Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jenmam
Jenmam
Jenmam
Ebook73 pages28 minutes

Jenmam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹனிமூன் கொண்டாட செல்லும் ஓர் இளம் ஜோடியை துரத்துகிறது ஒரு ஆவி. அதன் பின்னணி குறித்து ஆராய்ந்ததில் அது ஜென்மங்களாய் தொடர்வது தெரிகிறது. ஜென்மங்களாய் தொடரும் ஆவி சோழர்களின் ஆட்சியில் கழுவேற்றப்பட்டதால் வெறிகொண்டு அலைகிறது. இளம் தம்பதியர் தப்பித்தார்களா? விடை சொல்கிறது ஜென்மம்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507232
Jenmam

Read more from Gavudham Karunanidhi

Related to Jenmam

Related ebooks

Related categories

Reviews for Jenmam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jenmam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    ஜென்மம்

    Jenmam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    உறையூர்.

    எல்லோருடைய இல்லங்களிலும் வாழையும், மஞ்சள் கொத்துக்களும், மாவிலைத் தோரணங்களும் அலங்கரித்தன. விஜயாலய சோழமன்னன் மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததை நாடெங்கும் மக்கள் கொண்டாடினர். மன்னனின் ஆட்சியில் குற்றங்கள் குறைந்தன என்று சொல்வதை விடவும் குற்றங்களே இல்லாமல் போயின என்று கூறும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அதற்கு காரணம் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள். அதில் கழுவேற்றுதல் குறிப்பிட்டு சொல்லலாம். கழுவேற்றலைப் பார்க்கும் எவருக்கும் மீண்டும் குற்றம் செய்யும் எண்ணமே வராது.

    எனக்கு அச்சமாக இருக்கிறது. நானில்லை இந்த விளையாட்டிற்கு…

    வீரசேனன் கூற,

    தாங்களா அப்படி கூறுவது? தங்கள் வீரம் இந்நாடறியும். போயும் போயும் ஒரு பெண்ணை சந்திக்க தயங்கலாமா?

    இளஞ்செழியன் இளநகை பூத்தவாறு சொல்ல வீரசேனன் யோசித்தான்.

    அதற்கல்ல… கயல்விழி நம் மன்னரின் அரசவைக் கவிஞரின் மகள். ஏதேனும் குழப்பம் ஆனால் மன்னரின் சினத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்…

    மற்றதெல்லாம் விடுங்கள்… உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா?

    எனக்கு மட்டும் பிடித்து என்னாகப் போகிறது?

    உங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டபின் மற்றோர் எல்லோரும் வாழ்த்த வேண்டியவர்கள் மட்டுமே…

    இளஞ்செழியன் தீர்மானமாய் சொல்ல வீரசேனன் யோசித்தான்.

    யோசிக்க வேண்டாம்… புறப்படுங்கள்…

    இளஞ்செழியன் கூற இரு மனதாக இருந்த வீரசேனன் கயல்விழியின் எழில் முகத்தையும் அதில் இழையோடிய புன்னகையையும் எண்ணியவன் அவன் அறியாமலேயே புரவியின் அருகில் செல்ல அது கனைத்தது. தயாரானது. வீரசேனன் ஏறிக்கொண்டான். இருட்டில் காற்றைக் கிழித்தபடி அவன் புரவியில் விரைந்ததைப் பார்த்த இளஞ்செழியன் கபடமாய் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

    2

    வருண்…

    திவ்யா பாத்ரூமில் இருந்து கூப்பிட,

    என்னப்பா?

    டி.வி பார்த்துக்கொண்டிருந்த வருண் கலைந்தான்.

    டவல் எடுத்துப் போடுங்க…

    குளிக்கப் போகும்போதே எல்லாம் எடுத்துக்க வேண்டியது தானே… என்று சொன்ன வருண்.

    அப்படியே வா… நான் தானே இருக்கேன்…

    சிரித்தான். வருண் திவ்யாவின் கரம் பிடித்து இரு மாதங்கள் ஆகின்றன. வருண் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். திவ்யா ஈரோட்டில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருணைக் கைபிடித்தவுடன் பணியை ராஜினாமா செய்துவிட்டாள். இருவரையும் பார்க்கும் எவரும் மீண்டும் அவர்கள் அறியாமல் பார்த்துவிட்டுப் போகும் அளவிற்கு ஒருவருக்கு நிகர் மற்றவர் கவர்ந்திழுப்பதில்.

    எடுத்துக் கொடுப்பா… விளையாடாத…

    திவ்யா சிணுங்கியபடி கேட்க வருண் மனதில் ஆசை கொழுந்து விட்டது.

    அப்படியே வா…

    வந்துடுவேன்…

    வாடின்னா…

    சொன்னவன் அவள் பாத்ரூமில் இருந்து வருவதை ஆவலுடன் பார்த்தான். பாத்ரூம் கதவைத் திறந்தபடி திவ்யா வெளியே வந்தாள். முழுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1