Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Sanditha Prabalangal
Naan Sanditha Prabalangal
Naan Sanditha Prabalangal
Ebook458 pages2 hours

Naan Sanditha Prabalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரும்பாலான பிரபலங்களின் பேட்டிகளை நடுப்பக்கத்தில் பிரசுரிக்கச் செய்து என் பொறுப்பையும் பெருமையையும் அதிகரிக்கிறார். அந்தப் பேட்டிகளில் சில உங்களின் பார்வைக்காக இங்கே அளித்திருக்கிறேன்.

ஒரு விஷயத்தில் என்னால் உறுதி அளிக்க முடியும். அத்தனை பேட்டிகளும் சுவாரஸ்யமானவை. மிகப் பிரபலமானவர்கள் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்து பேட்டியளித்தார்கள். அவற்றை அதே அளவு சுவாரஸ்யத்துடன் விள்ளாமல் விரியாமல் அழகழகு வண்ணப்படங்களுடன் குமுதம் சிநேகிதியில் பிரசுரித்தார் எடிட்டர் திரு பிரியா கல்யாண ராமன். அவருக்கு என் பிரத்யேக நன்றிகள்.

இவற்றை புஸ்தகா டிஜிடல் மீடியாவில் மின் நூலாகக் கொண்டு வர உதவும் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் நிறுவனத்தைச் சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580128407733
Naan Sanditha Prabalangal

Read more from Vedha Gopalan

Related to Naan Sanditha Prabalangal

Related ebooks

Reviews for Naan Sanditha Prabalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Sanditha Prabalangal - Vedha Gopalan

    https://www.pustaka.co.in

    நான் சந்தித்த பிரபலங்கள்

    Naan Sanditha Prabalangal

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதருகில் ரகசியம் பேசிய அஜித்

    பணம், பெயர், புகழ் எல்லாமே…

    பெல்பாட்டம்.. ஸ்டெப் கட்.. ஐஸ்கிரீம்

    16 வயது கர்ப்பிணிகள்!

    பெயர்க்காரணமும் மடிசார் மாமியும்

    திறமை+அதிருஷ்டம்+ உழைப்பு= வித்யா மேடம்

    என் ரோல் மாடல் எம் எஸ் தோனி…

    பத்திரிகையும் திரைத்தறையும் இரண்டு கண்கள்…

    பால கிருஷ்ணன் (சுபா)

    கல்யாணம் செய்துகொள்வேன் என்று அடம் பிடித்தேன்!

    போட்டோ சொன்ன கதை

    கப்பலேறிப் போயாச்சு

    ‘கீர்த்தி சுரேஷ் முதல் நயன்தாரா வரை..

    சகல மரியாதைகளோடும் வருவேனென்று சபதம் போட்டேன்!

    சமஸ்கிருதம் நம் இந்தியர்களின் மொழி!

    பெண்ணையே பார்க்காமல் சம்மதித்துவிட்டேன்!

    எம் ஜி ஆர் ஆலிங்கனம் செய்த ஷர்ட்!

    எங்கப்பா வைச்ச பேரை இப்படி மாத்திப்புட்டீயளே!

    ‘எனக்கு அட்வைஸ் செய்யுங்கள்’

    இன்ட்டி இன்ட்டி கிரஹலக்ஷ்மி

    இரண்டு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிக்கிறேன்…

    என்னைத் தங்கக் கழுகு என்பார்கள்…

    இரண்டாவது ரவுண்ட் கைதட்டல் …

    ஆட்டோகிராஃப் ப்ளீஸ்…

    பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டேன்…

    ஆனந்த யாழை மீட்டிய சாதனா

    மூன்று அம்மாக்கள்! நான்கு தலைமுறைகள்!!

    குமுதம் படித்துவிட்டு வர மாட்டார்களா என்ன?

    அம்மா என்றால் ஜெ‘ம்-மா…

    ஹாக்கி .. இன்றுமுதல் ஹாக்கி..

    அவரைப் பார்த்ததும் சிலிர்த்துவிட்டேன்

    இறையன்புவின் சகோதரி இன்சுவை பேட்டி

    எனக்குக் குரல் வராமல் போயிற்று…!

    என்னுரை

    1980 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் வலது காலை எடுத்து வைத்தேன். ஆரம்பத்தில் வாகசர் கடிதம்.. பிறகு சிறு துணுக்குகள்.. அப்புறம் ஒரு பக்கக்கதைகள்… பிற்பாடு பெரிய கதைகள்.. அண்ட் தென் குறுநாவல்ஸ்… அடுத்ததாக முழு நாவல்.. உடனே தொடர்கதை என்று இறைவன் என்னை முன்னேற வைத்திருக்கிறான்.

    விநோதம் என்ன தெரியுமா? முதல் சிறுகதை வெளியாகி நான்கே மாதங்களில் முழு நாவல் வெளியானது. என் அத்தனை முயற்சிகளுக்கும் முதல் நாற்காலி கொடுத்தது குமுதம் வார இதழ்தான்.

