Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaseegara... Vaseegara
Vaseegara... Vaseegara
Vaseegara... Vaseegara
Ebook93 pages1 hour

Vaseegara... Vaseegara

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு அல்ட்ரா மாடர்ன் க்ரைம் திரில்லர். கதையில் வரும் வர்ணனைகள் சாண்டியல்யனையும் தாண்டியவை. ஸ்டண்ட் மாஸ்டர் ஜெரோம் பேரழகி விந்தியாவை பாரில் சந்திக்கிறான். தான் சந்தித்த விந்தியா பில்லியனர் அழகன் பெருமாளுக்கு இரண்டாவது மனைவி என அறிகிறான். அழகன் பெருமாள் இயற்கைக்கு புறம்பான விதங்களில் செக்ஸ் அனுபவிப்பவன் என்கிற தகவல் கிடைக்கிறது. புதுபட பூஜைக்கு அழகன் பெருமாள் மனைவி விந்தியாவுடன் வந்து கலந்து கொள்கிறான். ப்யூட்டி பார்லரில் ஜெரோம் விந்தியாவை சந்திக்கிறான். யாருக்கும் தெரியாமல் ஆபத்தை நேசி என கூறி விலகுகிறாள். ஜெரோம் பெருமாள் வெளியூர் போன நேரத்தில் விந்தியாவை சந்தித்து காதலை கூறுகிறான். விந்தியாவின் நடவடிக்கைகளை ஆராய பெருமாள் டிடக்டிவ் உத்தமசோழனை அமர்த்தியிருக்கிறான். விந்தியாவுக்காக அழகன் பெருமாளை கொல்ல தயாராகிறான் ஜெரோம். பறக்கும் ஹெலிகாப்டரில் பெருமாளை கொன்றுவிட்டு தப்பிக்கிறான் ஜெரோம். ட்லிஸ்ட்.

விந்தியா உண்மையானவளா அல்லது பொய் சாகசகாரியா? நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580111006380
Vaseegara... Vaseegara

Read more from Arnika Nasser

Related to Vaseegara... Vaseegara

Related ebooks

Related categories

Reviews for Vaseegara... Vaseegara

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaseegara... Vaseegara - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    வசீகரா... வசீகரா...!

    Vaseegara… Vaseegara…!

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser
    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஏவி.எம் ஸ்டுடியோ. மூன்றாவது தளம். குளிர்பதன மூட்டப்பட்டிருந்தது.

    ஏ.ஆர்.ஆர். வொய். கேமிராவுடன் கேமிராமேன் கே.வி.ஆனந்த் உதவியாளர்கள் லைட் மீட்டர் வைத்து ஒளி அளவை அளந்தனர். தலையில் தொப்பியுடன் டைரக்டர் சசி. உதவியாளர் மூர்த்தியுடன் ஸ்கிரிப்ட்டை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

    அஜீத்குமார் மேக்கப்பில் இருந்தார். ஷாலினியுடன் கதைத்துக் கொண்டிருந்தார். முதுகுக்கு வயிற்றுக்கு முழங்காலுக்கு பேடு கட்டியிருந்தார்.

    ஜெரோம்தான் இந்த 'பேசவா?' படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர். வயது 29. உயரம் ஆறு அடி. டேக் வான்டோ கராத்தேயும் தாய் கிக் பாக்ஸிங்கும் கற்றவன். மார்ஷியல் ஆர்ட்ஸில் நிபுணன். இதுவரை 60 தமிழ்ப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவன். ஜெரோம் ஸ்டைல் ஸ்டீவன் ஸீகல் ஸ்டைல். சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்கும். ஜாக்கி சான் டைப் சாகசம் வழியும். ஜீன் கிளாட் வான்டாம் போல் கால் தாக்குதல்கள் அதிகம் இருக்கும்.

    உதவியாளர்களுடன் விவாதித்தான். டைரக்டரிடம். அஜீத்திடம்.

    சிறு ஒத்திகைக்குப்பின் படமாக்கல் நடந்தது.

    இரண்டு மணி நேரத்தில் எட்டு சண்டை சீன்கள் ஓ.கே. ஆயின.

    சசி அறிவித்தார். இன்றைய ஷூட்டிங் ஓவர். பேக்கப்!

