Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathira Sugam
Natchathira Sugam
Natchathira Sugam
Ebook122 pages46 minutes

Natchathira Sugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Natchathira Sugam

Read more from N.C.Mohandass

Related to Natchathira Sugam

Related ebooks

Related categories

Reviews for Natchathira Sugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathira Sugam - N.C.Mohandass

    1

    வானம் சுப்ரபாதத்துடன் துயில் எழுந்தது. கார்ப்பரேஷன் தொழிலாளி ரோடை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான். முதல் நாள் பெய்த மழையின் மணம் இன்னமும் மண்ணில் அடித்தது. அந்த வீடு கீழ்ப்பாக்கத்தின் கார்டனில் அடக்கமாயிருந்தது. புல்வெளியிலும் போகன்வில்லாவிலும் இன்னமும் மழைத்துளி. வாசலில் பத்திரிகைகள் கிடந்தன. பால் பாக்கெட் மூடி போட்ட பாத்திரத்திற்குள் பத்திரமாய் அமுக்கப்பட்டிருந்தது. (பூனைக்கு பெப்பே) மூடப்பட்டிருந்த ஜன்னல்களில் ஒன்று மட்டும் அப்போது திறக்கப்பட்டது. அதன் வழியே உள்ளே ராம்மோகன் தூங்கி வழிந்தான். வழிந்த லுங்கியை சரிபண்ணிக்கொண்டு மணி பார்த்தான்.

    ஏய்... எழுந்திரிங்கடா, நேரமாச்சு! என்று தரையில் படுத்திருந்தவர்களை உசுப்பினான். அவர்கள் முணு முணுத்துவிட்டு தலையணையைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

    அவர்கள் வெங்கடேசன், வின்சென்ட்பாபு. விமல் குமார் இந்த நால்வரும் திருச்சியில் ஒன்றாய் படித்து ஒன்றாய் சைட் அடித்து, என்ஜினியராகி இப்போது வேலையும் ஒன்றாகவே. தொழிற்சாலைக்கு டிசைன் பண்ணிக் கொடுப்பது அவர்களின் தொழில். இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். (ஓனர் வீட்டில் ஃபிகர் எதுவும் இல்லாததால் பாச்சிலர்களான இவர்களுக்கு உடனே அனுமதி.) அவர்களும் முடிந்தவரை அட்டகாசம் பண்ணாமல் ‘குடும்பம்’ நடத்தினர், சுவர்களில் அமலா, ராதா, பார்வதியின் படங்களுக்கு மட்டும் குறைவில்லை.

    ராம்மோகன். அவர்களிடமிருந்து தலையணைகளைப் பறித்து மூலையில் போட்டான். எழுந்திரிச்சு காபி போடு பாபு! உத்தரவு கொடுத்து விட்டு பாத்ரூமிற்கு ஓடி இடம் பிடித்தான். திருப்தியுடன் வெளியே வந்து வாசலில் கிடந்த பேப்பர்களைப் பொறுக்கினான். பேப்பரை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன், அங்கே பூச்செடி மேல் கிடந்த அட்டையைக் கண்டு வியந்தான். கார்டு சைஸ் கொண்ட அதில், ‘ஹாப்பி பர்த் டே வெங்கடேஷ்’ என்று எழுதப்பட்டு இப்படிக்கு காயத்ரி என்று குறிக்கப்பட்டிருந்தது.

    ராம்மோகன் அதை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் திருப்பிப்பார்த்தான். வேறு எந்தத் தகவலும் இல்லை. யார் இது காயத்ரி? நமக்குத்தெரியாமல் எந்த காயத்ரி இங்கே வெங்கடேசனை - ஈர்த்தாள்? அவன் சாதுவாயிற்றே! புகைபிடிக்காமல், அசைவம் சாப்பிடாமல், மதுவையும் மாதுவையும் தொடாமல் சாமியார் மாதிரி காலம் தள்ளுபவனிற்கு காயத்ரியா...?

