Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaar Antha NIlavu
Yaar Antha NIlavu
Yaar Antha NIlavu
Ebook261 pages1 hour

Yaar Antha NIlavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Yaar Antha NIlavu

Read more from N.C.Mohandass

Related to Yaar Antha NIlavu

Related ebooks

Related categories

Reviews for Yaar Antha NIlavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaar Antha NIlavu - N.C.Mohandass

    1

    அசுவதிக்கு மாலைப் பொழுதை ரொம்பவும் பிடிக்கும். அது அமைதியானது. மனத்துக்கு ஆசுவாசம் தரக்கூடியது. ஆரவாரமில்லை, அவசரமில்லை. அலுவலகம் போக வேண்டும் - பசங்களை ஸ்கூல் அனுப்ப வேண்டும் எனப் பறக்க வேண்டியதில்லை!

    ஆனந்தமாய் ஒரு குளியல்! முடி உலர்த்தி, காம்பவுண்டில் காற்று வாங்கலாம். வார இதழ் புரட்டலாம். பக்கத்து வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடிக்கலாம்.

    வாசலில் அமர்ந்து பசங்களின் விளையாட்டை ரசிக்கலாம்.

    ‘டி.வி’யின் முன்னிலையில் - புரோகிராம் எத்தனை பிளேடு என்றாலும், அமர்ந்து டிபனுக்கு ஏற்பாடு பண்ணலாம்.

    அசுவதிக்குக் கவிதை என்றால் உயிர். எழுதவும் செய்வாள். ஏழு மணிக்கு அவள் அலுப்பு தீர்ந்திருந்தாள்.

    ‘உங்கள் கவிதைக்காரன்’ தொகுப்பை எடுத்துக்கொண்டு ஜன்னலோரம் அமர்ந்தாள். புதுக்கவிதைகள் இன்று நெற்றியில் அடிக்கின்றன; சின்னச் சின்ன வரிகளில் பெரிய சாட்டைகள்!

    ‘மரம் நடுவிழா!

    மந்திரிகள் வந்தார்கள் -

    இங்கேயும் கத்திரிக்கோலோடு!

    ஓ... மகாத்மா!

    நீ கொடுத்துச் சென்ற

    மூன்று குரங்கு

    பொம்மைகளுக்குக் கூட

    இன்று குண்டு துளைக்காத சட்டைகள்!’

    அவளுக்குத் தக்காளி நிறம். இதழ்களில் முட்டை கோஸ். உதடுகளில் காரட். குழந்தை பெற்று அது இரண்டாம் கிளாஸ் தொட்டும் கூட அசுவதி - இன்னும் கட்டுக்குலையாமல் இருந்தாள். வார்த்தெடுத்த மாதிரியான உடல்.

    பெண்களுக்கு அழகும், வனப்பும் ஒரு வரப்பிரசாதம். அவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. கிடைத்தவர்களும் கவனமாகக் காப்பாற்றிக் கொள்வதில்லை.

    காணும் பொருளின் மீதெல்லாம் ஆசை! ஆசை ஆக்கத்திற்கு எதிரி. நாக்கு அழகிற்குப் பங்காளி; ருசிக்கு அடிமையாகிச் சாப்பிட்டுக் கொல்ஸ்ட்ரால் ஏற்பர். அப்புறம் வேண்டாத இடங்களில் சதை போடும். வயிறு டயராய் மடியும். கண்ணாடியில் பார்க்கும்போது வெறுப்பு தோன்றும்.

    அளவுக்கு மிஞ்சின பின்பு ஏக்கம். டயட்! ஹெல்த் கிளப்! எக்ஸர்சைஸ்! வயிற்றில் பேட் ஸ்கிப்பிங்! இந்தச் செயற்கை முயற்சிகள் எவ்வளவு தூரத்திற்குப் பலன் தரும்? எக்ஸர்சைஸ் நிறுத்தும் போது திரும்பவும் சதை எகிறும்.

