Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிமிஷத்துக்கு நிமிஷம்
நிமிஷத்துக்கு நிமிஷம்
நிமிஷத்துக்கு நிமிஷம்
Ebook148 pages37 minutes

நிமிஷத்துக்கு நிமிஷம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மானேஜிங் டைரக்டர் ரூமிலிருந்து கையில் பைலோடு வெளிப்பட்ட சுசீந்திரனை ஆபீஸ் ஹெட் கிளார்க் நாயுடு கையசைத்துக்
 கூப்பிட்டார்.
 "சுசீந்திரன் உனக்கு போன்...?"
 "போன்ல யார் ஸார்...?" ஹெட் கிளார்க் நாயுடு அவனை முறைத்துப் பார்த்தார்.
 "நம்ம ஆபீஸ் டெலிபோன்ல இன்னும் டெலிவிஷன் ஸ்க்ரீன் ஃபிக்ஸ் பண்ணலை... பண்ண பிறகு பார்த்துச் சொல்றேன்..."
 சுசீந்திரன் சிரித்தான்.
 "என்ன நாயுடு சார்... வீட்ல் மிஸஸ் கூட ஏதாவது மனஸ்தாபமா...? காலையிலிருந்தே புர்புர்ன்னு உறுமறீங்க...? சாயந்தரம் வீட்டுக்கு வந்து சமாதானம் பண்ணட்டுமா...?"
 "நீ ஒண்ணையும் பண்ண வேண்டாம்... மொதல்ல ரிஸீவரை எடுத்து பேசு... பாவம் அந்தப் பொண்ணு ரொம்ப நேரமா லைன்ல காத்திட்டிருக்கா..."
 "போன்ல பேசறது பொண்ணா...? அதை நீங்க மொதலிலேயே சொல்ல வேண்டாமா நாயுடு. ஸார்...? அய்ய்யோ... ஒரு நிமிஷம் வேஸ்டா போச்சே..."
 மேஜையை தாண்டி குதித்து நாற்காலி டர்ரென்று இழுத்து விட்டுக் கொண்டு எதிரே வந்த ப்யூன் டேவிட்டை தள்ளிக் கொண்டு ஒரு பெருமூச்சோடு போய் ரிஸீவரை எடுத்தான் சுசீந்திரன்.
 "ஹலோ... மாலதியா...?"

......."
 "ஹலோ... சந்திராவா...?"
 "......."
 "இதென்னடா வம்பாப் போச்சு...? மாலதியும் இல்லே... சந்திராவும் இல்லேன்னா வேற யாரு... போன மாசம் பூரா நான் வேறு யாரையும் புதுசா லவ் பண்ணலையே?"
 மறுமுனையில் குரல் கேட்டது.
 "உதைப்பேன்..."
 "அட... பத்மா... நீயா...?"
 "அய்யாவுக்கு மாலதியும் சந்திராவும் வேணுமோ...?"
 "சும்மா தமாஷ்..."
 "தெரியும்... புறப்பட்டு வர்றீங்களா?"
 "தேவியார் எந்த இடத்தில் எழுந்தருளியுள்ளார்கள்...?"
 "காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்... நவீன கட்டணக் கழிப்பிடத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு மோசமான டெலிபோன் பூத் அருகே வர்றீங்களா...?"
 "இதோ புறப்பட்டேன்..."
 ரிஸீவரை வைத்துவிட்டு ஹெட் கிளார்க் நாயுடுவிடம் வந்தான் சுசீந்திரன்.
 "ஸார்...?"
 நாயுடு கோபத்தோடு நிமிர்ந்தார்.
 "என்ன?"
 "ரெண்டுமணி நேரம் பர்மிஷன் வேணும் ஸார்..."எதுக்கு...?"
 "என்னோட சித்தப்பாவுக்கு உடம்பு ரொம்பவும் முடியலையாம். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம். சின்னம்மா போன் பண்ணிச் சொன்னாங்க..."
 "சித்தப்பாவா...?"
 "ஆமா..."
 "உங்கப்பா கூட பிறந்தவங்க யாரும் இல்லேன்னு ஏற்கனவே ஒரு தடவை நீ என்கிட்ட சொல்லியிருக்கே... இப்போ எங்கேயிருந்து வந்தார் இந்த திடீர் சித்தப்பா..."
 "ஸ்...ஸ்...ஸார்... அது வந்து ஒரு அசிங்கமான விஷயம். சொல்லலாமா...?"
 "சொல்லு..."
 "என்னோட தாத்தா யார்க்கும் தெரியாமே கொருக்குப் பேட்டையில ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணி ரொம்ப காலமா பரிபாலனம் பண்ணிட்டிருந்தார். அப்போ பிறந்தவராம் இந்த சித்தப்பா... எனக்கு மொத்தம் ஏழு சித்தப்பா ஸார்... அதுல மூணு பேர் சின்ன சித்தப்பா..."
 "சின்ன சித்தப்பாவா...?"
 "ஆமா... ஸார்... கடைசி மூணு சித்தப்பாவுக்கு என்னோட வயசைக் காட்டிலும் கம்மி... நான் அவங்களை சின்ன சித்தப்பான்னுதான் கூப்பிடுவேன். அது தவிர பெரிய சித்தப்பான்னு ஒருத்தர் மலேயாவில் தேக்கு வியாபாரம் பண்ணி..."
 "பேசாதே...! இன்னிக்கு மத்தியானம் பூராவும் நீ வராதே! உன்னோட ஏழு சித்தப்பாவையும் கொஞ்சிட்டு தாராளமா வா..."
 "தேங்க்யூ ஸார்...

