Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Thana? Ivan Thana?
Ithu Thana? Ivan Thana?
Ithu Thana? Ivan Thana?
Ebook117 pages51 minutes

Ithu Thana? Ivan Thana?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404607
Ithu Thana? Ivan Thana?

Read more from Vedha Gopalan

Related to Ithu Thana? Ivan Thana?

Related ebooks

Reviews for Ithu Thana? Ivan Thana?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Thana? Ivan Thana? - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    இது தானா? இவன் தானா?

    Ithu Thana? Ivan Thana?

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அனு...

    சொல்லு நிகிதா... சிநேகிதி தன்னைப் போலவே ரொம்பவும் ஜாலியான மூடில் இருப்பதாய் நினைத்துக் கேட்டாள் அனு.

    எனக்கு பயமாய் இருக்குடீ...

    எதுக்கு? நாளைக்கு பார்ட்டிக்கு புடைவை கட்டறதுக்கா? அப்போ சுரிதார்லயே வா…

    அதுக்கில்லை... மூன்றாம் மாடியிலிருந்து தெரிந்த கல்லூரி மைதானத்தையே வெறித்துப் பார்த்தவாறு சொன்னாள். தன் மனதில் உள்ளவற்றைத் தோழியிடம் திறந்து காட்டிவிடும் தீர்மானம் இருந்தது குரலில்.

    ஏய்… எவடீ... இவ... உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? அப்பிடித்தான். இந்த காலேஜ்ல சேர்ந்த வருஷம் முதல் முதலாய் கிளாஸுக்குள் வந்து, குனிஞ்சு பெஞ்ச்சே நனையற மாதிரி விக்கி விக்கி அழுதே... எவனோ உன்னை ரேப் பண்ணிட்டானோன்னு எங்களுக்கெல்லாம் சுவாரஸ்யமாயிடுச்சு. கடைசில பார்த்தா... தவறிப்போய் ஜன்னல் வழியாய் வெந்நீரை வெளியே ஊத்தினபோது அங்கே ஒரு பூனை இருந்தச்சுன்னும், அது துடிதுடிச்சுக்கிட்டு ஓடிச்சுன்னும் சொல்லிச் சொல்லி அழுதே... இதபாரு மை டியர் ஃப்ரெண்ட்... பழி பாவத்துக்கெல்லாம் ஓரளவுக்குத்தான் பயப்படணும்... அதிலும் தெரியாமல் தவறு செய்தால் அது பாவத்திலேயே சேர்த்தி இல்லை… அம்புடுதேன்.

    இவள் என்ன பதில் சொல்வாள்? என்ன சொல்ல வருகிறோம் என்பதே தெரியாமல் பேசி முடிக்கும் எதிராளியிடம் என்னத்தை சொல்வது?

    நேத்தி… டி.வி.யில் படம் பார்த்தியா? - பேச்சைச் சுற்றி வளைத்துக்கொண்டு போகத் தீர்மானித்தாள்.

    அம்மணி... எங்கம்மா உங்கம்மா... எங்க பாட்டி, உங்க பாட்டி காலத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஒரே ஒரு சேனல்தான்ங்கறதால சுலபமாயம் பதில் சொல்லியிருப்பாங்க. இப்ப முப்பத்து முக்கோடி சானல்களில் நான் எதைன்னு சொல்ல?

    அதுக்கில்லை அனு... காலேஜ்ல ரெண்டு பேர் லவ் பண்ணுவாங்களே.

    த்தோடா… வானம் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தாள் அனு என்கிற, அந்த அனுஜா. காலேஜ்ல ரெண்டு பேர் லவ் பண்ற கதை ரெண்டு லட்சத்து முப்பத்திமூணு வந்திருக்கு. - மீண்டும் சிரிப்பு.

    யேய்... ரமணா பார்ட்டி.. என்று யாரோ போகிற போக்கில் சொல் சொல்லவும், அந்தக் கல்லூரிச் சந்தடியில் தன் அந்தரங்கத்தை வெளிக்கார் போட்டுக் காட்டவேண்டாம் என்று தீர்மானித்து, தூசிதட்டி எழுந்தாள் நிகிதா.

    டேய்… எனி திங் சீரியஸ்? கவலையுடன் கேட்ட சிநேகிதியைச் சிரிப்புடன் புறக்கணித்து நகர்ந்தாள் நிகிதா. தன் குறை தன்னோடு... யாருடனும் பகிர்ந்து கொள்வதால் பிரச்னை குறையப்போகிறதா என்ன?