    இதே குமுதத்தில் நானே சற்றும் எதிர்பாராத புதிய பணியும் செய்ய முடிந்தது இறைவன் அருளே. என் கணவர் குமுதத்தில் நிருபராகச் சேர்ந்தார். அவர் பிரபலமானவர்களைச் சந்தித்துப் பேட்டிகளை ரெகார்ட் செய்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு இரவு தூங்கி எழுந்திருப்பதற்குள் அந்தப் பேட்டிகளை நான் தட்டச்சு செய்து தயாராக வைத்திருப்பேன். நானும் நிறையப் பேட்டிகள் கண்டிருக்கிறேன்.

    குமுதத்தில் பணி புரிந்தது பாமா கோபாலன் என்ற புனைபெயர் கொண்ட (வீட்டின் பெயர் பாமா) கோபாலன்- தான் என்றாலும் நாங்கள் இருவருமே குமுதத்திற்காக இணைந்து வேலை பார்த்தோம் என்பது குமுதம் ஆபீசில் மொத்தப்பேருக்கும் தெரியும். எனவே ஒரே இதழில் ஒன்றிற்கு மேற்பட்ட பேட்டிகள் வந்தால் வெவ்வேறு பெயர்களில் வரும்போது ஒரு பேட்டி அல்லது கட்டுரையை அவர்களே என் பெயரில் பிரசுரித்துவிடுவார்கள்.

    என் கணவர் ஓய்வு பெற்ற பிறகு குமுதம் சிநேகிதி பத்திரிகைக்காகப் பிரபல எழுத்தாளர்களின் பேட்டிகள் செய்து தர முடியுமா என்று அப்போதைய எடிட்டர் திருமதி லோகநாயகி கேட்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். பிரசுரமாக ஆக ஒரு சாரார் பாராட்டினாலும் எழுத்துலகில் சிலர் நாவல் எழுதுமளவு பிரபலமான நீ ஏன் இன்னும் நிருபரைப்போல் பேட்டிகள் செய்கிறாய்? என்று கேட்டார்கள்.

    திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்த சுஹாசினி, குஷ்பூ போன்றவர்கள் மற்றவர்களைப் பேட்டி காண்பதுபோல்தான் இதுவும் (ஹிஹி நைஸாக என்னை யாருடன் ஒப்பிட்டுவிட்டேன் பாருங்களேன்!). இந்த பதிலை அவர்களிடம் நான் சொல்லவில்லை. என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன். முதல் முதலாய் அந்த ரகசியத்தை உங்களுக்குத்தான் உடைக்கிறேன்!

    பிறகு திரு பிரியா கல்யாணராமன் குமுதம் சிநேகிதியின் எடிட்டரானார். குமுதம் உள்பட அனைத்துப் பத்திரிகைகளையும் அவர் திறம்பட கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவர் எங்கள் இருவரிடமும் காட்டும் அன்பு நிகரற்றது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருட கால நட்பில் என்றைக்கும் அவருக்கு அளிக்கும் மரியாதையை நாங்களும் குறைத்ததில்லை… எங்களிடம் காண்பிக்கும் அன்பை அவரும் குறைத்ததில்லை!

    அவர் ஒருநாள் அழைத்துக் குமுதம் சிநேகிதிக்காகப் பணி புரிய விருப்பமா என்று கேட்டபோது ‘லட்டு திங்க ஆசையா?’ என்று கேட்டது போல் உணர்ந்தேன்.

    ஐடியாக்கள் சொல்லும் சுதந்திரம் அளிக்கிறார். அந்த ஐடியாக்களைச் செயலாக்க அனுமதிக்கிறார். நல்ல விஷயங்களைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்.

    பெரும்பாலான பிரபலங்களின் பேட்டிகளை நடுப்பக்கத்தில் பிரசுரிக்கச் செய்து என் பொறுப்பையும் பெருமையையும் அதிகரிக்கிறார்.

    அந்தப் பேட்டிகளில் சில உங்களின் பார்வைக்காக இங்கே அளித்திருக்கிறேன்.

    ஒரு விஷயத்தில் என்னால் உறுதி அளிக்க முடியும். அத்தனை பேட்டிகளும் சுவாரஸ்யமானவை. மிகப் பிரபலமானவர்கள் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்து பேட்டியளித்தார்கள். அவற்றை அதே அளவு சுவாரஸ்யத்துடன் விள்ளாமல் விரியாமல் அழகழகு வண்ணப்படங்களுடன் குமுதம் சிநேகிதியில் பிரசுரித்தார் எடிட்டர் திரு பிரியா கல்யாண ராமன். அவருக்கு என் பிரத்யேக நன்றிகள்.

