Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kaadhal Sathurangam
En Kaadhal Sathurangam
En Kaadhal Sathurangam
Ebook230 pages1 hour

En Kaadhal Sathurangam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.
லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் ஆசிரியை... திருமதி கிரிஜா ராகவனிடமிருந்து, நான் சற்றும் எதிர்பார்த்திருக்காத தருணத்தில் சர்பிரைஸ் போன் கால்!!
“சொல்லுங்க மேடம்.”
“வேதாஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“சந்தேகமே வேண்டாம். கட்டாயம் செய்கிறேன்.”என்றேன்.
பெரிசாய் ஏதோ உதவி கேட்கப்போகிறார். யாரையோ பிடித்து எதையோ சாதித்துத் தர வேண்டும்போலிருக்கிறது. அந்த யாரோ எந்த உயரத்தில் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாதே…
“எனக்கு ஒரு தொடர்கதை வேணும் வேதா. நல்ல அழுத்தமான சம்பவங்களோட நல்ல கதையா எழுதணும். 20 வாரம் வர்றமாதிரி... லேடீஸ் ஸ்பெஷலில் 4 பக்கம் வரும்படி எழுதணும்.’’
இதன் பெயர் உதவியா!!
முழுத்தொகையையும் முன்பணமாகக் கொடுத்து மேலும் கமிட் செய்ய வைத்ததில் மிரண்டு போனேன். நானும் 20 அத்தியாயத்தையும் முழுக்க எழுதித் தர ஆசைதான். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் வேலைப் பளு இருந்ததால்... ஒவ்வொரு மாதமும் டெட்லைனாகிய 24ம் தேதி அதிகாலைதான் அரக்கப்பரக்க அனுப்புவேன்.
“கோவிச்சுக்காதீங்க”என்று மெயிலில் குறிப்பிட்டதற்கு
“ஐயோ வேதா. உங்களையாவது கோபிக்கறதாவது—”என்று பதறி என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்.
ஆக…
நீங்கள் படித்துக்கொண்டிருப்பது லேடீஸ் ஸ்பெஷலுக்காகவென்றே முழு ஈடுபாட்டுடன் எழுதிய நாவல்.
தலைப்பு வைக்க ஒரு பத்து நிமிஷம் நாங்கள் இருவரும் டிஸ்கஸ் செய்தது தனிக்கதை
வாசிப்பதற்கு மிக்க நன்றி
அன்புடன்
வேதா கோபாலன்
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580128405290
En Kaadhal Sathurangam

Read more from Vedha Gopalan

Related to En Kaadhal Sathurangam

Related ebooks

Reviews for En Kaadhal Sathurangam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kaadhal Sathurangam - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    என் காதல் சதுரங்கம்

    En Kaadhal Sathurangam

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    என்னுரை

    வணக்கம்.

    லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் ஆசிரியை... திருமதி கிரிஜா ராகவனிடமிருந்து, நான் சற்றும் எதிர்பார்த்திருக்காத தருணத்தில் சர்பிரைஸ் போன் கால்!!

    சொல்லுங்க மேடம்.

    வேதாஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?

    சந்தேகமே வேண்டாம். கட்டாயம் செய்கிறேன்.என்றேன்.

    பெரிசாய் ஏதோ உதவி கேட்கப்போகிறார். யாரையோ பிடித்து எதையோ சாதித்துத் தர வேண்டும்போலிருக்கிறது. அந்த யாரோ எந்த உயரத்தில் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாதே…

    "எனக்கு ஒரு தொடர்கதை வேணும் வேதா. நல்ல அழுத்தமான சம்பவங்களோட நல்ல கதையா எழுதணும். 20 வாரம் வர்றமாதிரி... லேடீஸ் ஸ்பெஷலில் 4 பக்கம் வரும்படி எழுதணும்.’’

    இதன் பெயர் உதவியா!!

    முழுத்தொகையையும் முன்பணமாகக் கொடுத்து மேலும் கமிட் செய்ய வைத்ததில் மிரண்டு போனேன். நானும் 20 அத்தியாயத்தையும் முழுக்க எழுதித் தர ஆசைதான். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் வேலைப் பளு இருந்ததால்... ஒவ்வொரு மாதமும் டெட்லைனாகிய 24ம் தேதி அதிகாலைதான் அரக்கப்பரக்க அனுப்புவேன்.

