Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thrill Thrill Dynamite
Thrill Thrill Dynamite
Thrill Thrill Dynamite
Ebook96 pages55 minutes

Thrill Thrill Dynamite

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

த்ரில் விரும்பிகளான மூன்று மோசமான நண்பர்கள் விசித்திரமாக கார்டுகளை வைத்து அவர்களில் யார் த்ரில் விஷயத்தை நடத்த வேண்டும் என்று பார்க்கின்றனர். அவர்கள் முறையே காரியப்பா, ராமலிங்கம், ராஜதுரை. அவர்களில் ஒருவர் தீர்மானிக்கும் த்ரில் விஷயம் பஸ்ஸில் டைனமைட் வைப்பது. சில கருங்காலிகளை வைத்து அவர்கள் நடத்தும் இரக்கமற்ற செயலும் அதை போலீஸ் முறியடிக்க முயற்சிப்பதும் மட்டுமின்றி அந்த த்ரில் விரும்பிகளை யார் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பது படிப்பர்களுக்கும் நிச்சயம் த்ரில் அனுபவமாக இருக்க வேண்டுமா என்றால் இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111006283
Thrill Thrill Dynamite

Read more from Arnika Nasser

Related to Thrill Thrill Dynamite

Related ebooks

Related categories

Reviews for Thrill Thrill Dynamite

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thrill Thrill Dynamite - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    த்ரில் த்ரில் டைனமைட்

    Thrill Thrill Dynamite

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஆலிவ் க்ரீன் கலர் மாருதியை பிளாட்பாரத்தை ஒட்டி மெதுவாக மிக மெதுவாக டயர்களால் நடக்க வைத்து ஸ்டியரிங்கை கையாண்டபடி ஜின் குடித்த வாயால் சிரித்தார் கரியப்பா.

    கரியப்பா. முன் வழுக்கை நெற்றியில் விருப்பமாய் ஏறி காதோர கேசத்தையும் பின் தலைக் கேசத்தையும் மட்டும் கருணையுடன் விட்டிருந்தது. இரு கருப்பு கம்பளிப்பூச்சி புருவங்கள். பளபளப்பு இழந்த கருவிழிகள். வெண்விழியில் இரத்த நரம்புக் கோடுகள் தெரிந்தன. மேல் இமையில் ஒரு மடிப்பும் கீழ் இமையில் இருகோடுகளும் தென்பட்டன. கனத்த மூக்கு. மூக்கு நாசித் துவாரங்களின் முகப்பில் சவரத்தின் போது கவனிக்கத் தவறிய ரோமங்கள். தூரத்தில் கழுகு தலைகீழாய் பறப்பது போல் மீசை-இரு முனையும் வீராப்பு ஏற்படுத்தப்பட்டு, நாவல் பழ நிற உதடுகள். நிகோட்டின், ஜர்தா, விஸ்கி,பிராண்டி இத்தியாதிகள் தொடர் பழக்கத்தில் கறுப்புக் கோடிட்ட மஞ்சள் பற்கள். சாம்பல் நிற சபாரி அணிந்திருந்தார். இடது கையில் தங்க ப்ராஸ்லட். பெட்ரோல் பங்க் முதலாளி.

    கரியப்பாவின் சிரிப்பை ஒருவித போதை திமிருடன் ரசித்து அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார் ராஜதுரை. வயது 59.5. நல்ல உயரம். நகரின் பிரதான கஞ்சா வியாபாரி.

    பின் சீட்டில் அமர்ந்து டெமாக்ரட்டை ராவாக இரு மிடறு விழுங்கி வாயை க்ம்ஹ்ம் என கமறினார் ராமலிங்கம். வயது 25x2+1.5. யானைக்கு சாம்பல் நிற பெயிண்ட் அடித்தது போல் தேகத்தின் நிறம். பாதிக் கண் பக்கவாட்டில் தாண்டாத அரைக் கண்ணாடி. சுத்தமாக மீசையை ஷேவி விட்டு ஐப்ரோ பென்சிலால் மெலிசு மீசை வைத்திருந்தார். ஜவுளி ஹோல்சேல் வியாபாரம்.

