Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalathukkum Nee Vendum
Kaalathukkum Nee Vendum
Kaalathukkum Nee Vendum
Ebook123 pages43 minutes

Kaalathukkum Nee Vendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனுடன் ஒரு காதலும் முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த நாவலின் இரண்டு கதாநாயகர்கள் பயணிக்கும் கப்பல் மூழ்கிய போது அவர்களின் வாழ்வும் காதலும் புத்துயிர் பெற்று வளமாய் விளைந்தது.

ஆனாலும் அந்த சம்பவங்களின் போது நடந்த ஏராளமான நிகழ்வுகள் நம்மை வியப்பின் விளிம்புக்குக் கொண்டு செல்பவை. மனித வாழ்வின் நிகழ்ச்சிகள் கற்பனைக் கதைகளையும் மிஞ்சுபவை. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாய் கொண்ட இந்த நாவல் அதற்கு ஒரு உதாரணம்...

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580128408933
Kaalathukkum Nee Vendum

Read more from Vedha Gopalan

Related to Kaalathukkum Nee Vendum

Related ebooks

Reviews for Kaalathukkum Nee Vendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalathukkum Nee Vendum - Vedha Gopalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலத்துக்கும் நீ வேண்டும்

    Kaalathukkum Nee Vendum

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    அவள் ஒரு ஸீகல்ஸ் பறவை மாதிரி இந்த ஏரியை நேசிக்கிறாள். அந்தப் பறவையைப் போலவே அவள் சந்தோஷமாக.. சுதந்திரமாக இருக்கிறாள். ஆனால் எதேச்சையாக ஒரு ஆண்மகன் வந்தான்.

    ஆன்டன் செகாவ் 1896ல் எழுதிய புகழ்பெற்ற நாடகமான Seagullல் வரும் வசனம் இது. சீகல் பறவையை பெண்ணோடு உவமைப்படுத்தியிருப்பார். இது ரஷ்ய இலக்கியம்.

    ஆனால் அமெரிக்காவின் பூர்வகுடி செவ்விந்தியர்களின் சுதை ஓவியங்கள் சீகல் பறவையை கலைகளில் ஈடுபாடுடையவையாகவும், சுதந்திரத்திற்கும் சந்தோஷத்துக்குமான குறியீட்டு உருவகமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

    அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபத்துக்களை அவன் உணரவில்லை.

    கண்ணெதிரில் கடலின் பரப்பு தகதகவென்று மின்னியது.

    கடல் நிலவு.

    அவன் நின்றிருந்த கப்பலின் பெயர் அதுதான்.

    அவன்? தினேஷ்.

    பெண்களுக்குத்தான் மீன் மாதிரி மான் மாதிரிக் கண்கள் இருக்கும் என்று யார் சொன்னார்கள்? ஆண்களுக்கும் உண்டுதான். அதற்கு உதாரணம் தினேஷ். இது பற்றி அவனை யாரேனும் புகழ்ந்தால் அலட்ட மாட்டான். இவர்கள் புகழ்ந்துவிட்டார்களே என்று அகம் மகிழ்ந்து தன்னிலை மறக்க மாட்டான்.

    கண்கள் மட்டும்தான் முழு உடம்பில் சொல்லிக்கற மாதிரி இருக்கு என்று சிரித்துப் புறக்கணிப்பான். அவன் அப்படி ஒன்றும் அதிக உயரமில்லை. அப்படி ஒன்றும் பளீர் நிறமில்லை. அப்படி ஒன்றும் வசீகரமில்லை. அனைத்திலும் சுமார். மனதில் மட்டும் உயரமானவன். அதனால்தான் அவன் விரும்பிய வாழ்க்கையை.. பணியை இறைவன் அமைத்துக்கொடுத்திருக்கிறான்.

    மற்றவர்களைப் போல் ஐ டி கம்பெனியில் வேலை பார்க்காமல்... மருத்துவனாகவோ, ஆடிட்டராகவோ ஆக விரும்பாமல், மிகுந்த காதலுடன் கப்பலில் வேலை பார்க்கிறான்.

    சின்ன வயசிலிருந்தே சமுத்ர ராஜன் அவனை ஏனோ கவர்ந்தான். அவன் வசித்த ராமேஸ்வரம் அவனுக்கு தினசரி கடல் அரசனின் தரிசனத்தை அளித்து உதவியது. அப்பா தாத்தா என்று இவர்களின் பரம்பரையே ராமேஸ்வரத்தில் வசித்தது.

    முன்பெல்லாம் ராமேஸ்வரத்தின் பெயர் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது இந்தியா என்றவுடனேயே ராமேஸ்வரம் போயிருக்கிறாயா? என்றுதான் கேட்கிறார்கள். எங்கள் பூர்வீகமே அதுதான் என்று மூன்று தலைமுறையாக வசிப்பதை அந்த நாட்டு மக்களுக்கு விவரிப்பான்.

