Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anitha Akila Agalya
Anitha Akila Agalya
Anitha Akila Agalya
Ebook80 pages51 minutes

Anitha Akila Agalya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Anitha Akila Agalya

Read more from N.C.Mohandass

Related to Anitha Akila Agalya

Related ebooks

Related categories

Reviews for Anitha Akila Agalya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anitha Akila Agalya - N.C.Mohandass

    1

    "அரசு! வண்டியை எடு! போஸ்டாபீஸ் போகணும்!"

    பிரசாத் சொல்லிவிட்டு பேண்டிற்கு மாறினான்.

    டி.வி.யில் A முதல் Z வரை சானல் மாற்றிக் கொண்டிருந்த அரசு, லுங்கியும் பனியனுமாய் எதுக்கும்மா இப்போ போஸ்டாபீஸ்? என்று சோம்பல் முறித்தான்.

    ஊரிலிருந்து போன் வந்தது. கல்யாண இன்விடேஷன் தபால்ல அனுப்பியிருக்காங்களாம். உங்களுக்கெல்லாம் கொடுக்க வேணாம்?

    வேணாண்டா. எதுக்கு ஃபார்மாலிடி!

    ஃபார்மாலிடிக்காக இல்லேடா! வசூல்! அழைப்பிதழ் கொடுக்கலேன்னா மொய் வெப்போமா... அதுக்காகத்தான்!. என்று சமையலும் கரண்டியுமாய் சக்தி வெளிப்பட்டான்.

    சீ... ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க! அரசு! இப்போ வரியா இல்லியா நீ?

    கொஞ்சமிருடா ‘சன்’னுல நியூஸ் பார்த்துட்டு... என்று ரமேஷ் சப்தம் கூட்டினான்.

    அது பாலைவனத்தில் பணம் பண்ணும் குவைத் அவர்களெல்லாம் பாச்சிலர்கள். ஒரிஜினல் பாச்சிலர்களில்லை. குடும்பத்தை வைத்து போற்ற முடியாத - அல்லது வசதிப்படாமல் அனுப்பிவிட்டு கொக்கரிக்கும் சேவல்கள்!

    நண்டு குருமா பண்ணிக்கொண்டிருந்த சக்தி நானும் வந்துர்றேன். ஒரு அஞ்சு நிமிஷம்! என்று கரண்டியை நீட்டினான்.

    வேணாம். நீ எதுக்காம்? நாங்க வரதுள்ளே அப்ளம், வடையெல்லாம் ரெடி பண்ணி வை! இது செல்வன்.

    ஆமாம்! உன் வீதம் வரும்போது வெறும் ரசம், மோர்! நான் மட்டும் வடை பாயாசம்னு விருந்து வெக்கணுமா! முடியாதுப்பா! எனக்காக அங்கே ஜமயாவுல ஆள் ஒண்ணு காத்துக்கிட்டிருக்கு!

    யாரு... ஸ்ரீலங்காவா... இல்லை பிலிபைனியா...? ஊருக்கு எழுதறேன் பார்!

    சே! எதெதுக்குதான் பொறாமைப்படதுன்னு இல்லியா... கிளம்புங்கடா! என்று அரசு கீழே வந்து காரை ஸ்டார்ட் பண்ணினான்.

    ரோட்டில் கார்கள் பறந்து கொண்டிருந்தன. சவர்லே, மெர்ஸிடிஸ், டாயோட்டா, மிட்சுபிஸி, நிஸான் என்று பல ஜாதி வண்டிகள்! பெட்ரோல் லிட்டர் நான்கு ரூபாய் என்பதால் வசதி பண்ணிக்கொள்ள முடிகிறது.

    அதிகப்படி குளிர். அதிகபட்ச வெயில் காரணமாய் இரண்டு சக்கர வாகனங்கள் அபூர்வம். மெயின் ரோடுகளில் எண்பது முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை தனித்தனி ட்ராக்குகள்! கார்களைப் போலவே சட்ட திட்டங்களும் இங்கு அதிகம். அதை மீறும் உள்ளூர்க்காரர்களும் அதிகம்.

    குறிப்பிட்ட வேகத்தைக் கடக்கும்போது ஹைவே’க்களில் உள்ள ஆட்டோமாடிக் காமிராக்கள் படம் பிடித்து கம்ப்யூட்டரில் சேர்த்துவிடும். அந்த பைனை கட்டாமல் ஊரைவிட்டுப் போக முடியாது. ஏர் போர்டில் கிடுக்கிப்பிடி,

    குடும்பத்தையும் ஊரையும் விட்டு தள்ளி இருப்பவர்களுக்கு தபால்தான் மிகப் பெரிய ஆறுதல். நம்மூர் போல கடிதங்கள் இங்கு வீட்டுக்கு வீடு விநியோகிக்கப்படுவதில்லை. போஸ்ட் பாக்ஸ் பெற்று அன்றாடம் நாம்தான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஏ... ஏசி போடும்மா! ஒரே வியர்வை! சக்திவேல் காலரை தூக்கினான்.

    ஏசி என்பது இங்கே எளிதாயிருக்கிறது. தேவையும் கூட. வீடு - அலுவலகம் வாகனம் - கடைகள் எல்லாமே குளிர் - குளிர்! வெளியே பார்க்கும்போது இங்கே சொகுசு. சுகம்! ஆனால் எல்லாமே செயற்கை! அவற்றை அனுபவிக்க முடியாமல் மனம் முழுக்க சொந்த ஊரில் லயித்திருப்பது சராசரியான சாபம்.

    வெறும் பணமும், சொகுசும் மட்டும் வாழ்க்கையல்ல என்பதற்கு கல்ஃப் ஒரு உதாரணம். பணம்! பணம்! இன்னும் சேர்க்கணும். இனியும் சேர்க்கணும் என்று சேர்த்துக் கொண்டேயிருக்கும்போது பெரும்பாலானோருக்கு வாழ்க்கை தொலைந்து போகிறது.

    பணத்திற்கு அளவு என்ன? தேவைக்கு எது எல்லை? சம்பளம் வாங்கினதும் டிராஃப்ட். ஊரில் அது வீடாகவோ, நகையாகவோ, தங்கைகளின் கல்யாணமாகவோ கரைந்து போவது பரிதாபம். கடன்! ஒரு கடன் முடியும்போது அடுத்ததிற்கு வித்திட்டிருப்பார்கள்.

    இரண்டு வருடம் கஷ்டப்பட்டால் போதும்; பணம் சம்பாதித்து வந்து ஊரில் செட்டிலாகிவிடலாம் என்பதுதான், பெரும்பாலோரின் கனவாக இருக்கிறது.

    ஆனால் அது வெறும் கனவு மட்டுமே!

    ஊருக்குப் போகும்போது, வீட்டில் ஃப்ரிட்ஜ் வேணும். வாஷிங்மெஷின் வேணும்! தம்பிக்கு ஒரு வாகனம்! அல்லது பிசினஸ்!

    ‘எங்கிட்டு ஏதுப்பா பணம்?’

    ‘நீ அப்படி சொல்லக்கூடாது. நீ மனசு வச்சா முடியும்!’

    ‘எப்படிப்பா...?’

    ‘என். ஆர்.ஐ.க்கு

    Enjoying the preview?
    Page 1 of 1