    அவனுடைய முகம் விரிந்தது. சரி, போகட்டும். வெங்கடேசனுக்கு இன்று பிறந்த நாளா... அவன் சொல்லவேயில்லையே. தடிப்பயல்! நமக்குச் சொல்லவில்லை. ஏதோ ஒரு காயத்ரி வந்து வாழ்த்துச் சொல்லி நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நம்மிடம் மறைத்திருக்கிறான். இவனை சும்மா விடலாகாது. அந்த கார்டை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான்..

    ஏய் வெங்கடேசா! என்று அலறினான். தலையணையில்லாத அரைத் தூக்கத்திலிருந்தவர்கள் எழுந்து. என்ன என்னாச்சு...? என்று மிரண்டனர்.

    வெங்கடேசன் சாவகாசமாய் எழுந்தமர்ந்து, என்ன மாப்ளே.? என்று ஸ்பெக்ஸை போட்டுக் கொண்டான்.

    மாப்ளேயா... உதைப்பேன்! உண்மையை சொல்றா! இன்னைக்கு உனக்கு பர்த்டேதானே...!

    பர்த்டேயா... எனக்கா?

    இல்லை, உன் தாத்தாவிற்கு, எழுந்திரிடா!

    மற்றவர்கள் புரியாமல் பார்க்க, ராம்மோகன் இத பாருங்கடா வாழ்த்துச் செய்தி. அதுவும் ஒரு பொண்ணுகிட்டேயிருந்து.

    பொண்ணா...? அவர்கள் வாய்பிளந்தனர்.

    என்னடா சொல்றே... கொடு இப்படி! வெங்கடேசன் அந்த கார்டை வாங்கிப் பார்த்து தலையைச் சொறிந்தான். புருவததை உயர்த்தினான்.

    யார்ரா இது...?

    சத்யமா எனக்குத் தெரியாதும்மா...

    இந்த நடிப்பெல்லாம் இனி வேண்டாம். எங்ககிட்டே பரமசாதுவாய் நடிச்சுகிட்டு ரகசியமாய் லவ்வா...? சொல்! இவ யார்... எந்த ஊர்?

    வயசென்ன...?

    சைஸ் என்ன...?

    ஆளுக்கால் அவனைப் பிடித்துக்கொண்டு வாரினர் அவன் ஏறக்குறைய அழுதான்.

    ஏய்... என்னை நம்புங்கடா. இவ யாருன்னே எனக்குத் தெரியாது.

    ஆனா இவ உன்னைத் தெரிஞ்சு வைச்சிருக்காளே. சமயம் பார்த்து வாழ்த்து மடல்! இதையெல்லாம் நாங்க நம்பணுமா...? உண்மையைச் சொல்! இன்னைக்கு உன் பிறந்த நாள் தானே...? பாபு அவனுடைய காதைப் பிடித்துத் திருகினான்.

    தெரியலியே!

    தெரியலியா. உதைவாங்கப் போகிறாய் நீ வெங்கடேசனின் தலைமேல் தலையணை ஒன்று பாய்ந்து வந்து தாக்கிற்று.

    ஏய்... காலங்கார்த்தால என்ன இது கலாட்டா...? பிறந்தநாள் கொண்டாடற பழக்கமே எனக்கில்லையே... அப்புறம் எப்படி ஞாபகம் இருக்கும்?

    சரி, போகட்டும். இதுவரை கொண்டாடாட்டி பரவாயில்லை... இன்று கொண்டாடுவோம் யாரோ ஒரு காயத்ரிக்கு தெரிஞ்சிருக்கு. எங்களுக்கு நீ தெரிவிக்கலை!

    சொல்றதை கேளுங்கடா... நான்!

    உஷ். வாயைத் திறக்காதே. எழுந்திரு. பிறந்த நாளை முன்னிட்டு இன்னைக்கு வீட்டு வேலையெல்லாம் நீதான். முதல் காரியமா படுக்கையை சுத்திவை. வீட்டைப் பெருக்கு! பாத்ரூமைக் கழுவு!

    ஏய்... இது அநியாயம்.

