Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அதே நிலா! அதே கலா!
அதே நிலா! அதே கலா!
அதே நிலா! அதே கலா!
Ebook157 pages37 minutes

அதே நிலா! அதே கலா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாயந்தரம் ஆறுமணி.
 பார்த்துக் கொண்டிருந்த ஆபீஸ் ஃபைலை மூடி வைத்துவிட்டு பீறிட்டு வந்த கொட்டாவியை மென்று விழுங்கி இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்த கலாவை இன்டர்காம் தன் எலக்ட்ரானிக் மொழியில் விளித்தது.
 எடுத்தாள்.
 மறுமுனையில் மேனேஜர்... அனந்தசயனம்.
 "ஸார்...!"
 "கலா...! ஒரு நிமிஷம் என்னோட ரூம் வரைக்கும் வந்துட்டுப்போ...''
 "இதோ வர்றேன் ஸார்..." ரிஸீவரை வைத்துவிட்டு தன் முன் வரிசைப் பற்களைக் கடித்தாள் கலா. அவளுடைய அழகான முகத்தில் கோபச் சிவப்பு பௌடர் தீற்றிக் கொண்ட மாதிரி தெரிந்தது.
 யோசித்தாள்.
 'வீட்டுக்கு புறப்பட்டுப் போகும் நேரத்தில் இந்த அரைக்கிழடு எதற்காக கூப்பிடுகிறது...?'
 எழுந்து போனாள்.
 ஆபீஸ் மொத்தமும் காலியாகிவிட்டிருக்க, இரண்டொருத்தர் மட்டும் கம்ப்யூட்டரில் கவனமாய் இருந்தார்கள்.
 கலா முதல் மாடியில் இருந்த மேனேஜர் ரூமுக்கு முன்பாய்ப் போய் நின்றாள். கதவைத் தட்டும் முன்பே உள்ளேயிருந்து அனந்த சயனத்தின் குரல் குழைவாய் வெளிப்பட்டது"வாம்மா... கலா...!''
 கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள். நாற்பது வயது அனந்த சயனம் எக்ஸிக்யூட்டிவ் நாற்காலியில் ஒரு அரைவட்டம் போட்டுக் கொண்டே "வாம்மா" என்றார்.
 "குட் ஈவினிங் ஸார்..."
 ''நிஜமாவே இது உனக்கு குட் ஈவினிங் தான்!
 உட்காரம்மா..."
 கேள்விக் குறியோடு உட்கார்ந்தாள்.
 "என்ன ஸார்...?"
 "ஹெட்டாபீஸிலிருந்து ஃபேக்ஸ் மெஸேஜ் இப்பத்தான் வந்தது. ஆபீஸ்ல லோன் கேட்டிருந்தியே...?"
 "ஆமா ஸார்..."
 "ஸாங்க்க்ஷன் ஆயிடுச்சு..."
 கலா ஒரு பெரிய சூர்யகாந்திப் பூவைப்போல் மலர்ந்தாள்.
 "நி... நிஜமாவா ஸார்...?"
 "நிஜமோ நிஜம்... இந்தா ஃபேக்ஸ் ந்யூஸ். நீயேபடி...!"
 அவர் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்துப் பார்த்து விட்டு "தேங்க்யூ... வெரிமச் ஸார்..." என்றாள்.
 ''உனக்கு இந்த லோன் ஸாங்க்ஸனாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா...? ஏ.ஜி.எம்மை நேர்ல பார்க்கும் போதெல்லாம் சொல்லியிருக்கேன்..."
 ''ரொம்ப தேங்க்ஸ் ஸார்..."
 "வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா...?"
 "வேற என்ன வேணும் ஸார்...?""ட்ரீட்..."
 ''ட்ரீட் தானே...? லோன் அமவுண்ட்கைக்கு வரட்டும் ஸார். ஆபீஸ்ல இருக்கிற மொத்த ஸ்டாஃப்ஸுக்கும் எஸ்.கே.சி. கொடுத்துடலாம்..." "எஸ்.கே.சி...?"
 "ஸ்வீட், காரம், காஃபி ஸார்..."
 ''மத்தவங்களுக்கு எஸ்.கே.சி. கொடுத்துக்க. எனக்கு தனியா ஸ்பெஷலா ட்ரிட் வேணும்... அதுவும் வீட்ல.''
 "வீட்லயா...?"
 "ம்...! இந்த வாரத்துல ஏதாவது ஒரு ராத்திரியைச் சொல்லு. வர்றேன்...''
 "ஸார்... அது... வந்து...''
 "உன்னோட தயக்கம் எனக்குப் புரியுது. உன் புருஷன் தப்பா நினைச்சுக்குவாரோன்னு பயப்படறே! அப்படித்தானே?"
 "ஆமா ஸார்..."
 "அவர் வீட்ல இருக்கும் போது கூப்பிடாதே...! அவர் ஒரு கம்பெனியில் ஸேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வா வேலை பார்க்கிற விஷயம் எனக்குத் தெரியும். வாரத்துல மூணுநாள் எப்படியும் அவர்க்கு டூர்ப்ரோக்ராம் இருக்குமே...? அந்த மாதிரியான சமயங்களில் என்னைக் கூப்பிடேன்..."
 கலா யோசித்துக் கொண்டு நிற்க - அனந்த சயனம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 31, 2023
ISBN9798223861249
அதே நிலா! அதே கலா!