    என்னையா இருக்கு உன் டிபன் பாக்ஸில்? கேட்டவாறு திறந்து, அடையார் வாயில் நிரப்பிக்கொண்டு, சரி... நாளைக்கு ஃபேர்வெல்லுக்கு ஸாரியோ, சூரியோ ஏதோ ஒரு இழவைப் போடுக்கிட்டு வா. மைண்ட் யூ கண்டிப்பாய் ஏதாவது போட்டுக்கிட்டு வா என்று முழுச் சந்தோஷ மூடில் வழியனுப்பிய அனுஜாவிடம் இன்னொரு சமயமாய் இருந்தால் அனைத்தையும் கொட்டியிருப்பாள்தான். இன்றைக்குக் கல்லூரியே ஃபேர்வெல் உணவில் இருக்கிறது. சிலர் நாளைய பார்ட்டி பற்றிய மகிழ்ச்சியில், சிலர் பிரியப்போகப் சோகத்தில்...!

    இவள் மட்டும் வேறு சோகத்தில்...!

    மனம் முழுக்க பாரமும் பயமுமாய் எப்படித்தான் தன்னுடைய 'கைனடிக்’கை ஓட்டிக்கொண்டு சந்தடி மிகுந்த மவுண்ட் ரோட்டைக் கடந்து தி.நகரில் இருக்கும் தன் வீட்டுக்கு ஒழுங்காய் வந்து சேர்ந்தாளோ… இறைவனுக்கே வெளிச்சம்.

    வீட்டுக்கு வந்து நுழைந்த நிமிஷமே, தோ… அவளே வந்துட்டாளே… என்ற அம்மாவின் ஆர்வக்குரலும்.

    டியேய் அசடு.... எதையாவது உளறிக் காரியத்தைக் கெடுத்துடாதே... என்ற அப்பாவின் பயக்குரலும் அவளுக்குத் துல்லியமாய்க் கேட்டன.

    நிகிதாம்மா... நாளைக்கு காலேஜ் உண்டா? - அம்மா உள்ளே நுழையும்போதே அவசரமாய்க் கேட்டாள்.

    குழந்தை காலை கீலை அலம்பிக்கிட்டு டிபன் கிபன் சாப்பிடட்டுமே அப்பா பல் கடித்தார்.

    முன்பாய் இருந்திருந்தால், 'அதென்னப்பா காலை கீலை. டிபன் கிபன் பழனிபாரதிக்குப் போட்டியா?’ என்று கலாட்டா செய்திருப்பாள். இப்போது எதுவும் பேசுவதாய் இல்லை.

    அம்மாவைச் சும்மா இருக்கச் சொன்ன அப்பா மெதுவாய்க் கேட்டார், நிகி... அம்மா கேட்டதுக்குப் பதிலே சொல்லலையேம்மா? நாளைக்கு... காலேஜ்...

    உண்டு வழக்கமில்லாத வழக்கமாய் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும் மகளை வியப்புடன் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டால் ஒன்பது பதில் சொல்லும் நிகிதாவா இது?

    நாளைக்கு எத்தனை மணிக்குக் கல்லூரியில் இருக்க வேண்டும் என்பதில் துவங்கி என்ன உடையில் செல்லப் போகிறாள் என்பதுவரை சொல்லி முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இன்றென்னவோ மெளனம்... ஒருவேளை வீட்டில் நடக்கும் சதித்திட்டம் அவளுக்குத் தெரிந்துவிட்டதோ?

    நா... நாளைக்கு லீவு போட முடியுமா? அம்மா தயங்கித் தயங்கிக் கேட்டவாறு அவளுக்கு மிகவும் பிடித்த பாதாம் பாலைக்கொண்டு வந்து அவள் முன் நீட்டினாள்.

    நாளைக்குக் கல்லூரிக்குப் போவதில்தான் அவளுடைய வாழ்க்கையே இருக்கிறது என்பது அம்மாவுக்குத் தெரியாது. வாழ்வா, சாவா?

    என்னம்மா விஷயம்? எப்படிப்பட்ட முக்கியமான விசேஷமானாலும் அவள் லீவு போட விரும்புவதில்லை என்பது இத்தனை வருஷங்களில் அவர்களுக்குத் தெரிந்த உண்மைதான். எனில், அதையும் மீறிய முக்கியமான விஷயமாய் இருக்கவேண்டும்!

    வந்து... இப்ப கல்யாணம் ஆகலைன்னா இன்னும் ஆறு வருஷத்துக்கு ஆகாதுன்னு அடையாறு ஜோசியர் சொன்னார். அதனால... அதனால...

    அதனால? கலவரத்துடன் கேட்டாள் நிகிதா.

    அடி எவடீ இவ... குழந்தைகிட்ட ராமாயணம் படிச்சுக்கிட்டு... சுருக்கமாய்ச் சொல்றேம்மா... நாளைக்கு உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க... என்று சினிமா வில்லன்போல்

    Enjoying the preview?
    Page 1 of 1