    பிளாட்பாரம் ஒட்டி கார் நகர ராஜதுரை கரியப்பாவின் இடது கையைச் சொரண்டினார்.

    வண்டியை நிறுத்தி இன்ஜினை ஆஃப் பண்ணு. ஹெட்லைட்டை அணை... அணைத்தார். எதுக்குடா தொர?

    அதோ பார்!

    சுட்டிய திசையில்-சாக்கு கிழிசலை பாயாக விரித்து ஒரு ரிக்ஷாக்காரனும் அவனது இளம் மனைவியும் படுத்திருந்தனர். அவளின் ஜாக்கட்டின் கீழ் பட்டன்கள் விடுவிக்கப்பட்ட தளர்ச்சியில் ஆறு மாத ஆண் குழந்தை தாய்ப்பால் உறிஞ்சிக்கொண்டிருந்தது.

    கருநீல வானத்தின் வெளிச்ச அப்பளம் தெளிக்கும் பால் வெளிச்சத்தில் அந்த இளம் பெண்ணின் முகம் காமாக்னி மூட்டியது.

    ஆள் பிளாட்பாரமா இருந்தாலும் சூப்பரா இருக்கா இல்லை? ராஜதுரை.

    கரியப்பா தன் தலையில் நெத்நெத் என்று அடித்துக்கொண்டார். பரதேசி! பரதேசி! போயும் போயும் தெரு பொறுக்குறியே! புவனகிரிக் குட்டியை வரச் சொன்னா விடிய விடிய மூழ்கி முத்தெடுக்கலாமே?

    கரியா! டெய்லி பிரியாணி சாப்ட்டு அலுத்துப் போச்சு. இன்னைக்கி பச்சை மிளகா கடிச்சு பழைய கஞ்சி குடிப்போமே! என்ன சொல்ற ராமலிங்கம்?

    ராமலிங்கம் பற்றவைத்த சிகரட்டை கும் என்று இழுத்து பற்களின் இடைவெளி வழியே புகையை கசிய விட்டு கரக்ட்டுடா ராஜதுரை. நம்பளோட Saturday three people club-போட மோட்டோவே த்ரில்தானே? த்ரில் கிடைக்கும்னா எதுவும் செய்யலாம். ஒரு பிளாட்பாரம் குட்டியோட படுத்துத்தான் பாப்பமே...

    ஒக்கேங்கடா ப்ரண்ட்ஸ். கூப்ட்டா வருவாளா? ஹை சொசைடில வர்றியான்னா‘வரேன்-வரல’ன்னு சிரிச்சுட்டு சொல்லிடுவாள்க. ஆனா சேரி ஆ! என் கற்பு போச்சே’ன்னு எட்டி அறையுமே!

    அறைய விடக்கூடாது-நம்பளோட பிரதான ஆயுதத்தால ஒரே போடு...

    ஆயுதம்?

    யெஸ். பணத்தாலேயே அடிப்போம்...

    சரி. நீயே போய் அப்ரோச் பண்ணு பாப்பம்...

    ராஜதுரை இடப்புற கதவை மடக்கி மடங்கி வெளி வந்து நின்றார். இடம் வலம் யாரும் காணாமல் பூட்ஸ் கால் டாக் டாக் டாக்க நடந்தார். படுத்திருப்பவர்களை நெருங்கினார். பேச்சு அமைப்பை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டார்.

    ஃபட்ஃபட் ரிக்ஷாக்காரனை தொடையில் தட்டி எழுப்பினார். பார்த்த பயங்கர கனவின் இழை அடியில் அறுபட்டு பயபதட்டமாய் எழுந்து அமர்ந்தான். ஜொள் வடிந்த வாயை புறங்கையால் இழுவிக்கொண்டு, அஆங். யாரு? யார் சார் நீங்க? யா...

    படுக்கை அமைப்பு அசங்கி அவனின் மனைவியும் கண்விழித்து தலைதூக்கினாள். பால் வழிந்த மார்பை அவசரமாய் மறைத்துக் கொண்டாள்.

    யாரு மச்சான் இவங்க?

    கிடைத்த 15 நொடி அவகாசத்தில் பொய் பின்னினார் ராஜதுரை. "பாத்தா

    Enjoying the preview?
    Page 1 of 1