    கோவிச்சுக்காதீங்கஎன்று மெயிலில் குறிப்பிட்டதற்கு

    ஐயோ வேதா. உங்களையாவது கோபிக்கறதாவதுஎன்று பதறி என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்.

    ஆக…

    நீங்கள் படித்துக்கொண்டிருப்பது லேடீஸ் ஸ்பெஷலுக்காகவென்றே முழு ஈடுபாட்டுடன் எழுதிய நாவல்.

    தலைப்பு வைக்க ஒரு பத்து நிமிஷம் நாங்கள் இருவரும் டிஸ்கஸ் செய்தது தனிக்கதை

    வாசிப்பதற்கு மிக்க நன்றி

    அன்புடன்

    வேதா கோபாலன்

    1

    புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,

    வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென

    காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே

    நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே

    நின்றபொருள் கண்ட நினைவில்லை

    காதலோ காதல்-பாரதியின் கவிதை

    மதுரை ஜங்ஷன் அனைத்து அமர்க்களங்களுடனும் களைகட்டியிருந்தது.

    பத்திரிகைகளை அள்ளிக்கொண்டு ஒரு பெண் பணம் கொடுத்தபோது இந்தக் காலத்திலும் வாசிப்புப் பழக்கம் இருப்பது சந்தோஷம் தந்தது.

    ரயிலுக்குப் போட்டியாகச் சக்கரம் வைத்த பெட்டிகள் உருண்டன.

    காபி ஸ்டாலைச்சுற்றி ஒரு இளைஞர்கள் வட்டம் சமோசா கடித்தவாறு உரக்கச் சிரித்தனர்.

    ஒரு வயதான தம்பதி வாழை இலையில் கட்டிய இட்டிலி சட்டினையை அவசர கதியில் விழுங்கிக்கொண்டிருந்தனர்.

    ரயிலுக்குள் இரட்டிப்புப் பரபரப்பு.

    சீட் நம்பர்களைத் தேடி மற்றர்வளை முதுகுப்பையால் தட்டியவாறு இரண்டு மாணவிகள் ஓடினார்கள்.

    வாழ்வைப் புரட்டிப் போடும் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நிகழப்போவதை அறியாத மானசிக்கு மட்டும் மனசு நிர்மலமாக இருந்தது.

    ஏய் ராகுல்... ஓடாதேடா...ரயிலில் காலை எடுத்து வைக்கப் போன மானசி அப்படியே நின்றுவிட்டாள்.

    ராகுல்…

    அவன் பெயர் இன்றைக்கு இங்கே ஏன்?

    மம்மி கூப்பிடறாங்க இல்ல... நில்லு ராகுல்

    இறுகப் பிடித்து அவன் தாயிடம் ஒப்படைத்தாள்.

    வாழ்வின் முக்கியமான தருணத்தில் தன் ராகுலைப் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டாயிற்று… அந்த ஆதங்கத்தை ஈடுகட்டவோ இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது என்று தித்திப்பாக அந்தப் பெயரை ஒரு முறை உச்சரித்துப் பார்க்கிறாள்?

    ரிசர்வ் செய்த சீட் நம்பரைப் பார்த்து, பெட்டியை சீட்டுக்கடியில் வைத்துவிட்டு அமர்ந்தபோது அந்தக் குட்டிப்பையன் ராகுலின் அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்தாள்.

    எதிரில் ஓர் இளம் பெண் வந்து அமர்ந்தாள். உலகமே அலட்சியம் என்பதுபோல் ஒரு பார்வை.

    மேடம்... உங்க சீட் நம்பர்…33ஆ? அது என் சீட் நம்பராச்சே?யாரோ யாரிடமோ கேட்டார்கள்!

    சட்டென்று அவளை வாரி இழுத்துப் போட்டது அந்த வசனம். என்ன இன்றைக்கு? எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறார்களா? அவள் நினைவுகளை இழுத்துக் கொண்டு வேறு காலகட்டத்தில் போட்டுவிட்டு வரத்தீர்மானித்துத்தான் கிளம்பியிருக்கிறார்களா?