    இவற்றை புஸ்தகா டிஜிடல் மீடியாவில் மின் நூலாகக் கொண்டு வர உதவும் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் நிறுவனத்தைச் சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    வேதா கோபாலன்

    காதருகில் ரகசியம் பேசிய அஜித்

    டப்பிங் கலைஞர் ரவீணா ரவி…

    இவருடைய அம்மா பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி .இவரின் பாட்டி பிரபல மலையாள டப்பிங் கலைஞர் கண்ணூர் நாராயணி. இவர் திரைப்பட நடிகையும்.கூட.. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?

    பொங்கலுக்கு ரிலீசான மாஸ்டர், பூமி, ஈஸ்வரன் படங்களுக்கு டப்பிங் பேசியதோடு அடுத்தடுத்த படங்களுக்கு நடிக்கவும், பேசவும் கமிட் ஆகியிருக்கும் இவரைப் பிடிப்பதே கஷ்டம் என்று நினைத்தபோது, போனில் உடனே கிடைத்ததும், கலகலவென்று பேட்டிகொடுத்ததும் அவரின் எளிமைக்கு உதாரணங்கள்.

    டப்பிங் துறையில் கொடிகட்டிப் பறந்த அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.. சொல்லுங்ளேன்…

    அம்மா ஸ்ரீஜா ரவி, கிட்டத்தட்ட 1500 திரைப்படங்களுக்குப் பேசியிருக்கிறார். ஷாலினி, தேவயானி, சுவலட்சுமி, தில் படத்தில் லைலா ஆகியோரை நீங்கள் திரையில் பார்க்கும்போது கேட்பது அம்மாவின் குரல் தான். ஏராளமான சுவாரஸ்ய திரையுலக சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை அவங்களுடையது.

    முதல் முதலாக எப்போது… மற்றும் எப்படி இந்த துறைக்குள் வந்தீர்கள்?

    அம்மா ‘தொட்டாசிணுங்கி’ படத்துக்கான ரேடியோ பிரமோக்காக ஸ்டுடியோ போயிருந்தபோது நானும் போயிருந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்றே முக்கால். அம்மா பேசிய அதே வார்த்தைகளை நானும் திரும்பத் திரும்ப பேசியிருக்கிறேன். படத்தின் டைட்டிலின் பெயரை என் குரலில் வைத்தால் என்ன என்ற ஐடியா அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி நானும் பேசினேன். அதன் பிறகு உட்வேட்ஸ் கிரைப் வாட்டர், ஹார்லிக்ஸ், ஹமாம் ஆரோக்கியா பால் போன்ற விளம்பரங்களுக்கு பேசினேன். ஒரே விளம்பரத்தை நான்கைந்து மொழிகளில் பேச வைத்தார்கள். என்னுடைய நான்காவது வயதில் முதல் சம்பளம் வாங்கினேன்.

    கதாநாயகிகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தது எப்போது?

    C:\Users\ASUS\Downloads\Raveena-2.jpg

    அப்போ நான் எத்திராஜ் காலேஜில் ‘பேங்கிங்’ ஃபைனல் படித்துக் கொண்டிருந்தேன். சாட்டை படத்துக்காக மஹிமா நம்பியாருக்கு வாய்ஸ் கொடுக்க டெஸ்ட் எடுக்க என்னையும் அழைத்தார்கள். சவுண்ட் இன்ஜினியர் ராஜசேகர் தான் வாய்ப்பளித்தார். 20...25 குரல்கள் எடுத்து என்னை தேர்ந்தெடுத்தார்கள். என் அம்மா ஒரு டப்பிங் கலைஞர் என்பதால்தான் எனக்கு இந்த அளவு வாய்ப்புகள் வந்திருக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது! தாய்மொழி மலையாளம் என்றாலும் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது எல்லாம் சீர்மிகு சென்னை என்பதால் தமிழ் சரளம்.

    டப்பிங் வாழ்வில் ஏ…கப்பட்ட அனுபவங்கள் இருந்திருக்கும். சுவாரஸ்யமான ஒன்றிரண்டை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே?

    ‘555‘ என்ற படத்தில் பேசியது சந்தோஷ சாதனை. அதன் 2 கதாநாயகிகளுக்கும் நானே பேசினேன். சசி சார் தான் டைரக்டர். ஒரு ஹீரோயினுக்கு பேசி முடித்தவுடன், "உங்க குரல் நல்லா இருக்கு இன்னொரு ஹீரோயினுக்கும் நீங்களே குரல் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ஒன்று மென்மையான பாத்திரம் இன்னொன்று போல்டான கேரக்டர். அது ஒரு சேலஞ்ச்-ஆகவே இருந்தது. நிமிர்ந்து நில் படத்தில் அமலா பாலுக்கு பேசினேன். சமுத்திரகனி டைரக்ஷன். அப்போது ஏற்கனவே அமலா பால் பெரிய ஆர்டிஸ்ட். அவருக்கு நான் குரல் கொடுக்கிறேன் என்று டென்ஷனாக இருந்தது.

