Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suriyan Santhippu Part 1
Suriyan Santhippu Part 1
Suriyan Santhippu Part 1
Ebook404 pages2 hours

Suriyan Santhippu Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்தான். அவனை நட்பாய் அணுகி அவனை வாசிக்க வேண்டும். அவனிடமிருந்து புதியதொரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நான் 75க்கு மேற்பட்ட புத்தகங்களை வாசித்த அனுபவம்தான் சூரியன் சந்திப்பு. நான் நேர்காணல் பண்ண விரும்பியவர்களின் பட்டியல் தயாரித்தேன்; அவர்களைப்பற்றி நல்ல, கெட்ட செய்திகள் சேகரித்தேன்; ஒவ்வொருவரிடமும் கேட்க நூறு கேள்விகள் தயாரித்தேன்; நேர்காணலை கதை சொல்லும் உத்தியில் எழுதத் தீர்மானித்தேன்; சூரியன்களுடன் சொந்தமாய்த் தொலைபேசி நேரம் பெற்றேன்; பேட்டியைக் குறிப்புகள் எடுத்து வந்து அன்றிரவே முழுதாய் எழுதி மூன்றில் ஒரு பங்காய்ச் சுருக்கி DTP செய்தேன்; தொடர்கள் முழுவெற்றி பெற்றன. இதோ உங்கள் கையில்...

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580111007775
Suriyan Santhippu Part 1

Read more from Arnika Nasser

Related to Suriyan Santhippu Part 1

Related ebooks

Reviews for Suriyan Santhippu Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suriyan Santhippu Part 1 - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    சூரியன் சந்திப்பு பாகம் 1

    (நேர்காணல்)

    Suriyan Santhippu Part 1

    (Nerkanal)

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    ஹாய் ஜாம்பவான்ஸ்’ என்ற தலைப்பில் 'சரவணா ஸ்டோர்ஸ்' இதழில் வெளிவந்த என் நேர்காணல்களையும் ‘சூரியன் சந்திப்பு’ என்ற தலைப்பில் 'தினமலர் - வார மலரில்' வெளிவந்த என் நேர்காணல்களையும் ஒன்றாய் இணைத்து 'சூரியன் சந்திப்பு' என்கிற பொதுத்தலைப்பில் இரு தொகுப்புகளாக்கியுள்ளேன். (சூரியன் சந்திப்பு முதல்பாகம், இரண்டாம் பாகம்) இரு தொகுப்புகளிலும் சேர்த்து எழுபத்தைந்துக்கு மேற்பட்ட நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

    ‘சூரியன் சந்திப்பு’ தொடர் வாரமலரில் வெளிவரத் தொடங்கியபோது ஒரு விதண்டாவாத 'சு' எழுத்தாளர் கீழ்க்கண்ட இரு கேள்விகளை எழுப்பினார்.

    1. ‘சூரியன் சந்திப்பு’ - தலைப்பில் இருக்கும் 'சூரியன்' ஆர்னிகா நாசரைக் குறிக்கிறதா? அல்லது நேர்காணல் செய்யப்படும் பிரமுகர்களைக் குறிக்கிறதா? அப்படி அது பிரமுகர்களைக் குறிக்கிறதென்றால் தலைப்பு ‘சூரியன்கள் சந்திப்பு’ என்றல்லவா வரவேண்டும்?

    2. ஒரு பிரபல எழுத்தாளர் நேர்காணல் பண்ணப்போவது பதவியிறக்கம் இல்லையா? 'ரிப்போர்ட்டர்' வேலை ஆர்னிகா நாசருக்கு தேவையா?

    முதல் கேள்விக்கு என் பதில்: ‘சூரியன் சந்திப்பு’ தலைப்பில் ஒரு பூடகம் விரும்பியே செய்தேன். சூரியன் நானும்தான்; சூரியன் – நான் சந்திக்கப் போனவர்களும்தான்!

    இரண்டாவது கேள்விக்கு என் பதில்: ரிப்போர்ட்டர் பணி சாதாரணமானது அல்ல. பொதுவாகவே ரிப்போர்ட்டர் பணி ஒரு Thankless Job! எழுத்தாளர்கள் தத்தம் கூட்டுக்குள்ளேயே ஒரு King size egoவுடன் வாழ்வது எனக்கு உடன்பாடல்ல. அவன் வெளியே வரவேண்டும். புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்தான். அவனை நட்பாய் அணுகி அவனை 'வாசிக்க’ வேண்டும். அவனிடமிருந்து புதியதொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நான் 75க்கு மேற்பட்ட புத்தகங்களை வாசித்த அனுபவம்தான் 'சூரியன் சந்திப்பு’.

