வீட்டை விட்டு விலகாமலும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமலும் வாழ்ந்து தன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வாழ்க்கையெனும் நீரோட்டத்தில் நீந்திக் கரை காண்கிறாள். எப்படி? படித்துப் பாருங்கள். கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580153210848
Neerodu Selkindra Odam

Read more from R. Subashini Ramanan

Related to Neerodu Selkindra Odam

Related ebooks

Reviews for Neerodu Selkindra Odam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neerodu Selkindra Odam - R. Subashini Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீரோடு செல்கின்ற ஓடம்

    Neerodu Selkindra Odam

    Author:

    சுபாஷிணி ரமணன்

    R. Subashini Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-subashini-ramanan

    பொருளடக்கம்

    நீரோட்டம்-1

    நீரோட்டம்-2

    நீரோட்டம்-3

    நீரோட்டம்-4

    நீரோட்டம்-5

    நீரோட்டம்-6

    நீரோட்டம்-7

    நீரோட்டம்-1

    நவீனா மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். மனத்தை மயக்கும் அந்தி நேரம். விதவிதமான ஆரஞ்சு வண்ணங்களைக் காட்டி வானம் மயக்கிக் கொண்டிருந்தது.

    பொழுது போகாத நேரங்களில் என்று இல்லாமல், பொழுது இருக்கும் போதெல்லாம் வானத்தை ரசிப்பவள் நவீனா. வானத்தின் வண்ணங்கள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிறத்தைக் காட்டும் வானத்தை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்ப்பதில் அவளுக்கு மிகுந்த ஆர்வம்.

    காலையில் உதயநேரத்து வானம் கருநீல நிறத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்க, கதிரவன் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என்று வண்ணங்களைக் காட்டி ‘பளீரென்று’வெள்ளைக்கு மாறுவது ஓர் அழகு.

    அதே போல மாலையிலிருந்து மெது மெதுவாக வானம் நிறம் மாறி இருட்டானதும் ஒவ்வொரு நட்சத்திரமாக மினுங்க ஆரம்பிப்பதும், நிலவு மெதுவாக மேலே ஏறுவதும் மிக அழகு.

    காலைக் காட்சி வேண்டுமானால் விடுதியின் மொட்டை மாடியிலிருந்து பார்க்க முடியுமே தவிர, இரவில் மொட்டை மாடிக்கு வர அனுமதி கிடையாது. எனவே விடுமுறையில் பௌர்ணமி வந்தால் நவினாவுக்கு மகிழ்ச்சி.

    அவர்கள் வீட்டு மாடியறையில் கட்டிலில் படுத்துக் கொண்டாலே சில மாதங்களில் ஜன்னல் வழியாக நிலவு வெளிச்சம் உள்ளே வரும்.

    மனம் பழையதை நினைத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் வானத்தைப் பார்த்தவாறு இருந்தன.

    வானத்தில் கருமேகங்கள் வெவ்வேறு உருவமாக மாறுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். வித்தை காட்டிக் கொண்டிருந்த மேகங்களை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்தில் தன் பெயரை யாரோநவீஎன்று பலமாகக் கூப்பிடுவதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது.

    திடீர்க் குரலில் உடல் சிலிர்த்தாலும், உள்ளுணர்வு அது சித்ராவாகத்தான் இருக்கும் எனக் கூறியது.

    இங்க என்னடி பண்ணிட்டிருக்கே?

    அவள் நினைத்தது போலவே சித்ரா தான்.

    அப்டி என்ன தான்டி பாப்ப ஆகாசத்துல? எப்பப் பாத்தாலும் அஸ்ட்டிராலஜி படிக்கறவளாட்டாம் இங்கு வந்து நின்னுக்கற

    "வானம் எனக்கொரு போதி மரம்

    நாளும் எனக்கது சேதி தரும்"என்று மெதுவான, அழகான குரலில் பாடினாள் நவீனா.

    உக்கும்! இப்ப என்ன சேதி சொல்லுச்சு உன்னோட போதி மரம்?

    ரசனையில்லாத ப்ரெண்டோட என்னைப் பாக்க வராதேன்னு சொல்லிச்சுசிரித்தாள் நவீனா.

    இதெல்லாம் சொல்லத் தெரியுதே! மழ வர மாதிரி இருக்கு, துணியை எடு. இல்லேன்னா, உன்னோட ரசனை கெட்ட ப்ரண்டு வந்து குட்டுவான்னு சொல்லத் தெரியாதா உன்னோட போ…தி மரத்துக்கு சொல்லிக் கொண்டே நவீனா தலையில் மறக்காமல் ஒரு குட்டு வைத்து வைத்து விட்டு துணிகள் காயப் போட்டிருக்கும் கம்பியருகே வேகமாக ஓடினாள்.

    என்று கத்தியவாறு தலையைத் தடவிக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். சித்ரா சொன்னது உண்மை தான். ஒரு மூலையில் கறுப்பாகத் தெரிந்த மேகக் கூட்டங்கள், புற்றீசல் போல வேகமாய்ப் பரவ ஆரம்பிக்க, ‘சடசடவென’மழைத் தூறல் போட ஆரம்பித்தது.

    கல்லூரி விடுதியின் மற்ற மாணவிகளும் ‘தடதடவென’ஓடி வர சந்தைக் கடைபோல கூச்சல் எழுந்தது.

    சில பெண்கள் துணிகளை எடுக்க ஓட, என்னுதும் எடுத்துட்டு வாடிஎன்ற குரல்களும் எழுந்தன.

    சிலர் மழைக்குப் பயந்து ஒதுங்க, சிலர் மழையில் நனைந்தபடி ஆட ஆரம்பித்தார்கள். தனக்குப் பிடித்த கதாநாயகிகள் மழைக்கு ஆடும் பாடல்கள் அவர்கள் வாயில் புகுந்து காட்டுக் கத்தலாக ஒரே இரைச்சலாய், மழையையும் மீறிக் கேட்டது.

    சித்ராவும், நவீனாவும் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

    படிக்கட்டுகளில் வரும்போது மூச்சிரைக்க வார்டன் மாணவிகளைத் திட்டிக் கொண்டே படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.

    தன்னுடைய பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு ஏறமுடியாமல் திணறிக் கொண்டுதான் ஏறினார்.

    தனக்கு ஐம்பதுக்கு மேல் வயதாகி விட்டது என்றோ, தான் குண்டாக இருக்கிறோம் என்பதையோ ஒத்துக் கொள்ள மனம் வராது அவருக்கு.

    பக்கத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளரிடம், "உமா, நீ போய் அந்தப் பிசாசுகளை மழையில நனையாம முதல்ல துரத்து கீழே. நீயும் நனையாதே! எல்லாத்துக்கும் ஜுரம்

    Enjoying the preview?
    Page 1 of 1