    எந்தத் துறையிலும் சந்தோஷம் . . சங்கடம் எல்லாமும்தா இருக்கும் அது மாதிரி உங்களின் டப்பிங் வாழ்வில் ஏமாற்றம் எதையாவது சந்தித்ததுண்டா?

    அதை ஏன் கேட்கறீங்க. பில்லா 2 படத்துக்கு பேசினேன். கல்லூரி மாணவி என்பதால் சினேகிதிகளிடம் எல்லாம் சொல்லியாச்சு. ரொம்ப ஆர்வமாய் போய் படத்தைப் பார்த்தேன். செம sad ஆயிட்டேன். அதில் என் குரல் ஒலிக்கவில்லை. ரேணுகா என்ற டப்பிங் கலைஞரின் குரல் ஒலித்தது. அந்தப் பாத்திரத்துக்கு என்னுடைய குரல் ரொம்பவும் இளசாய் இருந்திருக்கும் போல. இன்னும் கொஞ்சம் மெச்சூர்ட் குரல் வேண்டும் என்று நினைத்து மாற்றி விட்டார்களோ என்னமோ. மொத்தத்தில் ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது.

    வருத்தத்தைச் சொல்லிட்டீங்க. அது போல் சந்தோஷம் அளித்த நிகழ்வும் ஏதேனும் இருக்கும்தானே, மிகவும் பெருமிதம் அளித்த வாய்ப்பு ஒன்றைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே?

    சங்கர் சாரின் ஐ படத்தில் எமி ஜாக்ஸனுக்காகப் பேசியது வாழ்நாள் மெமரி. பில்லா 2 படத்தின் ஏமாற்றத்தை இது முழுமையாக சரிக்கட்டி விட்டது… மாஸ்டர் 87 வது படம் பூமி 88 இப்போது நான் 90 படங்கள் முடித்து விட்டேன்.

    ஆயிரம் கொண்டாட வாழ்த்துகள். ஒரே படத்தில், பல வயதுக்காரர்களுக்குக் குரல் கொடுத்த அனுபவமும் இருக்குமே…

    இல்லை. பட்.. என் வயதைத் தாண்டி நான் பேசிய படம் ஒன்று உண்டு. அப்போது அம்மாதான் மலையாளத்தில் நயன்தாராவுக்கு ஏகப்பட்ட படங்கள் பேசியிருக்கிறார். மனசினக்கரே, பாடிகார்ட் போன்ற படங்களுக்கு அம்மாதான் டப்பிங். அந்த முறை எனக்கு லீவு இருந்ததால் நானும் அம்மாவுடன் கேரளா போனேன். ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ‘படத்துக்கு டப்பிங். அது நயன்தாராவின் ஒரு இடைவெளைக்குப்பிறகு மறு என்ட்ரி படம். உடல் மெலிந்து வித்தியாசமாய் வந்திருந்தாங்க. எனவே சற்று இளம் குரலாக இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்த டைரக்டர் சித்திக் சார், இவங்களே பேசட்டுமே நயன்தாராவுக்கு என்று சொல்லிவிட்டார்.. என் குரல் அவர்களுக்கு மிகவும் பொருந்தியதாக எல்லோரும் சொன்னார்கள். சித்திக் சாருக்கு ரொம்பவும் சந்தோஷம்.

    நயன்தாராவுக்கு நீங்கள் பேசியிருக்கிறீர்கள்… அப்படி முதல் முதலில் பேசியபோது எப்படி உணர்ந்தீர்கள்?

    அப்போது எனக்கு மூன்று வித பிரஷர்கள் இருந்தன. முதலாவது, அம்மா பேசிய நாயகிக்கு நான் பேசப் போகிறேன். இரண்டாவது, நயன்தாரா மிக உயரத்தில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார். அவருக்கு என் குரல் பொருந்தி அதை மற்றவர்கள் அக்சப்ட் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா? மூன்றாவது காரணம், நிஜத்தில் நான் கல்லூரி மாணவி. அவர் நடித்ததோ அம்மா ரோலில்! அந்த அளவு மெச்சூரிட்டியை குரலில் கொண்டு வருவது சாத்தியமா? ஒரு கல்லூரி மாணவி திட்டுவது வேறு மாதிரி இருக்கும்; ஒரு தாயார் திட்டுவது வேறு மாதிரி இருக்கும். இவற்றையும் மீறி அதில் என் குரல் ஜெயித்தது எனக்கே வியப்புதான். அதை விட பெரிய மகிழ்ச்சி , படம் வெளியான பிறகு, நயன்தாராவிடம் இருந்து வந்த பாராட்டு மெசேஜ்.

    யார் குரல் வேண்டும் என்பது நடிகைகளின் சாய்ஸா?

