Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Maalaiye Thol Serava?
Poo Maalaiye Thol Serava?
Poo Maalaiye Thol Serava?
Ebook125 pages45 minutes

Poo Maalaiye Thol Serava?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது தவிப்பான காதல் கதை
விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளேன் புதையலை புதைத்து வைக்கலாம். காதலை புதைத்து வைக்க முடியுமா?
உண்மையான காதல் ஒரு நாள் ஜெயிக்கும்.
“பூமாலையே தோள் சேரவா”
நாவலின் கரு இது தான்
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305775
Poo Maalaiye Thol Serava?

Read more from Maheshwaran

Related to Poo Maalaiye Thol Serava?

Related ebooks

Reviews for Poo Maalaiye Thol Serava?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Maalaiye Thol Serava? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    பூ மாலையே தோள் சேரவா?

    Poo Maalaiye Thol Serava?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய் பாய்ந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் இரண்டு மினி பேருந்துகளிலும்... ஒரு சுமோ காரிலும் வந்திருந்தார்கள். மொத்தமே நூறு பேர்தான் இருப்பார்கள். 'இவ்வளவு பெரிய மண்டபத்தைப் பிடித்திருக்க வேண்டாமோ...?' எனத் தோன்றியது சதாசிவத்திற்கு...! அந்த ஊரிலேயே பிரபலமான கல்யாண மண்டபம் அது. ஒரு நாள் வாடகை பத்தாயிரம் ரூபாய். தண்ணீர் கட்டணம், மின்சாரக் கட்டணம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே வசூலித்துக் கொண்டார்கள்...!

    நிச்சயதார்த்தம் தானே...! சாயங்காலம் நாலுமணியிலேர்ந்து ராத்திரி ஏழு மணி வரைக்கும்தானே...? நான் நடுத்தரவர்க்கம்...! புள்ளகுட்டிக்காரன்...! கொஞ்சம் கொறைச்சு வாங்கிக்கக் கூடாதா...?

    கெஞ்சி... கூத்தாடி... தன் இயலாமையைச் சொல்லி எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார்.

    நடுத்தர வர்க்கம்னு சொல்றீங்க. பின்ன எதுக்கு நிச்சயதார்த்தத்தை மண்டபத்துல வெய்க்கணும்னு ஆசைப்படறீங்க...? ஏதாவது பெரிய கோயிலா பார்த்து நடத்திக்கலாமே...?

    எகத்தாளமாய்... அந்த மண்டபத்தின் மானேஜர் கேட்ட கேள்விக்கு...

    வாஸ்தவம்தான்...! எனக்குக் கூட அதான் ஆசை. ஆனா பொண்ணைப் பெத்தவனாயிட்டேனே...! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொல்றதுக்கு தலையை ஆட்டித்தானே ஆகணும்? கல்யாணத்தை நாங்க பண்ணிக்கிறோம்... நிச்சயதார்த்தத்தை... ரொம்ப கிராண்டா பெரிய மண்டபமா பார்த்து நீங்க பண்ணிடுங்கன்னு அவங்க கறாரா சொல்றப்ப முடியாதுன்னா சொல்ல முடியும்...?

    தன் ஆதங்கத்தைக் கக்கினார். குறைத்து கணக்குப் போட்டாலும் எப்படியும் நாற்பதாயிரம் ரூபாயாவது செலவாகிவிடும். என் மனசு கலங்கியது. குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்த பணத்தை தண்ணீராய் வாரி இறைக்க மனசே வரவில்லை...!

    இவ்ளோ... பணம் செலவழிச்சு நிச்சயதார்த்தம் பண்றதுக்கு நாம என்ன லட்சாதிபதியா? எதுக்காக அவங்க சொன்னதுக்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுனீங்க?

    இது சம்பந்தமாய் பூரணிக்கும்... அவருக்கும் சண்டையே வந்துவிட்டது.

    நல்ல... எடம்! நம்ம கலைமதியைத்தான் கட்டணும்னு அவங்க ஒத்தக் கால்ல நிக்கறாங்க...! ஒரே புள்ள...! கைநெறய சம்பாதிக்கறான். லட்சணமா இருக்கான்! எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத குடும்பம். கலைமதியை கண்ணுக்குள்ளே பொத்தி வெச்சு தாங்குவாங்க...! செலவைப் பார்த்தா... முடியுமா? சரின்னு தலையாட்டியாச்சு... எப்பாடுபட்டாவது செஞ்சுதானே ஆகணும்...?

    கலைமதிக்குக் கீழ இன்னொருத்தி இருக்கா... நிறைமதியையும் மனசுல வெச்சுக்கங்க...

    அவளுக்கு இப்ப என்ன அவசரம்...! நீ வேலையைப் பாரு...

    நா... என் வேலையைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்...! நீங்களா வந்து தெனமும் அடுப்பூதிகிட்டு இருக்கீங்க...?

    பூரணி மட்டுமல்ல... கலைமதி கூட அவரை வறுத்தெடுத்தாள்.

    உங்க மனசுல என்ன நெனைச்சுகிட்டு இருக்கீங்க? இவனை விட்டா எனக்கு வேற மாப்பிள்ளையே கெடைக்காதா? ஏம்ப்பா நீங்களா கஷ்டத்தை இழுக்கறீங்க...!