    சீட் நம்பர்கூடவா அதே 33 ஆக இருக்க வேண்டும்!

    இது வரை ஒரு பத்தாயிரம் தடவையேனும் மனதுக்குள் ரீவைண்ட் செய்த காட்சியல்லவா!

    வண்டி நிகழ்காலத்தில் மெல்லக் கிளம்பி கடந்த காலத்துக்குள் நுழைந்தது…

    அப்போது அவள் கல்லூரி மாணவி. மதுரை தவிர வேறு ஊர் அறியாதவள். எப்போதாவது லீவுக்கு சித்தப்பா வீட்டுக்கு சென்னை போவாள். மற்றபடி வீடு விட்டால் காலேஜ், காலேஜ் விட்டால் வீடு. அவர்கள் வீட்டில் யாரும் அவளை அடித்து உதைத்துக் கண்டிக்கவில்லை. ஒரு சுய கட்டுப்பாடு... வளர்ந்த விதம்... சூழ்நிலை எல்லாமுமாய் அவளை ஓர் அற்புதமான பெண்ணாக்கியிருந்தன.

    பதினெட்டு வருடங்களுக்கு முன்…

    கல்லூரியில் இரண்டாம் வருஷம் பி காம் படித்துக்கொண்டிருந்தபோது…

    இதே மாதிரி ரயில் பயணம் ஒன்றின்போது நடந்த சம்பவம் கல் எழுத்துப் போல் மனதில் மறுவாசிப்பாக வலம் வந்தது.

    அந்தக் கல்லூரியில் இவர்களைச் சென்னைக்கு அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். சென்னையைச் சுற்றிக் காண்பிக்க எண்பது மாணவ மாணவியைரை அழைத்துச் சென்றாலும் இவள் செல்வதற்குச் சிறப்புக் காரணமும் ஒன்று உண்டு….சென்னையில் ஒரு கருத்தரங்கு. மானசியும் இன்னும் ஓரிரு மாணவ மாணவியரும் அதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

    இவர்கள் கல்லூரி மதுரையின் பழமையான கல்லூரிகளின் ஒன்று. மிக கண்ணியமான பெயர் பெற்ற கல்லூரி.

    அவளும் சிநேகிதி நீரஜாவும் லெக்சரரர் சொன்னதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையத்தில் ஆஜர். (புரொஃபஸர் ஃபாத்திமா மேடமே சற்று ஜாக்கிரதை உணர்ச்சியுடன் அதி முன்னதாக வரச் சொன்னால் இவர்கள் அதைவிட அதி-அதி முன்னதாக வந்தாயிற்று)

    ரயில் நிலையத்தில் போகிற வருகிறவர்கள் அவர்கள் இருவரையும் ஒரு நிமிஷம் நின்று பார்த்துவிட்டுத்தான் போனார்கள். பின்னே தலையில் இருக்கும் மதுரை மல்லியைச் சூடியிருக்கும் விதம் முதற்கொண்டு இருவரும் டிட்டோவாக இருந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள்!

    மேடையில் பாடும் சகோதரிகளைப்போல்…

    யாரோ போகிற போக்கில் மதுரை சிஸ்டர்ஸ் என்று கமென்ட் செய்துவிட்டுப் போனார்கள். மானசி அதைக் காதில் வாங்கினாலும் காதோடு நழுவ விட்டுவிட்டாள். நீரஜாவுக்குத்தான் ஏகத்துக்குப் பெருமை. அவள் ஐடியா பலித்துவிட்டதாம்.

    மேம் வந்துட்டாங்கடீ...ஆர்வத்துடன் அலறினாள் சிநேகிதி.

    ஆனால் மானசியின் கவனம் ஆசிரியைக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ராகுலின் பக்கம்தான் இருந்தது.