சுசீந்திரன் கிளம்பினான். தன்னுடைய டேபிளுக்குப் போய் ஹெல்மெட்டை பொறுக்கிக் கொண்டான். வெளியே ஆபீஸ் ஷெல்டரில் காத்திருந்த ஸ்கூட்டரை உதைத்து உயிரூட்டி ஐந்தே நிமிஷத்தில் காந்திபுரம் வந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223551690
நிமிஷத்துக்கு நிமிஷம்

Read more from Rajeshkumar

Related to நிமிஷத்துக்கு நிமிஷம்

Related ebooks

Related categories

Reviews for நிமிஷத்துக்கு நிமிஷம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிமிஷத்துக்கு நிமிஷம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஏராளமான புகையோடும், அழுக்கோடும் வந்து நின்ற கூடலூர் பஸ்ஸிலிருந்து சோர்வாய் இறங்கினார்கள் வெங்கடேஷம் பத்மாவும்.

    அந்த மத்தியான நேரத்திலும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சுறுசுறுப்பாய் இருந்தது. ஜனங்கள் மூட்டை முடிச்சுகளோடு விதவிதமான பஸ்களில் அடைபட்டுக் கொண்டிருந்தார்கள். டேப் ரிக்கார்டர் வைத்த திருப்பூர் பஸ்ஸிலிருந்து மன்மதராசா... மன்மதராசா... என்று பாட்டு பீறிக் கொண்டிருக்க... பஸ் ஓரமாய் நின்றிருந்த கண்டக்டர் தோல் பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு - வாயில் பீடியை வைத்துக் கொண்டு சோமனூர்... அய்யற்கோயில்... திருப்பூர்... என்று கத்திக் கொண்டிருந்தார். டிரைவர் ஷெல்டர்க்கு கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பக்கத்து புஸ்தகக் கடையிலிருந்து ஓசி வாங்கிய ‘பக்கத்து வீட்டு பைங்கிளி' என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலிருந்து அப்ஸரா தியேட்டரில் ஹவுஸ் புல் போர்டு தொங்க டிக்கட் கிடைக்காதவர்கள் சந்தோஷமாய் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

    வெங்கடேஷும், பத்மாவும் பஸ் ஸ்டாண்டை தாண்டினார்கள்.

    அண்ணா... பத்மா கூப்பிட்டாள்.

    என்ன பத்மா...?

    நாலு மணிநேரம் அந்த ஓட்டை பஸ்ஸுல வந்தது... ஒரே தலைவலி... கெளரி சங்கர்ல காபி சாப்பிட்டு போலாமேண்ணா...

    "உனக்கு காப்பி சாப்பிடணும் அவ்வளவுதானே... வா... போலாம்... வெங்கடேஷ் ரோட்டின் பக்கவாட்டில் தெரிந்த கெளரி சங்கர் கட்டிடத்தை நோக்கிப் போனான். பத்மா தொடர்ந்தாள். அவளுடைய நெற்றிப் பொட்டின் இரண்டு பக்கங்களிலும் முக்கியமான நரம்புகள் வலியில் பம்மிக் கொண்டிருந்தன. ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். சுவரோர மேஜையை தேர்ந்தெடுத்து - போய் உட்கார்ந்தார்கள்.

    ஏதாச்சும் சாப்ட்றியா பத்மா...?

    வேண்டாண்ணா... காப்பி மட்டும் போதும்... வந்து நின்ற வெயிட்டரிடம் இரண்டு காப்பி..." என்றான் வெங்கடேஷ்.

    வெயிட்டர் காப்பி கொண்டு வருவதற்குள் வெங்கடேஷ் பத்மாவைப் பற்றி சொல்ல வேண்டும்.