    எப்போதுமே அதை டைரக்டர் தான் தீர்மானிப்பார். ஒவ்வொரு படத்தின் போதும் அதே நடிகைக்கு வெவ்வேறு குரல் உள்ளவர்களை டெஸ்ட் செய்வார்கள். பாத்திரத்தை பொருத்து குரல் மெச்சூரிட்டி தீர்மானிப்பார்கள். என் அம்மா பேசிய காலத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் 10 பேர்தான் இருந்தார்கள். இப்போது 35 பேருக்கு மேல் இருக்கிறார்கள். காம்படிஷன் அதிகமாகிவிட்டது. ஒரு சீனைப் போட்டு என்னை பேசச் சொல்வார்கள். பிறகு அதே காட்சியை போட்டு வேறு ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் பேசச் சொல்வார்கள். கடைசியில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். சிலசமயம் இருபது முப்பது குரல்களை கூட டெஸ்ட் செய்வார்கள்.

    பிரபல டைரக்டர் சங்கர் சாரின் ‘ஐ’ படத்துக்கு எப்படி செலக்ட் ஆனீர்கள்?

    டப்பிங் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு 100 பேர் வந்திருந்தார்கள். அமெரிக்காவிலிருந்தெல்லாம் வந்தார்கள். இறுதியில் என் குரல் தேர்வானது. நயன்தாராவுக்கு ரெகுலராக தமிழில் தீபா வெங்கட் தான் பேசுவார். எமிஜாக்ஸன், ராஷி கன்னா ஆகிய இருவருக்கும் நான் பேசுவது வழக்கம்.

    எப்போதும் நமக்கு ஒரே மாதிரி மன நிலை இருக்கும் என்று சொல்வதற்கில்லை… அதுபோல மூட் அவுட் ஆன நேரங்களில் டப்பிங் பேசப்போனதுண்டா?

    என் அம்மா எனக்கு ஒரு சூப்பர் அட்வைஸ் கொடுத்திருக்காங்க. பர்சனல் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும், வீட்டில் சண்டை இருந்தாலும்.. இங்குள்ள உன் மனநிலையை வீட்டு வாசலிலேயே வெச்சுட்டுப் போயிடணும். நாம் நமக்காக டப்பிங் பேசலை. யாரோ ஒருவருடைய நடிப்புக்கு லைஃப் கொடுக்கிறோம். என்று சொல்லியிருக்காங்க

    எப்போதாவது டப்பிங் பேசும்போது உங்களுக்குப் பொறுமை போய் இர்ரிடேட் ஆனதுண்டா?

    அதற்கு அவசியமே நேர்ந்ததில்லை. பல சமயங்களில் டைரக்டர்களுக்கு வருவதற்கு நேரம் இருக்காது. உதவியாளர்கள் தான் வருவார்கள். டைரக்டரின் விருப்பம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் பத்துவித மாட்யூலேஷன்களில் நம்மை பேசச் சொல்வார்கள். அதிகபட்சம் முடிந்த அளவு பேசுவேன். பிறகு கரெக்ஷன் எந்த ஒரு முறை வரச் சொல்வார்கள். இதெல்லாமே சகஜமான விஷயங்கள். இவை என் பொறுமையை சோதித்ததே இல்லை. என் முழுநேரத் தொழிலே இது என்றாகிவிட்டதால் எல்லாவற்றையும் இயல்பாக எடுக்க முடிகிறது.

    எப்போதாவது டப்பிங் பேசுவதற்காக ஸ்டூடியோவுக்குப் போனபிறகு டப்பிங் பேச முடியாமல் திரும்பியதுண்டா?

    அது என் அம்மாவுக்கு நேர்ந்ததுண்டு. காதலுக்கு மரியாதை படத்தில் எல்லா சீன்களுக்கும் பேசி முடித்தபின், கிளைமாக்ஸ் காட்சியை அம்மாவுக்கு போட்டு காட்டினார்கள். பி ஜி எம்கூட போட்டிருக்காத அந்த நிலையிலும் அம்மா அந்தக் காட்சியைப் பார்த்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாங்க. முகம் சிவந்து மூக்கு அடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஜலதோஷம் போலாகிவிட்டது. அன்றைக்கு அம்மாவால் டப்பிங் பேச முடியவில்லை. மறுநாள்தான் போய் பேசிக் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால் ஃபாஸில் சாருக்கு மிக மிக சந்தோசம். முடிவடையாத நிலையிலேயே ஒரு மூன்றாவது நபரை அந்தக் காட்சியை பாதித்தது, படம் நிச்சயமாக சக்சஸ் என்பதன் அடையாளம் என்று சந்தோஷப்பட்டாராம்.

    டப்பிங் கலைஞராக இருந்த … இருக்கும் .. நீங்கள் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டீர்கள். ஒரு நடிகையாகவும் வெற்றி நடை போடுவது பற்றி?

