Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttrala Kolai Season
Kuttrala Kolai Season
Kuttrala Kolai Season
Ebook60 pages46 minutes

Kuttrala Kolai Season

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Kuttrala Kolai Season

Read more from Arnika Nasser

Related to Kuttrala Kolai Season

Related ebooks

Related categories

Reviews for Kuttrala Kolai Season

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttrala Kolai Season - Arnika Nasser

    10

    1

    ஏ.சி. ரூம் கதவை உள் தள்ளி, எக்ஸ்க்யூஸ்மீ சார்... என்றேன். உதவி ஆசிரியர்களின் தேர்வுக்குப் பின் இறுதி முடிவாக தன்னிடம் வந்திருக்கும் கதைகளைப் படித்துக் கொண்டிருந்த சீஃப்-எடிட்டர் சங்கரலிங்கம் நிமிர்ந்தார். என்னைப்பார்த்து வசீகரப் புன்னகைபுரிந்தார்.

    வாடா ராஜ்குமார் வா... உரிமையாய் வரவேற்றார்.

    ஒக்காரு... அமர்ந்தேன். சட்டைப் பாக்கெட்டிலிருந்து டிட்பிட்ஸ் டப்பாவை எடுத்து ஒன்றிரண்டு பச்சை வில்லைகளை வாய்க்குள் ஹைஜம்ப் செய்ய வைத்தேன். வறண்ட வாய்ப்பிரதேசம் புது சுகம் பெற்றது.

    ஏண்டா கண்ணா! குற்றாலம் பாத்திருக்கியா?

    ஏன் சார்?

    ச்... சொல்லுப்பா...

    சின்ன புள்ளைல பாத்திருக்கிறேன்.

    அப்ப... நாளைக்கி நைட் குற்றாலம் புறப்படற...

    எதுக்கு?

    கேள்வியைக் குறை. நீ என்ன ராஜீவா? 30 நாள் குற்றாலத்தில் இரேன். இங்கு உன் ராஜ்ஜியம் பத்திரமாவிருக்கும்...

    நோ மோர் ஜோக்ஸ். இந்த டியாரா ராஜ்குமாரின் தொடர் கதைகள் நான்கு பத்திரிகைகள்ல வந்திட்டிருக்கு. அங்க போய் ஒரு மாசம் டேரா போட்டா என்ன ஆவுறது?

    ஒண்ணும் ஆவாது. தபால்ல அனுப்பு. வருஷம் முழுதும் மண்டை காய்ஞ்சுபோய்க் கெடக்குற, பாவம் விடலைப் பய... இப்ப நல்ல சீசன் ஆச்சே... போய் ஜாலியா குளிச்ச மாதிரியும் இருக்கும்.... வகைக்கு ஒரு பொண்ணா பாத்த மாதிரியும் இருக்கும்னு நெனச்சா ரொம்பத்தான் பிகு பண்றியே.... சரி வுடு உனக்கு அதிர்ஷ்டமில்லே... நான் போறேன்.

    ...வகைக்கு ஒரு பொண்ணா... வாக்கியம் என் மனதில் தேள் கடி டான்ஸ் செய்தது!

    ஓ.கே சார்! உங்க வார்த்தைக்காக குற்றாலம் போறேன். தங்குறதுக்கு எடம்?

    புலி அருவிக்குப் போற வழியில என் ப்ரண்டோட பங்களா இருக்கு. என் ப்ரண்ட் பையன் நரேன் அங்கதான் இருக்கான். நல்லா உனக்குக் கம்பெனி குடுப்பான். நான்வெஜ் ப்ரிபேர் பண்ண நல்ல குக்கும் இருக்கான். போய் ஜமாய்...

    என்மேல உங்களுக்கு எவ்வளவு காதல்? ம்... உங்களுக்கு ஒரு மக இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்? ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹனிமூனுக்கு குற்றாலம் என்ன காஷ்மீரே போயிருக்கலாம் உங்க தலையைத் தடவி...

    குடுக்கலாம். ஆனா பொண்ணு இல்லியே... இப்பவும் என் ஒய்ப் அது தான் உன்மாமியார் ஒத்துழைச்சா உனக்கு பொண்ணு பெத்துத்தரத் தயார். அதுவரைக்கும் நீ பொறுத்துப்பியா?

    அய்யய்யோ... நம்பளால முடியாது.

    கம் டு தி பாய்ன்ட் மை பாய், அக்கவுண்ட் செக்ஷன் போய் உனக்குத் தேவைப்படுற பணத்தை வாங்கிட்டுப் போ. அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட்... குற்றாலம் பின்னணியில ஒரு க்ரைம் நாவல் ரெடி பண்ணு...

    ஓகே சார்! எழுந்தேன். எழுந்தார். கை நீட்டினேன். கை குலுக்கினார்.

    ஹாவ் எ நைஸ் டைம் மை பாய்...

    ‘மகாலட்சுமி மகளிர் கல்லூரி, எம்.எஸ்.சி. பாட்னி ஸ்டூடன்ஸ் ஸ்டடி டூர்’ பானரை ஆபரேஷன் தியேட்டர் டாக்டர் போல முகத்தில் கட்டிக் கொண்டு அந்த டீலக்ஸ் பஸ் குற்றாலம் நோக்கி 70 கிலோ மீட்டர் வேகத்தில்...

    உள்ளே....

    48x21 வயது பெண்கள். 1x54 வயது புரபசர் கிழவி. 1x18 வயது கிளினர். 1x45 வயது டிரைவர்! ரத்னா மெதுவாக முன் சீட்டுக்காரியைச் சொரண்டினாள்.

    மல்லிகா! மில்லிகா! கொல்லிகா!

    "என்னடி

    Enjoying the preview?
    Page 1 of 1