    அட அப்துல் கலாம் வீடு உங்கள் வீட்டுக்குப் பக்கமா? என்று உலகம் விசாரித்தது. அந்த ஊரின் பரப்பளவே மிகவும் கொஞ்சம்.

    ‘எல்லோர் வீடும் எல்லோர் வீட்டுக்கும் பக்கம்தான்" என்பான். மனசுக்குள் பெருமிதமாய் இருக்கும். தன் ஊரை ஒரு அற்புத மனிதர் பிரபலப்படுத்திவிட்டாரே என்று மனசு விம்மும்.

    சின்ன வயசிலேயே மணிக்கணக்காய் மழை பெய்தாலும் வெயில் பட்டையைக் கிளப்பினாலும் பனி மூட்டமாய் மூடியிருந்தாலும் கடற்கரையில் போய்க் காலார நடப்பதும்.. மணலில் காலைப் புதைத்துக்கொண்டு உட்காருவதும்தான் அவனின் உகந்த பொழுதுபோக்கு.

    சாயந்தரம் அவனைக் காணவில்லை என்றால் அம்மாவுக்கு நிச்சயமாய்த் தெரியும்… அவன் கடற்கரையில்தான் நின்றிருப்பான். அண்ணா ரகுநந்தனிடம் சொல்லி அவனை ஒரு அதட்டுப்போட்டு அழைச்சுக்கிட்டு வாடா…. அதட்டு மட்டும் போடு போறும். அடிச்சுகிடிச்சு வச்சுடாதே என்பாள்.

    ஒவ்வொரு முறையும் டேய் அம்மா உன்னை நாலு அடி போட்டு அழைச்சுக்கிட்டு வரச்சொன்னாங்க.. நான்தான் கருணை வெச்சு உன்னைச் சும்மா விடறேன் என்பான். இவன் மனதில் நன்றியும் கருணையும் சுரக்கும்.

    ஒரு நாள் மழை வலுத்துவிடவே இவன் சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பிவிட்டான். இவன் வந்து வாசலில் டிராயரைப் பிழிந்து கொண்டிருப்பது தெரியாமல் அண்ணாவிடம் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். டேய் ரகுநந்தா.. அவனை ஒரு அதட்டுப்போட்டு அழைச்சுக்கிட்டு வாடா…. அதட்டு மட்டும் போடு போறும் . அடிச்சுகிடிச்சு வச்சுடாதே என்று சொல்லி முடிக்குமுன் அண்ணாவின் குரல் ஓவர்டேக் செய்தது.

    உக்கும் நீயும் இதையேதான் தினமும் சொல்லிக்கிட்டிருக்க.. அவனை அடிக்கறதுதான் என் கொள்கையாக்கும்.. என்றான்

    தினேஷ் மின்னல் மாதிரி உள்ளே வருவான் என்று அண்ணன்காரன் எதிர்பார்க்கவில்லை. "அப்ப? தினமும் அம்மா அடிக்கச் சொன்னாங்கன்னு என்கிட்ட நீ சொன்னதெல்லாம் டுபாக்கூரா? தெரிஞ்சிருந்தா ‘அம்மா கிட்ட சொல்லாதே.. அப்பா கிட்ட சொல்லாதேன்னு நீ சொன்ன விஷயத்தையெல்லாம் கேட்டிருக்கவே மாட்டேனே,’ என்று உள்ளே நுழைந்த தம்பியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

    இப்போது ‘டெக்’கில் நின்று பைனாக்குலரில் பார்த்துக்கொண்டிருந்தபோது சகலமும் நினைவுக்கு வந்தன. அண்ணாவைப் பார்க்க வேண்டும்போலிருந்தது.

    போன வருஷம் இவன் வர வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கல்யாணம் காத்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஏம்மா? நான் வரும் டேட் நிச்சயமில்லைன்னு அண்ணாவுக்கு மெயில் போட்டேனே? கல்யாணத்தை முடிக்க வேண்டியதுதானே? என்று இவன் நெகிழ்ச்சியுடன் கேட்டபோது அம்மா மாற்றி அப்பா மாற்றி சொன்னார்கள்

    உங்க அண்ணன் நீ வரலைன்னா தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டான்.. என்றபோது அண்ணாவை அணைத்துக்கொண்டான். சின்ன வயசில் இருந்த சில்லறைச் சண்டைகளெல்லாம் அர்த்தமற்றவை என்று புரியும்போது நெடுந்தூரம் கடந்து வந்துவிடுகிறோம்.

    ராமேஸ்வரத்தில் ‘வசிப்பவர்கள் ’ குறைவு. வந்துபோகும் டூரிஸ்ட்டுகள்தான் அதிகம். இரண்டு கட்டடங்களுக்கு ஒரு லாட்ஜ் வீதம் இருக்கும். இவர்கள் வீடு கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் இருந்தது.

    பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது, அப்பா.. நான் எப்பவுமே கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்பா..என்றபோது அப்பா பேச்சுவாக்கில்தான் அப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்தார்.

    கப்பல்ல வேலைக்குப் போடா அப்போது அஸ்து தேவதைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1