    வெங்கடேஷுக்கு வருகிற பிப்ரவரி ஏழாந்தேதி வந்தால் முப்பது வயது முடிகிறது. வயசுக்கேற்ற உடம்பு வாகு இல்லாமல் கெச்சலாக இருந்தான். மாநிறம். அந்த முப்பது வயசிலே தலை முன்பக்கம் மயிர் மெலிந்து வழுக்கையை வாங்கியிருந்தான். அப்பா, அம்மா இறந்த பிறகு அவர்கள் விட்டுச் சென்ற பத்மாவை வளர்த்து கோயமுத்தூர் காலேஜ் ஒன்றில் பி.எஸ்.ஸி. வரைக்கும் அவளைப் படிக்க வைப்பதற்குள் திணறிப்போனான்.

    வெங்கடேஷுக்கு உத்தியோகம் கூடலூர் டீ எஸ்டேட்டில் சூபர்வைஸர், எஸ்டேட் ஓனர் அற்புதராஜ், அடிமாட்டுத்தனமாய் அவனிடம் வேலைகளை வாங்கிக் கொண்டு மாசம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். கார்குடி போகும் ரோட்டில் - ஐந்நூறு ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருந்து நாட்களை தள்ளிக் கொண்டிருந்தான். படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் உட்கார்ந்திருக்கும் பத்மாவுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணத்தையும் முடிக்க வேண்டுமென்று ஆசைப்பட ஆரம்பித்திருந்தான். வாரத்தில் ஏதாவது ஒரு நாள் கோயமுத்தூர் வந்து தேயிலை வியாபாரிகளிடம் பணத்தை கலெக்ட் பண்ணிக் கொண்டுபோவது வெங்கடேஷின் உத்யோகத்தில் ஒரு அங்கம்.

    பத்மாவுக்கு ஓட்டுப் போடும் வயது. செத்துப்போன அம்மாவின் தாழம்பூ நிறம் அவளுக்கு. எந்தக் கோணத்தில் உட்கார்த்தி வைத்துப் பார்த்தாலும் அழகாகத் தெரிவாள். அண்ணன் வெங்கடேஷின் மேல் அபார பாசம். பி.எஸ்.ஸி. டிகிரியை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழிப்பவள். சில சமயங்களில் கோபம் வந்து என்னை ஏண்ணா... பி.எஸ்.ஸி. படிக்க வெச்சே... படிக்க வெக்காம இருந்திருந்தாவது தலையில கூடையை கவுத்துக்கிட்டு தேயிலை பறிப்புக்கு போயிருப்பேன்... இப்போ படிச்சுட்டு அதுக்கும் போக முடியலை. வேலையும் கிடைக்கலை என்று புலம்புவாள். அண்ணன் வெங்கடேஷ் கோயமுத்தூர் வரும்போதெல்லாம் நானும் உன் கூட வர்றேண்ணா. நீ கலெக்ஷனை முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே நான் என்னோட ப்ரெண்ட் சுசீயைப் பார்த்துட்டு வந்துடறேன்" என்று சொல்லிக் கிளம்புவாள்.

    சர்வர் காப்பியோடு வந்தான். ஒரு காப்பியை தன் பக்கமாக நகர்த்தி வைத்துக் கொண்ட வெங்கடேஷ் டபராவை டம்ளரினின்றும் பிரித்து காப்பியை ஆற்றிக் கொண்டே கேட்டான்.

    பத்மா... உன்னோட ப்ரெண்ட் சுசீயைப் பார்த்துட்டு எத்தனை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வருவே...? போனவாட்டி மாதிரி லேட் பண்ணிடக் கூடாது.

    பத்மா தன் மணிக்கட்டிலிருந்த வாட்சைப் பார்த்துவிட்டு புன்னகையோடு சொன்னாள்.

    அண்ணா... இப்போ மணி பதினொன்னு பத்து... சரியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடறேன்.

    அதுக்கு மேல லேட் பண்ணிடமாட்டியே?

    மாட்டேண்ணா

    வெங்கடேஷ் சிரித்தான்.

    ஏம்மா, பத்மா... நீ ஒவ்வொரு வாரமும் என் கூட வர்றப்போ அந்த தோழி சுசீயைப் பார்க்கப் போறே... ஆனா அந்தப் பொண்ணு ஒரு தடவை கூட நம்ம ஊருக்கு வந்ததில்லையே... ஏம்மா...?

    பத்மா காப்பியை ஒரு வாய் உறிஞ்சிவிட்டு சொன்னாள்.

    "நான்தான் ஏற்கெனவே உனக்கு சொல்லியிருக்கேனே

    Enjoying the preview?
    Page 1 of 1