    நான் நேர்காணல் பண்ண விரும்பியவர்களின் பட்டியல் தயாரித்தேன்; அவர்களைப்பற்றி நல்ல, கெட்ட செய்திகள் சேகரித்தேன்; ஒவ்வொருவரிடமும் கேட்க நூறு கேள்விகள் தயாரித்தேன்; நேர்காணலை கதை சொல்லும் உத்தியில் எழுதத் தீர்மானித்தேன்; நேர்காணல்கள் வெளிவந்த பத்திரிகைகளைத் தொந்திரவு பண்ணாமல் சூரியன்களுடன் சொந்தமாய்த் தொலைபேசி நேரம் பெற்றேன்; பேட்டியைக் குறிப்புகள் எடுத்து வந்து அன்றிரவே முழுதாய் எழுதி மூன்றில் ஒரு பங்காய்ச் சுருக்கி DTP செய்தேன்; தொடர்கள் முழுவெற்றி பெற்றன.

    எனது பட்டியலில் இருந்தும் கீழ்க்கண்டவர்களைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நேர்காணல் செய்ய முடியவில்லை.

    1. எழுத்தாளர் சுஜாதா (ஸாரி நாசர் அந்த அந்துமணி தொடர்ந்து என்னை கிண்டல் பண்ணி அவர் பத்திரிகைல எழுதிக்கிட்டுருக்கார்! நானெப்படி அவர் பத்திரிகைக்கு பேட்டி தரமுடியும்?)

    2. வசனகர்த்தா ஆரூர்தாஸ் (பேட்டி வேண்டாமே நாசர்! என்னை பத்தி நிறைய எழுதிட்டேன், பேசிட்டேன். சொன்னதையே சொல்லி வாசகர்களைப் போரடிக்கக் கூடாது!)

    3. கவிஞர் வாலி ஆரூர்தாஸ் கூறிய அதே காரணத்தைக் கூறினாலும் ‘Off the record’ ஆக 73 நிமிடங்கள் தொலைபேசியில் என்னுடன் பேசி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார்.

    4. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (என்னை எதுக்கு பேட்டி? நானென்ன அரசியல்வாதியா? போய் அரசியல்வாதியைப் போட்டோ எடுங்க! நான் பேசும் கூட்டத்துக்கு வந்து குறிப்பெடுத்து பிரசுரம் பண்ணிக்கொள்ளுங்கள்)

    5. டைரக்டர் பாலுமகேந்திரா (சாரி நாசர்... நான் ரொம்ப பிஸி... புதுப்படப் பணியில் மூழ்கியிருக்கிறேன் ) அவர் சொன்ன புதுப்படம் 19 மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

    6.என் அபிமான எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி (ராணி ஆசிரியர் திரு அ. மா. சாமி) பத்திரிகையின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு அவர் பேட்டி கொடுக்க முன்வரவில்லை. 1986இல் அண்ணாமலைப் பல்கலைகக் கழகத்தில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்தது. திரு. அ. மா. சாமிக்கு சிதம்பரத்தைச் சுற்றிக்காட்டும் பணி எனக்குத் தரப்பட்டது. அப்போது அவர் எனக்குக் கூறிய பல அறிவுரைகள் எனது பிற்கால எழுத்துலக வாழ்க்கைக்குப் பெரிதும் உதவின.

    7. இந்துமதி - மனதுக்குள் எதனையே வைத்துக்கொண்டு என்னை பலமுறை அலைக்கழித்தார். ஒரு கட்டத்தில் Hidden agendaவுடன் பேசும் இவரை எதற்கு நேர்காணல் பண்ணி நம் நேரத்தை வீண்பண்ண வேண்டுமென முடிவெடுத்து பட்டியலில் இருந்து இந்துமதி பெயரை ட்ராப் செய்தேன். பல பெண் எழுத்தாளர்களை நேர்காணலுக்காக அணுகியபோது அவர்களின் ஈகோவும் சக எழுத்தாளர்களைப் படிக்காத தன்மையும் மதிக்காத தன்மையும் என்னை அசுரமாய்த் தாக்கின. அந்த ஈகோ பிடித்த பெண் எழுத்தாளர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

    8. நடிகர் ராஜ்கிரண் (புதுப்படம் தயாரித்து டைரக்ட் செய்யும் பணியில் மூழ்கியிருக்கிறேன்... ஸாரி)

    9. நடிகர் நாகேஷ். கிரேஸிமோகன் உதவியால் நாகேஷ் சாரின் அப்பாயின்ட்மென்ட் இருமுறை கிடைத்தும் சில எதிர்பாராத காரணங்களால் நேர்காணல் தவறிப்போயிற்று.