Read more from Rajeshkumar

Related to அதே நிலா! அதே கலா!

Related ebooks

Related categories

Reviews for அதே நிலா! அதே கலா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அதே நிலா! அதே கலா! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    தியேட்டரில் படம் முடிந்து மக்களோடு மக்களாக வெளியே வந்தான் இன்பசாகர். இரண்டரை மணி நேர அந்தத் தமிழ் சினிமா அவனுடைய நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு டன் தலைவலியை நிரப்பி வைத்திருந்தது. நேரம் நள்ளிரவு 12.15.

    ‘சே...! என்ன படம் எடுக்கிறாங்க...! பண்ணையார். ஆலமரம்... பஞ்சாயத்து... மேல் ஜாதி... கீழ் ஜாதி, கண்ணில்லாத அம்மா... நொண்டி அப்பா... வேலை கிடைக்காத அண்ணன், கல்யாணமாகாத தங்கச்சி, வில்லன் மகளையே காதலிக்கிற கதாநாயகன்...!’’

    இன்பசாகர் சலித்துக் கொண்டே கார் பார்க்கிங்கிற்கு வந்தான். அவனுடைய மாருதி ஜென்பனியில் நனைந்து ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல் தெரிந்தது.

    காருக்குள் நுழைந்து ட்ரைவிங் இருக்கைக்கு சாய்ந்து. இக்னீஷியனை கனைக்க வைக்க முயன்ற விநாடி இன்பசாகரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் ‘பிபிர்ர்ர்’ என்றது.

    எடுத்தான்.

    ஹலோ...

    மறுமுனையில் அவனுடைய அப்பா... பார்த்தசாரதி.

    இன்பசாகர்...

    அப்பா...

    இப்போ எங்கே இருக்கே...?

    சினிமா தியேட்டர்ல...

    எந்த தியேட்டர்...?

    "ராகம்...’’

    "சரி... நீ... நேரா... நம்ம ஃபேக்டரிக்கு போ... நானும் ஒரு மணி நேரத்துக்குள்ளே அங்கே வந்துடறேன்.’’

    ஏம்ப்பா...? என்ன விஷயம்...?

    "ஃபேக்டரியில் மறுபடியும் லேபர் ப்ராப்ளம். ரெண்டு கோஷ்டியும் மோதிக்கிற நிலைமை உருவாகியிருக்காம். எஃப்.எம் இப்பத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னார்...’’

    இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு... ஃபேக்டரியை ஒரு ஆறுமாசத்துக்கு இழுத்து மூடினாத்தான் புத்தி வரும். நாளையிலிருந்து லாக் - அவுட் பண்ணிடலாம்பா...

    புரியாம பேசாதே இன்பசாகர்...! ஃபேக்டரியைலாக் அவுட் பண்ணினா கவர்ன்மெண்ட் பிரச்னையில் மூக்கை நுழைச்சுடும்... அதுக்கப்புறம். எல்லா பவர்ஸும் கவர்ன்மெண்ட்க்கு போயிடும்... நீயும் நானும் கைகளைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

    "சரி...! இப்ப என்ன ஸ்டெப் எடுக்கலாம்...?’’

