Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatrodu Kaatrai...
Kaatrodu Kaatrai...
Kaatrodu Kaatrai...
Ebook74 pages55 minutes

Kaatrodu Kaatrai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111002895
Kaatrodu Kaatrai...

Read more from Arnika Nasser

Related to Kaatrodu Kaatrai...

Related ebooks

Reviews for Kaatrodu Kaatrai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatrodu Kaatrai... - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    காற்றோடு காற்றாய்...

    Kaatrodu Kaatrai…

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    தி. நகரில் அந்த ஆடம்பர பங்களா ஆறாயிரம் சதுர அடியில் அமைந்திருந்தது. பங்களா அமைப்பில் சகிக் கலாத்தனமான ஆடம்பரம்.

    போர்டிகோவில் லெக்சஸ் கார் நின்றிருந்தது.

    தோட்டத்தில் நான்கு டாபர்மேன்கள் உலாவின. குளிர்பதனமூட்டப்பட்ட இரட்டை படுக்கையறை, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வீரவேலை - தன் அன்புக் கணவனை ஆழமாய் உறுத்தாள் வாணி.

    வீரவேலை உங்களுக்குத் தெரியாமல் இருக்காது?

    வீரவேல் ஃபேன்டஸி பைனான்ஸ் அண்ட் இன்வெஸ் மென்ட்ஸின் அதிபர்.

    மாமரப் பண்ணை முதலீடு

    காளான்காரன் திட்டம்!

    பன்றி வளர்ப்புத் திட்டம்

    இவை மாதிரியான இருபதுக்கும் மேற்பட்ட உப தொழில்கள் செய்பவர்.

    தனியார் டி.வி.யில் மணிக்கொருதரம் விளம்பரங்களில் பளிச்சிடுவார்!

    ஆளுங்கட்சிக் கூட்டங்களில் தென்படுவார்

    ஒரு தடவை ஸ்டார் டி.வி.யின் இண்டியா பிசினஸ் வீக்கில்கூட தோன்றி அமெரிக்க ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தார்.

    வீரவேல் முதலில் ஒரு நிதி நிறுவனத்தில் வெறும் கிளார்க்காகத்தான் இருந்தார். ஆறு வருடங்களுக்கு முன் துணிச்சலாக சொற்ப முதலீட்டில் சொந்தமாய் நிதி நிறுவனம் தொடங்கினார்.

    அதன்பின் தொட்டதெல்லாம் பொன்னாயின.

    சொந்தமாய் இரு தமிழ்ப்படங்கள் எடுத்தார். இரண்டுமே சில்வர் ஜூப்ளி.

    ஃபேன்டஸி நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1400 கோடி ரூபாய்.

    விவரங்கள் போதும், கதைக்குள் போவோம்.

    குனிந்து கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்

    கனவு நிலையில் வீரவேல், நக்மா, ரம்பா, ஷில்பா செட்டி முத்தமிட்டதாய் பரவசப்பட்டார்.

    தினம் ஒரு முன்னணி நடிகையுடன் சல்லாபிக்கும் ஆணுக்கு மனைவி முத்தமிட்டால் தித்திக்குமா?

    தூக்கம் கலைந்து உண்மை பிடிபட்டு புஸ்வாணமித்தார் வீரவேல்.

    ஆனாலும் நடித்தார்.

    குட்மார்னிங் வாணி டார்லிங்! என்ன காலைல ரொமான்ஸ் மூடுல இருக்க? இன்னிக்கு என்ன விசேஷம்?

    சிரித்தாள் வாணி.

    இன்னிக்கி செம விசேஷ நாள்தான்!

    யூகிக்க பொறுமை இல்லை. நீயே சொல்லிடுதேனே!

    இன்று நம்முடைய 16-ஆவது திருமணநாள்!

    மனம், கவுண்டமணி ஸ்டைலில் திட்டியது.

    சர்தான் போடி குண்டு கத்திரிக்காய். இந்த துக்க நாளை வேற ஞாபகம் மூட்டணுமாக்கும்!

    இருந்தாலும் சிரித்தார் வீரவேல்.

    அட.. ஆமா டார்லிங்.. உனக்கு என்ன கிப்ட் வேணும் சொல்லு!

    உங்க விருப்பம்!

    நடிகை ஜெயஸ்ரீக்கு பரிசளிக்க ஒரு வைரமோதிரம் வாங்கி வைத்திருந்தார் வீரவேல்.

    நேத்தே உனக்கு கிப்ட் வாங்கி வச்சிட்டேன் கண்ணம்மா!

    பொல்லாத ஆளு நீங்க... இன்னிக்கி வெட்டிங்டேன்றது தெரியாத மாதிரி நடிச்சீங்க... ஆனா வைர மோதிரம் வாங்கி வச்சிருக்கீங்க?

    அதான் வீரவேல் ஸ்டைல்! கோயிலுக்கு போய்ட்டு வந்து மோதிரத்தை உன் விரல்ல பூட்றேன!

    எழுந்தார் வீரவேல்.

    இரவாடையைக் களைந்துவிட்டு பாத்ரூம் புகுந்தார்.

    பாத்டப்பில் திரவ சோப் ஊற்றி நுரை படுக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1