Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullil Vizhuntha Kili
Mullil Vizhuntha Kili
Mullil Vizhuntha Kili
Ebook70 pages25 minutes

Mullil Vizhuntha Kili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்கால இளம்பெண்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடாது. இனிக்க இனிக்க பேசி காதல்வலையில் வீழ்த்துகிற கயவர்களை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது.
நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் ஓடிப்போக நினைக்கும் "நேசமதி" என்னும் இளம் பெண் சந்திக்கும் திகிலான சம்பவங்களே "முள்ளில் விழுந்த கிளி"
"நேசமதி" தன்னை சுழ்ந்த ஆபத்திலிருந்து தப்பித்தாளா….
வாசித்துப்பாருங்கள்
-மகேஷ்வரன்
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304778
Mullil Vizhuntha Kili

Read more from Maheshwaran

Related to Mullil Vizhuntha Kili

Related ebooks

Related categories

Reviews for Mullil Vizhuntha Kili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullil Vizhuntha Kili - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கொலை செய்ய ஆசை...

    Kolai Seiya Aasai…

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    நிலவை யாரோ கொள்ளையடித்திருந்தார்கள்.

    எங்கும் காரிருள்...

    அந்தப் பிரம்மாண்டமான பங்களாவின்... மொசைக் பதிக்கப்பட்ட ரம்யமான ஹாலின்... அழகழகான ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்த... டிஸ்டெம்பர் பூசப்பட்ட சுவரின்... வலது பக்கத்திலிருந்த...

    தேக்கு மர பீரோவின் மேலிருந்த… அந்தக்கிளி கூண்டிலிருந்து... கடிகாரக்கிளி... பத்து முறை...கீ...கீ...கீ... என அலறிவிட்டு ஓய... இரண்டாவது மாடியில் வலதுபக்க மூன்றாவது அறையினுள்...

    கட்டிலில்... வெல்வெட் மெத்தையில் கண்களை மூடி அமர்ந்திருந்த நேசமதி... விசுக்கென எழுந்தாள்.

    நேசமதிக்கு...

    நேசமதி...எப்படி இருந்தாள்... தெரியுமா?

    நேசமதி நன்றால்... எல்லோரும் நேசமதியைத்தான் உற்றுப்பார்ப்பார்கள். காரணம்... அத்தனை... அழகு... இளமை… எழில் பொங்கும் சிலையென இருந்தாள்.

    நேசமதி கட்டிலைவிட்டு இறங்கினாள். அறையின் ஒரு மூலையில் அவிழ்த்தெறிந்த அழுக்குத்துணிகளுக்குக் கீழே... ஒளித்து வைத்திருந்த அந்த மினி சூட்கேஸைக் கையில் எடுத்தாள். மனதினுள்... திரும்பத் திரும்ப… அபிஷேக் வந்தான்.

    இருபுருவங்களுக்கும் மத்தியில் பூசிய... சின்ன விபூதி கீற்று. கண்களில் வழிகிற காதல்... கருகரு மீசைவழிய… தெத்துப் பல் தெரிய... படிய வாரிய கிராப் தலை... கேசம் நெற்றியில் புரளபுரள... சிரித்தான்.

    'நேசமதி... நேரமாய்ட்டு... வா... வா... வா...' என்றான்.

    ஏய் வரமாட்டியா? என்னை ஏமாத்திடுவியா? நீ மட்டும்... இன்னிக்கு ராத்திரி நா சொன்ன எடத்துக்கு வரலைன்னு வெச்சுக்க... அப்புறம் நீ.. இந்த ஜென்மத்துல என்னைப் பார்க்கவே முடியாது...

    உனக்கு... நான் முக்கியமா? இல்லை. உன் அண்ணனோட... கௌரவம்... அந்தஸ்து... பணம்... பங்களா... பாசம் முக்கியமா? நான்தான் முக்கியம்னா... வா...

    உன் கழுத்துக்குத் தாலியைத் தருவேன். உனக்கு மனைவிங்கற பட்டத்தையும்... கொஞ்சநாள்ல தாய்ங்கற பிரமோஷனையும் தர்றேன். ஓர் இனிய... புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

    நீ வரல்லைன்னா என் கழுத்துக்கு நானே மரணக் கயிறை மாட்டி… சுருக்க வெச்சுகிட்டு... 'அமரன்'கற… பிரமோஷனைத் தேடிப்பேன்...

    புரியலை...?

    செத்துப் போயிடுவேன்னு சொல்றேன்... ஆமாம் நேசமதி... நீ வரலைன்னா... நான்... காற்றோடு காற்றாய்... மேகங்களோட மேகமாய்... ஆகாசத்தோட ஆகாசமாய்... ஆயிடுவேன் இது சத்தியம்… என்று சின்னக்குழந்தையாய் அழுதான்.

    அதற்குமேல் நேசமதியால் பொறுமையாய் இருக்க இயலவில்லை.

    அபிஷேக்...

    என்னுயிரே... இதோ வருகிறேன்... என்ன நடந்தாலும் சரி... நான் உன்னைத் தேடி வரத்தான் போகிறேன்...

    சூட்கேஸோடு அறையைவிட்டு வெளியே வந்தாள்... உடம்பு நடுங்கியது. இதயம் படபடத்தது. மூச்சே நின்றுவிடும் போல

    Enjoying the preview?
    Page 1 of 1