    வீட்டில் அலங்காரம் செய்துகொண்டு கிளம்பும்போதே அவனை முன்னிட்டுத்தான். அவன் இவள் பக்கம் திரும்பவில்லை. இன்னும்கேட்டால் மாணவிகள் இருந்த பக்கமே திரும்பவில்லை. மாணவர்கள் பக்கம் போய் ’மச்சி’ என்றும் ’மாமு’ என்றும் ’மாப்ள’ என்றும் 15 வருஷத்துக்கு முந்தைய வழக்கப்படி அழைத்தவாறு இணைந்தான்.

    சற்றுப் படபடப்பாகத்தான் இருந்தது. ரயில் வந்தவுடன் தாங்களாக வந்து அத்தனை மாணவிகளின் பெட்டிகளையும் மாணவர்கள் எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறியபோது இவளுடையதை எடுத்துக் கொண்டான் ராகுல். இவளுக்குப் பரபரப்பாக இருந்தது. பாவம். அவன் பெட்டி ஒரு கையில் இவள் பெட்டி இன்னொரு கையில்...

    வந்து… பரவாயில்லை... நானே… நானே... எடுத்துக்கிட்டு வ...வ.அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாய்ச் சென்று கம்பார்ட்மென்ட்டில் ஏறிவிட்டான்.

    மேடம் சீட் நம்பர்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். ஒவ்வொருவராக அமர...அப்போது இவள் 33ம் நம்பர் சீட்டில் அமர...

    சிறிதுநேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவன் அவளிடம் வம்பு செய்யும் நோக்கத்துடன் மேடம்... உங்க சீட் நம்பர்…33ஆ? அது என் சீட் நம்பராச்சே?என்றான்.

    அத்தனை டிக்கெட்களும் மேடம் கையில் இருந்ததால் இவளால் வலுவாக எதிர்க்க முடியவில்லை. இருங்க... எங்க மேடம் வந்துடட்டும்என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

    அவனுக்கு மேலும் துளிர்த்துவிட்டது. வர்றப்போ வரட்டும். இப்ப நீ எழுந்திருஅவன் ஒருமையில் கூறிச் சற்றுக் குரலை உயர்த்த இவள் மட்டுமின்றி இவள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து ஜுஸ் பாட்டிலுக்குத் திறப்பு விழா செய்யலாமா என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவும், போனி டெயில் டைட்டாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக்கொண்டிருந்த தமிழரசியும், டிபன் பையை மேலே வைப்பதா சீட்டுக்குக் கீழா…... கம்பியில் மாட்டுவதா என்ற உலக மகா சிந்தையில் இருந்த பிருந்தாவும் ஸ்டேனில் விற்ற ஆரஞ்சுப் பழத்தை வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த பிரியாவும் படு தீவிரமாக காமிக்ஸ் படிக்க ஆரம்பித்துவிட்ட பிரபாவும்கூட அதிர்ந்து, கவனம் கலைந்து பயம் அணிந்து வாயை மூடிக்கொண்டனர்.

    நான் போய் மேடம் எங்க இருக்காங்கன்னு பார்த்துக்கிட்டு வர்றேன்என்று எழுந்திருக்க முயன்றாள் இன்னொருத்தி.

    அப்போதுதான் அந்தப் பக்கம் வந்த ராகுலைப் பார்த்து யானை பலம் வந்தமாதிரி இருந்தது.

    இப்போது போலில்லை. அப்போதெல்லாம் மாணவர்களுடன் மாணவிகள் சகஜமாகப் பேசும் வழக்கம் எல்லாம் கிடையாது.

    ஆனால் இப்போது இருக்கும் அவசர நிலையில் பேசத்தான் வேண்டும். ஆனால் என்ன சொல்வது... வார்த்தைகளை எப்படிக் கோப்பது? பாட்டி சொல்லித்தந்த தைரியம் துணைநிற்க அவள் தொண்டையைச் செருமிக் கொள்ளவும் அவன் அநாயாசமாக நிலைமையைப் புரிந்து கொண்டு சமாளிக்கவும் சரியாக இருந்தது.

