Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Selvi
Tamil Selvi
Tamil Selvi
Ebook60 pages20 minutes

Tamil Selvi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வறுமையே நிலைமை என்ற தமிழ்ச் செல்விக்கு கல்யாணம் என்னும் நரகம், இரும்பு வாசலை திறந்து தமிழ்ச்செல்வியை வரவேற்றது. இத்தனை நாள் வறுமைதான் கொடுமை என்று நினைத்திருந்த தமிழ்ச் செல்வி, முதன்முறையாக மோசமான கணவன் வாய்ப்பதும்தான் கொடுமை என்பதை புரிந்து கொண்டாள். குடிகாரனான தன் கணவன் செல்வம் பஞ்சாயத்து தலைவராக மாறுகிறான், அதனால் ஒரு குடிகாரனையே திருத்துகிறானா? திடீரென செல்வத்திடம் இத்தகைய மாற்றம் ஏதனால் ஏற்படுகிறது? செல்வத்தின் தாயான பார்வதி இறக்கக் காரணம் என்ன? வாருங்கள் நாமும் செல்வம் மற்றும் தமிழ்ச் செல்வியுடன் சேர்ந்து குடிபழக்கமில்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் பார்க்கலாம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580111008325
Tamil Selvi

Read more from Arnika Nasser

Related to Tamil Selvi

Related ebooks

Reviews for Tamil Selvi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Selvi - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    தமிழ்ச் செல்வி

    Tamil Selvi

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    அந்த ஆத்துமேட்டில் தன்னந்தனியாக அமைந்திருந்தது ஒரு ஓலைக்குடிசை. குடிசையின் பின் ஒரு சிறு சதுரமாய் உயிர் வேலி கட்டப்பட்டிருந்தது. சிறு தடுப்புக்குள் குளியலறை. அதன் அருகே வலை அடைத்த கோழிகூண்டு. வேலியை அணைத்து ஒரு முருங்கைமரம் உயர்ந்திருந்தது.

    விடிய இன்னும் முழுதாய் ஒருமணி நேரம் இருந்தது. தூக்கத்திலிருந்து கிழிந்த போர்வையை உதறிக்கொண்டு எழுந்தாள் தமிழ்ச்செல்வி.

    தமிழ்ச்செல்வி வயது 23 மத்திம உயரம் கொண்டவள் கன்னங்கறுத்த அழகி ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவள். தற்சமயம் தீப்பெட்டிகளுக்கு லேபிள் ஒட்டியும் பீடி சுற்றியும் வாரம் நூறு ரூபாய் சம்பாதித்து குடும்பத்துக்கு தருபவள்.

    தந்தை கூலித்தொழிலாளி. அம்மா கோரைப்பாய் நெய்பவள். ஐந்து தங்கைகள்.

    தமிழ்ச்செல்வி கூடை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். இளநீர் மட்டைகளையும் மாட்டுச் சாணத்தையும் சேகரித்தாள். மட்டைகளை ஆத்து மேட்டில் காயப்போட்டாள். கோழிகூண்டை திறந்தாள். ஏதேனும் கோழியின் ஆசனவாயில் முட்டை உள்ளதா என சுண்டுவிரல் விட்டு ஆராய்ந்தாள். எல்லாவற்றையும் விரட்டி விட்டு கூண்டைக் கழுவிவிட்டாள். இரு ஆடுகளை அவிழ்த்து விட்டாள். அடைகோழியை தூக்கி வானத்தில் வீசிறினாள். கீழேகுதித்து எச்சமிட்டது. இரை இட்டாள். தின்று நீர் பருகியது. காலைப் பணி கழிந்தது.

    எட்டு அலுமினிய டம்ளர்களில் நீராகாரம் நிறைத்தாள்.

    எல்லாரும் செங்கல்லை பொடி பண்ணி பல்துலக்கினார்.

    நீராகாரம் பருகும்போது ஏதேனும் சோற்று பருக்கை வந்து விட்டால் போனஸ்தான். இரு பருக்கைகள் சிக்கின, ஆசையாய் தின்றாள் தமிழ்ச்செல்வி.

    அவளின் ஒரே சொத்து ஒரு ஓட்டை ட்ரான்ஸிஸ்டர்தான்.

    அதை திருகினாள்.

    அவள் அதிஷ்டம் பேட்டரி தீரவில்லை.

    ‘தில்லானா தில்லானா நீ தித்திக்கிற தேனா?’ என்று பாடியது

    பாட்டைக் கேட்டபடி பீடி சுற்ற ஆரம்பித்தாள்.

    புகையிலைத்தூளின் நாற்றம் அவளது மூக்குக்கு பழகிப் போயிருந்தது.

    பீடி சுற்றும்போது அவளது கைவிரல்களின் நாட்டியம் இருக்கிறதே- அது படு அசத்தல். வாயை ஒரு மாதிரி கோணிக் கொள்வாள்.

    சமயங்களில் வாய்க்குள் சூடமிட்டாயை அடக்கிக் கொள்வாள்.

    உமிழ்நீருடன் மிட்டாய் சேர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1