    பிறகு யுத்தத்திற்கு மேல் யுத்தம்! நடக்கும் போது கீழ்மூச்சு- மேல் மூச்சு! முடிவில் பெருமூச்சு! ஐயோ... என் - அழகு போச்சு... கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்கிற ஏக்கம்!

    அசுவதியைப் பொறுத்தவரையில் எதுவுமே தேவைப்படவில்லை. அவளுக்கு இயற்கையிலே அப்படி ஒரு உடல்வாகு. அது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் வாய்க்கும்.

    அவளுக்கு வாய்த்திருந்தது.

    அவளுக்கு இப்போதும் தாவணி போடலாம்; ஸ்கர்ட் அணியலாம். வித்தியாசம் தெரியாது. விகாரமாகாது. பக்கத்து வீட்டுப் பெண்களுக்கெல்லாம் அவள் மேல் பொறாமை எழுவதுண்டு.

    அம்மா...! என்று அறைக்குள்ளிருந்து பரணி ஓடிவந்தது.

    என்னடா கண்ணு...?

    ஹோம் ஒர்க் முடிச்சுட்டேன்! மாரல் சயன்ஸ், எஸ்.எஸ்டி., ஹிந்தி, ஜியாக்ரபி, இங்கிலீஷ்-டூ, எல்லாமே ஆச்சு என்று கைகளைத் தூக்கி முறுக்கு விட்டது.

    குட் கர்ள்! கொஞ்ச நேரம் விளையாடு. அப்பா வந்ததும் சாப்பிடலாம்!

    டி.வி! என்று ‘ஆன்’ பண்ணிற்று. ஹோம் ஒர்க் முடிக்காமல் ‘டி.வி’யின் பக்கம் வரக்கூடாது என்பது அசுவதியின் உத்தரவு.

    போட்டுக் கொள்!

    பரணி ‘டி.வி’யின் விளம்பரத்தில் மூழ்கிப் போனது. இனி அவளை மீட்டுக் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல.

    அவர்களுக்குச் சொந்தமாய் ஸ்கூல் இருந்தும்கூட மகளை வேறு ஸ்கூலில் சேர்த்திருந்தனர். சொந்த ஸ்கூல் மமதை தரும். கண்டித்தால் நீ யார் என்னைக் கண்டிக்க என்கிற வீம்பு எழும். அது படிப்பைக் கெடுக்கும். ஆணவம், படிப்பிற்கு எதிரி. ஏன் படிக்க வேண்டும்... எனக்கு வசதியில்லையா... படித்து என்ன பண்ணப் போகிறேன் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஒழுக்கம் கெடும். பாடங்களும், படிப்பும் எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் பிள்ளைகளின் நடத்தையும். அதற்காகவே வெளியே சேர்த்திருந்தனர்.

    சொந்தமாய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்பது அசுவதியின் நீண்ட நாள் கனவு. தபஸ் என்று கூடச் சொல்லலாம்.

    நாட்டில் இன்று ஸ்கூலிற்குத்தான் மவுசு. அரசியலும், சினிமாவும் சீஸன் சமாசாரங்கள். எலக்ஷனில் தோற்றால் அரசியல்வாதி அவுட்! கிளாமர் உள்ளவரையே நட்சத்திரங்களுக்கும் மார்க்கெட், அதன் பின்பு அவர்களை ‘டி.வி’ யில் தான் தேட வேண்டும்.

    ஆனால் ஸ்கூல் நடத்துபவர்களுக்கு ஆயுசு முழுக்க ஆராதனை! வருடம் கூடக் கூட வேல்யூ கூடும். காம்படிஷனாகும். கிட்டாப் பொருளுக்குப் போட்டாப் போட்டி! பெற்றோர்களின் மோகம் அவர்களைச் சம்பாதிக்க ஏவுகிறது.

    ‘இடம் கிடைக்கவில்லையா... விடாதே... மோது’ என்பது ஒருவகை போதை. பேஷன்! ஈகோ! ஜனங்களின் பலவீனம் அது. சீட் இல்லை என்கிற போது இன்னும் கூட டிமாண்ட்.