    மிஸ் மானசா... நீங்க இங்கயா இருக்கீங்க? மேம் உங்களைத் தேடறாங்க... எழுபத்தி ஆறில் இருக்காங்க. இதில் நான் உட்காரணும். மொத்தமாய்த் தொடர்ந்து அறுபது சீட்களும் நமக்குத்தான். நம்மில் யார் வேணும்னாலும் எங்கு வேணும்னாலும் உட்காரலாம். என்னை 33க்குப் போகச் சொல்லிட்டாங்க... அதாவது உங்க சீட்டுக்கு…சரமாரியாக ஏதோ சொல்லியவாறு அவளை எழுந்திருக்கச் சொல்லி அவன் அமர….

    சட்டென்று அந்த வம்புக்கார ஆசாமி நகர்ந்துவிட்டான். அந்தச் சூழலில் அங்கிருக்கவே பயந்த ஒரு சினேகிதி நான் மேம் கிட்டதான்பா உட்காருவேன்என்று ஓடிவிட அங்கிருந்த பதினாறு பெண்களுக்குப் பாதுகாவலாக ராகுல் உட்கார வேண்டும் என்று மேடம் முடிவெடுத்ததன் பேரில் அந்த சென்னையை நோக்கிய பயணம் அவளைப் பொருத்தவரையில் சொர்க்கத்தை நோக்கிய பயணம்போல் அமைந்தது.

    அவன் தண்ணீர் பாட்டிலைத் தேடியபோது அவள் தன் பாட்டிலின் மூடியை அவசரமாகத் திறந்து அவனை நோக்கி நீட்டியபோதும், அதற்கு அவன் மிகச் சாதாரணமான நன்றி சொன்ன விதமும் அவள் பெர்த்தில் குளிரில் முடங்கியபோது அவன் பொறுப்புணர்வுடன் தன்னிச்சையாய்த் தன் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டபோது கூச்சத்தின் காரணமாகத் தூங்குவதுபோல் நடித்த போதும் எல்லோரும் தூங்கிய பிறகும் அவன் மட்டும் சின்னஞ்சிறு டார்ச் வைத்துக் கொண்டு சுந்தர ராமசாமியைப் படித்தபோது தானும் அந்தப் புத்தகத்தின் ரசிகை எனறு சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எழுந்து உட்கார, தூங்கலையா மிஸ் மானசி?என்று கேட்க அவள் வெட்கத்துடன் மறுபடியும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தபோதும்… அந்தப் பயணம் அப்படியே நீண்டு பலப்பல ஆண்டுகள் தொடராதா என்று அவள் மனதில் பேராசை மூள்வதற்குள் மெட்ராஸ் சென்ட்ரலில் வண்டி நிற்க…

    அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். கருத்தரங்கத்தில் அவனும் அவளும் இவர்களின் கல்லூரியில் சார்பில் கலந்து கொள்ளப் போகிறார்கள். பிறகென்ன!

    மனசுக்குள் சின்ன சந்தோஷத்துடன் மெட்ராஸ் (ஆம். அந்தக் காலத்தில் அதன் பெயர் சென்னை அல்ல) ஸ்டேஷனில் இறங்கிபோது தன்னைக் கடந்து போன யாரோ கொண்டு சென்ற டிரான்ஸிஸ்டரில் அந்தப் பாட்டுப் பாடியது!

    இவளுக்கு மிகப் பிடித்தமான (அப்போதே) பழைய பாட்டு.

    காதல் என்னும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்

    கேட்கக் கேட்க அந்தக் கதாநாயகியின் உற்சாகத் துள்ளல் மனசுக்குள் பரவியது. எதற்குமே மனசுதானே காரணம்? பார்க்கும் காட்சி அனைத்திலும் கேட்கும் ஒலி எல்லாவற்றிலும் சந்தோஷம் நிரம்பி வழிந்தோடியது,

    அதுதான் தப்பாய்ப் போயிற்று. நடை நாட்டியமாயிற்று. எதிரில் வேகமா டிராலி தள்ளிக்கொண்டு வந்த வடநாட்டு மனிதர் ஒருவர் இவள் தடுமாறிய நடையைப் பார்த்து பயந்து இடம் போவதா வலம் போவதா என்று தீர்மானிக்க இயலாமல் குழம்ப இவள் பிரமை பிடித்தவள்போல் நடக்க, அந்த டிராலிக்காரர் சமாளிக்க இயலாதவராக நேராக இவள் மீதே கொண்டு வந்து மோத...

    அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1