Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavukku Kobam Varum!
Nilavukku Kobam Varum!
Nilavukku Kobam Varum!
Ebook80 pages26 minutes

Nilavukku Kobam Varum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128304625
Nilavukku Kobam Varum!

Read more from Maheshwaran

Related to Nilavukku Kobam Varum!

Related ebooks

Reviews for Nilavukku Kobam Varum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavukku Kobam Varum! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    நிலவுக்கும் கோபம் வரும்!

    Nilavukku Kobam Varum!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    கையில் காபி குவளையோடு... மோகனவல்லியின் அறைக்குள் நுழைந்தாள் வைகை.

    மோகனவல்லியிடமிருந்து... குறட்டை சப்தம் கேட்டது.

    போர்வையை முழங்கால் வரைக்கும்... இழுத்துவிட்டுக் கொண்டு முகத்தை முக்காடு போட்டபடி... தீவிரமான தூக்கத்தில் இருந்தாள். ஆடை விலகியதைக் கூட பொருட்படுத்தாமல் மோகனவல்லியின் மீது... கையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள் விமலா.

    'எழுப்பலாமா... வேண்டாமா…?' யோசனையால் நின்றாள் வைகை.

    சற்று முன்புதான் குளித்ததற்கு அடையாளமாய் ஈரத்துண்டை தலையில் சுற்றியிருந்தாள். முகத்தில் பூசியிருந்த மஞ்சள் பொடியின் வாசனை அறையையே நிறைத்தது.

    இருவரும் புரண்டு படுத்தார்கள்.

    சுவர்க் கடிகாரத்தில் சின்னமுள் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

    தாயும் மகளும்... இரவு பதினொன்றரை மணி வரைக்கும் டி.வி.யில் சீரியல் பார்க்கிறார்கள். அதன் பிறகுதான் தூங்கவே செல்கிறார்கள். தினமும் நடப்பதுதான் இது.

    மோகனவல்லியாவது வயதானவள். வீட்டில் இருப்பவள். ஆனால் விமலா... கல்லூரியில் படிப்பவள். இப்படி தினம் காலை எட்டு மணி வரைக்கும் உறங்கினால்… என்னாவது?

    வைகைக்கு கோபத்தைவிட கவலையே அதிகரித்தது. தன் கணவனின் தங்கையாயிற்று என்ற நினைப்பில் ஏதேனும் புத்திமதி சொல்லிவிட்டால் அவ்வளவுதான்... மோகனவல்லி பிடிடபிடியென்று பிடித்து விடுவாள்.

    'உன்னோட வேலையை மட்டும் பாரு...! புத்திமதி சொல்றதெல்லாம் எம் பொண்ணுகிட்ட வச்சுக்காதே...! நாக்கை இழுத்து வெச்சு அறுத்துடுவேன்...'

    ராட்சசியாக கிளம்பி விடுவாள்.

    நாக்கை கத்தியாக வீசினால் வைகையால் தாங்க முடியாது. அதனாலேயே எதையும் கண்டுகொள்ள மாட்டாள். அவளைப் பொறுத்தவரை அந்த வீடு ஒரு போர்க்களம்… ரணம் அடையாத நாளே கிடையாது.

    கணவன் ராகுல் எதையும் கண்டுகொள்ளமாட்டான். அம்மா சொல்வதே வேதம். தங்கை மீது உயிர். மற்றபடி வைகை அவனுக்கு ஒரு போகப் பொருள்.

    வைகைக்கு என்று தனிப்பட்ட ஆசை, பாசம், உணர்ச்சிகள் இருப்பதைப் பற்றி கவலைப்படவே மாட்டான். சுயநலத்தின் மொத்த உருவம்தான் ராகுல்... அவன்தான் அப்படி என்றால் அவனுடைய அப்பா சடகோபனும்... மகா கேவலமானவர். எந்த நேரமும் போதையிலேயே இருப்பவர். ராகுலின் அணணன் தினேஷ்… காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டை விட்டே போய்விட்டான்… இந்தக் குடும்பத்தினரின் தொல்லைகள் தெரிந்துதான் ஒதுங்கிவிட்டான். வைகைதான் பாவம்.

    தெரியாத்தனமாய்… மாட்டிக் கொண்டாள்.

    வைகைக்கும் ராகுலுக்கும் கல்யாணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த ஆறு மாதத்தில் வைகை படாத துயரங்கள் கிடையாது.

    ஜீரணிக்கத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

    வைகை... அங்கே என்ன பண்றே...?

    ராகுல் பாத்ரூமிலிருந்து குரல், கொடுத்தான்.

    இதோ வர்றேங்க...!

    சீக்கிரமா... வா! என்னோட டவலை எடுத்துக் கொடு பரபரத்தான்.

    காபி குவளைகளை படுக்கையையொட்டியிருந்த டீபாய் மீது வைத்து விட்டு... தேங்காய்ப்பூ துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் ஓடினாள் வைகை.

    வைகை... வெந்நீர் ரெடியாயிடிச்சா?

    ரெடி மாமா…!

    பாத்ரூமில் தூக்கிக் கொண்டு போய் வெச்சு… பச்சை தண்ணியையும் கலந்துடு…

    Enjoying the preview?
    Page 1 of 1