    எல்லாம் உன்னோட சந்தோஷத்துக்காகத் தானே...

    ஆமா நீங்க சிரமப்படறது எனக்கு சந்தோஷமா? கல்யாணம் இப்ப வேணாம்... ஒரு வருஷம் போகட்டும்னேன்...! அந்தத் தரகர் பண்ணின வேலை! விடாப்பிடியா கொண்டு வந்து நிறுத்தி வம்புல மாட்டிவிட்டார்...! என்னிக்காச்சும் ஒரு நாள் அந்தத் தரகர் யாருமில்லாத நேரத்துல எங்கண்ணுல வந்து சிக்கட்டும்...! கவனிச்சுக்கிறேன்...!

    பணத்தை சேகரிப்பதை விட... எல்லோரையும் சமாதானப்படுத்துவதுதான் மிக மிக கஷ்டமாக இருந்தது.

    மூத்தவ வளர்மதி மாதிரி நீயும் வசதியா... நிம்மதியா வாழணும்கறதுக்காகத்தான்... நான் பாடுபடறேன்...! மூத்ததை நல்ல எடமா பார்த்துக் குடுத்துட்டு மத்ததை தள்ளினா போதும்னு தள்ளிட்டாங்கன்னு யாராவது நாளப்பின்ன சொல்லக்கூடாது பாரு...! அதான்...

    கல்யாணத்திற்கு அலைவது போல... இதற்கும் அலைய வேண்டியிருந்தது. மண்டபம் புக் பண்ணி, மளிகைக் கடையிலிருந்து சமையல்காரர் வரை அட்வான்ஸ் கொடுத்து ஒவ்வொன்றையும்… பார்த்துப் பார்த்து கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. பல் குத்துவதற்கு தங்கத்திலே ஊசியைக் கொடுத்தால்கூட 'முனை மழுங்கியிருக்கே...! நல்லதாப் பார்த்து வாங்கியாந்துருக்கக் கூடாதா?' என திருப்தியில்லாமல் குறை சொல்வது காலம் காலமாய் மாப்பிள்ளை வீட்டார்களின் வழக்கம்...! அப்படி எதுவும் குறை வந்து விடக்கூடாது என்பதில் சிரத்தையாய் இருந்தார். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் வீடியோ எடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

    தன்னுடைய வயதை மறந்து... கல்யாணத்திற்குத் தேவையான பணத்தைப் புரட்ட வேண்டும் என்ற கவலையை மறந்து... ஒரு விடலைப் பையன் மாதிரி... அங்கும் இங்கும் ஓடி... வேலை செய்து கொண்டிருந்தார்.

    இவர்கள் வீட்டு தரப்பில்... அவ்வளவாய் கூட்டமில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள்... மிக நெருங்கிய உறவினர்கள் என சொற்பமான பேர்களே வந்திருந்தார்கள்.

    கலைமதி சாதாரணமாகவே ரொம்ப அழகு! இப்போது கட்டியிருந்த பட்டுச் சேலையிலும்... அணிந்திருந்த ஆபரணங்களிலும்... வானிலிருந்து கீழே இறங்கிய தேவதைபோல ஜொலித்தாள்.

    கலைமதிக்கா...

    ம்...

    பட்டுப்பாவாடையும்... குடைஜிமிக்கியும் அணிந்திருந்த சிறுமி ஒருத்தி கலைமதியின் காதோரம் குனிந்து கிசுகிசுத்தாள்.

    மாப்ளை... ரொம்ப அழகாருக்கார்...!

    உனக்குப் புடிச்சிருக்கா...?

    நெறைய புடிச்சிருக்கு பெரிய கண்களை அகலமாய் விரித்தாள்.

    அப்ப நீயே அவரைக் கட்டிக்கறியா...?

    ச்சீ... போக்கா! எனக்கு வெக்கமா... இருக்கு...

    அந்தச் சிறுமி சிணுங்கியபடியே ஓடிப் போனாள்!

    கலைமதியைச் சுற்றிலும் அமர்ந்திருந்த தோழிகள் அவளைச் சீண்டத் தொடங்கினார்கள்.

    டி... கலை... நீ குடுத்து வெச்சவடி! எங்களைப் பொண்ணு பார்க்க வர்றவனுங்க பூரா வத்தலும் தொத்தலும் தொப்பையும் சொட்டையுமா வர்றானுங்க. ஆனா உனக்கு சினிமா ஹீரோ மாதிரி வந்து கெடைச்சுருக்காரே!

    ஏக்கப் பெருமூச்சு விட்டாள் தீபா.

    நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை... நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு அடிக்கடி பொலம்பிகிட்டே இருப்பியே, இப்ப மட்டும் எப்படி சம்மதிச்சியாம்? என்றாள் லேகா.

    இதென்ன கேள்வி? மாப்ளையோட அழகைப் பார்த்து மயங்கியிருப்பா! இந்தக் கட்டழகனை வேணாம்னு சொல்றதுக்கு அவளுக்கென்ன கிறுக்கா? இது ப்ரியா.

    Enjoying the preview?
    Page 1 of 1