Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bathran
Bathran
Bathran
Ebook74 pages15 minutes

Bathran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்னைக் கொன்ற பத்ரனைப் பழிவாங்க அடுத்தடுத்த ஜென்மங்களில் பத்ரனை தேடுகிறது. அவனால் கொலை செய்யப்பட்ட கொள்ளையனின் ஆவி. பத்ரன் பழிவாங்கப்பட்டானா?

விஷால் அதிரடியில் அசத்தலான ஒரு ஹாரர் கதை பத்ரன்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507395
Bathran

Read more from Gavudham Karunanidhi

Related to Bathran

Related ebooks

Related categories

Reviews for Bathran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bathran - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    பத்ரன்

    Bathran

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    1946.

    மே 27ந் தேதி.

    கொல்லிமலைக் காடு.

    புரவியின் சத்தம்கேட்டு இருளன் நடுங்கினான். மீண்டும் கொள்ளையர்கள் வந்துவிட்டார்களோ?

    குடிசையின் தட்டியை நன்றாக சாத்திவிட்டு கட்டிலின் அடியில் பதுங்கினான்.

    வள்ளி அவனையே பார்க்க.

    புள்ள சீக்கிரம் நீயும் கட்டிலுக்கடியில் வா. அவங்க வந்தாங்கன்னா ஆபத்து.

    இருளன் சொல்ல வள்ளி விரக்தியாய் புன்னகைத்தாள்.

    இனிமே போறதுக்கு என்ன இருக்கு மச்சான்?

    வள்ளி கண்ணீருடன் கேட்க இருளன் கண்கலங்கினான்.

    அவளைப் பிடித்து கட்டிலின் அடியில் தள்ளினான்.

    அதே நேரத்தில் குடிசைக்கு வெளியே புரவி கனைக்கும் சத்தம் கேட்டது.

    இருளன் நடுங்கினான்.

    மீண்டும் அவர்கள் வந்தால்? நினைத்து பார்க்கவே முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.

    நீண்ட நேரமாக புரவி மட்டும் கனைக்க இருளனுக்குக் குழப்பமானது.

    தட்டியின் விரிசல் வழியே வெளியே பார்த்தான். புரவி மட்டும் இருந்தது. இல்லை அதன் மேல் யாரோ கவிழ்ந்திருப்பது தெரிய இருளன் தட்டியைத் திறந்து வெளியே வந்தான்.

    யாரென்று பார்த்தவன் அதிர்ந்தான்.

    பத்ரன்.

    மலை கிராமத்தின் காவல் படைத் தலைவன். ஆங்கிலேயர்களை காட்டிலிருந்து விரட்டியடித்தவன். பிரிட்டிஷ் அரசால் தேடப்பட்டுக் கொண்டிருப்பவன். இணையற்ற வீரன்.

    இருளன் அருகில் சென்று பார்த்தான். பத்ரன் உடம்பெங்கும் ரத்தக் காயங்கள் இருந்தது. அரைகுறையாய் நினைவிருந்தது.

    இருளன் பத்ரனை அப்படியே தூக்கினான். குடிசைக்கு கொண்டு சென்றான். கட்டிலின் மீது படுக்க வைத்தான்.

    வள்ளி பத்ரனைப் பார்த்ததும் மலர்ந்தவள் அவன் நிலைமையைக் கண்டு கண்கலங்கினாள்.

    மச்சான் என்னாச்சு?

    தெரியல புள்ள குதிரை கொண்டு வந்திருக்கு.

    மச்சான் முதல்ல வெளியேப் போ. குதிரையைக் கொண்டு போய் வேற எங்கேயாவது கட்டு. அது காட்டிக் கொடுத்துடும்.

    வள்ளி சொல்ல இருளனுக்கு அப்போது தான் உறைத்தது. சட்டென்று வெளியில் வந்தான். குதிரை அங்கில்லை. பத்ரன் இருளனை எடுத்துக்கொண்டு குடிசைக்குள் போகும்போதே அது அங்கிருந்து புறப்பட்டிருந்தது.

    இருளன் குதிரையின் அறிவை எண்ணி வியந்தான்.

    வேகமாக உள்ளே ஓடியவன் தான் வைத்திருந்த பல வகையிலான பச்சிலைகளை அரைத்தான். களிம்பு போல் கொணர்ந்து பத்ரன் காயங்களின் மேல் பூசினான்.

    பத்ரன் இருளளைப் பார்த்து யார்? என்று கேட்டான்.

    சாமி ஒண்னும் பேசாதிங்க. நல்லாத் தூங்குங்க. சரியாய்டும்.

    மீண்டும் ஏதோ கேட்க வந்த பத்ரன் கண்கள் சொருகி அப்படியே தூங்கிப் போனான்.

    வள்ளி

    மச்சான்

    சாமி சரியாகணும்னா ஆடுதின்னாப்பாளை செடி வேணும். இப்ப நம்ம கிட்ட இல்ல.

    என்ன சொல்ற மச்சான்? இப்ப என்ன பண்றது?

    அறப்பளீஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிற மலையில நிறைய இருக்கு.

    மச்சான்

    நான் போய் கொண்டு வரேன் நீ சாமியப் பாத்துக்கோ.

    மச்சான்

    பயப்படாத புள்ள. போய்ட்டு சீக்கிரம் வந்திடுறேன்.

    "மச்சான் சாமியை தேடிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1