    10. ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு எஸ். பாலசுப்பிரமணியன், தினமணி ஆசிரியர் திரு. சம்பந்தம், கல்கி ஆசிரியர் திரு. கி. ராஜேந்திரன், குமுதம் ஆசிரியர் ராவ் அவர்கள் (ராவ் சார் ஒவ்வொரு தடவை தொலைபேசி பேசும்போதும் அலாதியான சிரிப்புடன் நம்மை எதிர்கொள்வார். அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.)

    இந்தப் பட்டியல் போதும் என நினைக்கிறேன், நேர்காணல்களில் பெரிதும் ஒத்துழைத்த சூரியன்களைப் பற்றியும் சில வார்த்தை கூற விரும்புகிறேன்.

    1. ரவி பெர்னார்ட் - மோசமான நெகடிவ் கேள்விகளை வீசியபோதும் சிரித்தபடி பதில்கூறி சந்தேகங்கள் தீர்த்தார்.

    2. நக்கீரன் கோபால் - என்னுடைய ரோல் மாடல்களில் இவரும் ஒருவர். சென்னையில் நான் ஒருவருடம் இருந்தபோது எனக்குப் பல வழியில் உதவினார்.

    3. கிரேஸிமோகன் - இவருடைய வெற்றிக்கு இவரின் திறமை மட்டும் காரணமல்ல; கள்ளமில்லா உள்ளத்துடன் நட்பு பாராட்டும் குணமும்தான்.

    4. மதன் அட்டகாசமான ஒத்துழைப்பு தந்தார். தமிழ்ப் பத்திரிகையின் மிகக் கவர்ச்சியான ஆல்ரவுண்டர் இவர்.

    5. ராஜேஷ்குமார் - தடபுடல் விருந்தோம்பல் பண்ணி மனதை நிறைத்தார்.

    6. தினமலர் அந்துமணி மற்றும் தினமலர் ஆசிரியர் திரு இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தமிழ்ப் பத்திரிகை உலகில் Once in ablue moon நடக்கும் அபூர்வ நிகழ்வே இவர்களின் பேட்டிகள்!

    7. அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எல்.பி. வெங்கட்ரங்கன் – அண்ணாமலையில் நான் பணிபுரியும் ஒரே காரணத்தினால்தான் மேற்சொன்ன இருவரையும் பேட்டி எடுக்கும் பாக்கியம் கிட்டியது.

    8. நடிகர் விவேக் - வாரமலர் இவரைப் பற்றிப் பல நெகடிவ் செய்திகள் பிரசுரித்த கோபத்தில் இருந்தார். இவருடன் நட்பாய்ப் பழகிக் கோபத்தைத் தணித்தேன். ‘சக மதுரைக்காரன்’ என்கிற ஒரே காரணத்துக்காக முழுமையான பேட்டி தந்து என்னை நெகிழ வைத்தார் விவேக்.

    9. ஹார்லிக்ஸ் தேவதை மாலாமணியன் (மாணிக்கம் நாராயணன் பேட்டி

    10. காக்கா ராதாகிருஷ்ணன் - இவரின் முகவரியை ஒரு கைதேர்ந்த டிடக்டிவ் போல் செயல்பட்டுக் கண்டுபிடித்தேன். இவருக்குக் காது சுத்தமாகக் கேட்கவில்லை. இருந்தாலும் இவரின் அழகிய மகள் உதவியுடன் பிரம்ம பிரயத்தனம் பண்ணி சிறப்பான நேர்காணல் பண்ணினேன்.

    மொத்தத்தில் ‘சூரியன் சந்திப்பு’ என்னைப் பல பரிமாணங்களில் பட்டை தீட்டியது.