    ‘‘நீ மொதல்ல ஃபேக்டரிக்கு வா...! இந்த செக்கண்ட் ஷோ சினிமா பார்க்கிற வழக்கத்தை நீ என்னிக்குத் தான் விடப்போறியோ...?" பார்த்தசாரதி கோபமாய்ப் பொரிந்துவிட்டு ரிஸீவரை வைத்துவிட இன்பசாகர் செல்ஃபோனை அணைத்துவிட்டு காரின் இக்னீஷியனுக்கு உயிர் கொடுத்தான்.

    பீட்ரூட் நிற மாருதிஜென் நகர்ந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்து சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்த ரோட்டின் விஸ்தாரத்துக்கு வந்தது. வரிசையாய் நின்றிருந்த ஆட்டோக்கள் பயணிகளை விழுங்கி நகர்ந்து கொண்டிருந்தன. ரோட்டோர பானிபூரி ஸ்டால் ஒன்று பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஒரு ஹாஸ்பிட்டலின் எமர்ஜென்ஸி வார்டு மாதிரி இயங்கிக் கொண்டிருந்தது.

    இன்பசாகர் காரை செஷன்ஸ் கோர்ட் வளைவில் திருப்பினான்.

    சாலையின் வளைவில் கொட்டியிருந்த இருட்டில் கரைந்து மறைந்திருந்த ஒருவன் கையை அசைத்தபடி வேக வேகமாய் வந்தான்.

    கார் நின்றது.

    இன்பசாகர் எட்டிப் பார்த்து கைலி, வெள்ளை சர்ட் அணிந்த அந்த பரட்டைத் தலையனைப் பார்த்துக் கேட்டான்.

    "என்ன தேசிங்கு...?’’

    ‘‘அயிட்டம் ரெடி ஸார்...! டாக்ஸியில் உட்கார வெச்சிருக்கேன். நீங்க அப்படி இருட்டுல போய் வண்டியை ஹால்ட் பண்ணிக்குங்க. அஞ்சே நிமிஷத்துல் அனுப்பி வைக்கிறேன்...’’

    ‘‘இன்னிக்கு வேண்டாம் தேசிங்கு...’’

    "ஏன் ஸார்...?’’

    ‘‘வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு...! செல்ஃபோனை ஆஃப் பண்ண மறந்துட்டேன். அப்பா பிடிச்சுட்டார். ஃபேக்டரியில் ஒரு பிரச்னை. அவசரமா புறப்பட்டு போய்க்கிட்டு இருக்கேன்...’’

    "என்ன ஸார்... இப்படி பண்ணிட்டீங்க...? உங்களுக்காக நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாலக்காடு போய் வெய்யில்ல அலைஞ்சு பார்ட்டியை தேடிக் கண்டுபிடிச்சு கன்வின்ஸ் பண்ணி... பஸ்ல வந்தா பிரச்னைன்னு சொல்லி ஒரு டாக்ஸியை வெச்சுக்கிட்டு...’’

    இன்பசாகர் கையமர்த்தினான்.

    பேசாதே...! பணம் எவ்வளவு செலவு பண்ணியிருக்கே? சொல்லு...!

    "ரெண்டாயிரம்...’’

    ‘‘வாங்கிக்க..." சொன்ன இன்பசாகர் தன் பர்ஸைப் பிரித்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்ட தேசிங்கு முகமெல்லாம் பல்லானான்.

    ‘‘செம பார்ட்டி ஸார்...! மிஸ் பண்றீங்களே...?’’

    ‘‘அடுத்த சண்டே பார்த்துக்கலாம்...’’

    இன்பசாகர் காரை நகர்த்தி சர்க்யூட் ஹவுஸ் ரோட்டில் வேகம் எடுத்தான்."

    ‘செல்ஃபோனை ஆஃப் பண்ணி வைத்து இருக்க வேண்டும்...!’

    ‘அப்பா இப்படி கூப்பிடுவார் என்று யாருக்குத் தெரியும்...?’

    ‘ரெண்டாயிரம் ரூபாய் தண்டம்...!’

    மூளையை ராவிக் கொண்டிருந்த யோசனைகளுடன் காரை விரட்டிக் கொண்டிருந்த இன்பசாகர் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் உணர்வு தட்டவே சட்டென்று திரும்பிப் பார்க்க முயன்றான். பின்பக்கம் இருந்து குரல் கேட்டது.

    ஆண்குரல்.

    ‘‘திரும்பாதே இன்பசாகர்...! காரை அப்படியே ஓட்டிக்கிட்டு இரு...’’

    Enjoying the preview?
    Page 1 of 1