    எது அநியாயம்? எங்கிட்டகூடச் சொல்லாம உன் லவ்ஸ்கிட்டே மட்டும் சொல்லியிருக்கியே... அது அநியாயமில்லையா...? போய் காப்பி போட்டுக் கொண்டுவா

    வெங்கடேசன் அந்த அனாமதேய காயத்ரியை சபித்துக்கொண்டு வேலைகளையெல்லாம் செய்தான். காப்பி போட்டான். துணிகளைத் துவைத்துக் கொடுத்தான். சலவை பண்ணினான். கடைசியில், இனி என்னால முடியாதுப்பா. மூச்சு வாங்குது! என்று தளர்ந்து போனான்.

    மூச்சு வாங்குதா... அப்போ அவளை கூப்பிட்டுக்கோ விமல்குமார் டூத்பிரஷ்ஷுடன் சிரித்தான்.

    எவளை?

    காயத்ரியை.

    அடே... பாவிகளா! ஏண்டா என் உயிரை எடுக்கறீங்க? என்னை நம்புங்கடா. அந்த சண்டாளி மட்டும் எங்கிட்டே கிடைச்சான்னா... அப்படியே கழுத்தைப் பிடித்து...

    கிஸ் கொடுப்பாயா...

    ஐயோ! ஏண்டா என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க...? என்று வெங்கடேசன் புலம்பினான்.

    ஆனாலும் அவர்கள் அவனை நம்புவதற்குத் தயாராய் இல்லை. அலுவலகத்திற்குப் புறப்படுகிறவரை பூஜித்தனர். வழியில் தாஷ் பிரகாஷிற்குப் போய் வெங்கடேசனிற்கு செமத்தியாய் செலவு வைத்தனர். மதியம் டின்னர் கூட அவன் தான் அழுதான். மாலையிலும் அவனை விடாமல் அவன் செலவில் சினிமாவிற்குப் போயினர். சினிமா விட்டதும் சனியன் விட்டது என்று வெங்கடேசனால் நிம்மதியடைய முடியவில்லை, பாபு ஓடிப்போய் விஸ்கி வாங்கி வந்தான் அதை எடுத்துக்கொண்டு. இருட்டான, காஸ்ட்லியான, ஏஸியான அந்த ரெஸ்டாரென்டிற்குள் புகுந்தனர். குடித்தனர். வயிறு முட்ட சாப்பிட்டனர். ஏப்பம் விட்டனர். வெங்கடேசனிற்கு வயிறும் கரைந்தது. பர்ஸும்.

    சாப்பிட்டு முடித்ததும், காயத்ரி பவ! அந்த காயத்ரி பல்லாண்டு வாழ்க! என்று அவர்கள் குதிக்க, அவன் சபித்தான், தங்களுக்கு வெறும் சாப்பாடு மட்டும் போதாது. அதற்கு மேலும் பலதும் வேண்டும் என நண்பர்கள் வேறு பக்கம் போக, வெங்கடேசன் அவர்களை சபித்தபடி அறையை நோக்கி நடந்தான். அவனுக்கு பணம் செலவாகிப்போன வருத்தத்தைவிட, யார் அந்த காயத்ரி என் பதில் தான் சிந்தை போயிற்று நமக்குத் தெரிந்து உறவில், நட்பில், அக்கம்பக்கத்தில் காயத்ரி என்று எவருமே இல்லை. அப்படியிருக்க, நம் பிறந்த நாளைத் தெரிந்துகொண்டு, நமக்கு வாழ்த்து அனுப்புகிற அளவிற்கு அவளுக்கு என்ன அத்தனை பாசம்? அவளுடைய நோக்கம் தான் என்ன? இதில் என்னவோ சூது இருக்கிறது.

    என்னவோ ஆபத்து வரப்போகிறது என்று அவனுடைய மனது சொன்னது. வீட்டைத் திறந்தான். உள்ளே உஷ்ணமாயிருந்தது லைட்டை போடவில்லை. கரண்ட போயிருந்தது. அறைக்குள் இருட்டு கண்களைக் கவ்வியது.

    தடவித் தடவிப் போய் உள் அறை செல்ஃபில் டார்ச்சு எடுத்து அடித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1