    பொருளடக்கம்

    நக்கீரன் கோபால்

    ரமேஷ் பிரபா

    புஷ்பா தங்கதுரை

    கே. பாக்யராஜ்

    பி.டி. சாமி

    குட்டி பத்மினி

    AVM சண்முகம்

    சம்பந்தம்

    ஆபாவாணன்

    யூகி சேது

    வீரபாண்டியன்

    ரபி பெர்னார்டு

    பாண்டியராஜன்

    ஜி. நாராயணஸ்வாமி

    மாணிக்கம் நாராயணன்

    பாஸ்கி, சிட்டிபாபு

    ‘ஹிந்து’ கேசவ்

    ருத்ரன்

    வைரவன்

    எஸ்.வி. சேகர்

    எம்.எஸ். பாஸ்கர்

    பார்த்திபன்

    ‘கிரேஸி’ மோகன்

    ஆக்னெஸ் அலெக்ஸ்

    அலிஸ்டர் ராய் விக்ஸ்

    சாலமன் பாப்பையா

    செல்வரத்தினம்

    விவேகா

    ‘காக்கா’ ராதாகிருஷ்ணன்

    காத்தாடி ராமமூர்த்தி

    ‘ஸ்பெஷல் எபக்ட்ஸ்’ வெங்கி

    விமலா ரமணி

    பி.ஆர். விஜயலட்சுமி

    விவேக்

    பரத்வாஜ்

    ஜான்பாபு

    விக்ரம் தர்மா

    தோட்டா தரணி

    லா.ச. ராமாமிர்தம்

    மௌலி

    ஐ. லியோனி

    முனைவர் எல்.பி. வெங்கட்ரங்கன்

    சீதா ரவி

    ஆர்னிகா நாசர்

    கண்மணி சுப்பு

    சூரியன் சந்திப்பு - 1

    நக்கீரன் கோபால் - ஆர்னிகா நாசர்

    ஹாரிங்டன் சாலையில் நக்கீரனின் அலுவலகம் நிமிர்ந்திருந்தது. இரண்டு சக்கர வாகனத்தில் நானும் புகைப்படக் கலைஞரும் போய் இறங்கினோம். வீரப்பன் மீசை வைத்த செக்யூரிட்டி வரவேற்றார்.

    முதல் தளத்தில் வரவேற்பறையில் சில நிமிடங்கள் காத்திருந்தோம்.

    நக்கீரன் கோபால் அழைப்பதாக உதவியாளர் கூற அந்த குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்குள் பிரவேசித்தோம்.

    கோபால் இருகை கூப்பி ‘வாங்கண்ணே!’ வாஞ்சையாய் வரவேற்றார். தூக்கி சீவப்பட்ட வகிடு இல்லாத கேசம். நெற்றியில் குங்குமம். செதுக்கிய புருவங்கள். நட்பு பாராட்டும் கண்கள். இரு நுனிகளிலும் வட்டமாய் அடர்ந்திருக்கும் மீசை. சிரிக்கும் மேல் வரிசை பற்கள். நடுவில் அழகிய இடைவெளி. அரைக்கை சட்டை இடது மணிக்கட்டில் பச்சைக் கயிறு.

    மேசையில் இரு தொலைபேசிகளும் ஒரு தொலைநகல் இயந்திரமும்.

    பேட்டியை ஆரம்பித்தேன். நான் கேட்கும் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பிடிக்காததாய் இருந்தால் சொல்லுங்கள்... அந்தக் கேள்வியை தவிர்த்து விடுகிறேன்.!

    இல்லண்ணே! எந்தக் கேள்வி வேணுமானாலும் கேளுங்க. பதில் சொல்றேன்! என்றார் கோபால்.

    ராஜ்குமார் விடுதலைக்காக வீரப்பனுக்கு 10 - 30 கோடி பணயத் தொகையாக அளிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றனவே - அது எவ்வளவு தூரம் உண்மை!

    திட்டமிட்ட வதந்திண்ணே. எனக்குத் தெரிந்து எந்தத் தொகையும் கைமாறவில்லை!

    நாகப்பா வீரப்பனைத் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுவது உண்மையா?

    இந்தக் கேள்வி வேண்டாமே!

    நக்கீரனின் அட்டைப் படத்தை பிரமாதமா லேஅவுட் பண்ணுகிறீர்களே... ஓவியத்தில் அடிப்படை பயிற்சி உண்டா?

    இல்லை. வெறும் அனுபவ அறிவு!

    உங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது?

    அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவுமுறை...

    தி.மு.க. அரசின் செயல்பாடுகளை எதிர்த்து நீங்கள் செய்திகள் போடும்போது...

    அதுவேறு, இதுவேறு!

    உங்களின் இதே அணுகுமுறை கலைஞரிடம் உள்ளதா?

    இந்தக் கேள்வியை நீங்க கலைஞரிடந்தான் கேக்கணும்!

    சினிமா பார்ப்பதுண்டா?

    அபூர்வமாய் பார்ப்பேன்.

    பத்திரிகை துறையில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

    குமுதம், ஆனந்த விகடன் மற்றும் வடக்கத்தி பத்திரிகைகள்!