    அஜீத் ஜெரோமிடம் சென்று கை குலுக்கினார். எக்ஸ்லன்ட்டா வொர்க் பண்றீங்க. என் முதுகு வலி அக்ரிவேட் ஆகாம பாத்துக்கிட்டீங்க. நன்றி!

    ஷாலினி முறுவலித்தார். விலகினர்.

    சசி கை குலுக்கினார்.

    உதவியாளர்களை அனுப்பிவிட்டு தனது இரத்தச் சிவப்பு நிற 'ஓபல் கார்ஸா' காருக்கு நடந்தான் ஜெரோம்.

    டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசித்தான். சினிமாவில் நடிக்க ஜெரோம் ஓடி வந்து எட்டு வருடமாகிறது. தற்செயலாக ஸ்டண்ட் உதவியாளன் ஆனான். கராத்தே மார்ஷியல் ஆர்ட்ஸ் படிப்படியாக கற்று விஜய் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டரானான். நான்கரை வருடங்களில் அறுபது படங்கள் முடித்து விட்டான். நடிக்கும் ஆசை போய்விட்டது. இந்த ஸ்டண்ட் துறையிலேயே தங்க முத்திரை பதிக்க வேண்டும் என சங்கல்பம் கொண்டான்.

    ஜெரோமை தங்கள் படுக்கைக்கு இழுக்க முயன்று தோற்ற நடிகைகளின் பட்டியலை வெளியிட்டால் ஜெரோமின் மீது உலகப் பொறாமை கொள்வீர்கள்.

    ஜெரோமின் ஒரே கெட்ட பழக்கம் போதை பானம் அருந்துவதுதான்.

    இப்போது கூட அவனது கார் சோழா ஷெரட்டனுக்குள் தான் புகுகிறது. கார் அட்டன்டரிடம் கீயை கொடுத்துவிட்டு மிடுக்காக பாருக்கு நடந்தான்.

    கார்கோ பேன்ட்டும் பேனட்டலூன் ஆயத்த சட்டையும் அணிந்து இருந்தான் ஜெரோம். ஆனால் ஷூட்டிங்கினால் ஆடைகளில் பெயிண்ட் கறையும் தூசியும் படிந்திருந்தன. யாரும் இதனைப் பற்றி பெரிதுபடுத்தவில்லை. காரணம் தினம் இப்படித்தான் வருவான்.

    மேனேஜர் மட்டும் வணங்கினார். ஹாய்!

    ஹாய்!

    ரேஷன் செய்யப்பட்ட பாருக்குள் பிரவேசித்தான் ஜெரோம். ஒதுக்குப்புறமான மேஜையில் அமர்ந்தான்.

    பார் அட்டன்டர் வந்தான். வணங்கினான்.

    என்ன குடிக்கலாம் நண்பா?

    மெக்ஸிகன் ஆல்கஹால் டக்கீலா குடிங்க பாஸ்!

    கொண்டா!

    மாடரேட்டா, ராவா?

    ரா!

    ஸைடு டிஷ்?

    வழக்கம் போல...

    டக்கீலா 25 மில்லி கோப்பையில் வந்தது. தக்காளி ப்யூரே. இடக்கையில் உப்பும் எலுமிச்சை சாறும். டக்கீலாவை ஒரே கல்ப்பில் அடித்து, தக்காளிப் யூரேவை விழுங்கி, உப்பு எலுமிச்சை சாற்றை நக்கினான். உணவு மண்டலத்துக்குள் தித்திப்பான எரிமலைக்கோடு. எலும்பில்லாத உலர் சிக்கன் கொறித்தான் ஜெரோம். அவனது கண்கள் பக்கத்து மேஜைகளுக்கு தாவின.

    ஒரு மேஜையில் ஒரு பெண்மணி வந்து தனியே அமர்ந்திருந்தாள். எதுவும் குடித்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி டிஷ்யூ பேப்பரை கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள்.

    அழுகிறாள்?

    இரண்டாவது ரவுண்டை முடித்துவிட்டு மெதுவாக அவளிடம் நடந்தான் ஜெரோம்.

    எக்ஸ்க்யூஸ் மீ

    Enjoying the preview?
    Page 1 of 1