    அப்ளிகேஷனிற்கே ராத்திரி பகலாய் கியூ! சிபாரிசுக்கு மேல் சிபாரிசு. விடாதே! இந்த வருடம் போச்சா... அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் முன்பே மோதுவோம். இன்னும் பெரிய ஆளை நாடுவோம்! இப்படி முட்டி மோதுபவர்களே அதிகம்.

    அவள் எம்.எட்! சில ஸ்கூல்களில் சேர்ந்து ஆரம்ப நாட்களில் உபாதைப் பட்டதில் கசப்பு அனுபவமே மிச்சம். படிப்பிற்கும், திறமைக்கும் அங்கே உரிய மரியாதை கிடைக்காமல் போகவே ஆவேசமாயிற்று. சொந்தமாய் ஸ்கூல் தொடங்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது.

    வெங்கடேஷிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க, ஸ்கூல் ஆரம்பிப்பது என்றால் சாதாரணமா...? நிறைய செலவு பண்ண வேண்டும் என்று மிரண்டான். இதெல்லாம் நமக்குச் சாத்தியமா...? செலவைப் பற்றி யோசித்தாயா...?

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆரம்பித்தாகணும். அப்ளை பண்ணுவோம். என் நகைகைளைத் தருகிறேன். லோன் போடுவோம் என்று அவள் ஊக்கம் தந்தாள். தன் விருப்பத்தில் உறுதியாக இருந்தாள். அதற்கான முயற்சிகளில் தீவிரமாய் இறங்கினாள்...

    அப்ரூவல் வாங்கணும்!

    வாங்குவோம். லோக்கல் தலைகளையும், தலைவர்களையும் பிடிப்போம். தலைக்கு இத்தனை சீட் என்று ஒதுக்கினால் அவர்களுக்கும் நிரந்தர வருமானம்!

    வருமானத்தை அறிந்ததும் ஆளும்கட்சிக்காரர்கள் ஆர்வத்துடன் உதவ முன் வந்தனர். அவளுடைய எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. திட்டங்கள் வேக வேகமாய் நிறைவேற ஆரம்பித்தன. லோன்! கட்டிடம் வேகமாய் வளர ஆரம்பித்தது.

    கடலூரின் சரஸ்வதி நகரில் ஸ்கூல் ஆரம்பித்து இரண்டு வருடங்களாயிற்று. அதற்குள் நல்ல பிக்கப். நல்ல பெயர். அசுவதிதான் கரஸ்பான்டென்ட் - கம்-பிரின்ஸிபால்! அவள் ரொம்பக் கறார்! இளம் வயதாயிருந்தாலும் கூட ஸ்கூலில் அவளைக் கண்டால் எல்லாருக்கும் பயம்.

    வெங்கடேஷிற்குப் பிரபல கன்சல்டன்ஸி ஒன்றில் உத்தியோகம். அவன் ஊரில் இருப்பதே அரிது. அடிக்கடி டூர், போவான். பள்ளி நிர்வாகம் முழுக்க அசுவதிதான். அவன் எதிலும் தலையிடுவதில்லை. யாராவது சீட் வேண்டும் என்று கேட்டால்; ‘மேலிடத்தைப் போய்ப் பாருங்கள்’ என்று ஒதுங்கிவிடுவான். அவனுக்கு ஸ்கூலைப் பற்றி எதுவும் தெரியாது.

    ‘டி.வி பார்க்கும்போதே பரணிக்குத் தூக்கம் சொக்கியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்தவள் குழந்தையைக் கவனித்து, ஏய்...! தூங்குகிறாயா... சாப்பிட்டுப் படு! என்று தட்டி எழுப்பினாள். ஏண்டி... தூக்கம் வருதுன்னு சொன்னால் முன்பே டிபன் ரெடி பண்ணியிருப்பேனில்லே... வா!

    வேணாம்மா.