    உங்களுடைய அட்டைப்படம் வேறு எந்த பத்திரிகைக்கும் இன்ஸ்பிரேஷன் ஆகி உள்ளதா?

    Out Look பத்திரிகை - ஜெயலலிதா தண்ணீரில் மூழ்குவது போல் போட்ட என் படத்தை சிறிது மாற்றம் செய்து அம்பாள் மூழ்குவது போல் அட்டைப்படம் போட்டது!

    ராஜ்குமார் விடுதலையில் டாக்டர் பானு - நெடுமாறன் சண்முக சுந்தரம் கொளத்தூர் மணி இப்படி எண்ணற்ற பெயர்கள் அடிபடுகின்றனவே... ராஜ்குமார் விடுதலைக்குப்பின் எல்.டி.டி.ஈ.கை உண்டா?

    தெரியாது. இரு மாநில மக்களின் நலனை மனதில் வைத்து ராஜ்குமார் விடுதலைக்கு பாடுபட்டேன். ஐந்து தடவை காட்டுக்குப் போனேன். ராஜ்குமார் விடுதலையுடன் எனது கடமை முடிந்துவிட்டது. மற்றவை பற்றி ஆராய விரும்பவில்லை!

    ஐந்து தடவை காட்டுக்கு போய் ராஜ்குமார் விடுதலைக்கு அடித்தளம் இட்டீர்கள். ஆனால் நெடுமாறன் வந்து கடைசி நேரத்தில் பெயர் தட்டிச் சென்றுவிட்டார். நெடுமாறன் உங்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் நீங்கள் தாமதமாக வந்ததால் அவர்கள் ராஜ்குமார் விடுதலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறுகிறார். நீங்கள் குறித்த நேரத்தில் வந்து ராஜ்குமார் மீட்பு படலத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக நெடுமாறன் வேண்டுமென்றே தாமதமாக தகவல் தெரிவித்தாரோ?

    இல்லை. காட்டுக்குள் இருந்தவர்கள்தான் நான் குறித்த நேரத்தில் வருவதை விரும்பவில்லை!

    நெடுமாறன் பற்றி?

    பெரிய மனிதர். அளவாகப் பேசுவார்!

    வவுனியா காடும், வீரப்பன் காடும் ஒன்றா!

    கிடையவே கிடையாது. வீரப்பன் காடு வெறும் 6000 ச.கிமீ. பரப்பளவு உள்ள டென்ஸ்டு காடு. அவ்வளவுதான்!

    தீவிரவாதி மாறனுடன் பேசினீர்களா?

    பேசினேன்!

    முகத்தை மறைத்திருந்தாரா?

    இல்லை...

    வீரப்பனின் மனோபாவம் தீவிரவாதிகளின் கூட்டுக்குப்பின் மாறியுள்ளதா?

    ஆமண்ணே. முன்னல்லாம் வீரப்பன் பொய் சொல்ல மாட்டான். வாக்கு தவற மாட்டான். இப்ப பொய் நிறைய பேசுகிறான். முடிவில் சத்தியமங்கலம் காட்டுக்கும் தலைவன் என்றான். இல்ல ஆறு கோடி தமிழனுக்கும் தலைவன் அவன்தான் என்கிறான். ‘அவனே இயக்கம்’ என்கிறான்!

    ராஜ்குமார் விடுதலையின் Last Episode-ல் நீங்கள் இல்லாதது தெய்வச்செயல் என்கிறேன். அதுவரை உங்களை மீடியா வீரப்பனின் பிரச்சார பீரங்கி என்றது. வீரப்பனும் கோபாலும் ஒன்று என்றது. ஆனால் கடைசி நிமிட நேரத்தில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட நீங்கள் மறுத்ததால் காட்சி அமைப்புக்குள் நெடுமாறன் வந்தார். இதனால் உங்கள் மீதான அவப்பெயர் அகன்றுவிட்டது என்கிறேன். ராஜ்குமார் விடுதலை விவகாரத்தில் ஏதாவது கறுப்புக் காரியங்கள் நடந்திருந்தால் நீங்கள் உடந்தையல்ல என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது!

    வீரப்பன் தரப்பிலிருந்து நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன் தூதர்களாய் வர அழைப்பு வந்தது. அவர்களும் என்னுடன் சேர்ந்து வந்தார்கள். அவ்வளவுதான். நீங்கள் சொல்வது போல் நான் யோசிக்கலண்ணே...

    ராஜ்குமாருக்கு அடுத்து மிதுன் சக்கரவர்த்தியா?

    திட்டமிட்ட வதந்திண்ணே!