    ஒரு சமயம் நான் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது என்னை பார்த்த சுரேஷ் தம்பையா நல்லா தமிழ் பேசுறாங்க பார்க்கவும் நல்லா இருக்காங்க இவங்களை நடிக்க வைக்கலாமே என்று தீர்மானித்திருக்கிறார். போட்டோ ஷூட் என்று எதுவும் செய்யவில்லை. நான் பேட்டிகள் கொடுப்பதை பார்த்தே தேர்ந்தெடுத்து விட்டார். பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகும் என்னை அழைக்கவில்லை. எனக்கு கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டேன். வேறுபல ஆஃபர்கள் வந்தன. பிறகு திடீரென்று இந்த படத்தின் அசிஸ்டன்ட் என்னை அணுகினார். இன்னுமா இந்த படத்தை ஆரம்பிக்கவில்லை" என்று வியப்புடன் கேட்டேன். இல்லம்மா இப்போது வேறு தயாரிப்பாளர். (EROS) என்றார். உண்மையில் எனக்கு ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிப்பது என்றால் ரொம்பவே கூச்சம். யாருமே இல்லாத போது தனியறையில் உட்கார்ந்து டப்பிங் பேசுவது என்பது வேறு.. எல்லோரும் பார்க்கும்போது நடிப்பது என்பது வேறு தானே?

    இதற்காக நான் மும்பையில் அனுபம் கேர் நடத்திய பயிற்சி வகுப்புகளுக்கு போய் மூன்று மாதம் பயிற்சி எடுத்தேன். மறக்க முடியாத அற்புத அனுபவம். சனிக்கிழமைகளில் அவரை வந்து வகுப்பு எடுப்பார். ஏராளமான புதிய டெக்னிக்குகளை கற்றேன். திடீரென்று அத்தனை கூட்டமும் விலகி நடிப்பதற்கு தயாராகி விட்டேன். சுரேஷ் தம்பையாவின் ஒரு கிடாயின் கருணை மனு நல்லாப்போச்சு. காவல்துறை உங்கள் நண்பன் நான் நடித்து தியேட்டரில் 47 நாட்கள் ஓடிய படம்

    யாருக்குமே பொற்காலம் என்றால் அது கல்லூரியில் படித்த காலமாகத்தான் இருக்கும். உங்களின் கல்லூரி நாட்கள் பற்றி?

    எத்திராஜ் கல்லூரியில் படிக்கும்போதே நிறைய டப்பிங் வாய்ப்புகள் வந்ததால், கிளாசை கட் பண்ணி விட்டு ஓடிவிடுவேன். ஆசிரியர்களுக்கும் இது தெரியும். அட்டெண்டன்ஸ் ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். அப்பா சளைக்காமல் கட்டிவிடுவார். இதெல்லாம் அம்மாவுக்கு இன்று வரை தெரியாது. கல்ச்சுரல் நடக்கும்போது ஆன் டியூட்டி வெளியில் போவதாக ஒரு ஸ்லிப் வாங்கிக்கொண்டு ஜூட் விட்டு விடுவேன். சீனியர்களை தாஜா பண்ணி, கல்ச்சுரல்களுக்கு திரையுலக பிரபலங்களை அழைத்து வருவதாக உறுதி சொல்லிவிடுவேன். சிவகார்த்திகேயன், அனிருத், சேரன் ஆகியோர் பெரிய மனசு பண்ணி எனக்காக கல்லூரிக்கு வந்து இருக்கிறார்கள். மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. இதனால் என் மதிப்பும் உயர்ந்தது. விக்ரம், எமி ஜாக்சன், ஏ ஆர் ரகுமான் போன்றவர்களின் வீடியோ பிட், கமல் சார் போன்றவர்களின் ஆடியோ பிட் ஆகியவற்றை கொண்டு போய் கொடுத்து கல்லூரி விழாக்களில் அசத்தி இருக்கிறேன்.

    இது போன்ற பிரபலங்கள் வரும்போது, முழுக்க அவர்களுடனேயே இருந்து, நல்லபடி கவனிச்சு அனுப்புவேன். நெருங்கிய சினேகிதிகள் கேட்டுக் கொள்ளும் போது அவர்களுடன் படம் எடுப்பதற்கு ரிக்வெஸ்ட் செய்வேன். அவர்களும் ஒப்புக் கொள்வார்கள் பிறகென்ன!!

    நடிகர்களைச் சந்தித்திருக்கீங்களா?

    டப்பிங் பேசும் போது உடன் பேசுவதற்கு விக்ரம், விஜய் சேதுபதி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் நான் நன்றாய் பேசுவதாய் சொல்லியது உண்டு.

    ரஜினி சார் உங்களைக் கட்டிப்பிடித்திருக்கும் படம் ஒன்று வைரலாயிற்றே..