    அடிப்பேன். வா என்ற இழுத்துப் போய்த் தோசை ஊற்றிக் கொடுத்தாள். ஒன்பது மணியாகிவிடவே வயிறு அழுதது. கணவன் வரும்போது வரட்டும் என்று அவளும் சாப்பிட்டாள். அவன் எப்பொழுதுமே லேட்.

    பரணியைப் படுக்க வைத்தபோது வாசலில் ‘பைக்’ உறுமலுடன், ஒளியை உமிழ, ஓடிப் போய் கேட்டைத் திறந்து விட்டாள். அவனைச் சற்றுக் கடுமையுடன் பார்த்து வாட்சைக் காட்ட...

    ஸாரி டியர், லேட்டாச்சு என்றான்.

    வழக்கம் போல் என்று முறைத்தாள். கணவனுக்கு வழி கொடுத்துக் கதவை மூடினாள். அவனிடம் சண்டை பிடிக்க வேண்டும் என்று எழுந்த ஆவேசத்தை அடக்கிக் கொண்டாள்.

    குழந்தை தூங்கிட்டாளா...?

    அப்பா வந்து தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பீங்கன்னு காத்திருக்க அவளுக்கு பைத்தியமா... என்ன?

    நுழையும் போதே போர் தொடுக்காதே ஆசு! நான் அம்பேல்! டயர்டாயிருக்கிறது, என்று வெங்கடேஷ் டிரஸ் மாறினான்.

    என்றைக்குத்தான்... நீங்கள் ப்ரெஷ்ஷாய் வந்திருக்கிறீர்கள்? என்று அவனது உடைகளை வாங்கி மாட்டினாள்...

    உன் முகம் சிவக்கும்போது இன்னும் கூட அழகு கூடுகிறது. போகட்டும், நான் சொன்ன விஷயம் என்னாயிற்று...?

    எந்த விஷயம்?

    டிராயிங் மாஸ்டர்!

    ஸ்கூலிற்கு இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் அரசாங்கத்தின் சம்பளம் ரெகுலராகவில்லை. அப்படியிருக்கும் போது டிராயிங் மாஸ்டரெல்லாம் தேவை தானா? ஏற்கெனவே கன்னா பின்னான்னு செலவாகிக்கிட்டிருக்கு... ஆசிரியர்களுக்கு ஓய்வெடுக்க தனி அறை வேண்டுமாம்! டைனிங் ஹால்! லைப்ரரியைப் பெரிதாக்கணும். இதில் இது வேறயா?

    சும்மா அப்பாயிண்ட் பண்ணி வை. விஷ்ணு நல்லவன். என் நெருங்கின நண்பனோட தவிர்க்க முடியாத சிபாரிசு. என்ன யோசிக்கிறாய்...? சும்மா பெயருக்கு டிராயிங் மாஸ்டராய் இருக்கட்டும்! லீவ் கவரேஜ் பண்ணச் சொல்லி எல்லா சப்ஜெக்டுக்கும். எல்லா கிளாசுக்கும் அனுப்பலாம்! ஒரே கல்லில் பல மாங்சோஸ்!

    இது வேணுமா பாஸ்...?

    எஸ். இட்ஸ் மை ஆர்டர்

    "ஆர்டரா...? என்று அவனது காதைத் திருகினாள்.

    ஒரு ஸ்கூலின் மாண்புமிகு கரெஸ்பான்டென்டிடம் பேசுகிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்! என்று செல்லமாய் அவனது கன்னத்தில் தட்டினாள்.

    ஆமாமாம்! மாண்பு மிகுந்து போனதால்தான் கட்டினவனின் காதைப் பிடித்துத் திருகுகிறாயாக்கும்!

    ஏன் கூடாதாக்கும்! இது என் புருஷன்! திருகுவதும், அடிப்பதும், கடிப்பதும் எனது உரிமை! என்ற நிஜமாலுமே கடித்தாள்:

    ஆனால்... ஆ... காது என்னோடது! அதைக் கனம் பொருந்திய கரெஸ்பான்டென்ட் அவர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்! அடச்சீ விடுடி! என்று அவளது கையைத் தட்டி விட்டுவிட்டு இழுத்து இறுகக் கட்டிக் கொண்டான்.