    நீங்க எல்லோரையும் ‘அண்ணே... அண்ணே...’ன்னு கூப்பிடுறது தமிழ்ச் சினிமாக்காரர்கள் பேச்சு வழக்கு பாதிப்பா?

    இல்லண்ணே. எங்க அருப்புக்கோட்டையோட வட்டார மொழி வழக்கு...

    உங்க பெற்றோர்?

    அருப்புக்கோட்டைல இருக்காங்க. அப்பாவுக்கு வயது 68. அம்மாவுக்கு வயது 62.

    உங்களது பத்திரிகை நடவடிக்கைகளால் உங்கள் பெற்றோர் பாதிக்கப்பட்டது உண்டா?

    உண்டு. ‘ஜெ’ ஆட்சியின்போது அமைச்சர் ‘க’... ஆட்கள் என் அப்பாவை கடத்திச் சென்று மிரட்டி விட்டிருக்காங்க...

    உங்களது மீசைக்கு இன்ஸ்பிரேஷன் வீரப்பனா?

    சிரித்தார் கோபால். நான் 1983லிருந்து இந்த மீசை வைத்திருக்கிறேன். வீரப்பன் மேட்டர் மீடியாவுக்கு வந்தது 1993-ல். அருப்புக் கோட்டைல என்னை மாதிரி மீசை வைச்சவங்க நிறைய பேர் இருக்காங்க!

    உங்கப்பாவுக்கு மீசை உண்டா?

    இல்லை!

    கீழே உங்கள் செக்யூரிட்டி ஆட்கள் உங்கள மாதிரியே மீசை வச்சிருக்காங்களே?

    அதுவா? ‘ஜெ’ ஆட்சியின்போது அவங்களை எதிர்த்து எழுதினா ‘ஆட்டோ’ வரும். ஆட்டோல வருபவன் பெரும்பாலும் படிக்காத முரடனா இருப்பான். என்னுடைய மீசைக்கார செக்யூரிட்டி ஏழுபேர் கமுதியிலிருந்து மதுரையிலிருந்து வந்தவங்க. அவங்க மீசைகளை பார்த்து ஆட்டோ ஆசாமிகள் ‘யார் உண்மையான நக்கீரன் கோபால்’ என்று குழம்பட்டும் என்பதற்காக நான் செய்த முன்யோசனை அவ்வளவுதான்!

    உங்க மீசைக்கு ஏதாவது நெய்கிய் போஷாக்கு பண்றீங்களா?

    அய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைண்ணே!

    உங்க மீசையாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வந்தது உண்டா?

    உண்டு. எனக்கு பெண் பாக்கறப்ப என் மீசையை பார்த்து பயந்து ஒதுங்கிய பெண் வீட்டார் நிறைய உண்டு. எனது மனைவி எனக்கு பார்க்கப்பட்ட 300வது பெண். ஒரு கட்டத்தில் எனது லே அவுட் தம்பிகள் ‘மீசை இல்லாத கோபால் படம்’ செய்து பெண்வீட்டாருக்கு கொடுத்துவிடலாம் என யோசனை கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன்.

    வீரப்பன் உங்களை எப்படி அழைப்பார்? நீங்க அவரை எப்படி அழைப்பீர்கள்?

    என்னண்ணே... ‘மிகப்பெரிய அயோக்கியத்தனமா இருக்கே!’ என்பேன். அவன் ‘ஆசிரியரே’ என்பான்!

    ஐந்து முறை காட்டுக்குப் போய் வந்தீர்களே... உடல் எடை ஏதாவது குறைந்ததா?

    ஆறு கிலோ எடை குறைந்தேன்!

    காட்ல எவ்வளவு தூரம் நடந்திருப்பீங்க!

    நான், சிவசு, அப்பு 300-350 கி.மீ. நடந்திருப்போம்.

    புகைப்படங்களில் வீரப்பனின் வயிறு கர்ப்பிணிப்பெண் போல் புடைத்துள்ளதே...

    துப்பாக்கித் தோட்டாக்கள், வெட்டிவேர், மரநொச்சி, உடும்பு எண்ணெய், மயில் எண்ணெய், பாம்புக்கடி மூலிகை அடங்கிய மூட்டையே வீரப்பனின் வயிறு புடைத்திருப்பது போல் காட்டுகிறது. கழுத்தில் உத்திராட்சங்கொட்டை மாலை அணிந்திருக்கிறான்!

    டாக்டர் பானுவை சந்தித்தீர்களா?