    C:\Users\ASUS\Downloads\Raveenravi_with_superstar.jpg

    நான் ரஜினி சாரின் ஃபேன். 2.0 படத்திற்குப் பேசி இருக்கிறேன். பல வருடங்களுக்குமுன் என்னுடைய அம்மா ரஜினி சாரைப் பார்க்க தன் தம்பிகளை அழைத்துச்சென்ற போட்டோ எல்லாம் எடுத்து இருக்கிறார். சமீபத்தில் என்னையும் அழைத்துச் சென்றார். பழைய போட்டோக்களை காண்பித்தார் அம்மா. அட நான் இப்பிடியா இருந்தேன் அப்போ என்றார். அப்போது தான் என்னை கட்டி பிடித்து இந்த போட்டோ எடுத்துக் கொண்டோம். அது மிகவும் வைரல் ஆகியது

    உங்கள் அப்பா பற்றி?

    அப்பா பாடகர். யு ஏ இ போன்ற இடங்களுக்கு தன் தங்கையுடன் போய் நிகழ்ச்சிகள் நிறைய கொடுத்திருக்கிறார். தற்போது படங்கள் மொழிமாற்றம் செய்யும் நிறுவனம் வைத்திருக்கிறார்.

    காதல் அனுபவம் ஏதும் இல்லாமலா இருக்கும்?

    இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அழகா இருக்கிற பசங்களையெல்லாம் சைட் அடிப்பேன்.. குறிப்பா கல்ச்சுரல்ஸ்க்கு கல்லூரிக்கு வரும் அழகான பாய்ஸை! ரோட்டில் போகும் சின்ன பையன்கள் எல்லாம் ‘அக்கா ஐ லவ் யூ’ ன்னுவாங்க. சிரிப்பு வரும். அம்மா அப்பா பார்த்த பையனைத் தான் கல்யாணம் செய்துப்பேன்.

    அம்மா தன் அனுபவங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்குவாங்களா?

    ஏராளமாய்!! அமர்க்களம் படத்துக்கு அம்மா பின்னணி குரல் கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு கம்பீரமான ஆண் குரல் பின்னால் இருந்து மெல்ல காதருகில் என் மனைவிக்கு மிக அழகாக டப்பிங் கொடுத்ததற்கு மிக்க நன்றி என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாராம். மிஸ், ஷாலினியை மனைவி என்று தைரியமாய்ச் சொல்வது யார்? அம்மா குழம்பினாராம். எஸ்…. வி ஆர் இன் லவ். நான் ஷாலினியைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன் என்று அஜித் முன்னால் வந்து நின்றார். டைரக்டரைத் தாண்டி அம்மாவுக்கு தான் முதல் செய்தி!

    கலகலப்பான பேட்டிக்கு ரொம்ப நன்றி ரவீணா

    தாங்க்யூ மேம்.

    எழுத்தாளர் பேட்டி. சிவசங்கரி

    பணம், பெயர், புகழ் எல்லாமே…

    40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் தொடர்கதைகளும் பயண நூல்களும் வாழ்க்கைச் சரிதங்களும் எழுதி வருகிறார். இவரது ஒரு மனிதனின் கதை.. அவன் அவள் அது.. 47 நாட்கள் போன்ற சுவாரஸ்யமான கதைகள் சினிமாவாகியுள்ளன. அவருடைய மூன்று தலை முறை இணைப்புத் தொடர்கதை பாலங்கள் தமிழ் உள்ளங்களைக் கவர்ந்து அடுத்தவாரம் எப்போது வரும் என்று வாசலில் தவமிருக்க வைத்தது மறக்காது. பெண் குழந்தைகளை வேலைக்கு வைப்பது பற்றிய இவரது குட்டி திரைப்படம் ஜனாதிபதி விருது வாங்கியது. டி வி சீரியல்களையும் இவர் விட்டுவைக்கவில்லை. சிறந்த மெகா சீரியல் விருது வாங்கியிருக்கிறார். எல்லாவற்றையும்விட… தேசம் முழுவதும் உள்ள படைப்பாளிகளை Knit India Through Literature மூலம் இணைத்த பெருமையை இவர் மட்டுமே பெறுகிறார். வாஷிங்டனில் உள்ள United States Library of Congress ல் இவருடைய குரலைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

    நமஸ்காரம் அம்மா..

    நமஸ்காரம் வேதா. எப்படி இருக்கீங்க.

    நல்லாயிருக்கேன் மேம். பேட்டிக்கு ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி. பேட்டி துவங்கலாமா?

    ஷ்யூர்

    ஆஸ்பத்திரியில் பிறந்தீர்களா வீட்டில் பிறந்தீங்களா மேம்?

    நான் 1942 ம் வருஷம் என் வீட்டிலேயே பிறந்தேம்மா.. சென்னை போக் ரோடில் கமலாலயம் என்ற என் வீடு மிகப் பிரசித்தி பெற்றது. இப்ப அது கல்யாண மண்டபமாயிடுத்து. அங்கே நிறையக் குழந்தைகள் பிறந்திருக்காங்க

    இளமைக்கால நினைவுகளும் அந்த வீட்டை ஒட்டியே இருக்கும்னு நினைக்கறேன்.. ஆம் ஐ ரைட்?