    அசுவதி, சே! வியர்வை நாற்றம்! என்று அவனை விட்டு விலகினாள். முதலில் போய்க் குளிச்சுட்டு வாங்க! அப்புறம் தான் சாப்பாடு!

    மறுநாள், ஒன்பது மணிக்கெல்லாம் விஷ்ணு ஆட்டோவில் வந்திறங்கினான்.

    ஸ்கூலில் பிரேயர் முடியட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தான்.

    இறை வணக்கமும், தமிழ்ப் பாவும் பிள்ளைகளால் கடமைக்குப் பாடப்பட்டு, அவர்கள் சலசலப்புடன் தத்தம் வகுப்புகளுக்குள் நுழையும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான்.

    அவன் பைஜாமா போட்டிருந்தான். தலையைத் தூக்கி வாரி, பின் பக்கம் முடியை லேசாய்ப் படரவிட்டிருந்தான். வாட்ச்மேனிடம் விசாரித்துவிட்டு, ‘பிரின்ஸிபால்’ எனத் தொங்கின அறைக்குள் தயங்கித் தயங்கிப் பிரவேசித்தான்.

    அங்கே டேபிள் - நாற்காலி காலியாய் இருந்தது.

    ஃபேன் காற்றில் பேப்பர்கள் படபடத்தன. உள் அறைக்குள் சலனம் தெரிய எட்டிப் பார்த்து...

    எக்ஸ்க்யூஸ் மி... இங்கே பிரின்ஸிபால்... என்று தயங்கினான்.

    யெஸ் நான்தான்! உங்களுக்கு என்ன வேண்டும்...? என்று கேட்டுக்கொண்டே அசுவதி வெளியே வர, அவளைப் பார்த்ததும் விஷ்ணுவின் தலை சுற்ற ஆரம்பித்தது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன.

    நிலை தடுமாறி, அப்படியே நிலைப்படியில் சரிந்து நின்று கொண்டான். அவனது செய்கை அசுவதிக்கு வெறுப்பைத் தந்தது. ‘யார் இவன்? யாரைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தான்?’

    சாதாரணமாய் முன் அனுமதியில்லாமல் அவள் எவரையும் பார்ப்பதில்லை. உள்ளே அனுமதிப்பதில்லை. அசுவதி கோபத்தை அடக்கிக்கொண்டு பெல் அடிக்க... -

    அவன் ஒரு வழியாய்த் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அவளைப் பார்த்து, நீ... நீயா...? என்று கத்தினான்.

    2

    அசுவதியைப் பார்த்ததும் விஷ்ணு அப்படியே ஒரு கணம் ஆடிப் போயிருந்தான். இருண்ட கண்கள் நார்மலுக்கு வரச் சில நொடிகள் பிடித்தன.

    ‘நீயா...?’ என்று வாய்வரை வந்த வார்த்தைகள் வெளியே வரவில்லை. அப்படியே பிரமையுடன் நின்றிருந்தான். இன்னமும் அவனது கண்கள் அவளை நம்பாமல் ஏறிட்டுக் கொண்டிருந்தன. வியப்பில் விரிந்திருந்தன.

    ஹலோ... மிஸ்டர்! அவள் சொடக்குப் போட்டு அழைத்தாள்.

    அவன் அசையாமல் நின்றிருக்க, பெல் சத்தம் கேட்டு உள்ளே வந்த பியூன் விஷ்ணுவையும், பிரின்ஸிபாலையும் மாறி மாறிப் பார்த்தான்.

    பியூன் என்பவர்கள் சாதாரணப்பட்டவர்கள் இல்லை. விண்ணுலகம் வரை பாயக்கூடியவர்கள். வானத்தையே வில்லாய் வளைக்கக் கூடியவர்கள். யாருக்குப் பயந்தாலும் பயப்படாவிட்டாலும் பியூனிற்குப் பயப்பட்டாக வேண்டும்!