    ஐந்தாவது முறை காட்டுக்குள் போகும்போது ஒரு பேண்ட் சட்டை அணிந்த பெண் அறிமுகப்படுத்தப்பட்டார். கை குலுக்க கை நீட்டினார். வணங்கினேன். அவர் தான் ‘டாக்டர்’ பானு அல்லது கிரானைட் பானு!

    ராஜ்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் வந்து போனதை கிண்டல் பண்ணியுள்ளாரே...?

    105நாள் காட்டில் சிறை வைக்கப்பட்டு மீண்டவரின் வார்த்தைகள் முன்னே பின்னே அமையலாம்!

    ராஜ்குமார் மொழி சாவினிஸ்ட்டா?

    எனக்குத் தெரிந்து இல்லை. விடுதலைக்குப்பின் இன்னும் தமிழரை நெருங்கியுள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

    பத்திரிகையாளர் சோ பற்றி?

    சோ குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஆள். எல்லாமே நாசமாகப் போகனும்ன்னு நினைக்கிற ஆள்!

    ராஜ்குமார் கடத்தல் - விடுதலை எபிஸோட் - கலைஞர் அரசுக்கு பின்னடைவுதானே?

    இல்லை. கலைஞரின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த முழுவெற்றி இது. அவரின் கண்ணசைவு இல்லாமல் நான் காட்டுக்கு அரசு தூதராய் சென்று வந்திருக்க முடியாது. ராஜ்குமார் விடுதலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் இரு மாநிலங்களிலும் பெரிய இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும். அது தவிர்க்கப்பட்டது. ராஜ்குமார் விடுதலையை முதல்வர் சொல்லித்தான் நானும் உளவுத்துறையும் தெரிந்துகொண்டோம். ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு முதலில் தமிழகத்துக்குத்தான் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். அந்த மனவருத்தம் என்னிடம் இன்னும் உள்ளதுண்ணே!

    நீங்க அரசு தூதராக சென்று ராஜ்குமார் கால்களில் விழுந்தது சரியா?

    பெரியவர் என்கிற மரியாதைக்காகவும் பெங்களூர் தமிழர் நலனுக்காகவும் ராஜ்குமார் காலில் விழுந்தேன். இதனை சில மீடியா நண்பர்கள்தான் குறை கூறுகிறார்கள். கர்நாடகத் தமிழர்களும் ரஜினிகாந்தும் போன் பண்ணி என்னை பாராட்டவே செய்தார்கள்.!

    வீரப்பன் இலங்கைக்குத் தப்பிவிட்டான் என்பது உண்மைச் செய்தியா?

    வீரப்பன் இலங்கைக்கு தப்பமாட்டான். முதலைக்கு தண்ணீரே பலம்; வீரப்பனுக்கு சத்தியமங்கலம் காடே பலம்!

    வீரப்பனை அதிரடிப்படை உயிரோடோ பிணமாகவோ பிடிக்குமா?

    அவன் தப்பிப்பதில் கில்லாடி. சிக்கமாட்டான்!

    வீரப்பன் எதிர்காலம் எப்படியிருக்கும்?

    சரணடைந்தால் வீரப்பனுக்கு நல்லது. பூலான்தேவி போல் மறு வாழ்வு கிடைத்தாலும் கிடைக்கும்!

    வீரப்பனுக்கு இன்னொரு காதலி உண்டு என வந்த செய்தி பற்றி?

    ஒரு பிரபல பத்திரிகையும் STF மோகன் நிவாஸும் சேர்ந்து செய்த கூட்டு சதி இது. இதனால் வீரப்பன் கோபமடைந்து ஏதாவது ஏடாகூடம் செய்வான். ராஜ்குமார் மீட்புப்பணி கெடும் என திட்டமிட்டனர். அப்படி மீட்புப்பணி கெட்டிருந்தால் அது ஜெவுக்குத்தான் சாதகமாய் போயிருந்திருக்கும். ஜெவுக்கு இரத்தக்களரி பார்க்க ஆசை. ஆனால் எல்லாமே தெய்வாதீனமாய் தவிடுபொடியாகி ராஜ்குமார் விடுதலையானார்!

    சாதிரீதியான கட்சிகள் உருவாகுவது தமிழகத்துக்கு நல்லதா?

    இல்லை. வன்மையாக கண்டிக்கத்தக்கது!

    மோகன் கமிஷன் ரிப்போர்ட் பற்றி உங்கள் அபிப்பிராயம்!

    தாமிரபரணி மரணங்களுக்கு கலைஞர் அரசே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்!

    நாராயண ரெட்டி கட்டுரை சரோஜாதேவி கதைபோல் ஆபாசமாக உள்ளதே?