    இல்ல. என் இளமை சந்தோஷ நினைவுகள் எல்லாம் திருமலைப் பிள்ளை ரோடில் இருந்த மிகப்பெரிய வீட்டில்தான். காமராஜர் வீடு எங்க வீட்டுக்குப் பக்கத்தில்தான். பெரிய ஓபன் மைதானம் இருக்கும். பத்து வயசு வரை அங்கேதான்.. வித்யோதயா பள்ளியில் படிச்சேன். எவ்ளோ பெரிய மைதானம் என்பதற்கு ஒரு அழகான உதாரணம் சொல்றேன் கேளேன்.. எனக்கு அப்போ 3 அல்லது 4 வயசு இருக்கும். ஒரு நாள் எங்கப்பா உனக்கு என்னம்மா வேணும் கேளு.. என்றார். நான் தயங்காமல் அப்பா எனக்கு ஒரு மான் குட்டி வாங்கித்தாங்களேன் என்று கேட்டுவிட்டேன். அன்றிரவு நான் தூங்கிக்கொண்டிருந்தபோது தலைநிறைய இருந்த பூவை யாரோ பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. யார் என்று எழுந்து பார்த்தால் மான் குட்டி!! மான் துள்ளி ஓடும் அளவு பெரிய மைதானம்!

    அடேயப்பா! உங்க அப்பா அவ்ளோ செல்வாக்கானவரா?

    என்னம்மா இப்டி கேட்டுட்ட? சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்… ஆடிட்டர் சூரின்னு சொன்னா தெரியாதவங்களே கிடையாதே! சூரி அண்ட் கோ என்பது அப்பாவின் பிரபல கம்பெனி. டி டி கே கம்பெனி.. காமராஜர்.. கல்கி.. எம் எஸ்.. சதாசிவம்… என்று எல்லோருக்கும் அப்பாதான் ஆடிட்டர். எப்பப்பாரு பாம்பே டெல்லி என்று டூர் போயிண்டே இருப்பார். அங்கிருந்து ஏதாவது வாங்கிக்கொண்டு வந்து குடுப்பாரு. வந்தவுடன் ராத்திரியாயிருந்தாலும் எங்களை எழுப்பி எல்லாத்தையும் குடுத்து.. எங்களைப் பாடச் சொல்லி ..டான்ஸ் ஆடச் சொல்லிக் கேட்பாரு.. அப்புறம்தான் அவருக்குத் தூக்கமே வரும்.

    சூப்பர்.. உங்களுடைய அண்ணன் தம்பிகள்.. மற்றும் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன் மேம்…

    பெரிய அண்ணா டெல்லியில் உயர் பதவி வகிச்சவர். இப்ப அவர் இல்லை. பெரிய அக்கா பெங்களூரில் இருக்கா.. சின்ன அண்ணா ஐம்பது வருஷமா அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டாரு. அவர் ஒரு அமெரிக்கப் பெண்ணையே கல்யாணம் செய்துக்கிட்டார். நான் கடைக்குட்டி. ஹாஹா.. ஆனா வீடுன்னா இவ்ளோதான்னு நினைச்சுடாதேம்மா.. எங்கள் குடும்பம் ரொம்பவும் பெரிசு. எப்பவும் 40 அல்லது 50 உறவுக்காரங்க இருந்துண்டே இருப்பாங்க. கெஸ்ட் ரூமில் நாங்கள் காலையில் ஸ்கூல் போகும்போது ஒரு பொட்டி இருக்கும். சாயந்தரம் ஸ்கூல்விட்டு வரும்போது வேறு ஒரு கலர் பொட்டி இருக்கும். தட்ஸ் ஆல். மற்றபடி அது காலியா இருந்ததே இல்லை. சிங்கப்பூரிலிருந்தெல்லாம் விருந்தாளிகள் வந்து ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தங்கிட்டுப்போவா.

    அட.. கல்யாண வீடு மாதிரி இருக்கும்போலிருக்கே?

    கல்யாணங்களும் நடக்கும் எங்க வீட்டிலேயே. 10 கல்யாணமாவது நடந்திருக்கும். எப்பவும் கலகலப்பான குடும்பம் எங்களுடையது. என் அப்பா எத்தனைக்கெத்தனை கண்டிப்பானவரோ அவ்வளவுக்கவ்வளவு தாராளமானவர். சர்க்கஸ் சினிமாவெல்லாம் போனால் ஒருமுழு வரிசை புக் பண்ணிடுவார் அப்பா. ஆர் ஆர் சபாவில் எத்தனை நாடகம் பார்த்திருப்போம் தெரியுமா?

    அடடே..பெரிய பணக்காரங்களா இருந்தீங்கன்னு புரியுது மேம்..

    C:\Users\ASUS\Downloads\sivasankari. 2 jfif.gif

    நாங்க மெகா பணக்காரங்க இல்லைம்மா.

    Enjoying the preview?
    Page 1 of 1