    இல்லாவிட்டால் ஸ்கூல் காயப்படும்; பெயர் கெடும். காரியங்கள் கந்தலாகும். டயம் தவறும். பேப்பர்கள் இடம் மாறும். தொட்டதற்கெல்லாம் பணம் பேசி, அதன் பங்கு பிரின்ஸ்பால் வரை போகிறது எனக் கூசாமல் பொய்யுரைப்பர். வதந்தியும் பரவும்.

    அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கை, எச்சரிக்கை! ஒரு டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணுவது உத்தமம். அதை அசுவதியும் நன்கு அறிந்திருந்தாள். பியூன் தன்னைப் பார்க்கும் பார்வை அவளது கோபத்தை அதிகப்படுத்தவே செய்தது.

    மிஸ்டர்! நீங்க யாரு... எதற்காக என் டயத்தை வீணடிக்கிறீர்கள்...? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று தன் டேபிளைத் தட்டினாள்.

    அவன் பதில் எதுவும் பேசாமல் பாக்கெட்டிலிருந்து லெட்டர் ஒன்றை எடுத்து நீட்டினான். இப்போது அவனது பார்வை நாகரிக எல்லையை மீறி அவளைச் சுற்றிக் கொண்டிருந்தது.

    ஓ... டிராயிங் மாஸ்டரா... வெல். பியூன்! சாரை வைஸ்பிரின்ஸிபாலிடம் அழைச்சுட்டுப் போ.

    அசுவதி சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பேனா எடுத்து, ஏற்கெனவே எழுதிக் கொண்டிருந்த பேப்பரில் கவனம் செலுத்த முயன்றவளுக்கு முடியவில்லை.

    விஷ்ணு, அவளது அத்தகைய அலட்சியத்தை எதிர்பார்க்கவில்லை. நகராமல் இன்னமும் நின்று கொண்டிருக்க...

    வாங்க சார்! என்று பியூனும் அவனை அலட்சியமாய்ப் பார்த்தான். ‘இங்கே யாரிடமும் மரியாதை எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது’ என்று நினைத்தவாறு, நான் உங்ககூடக் கொஞ்சம் பேசணும்! என்றான் அசுவதியின் பக்கம் திரும்பி.

    அசுவதி, பியூன் பக்கம் பார்க்க, அவன் வெளியேறிக் காதைத் தீட்டிக்கொண்டு நின்றான். ‘தனியாக அப்படி என்ன பேசவேண்டுமாம்! யார் இவன்? இவர்களுக்குள் என்ன உறவு?’

    உங்க விரல்கள் ஏன் இப்படி நடுங்குது... குடிச்சிருக்கீங்களா...? அசுவதி அதிகார தோரணையில் கேட்டாள்.

    சேச்சே! எனக்கு அந்த வழக்கமெல்லாம் இல்லை என்று கழுத்தில் உதிர்ந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

    எதுவும் வியாதி...?

    நோ மேடம். உங்களைப் பார்த்ததும்...

    பார்த்ததும்...? என்று அவனுடைய கண்களைக் கூர்ந்தவளுக்கு மின்னல் வெட்டிற்று. சட்டென்று பார்வையைத் திரும்ப வாங்கிக் கொண்டாள்.

    உங்களை எனக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று இழுத்தான். அவனது கால்கள் தளர்ந்தன. உட்காரச் சொல்ல மாட்டாளா என்றிருந்தது.

    எங்கே? ‘டி.வி’ கலந்துரையாடலிலா...?

    இல்லை.

    ஏதாவது விழாவில்...?

    ம்கூம்.

    தென்? ஸ்கூல் ஆனிவல். புக்கில்? என்றாள் வெறுப்புடன்.

    ‘இவன்

    Enjoying the preview?
    Page 1 of 1