    அப்படியெல்லாம் இல்லை. அந்தக் கட்டுரை செக்ஸ் பற்றியும் எய்ட்ஸ் பற்றியும் மாபெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது!

    ஜூனியர் விகடன் போன்ற செய்தி பத்திரிகைகளை ஜெயிக்கவே நீங்கள் வீரப்பன் போன்ற மேட்டர்களில் உயிரை பணயம் வைத்து செயல்படுகிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன்!

    வீரப்பன் மேட்டர் மட்டுமல்ல. நாவரசு மேட்டர் மட்டுமல்ல. எதனை எடுத்தாலும் உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்வதில் நக்கீரத்தனமாக செயல்படுகின்றேன். எனக்குப் பின்னால் என் சுயநலமில்லாத தம்பிகள் உள்ளனர். ஜு.வி.யோடு நெட்வொர்க்கிலும் கலர் பக்கங்களிலும் நாங்கள் போட்டி போடவில்லை. என் நடுநிலைமைக்கு பரிசுதான் ‘ஜெ’ என்மீது போட்ட 160 வழக்குகள்; தி.மு.க. போட்ட 15 வழக்குகள். ஸென்ஸேஷன் என் நோக்கமல்ல! மொத்தத்தில் உங்க குற்றச்சாட்டு தவறு!

    ஐஸ்வர்யாராய் திடீரென வந்து ‘அரசுத் தூதரே ஐ லவ் யூ!’ எனச் சொன்னால்!

    நான் நடிகைகளை நம்புவதில்லை!

    உங்களின் அனைத்து செல்வங்களையும் திறமைகளையும் புகழையும் பிடுங்கிக்கொண்டு உங்களை நடுத்தெருவில் நிறுத்தினால்?

    மீண்டும் உழைத்து நக்கீரன் கோபாலாக ஜெயித்து வருவேன்! கோபாலின் கண்களில் உலக நம்பிக்கை மிளிர்ந்தது!

    சூரியன் சந்திப்பு – 2

    ரமேஷ் பிரபா - ஆர்னிகா நாசர்

    கற்பகம் அவின்யூ.

    இரண்டாவது தளம். குளிர்பதனமூட்டப்பட்ட அறை. சுவற்றில் நீர்வீழ்ச்சி புகைப்படமாய் உறைந்திருந்தது. அறையின் வலப்பக்கம் மர வேலைகள் செய்யப்பட்ட புத்தக அலமாரி. வெல்வெட் குஷன் சோபாக்கள். அலங்கார இருக்கைகள். தொலைபேசிகள். தொலைநகல் இயந்திரம்.

    மனைவிக்கு உடல்நலம் இல்லாத போதும் குறித்த நேரத்துக்கு வந்திருந்து என்னை வரவேற்றார் ரமேஷ் பிரபா வாங்க ஆர்னிகா!

    வணக்கம் சார்!

    ரமேஷ் பிரபா சற்றே சதைத்து ஆறடி உயரமிருந்தார். அடர்த்தி குறைந்த தலை கேசம். மிகைத்த கன்னக்கதுப்புகள். மாநிறம்.

    ரமேஷ் பிரபாவில் வரும் ‘பிரபா’ உங்கள் கல்லூரி நாள் காதலியைக் குறிக்கிறதா?

    என் சகோதரர்கள் அனைவரின் பெயர்களும் ‘R’ல் ஆரம்பிக்கும். எனது இயற்பெயர் ரமேஷ் பிரபாகரன். புனைப்பெயர் சூடிக்கொள்ளும் போது ‘ரமேஷ் பிரபா’ என சுருக்கிக் கொண்டேன். என் புனைப்பெயருக்கு பின்னால் நீங்கள் நினைப்பது போல ‘கிக்’கான கதை இல்லை!

    உங்க குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள் பிரபா!

    "எங்கள் குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம். எனக்கு ஆறு வயசிருக்கும். அப்பல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கள் மாளிகை போன்ற வீட்டில் 100 கறவை மாடுகள் நின்றிருக்கும். எங்கள் நிலங்களில் விளைந்தவற்றை காயப்போட பத்து மாடிகள் தேவை. ஆனால் நான் பள்ளிப் படிப்பைத் தொடரும்போது கொடுமையான வறுமை எங்கள் வீட்டைத் தொற்றிக் கொண்டது. தினம் 8+8கி.மீ. நடந்து சென்று படித்தேன். மதியத்தில் பொட்டுக்கடலையும் வெல்லமும் தின்று சாப்பாடு சாப்பிட்டது போல சக மாணவர்களிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1