Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magic Thiruvizha
Magic Thiruvizha
Magic Thiruvizha
Ebook192 pages1 hour

Magic Thiruvizha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580111001596
Magic Thiruvizha

Read more from Arnika Nasser

Related to Magic Thiruvizha

Related ebooks

Reviews for Magic Thiruvizha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magic Thiruvizha - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    மேஜிக் திருவிழா

    Magic Thiruvizha

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    மேஜிக் திருவிழா

    அம்மாவுக்கு

    1

    அடையாறு கெனால் பேங்க் ரோடில் அமைந்திருந்தது அந்த பங்களா.

    ஒரு வக்கீல் நண்பரும், ஒரு டாக்டர் நண்பரும் நட்புடன் இணைந்து கட்டிக் கொண்ட பங்களா அது.

    வக்கீலின் பெயர் பாலகிருஷ்ணன். தரைத்தளம் முழுக்க அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும். பாலகிருஷ்ணனின் மனைவி பெயர் பத்மா. இரு மகன்கள். மூத்தவனின் பெயர் ஹேமந்த் குமார். இளையவனின் பெயர் பிரகாஷ்.

    ஹேமந்த்குமார் - ப்ளஸ்டூ படிக்கும் 17 வயது சிறுவன். வயதுக்கு மீறிய உயரம் கொண்டவன். ரைபிள் கிளப் உறுப்பினன். ஹீஸைனியிடம் டேக்வான்டோகராத்தே பயின்றவன். ஸ்கேட்டிங் செய்வதில் நிபுணன்.

    அவனது தம்பி பிரகாஷ் - ஒன்பதாவது படிக்கும் 14 வயது சிறுவன். கம்ப்யூட்டரில் பிரகாஷீக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருப்பான்.

    டாக்டர் நண்பருக்கு இரு மகள்கள்.

    சந்தியா, அருணா, இருவருமே பிரகாஷீடன், சேர்ந்து படிப்பவர்கள். வயது 14. ஹேமந்த் குமார் - பிரகாஷ் - சந்தியா-அருணாகூட்டணி தந்தைமார்களின் நட்பைவிட உறுதியானது.

    நால்வரும் சேர்ந்து பட்டர் ப்ளைஸ் டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்திருந்தனர். அலுவலகம் அவர்களது பங்களாவின் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்தது.

    இந்த நால்வர் டிடெக்டிவ் ஏஜன்சியின் தலைவன் ஹேமந்த்குமார் தான். ஏஜென்ஸி ஆரம்பித்த இந்த ஆறு மாதங்களில் நான்கு கேஸ்களை வெற்றிகரமாக துப்புத் துலக்கியுள்ளனர்.

    -நால்வரும் ஜீன்ஸ் டி-சர்ட்களில் காட்சியளித் தனர். ஹேமந்த் தனது மூன்று சகாக்களிடம் திரும்பினான். கிளம்புவோமா நண்பாஸ்?

    ஓ!

    ஹூண்டாய் காரில் ஏறிக் கொண்டனர். ஹேமந்த் தான் காரைச் செலுத்தினான்.

    கார் ரோஜா தனியார் டி.வி. வளாகத்துக்குள் பிரவேசித்தது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான கார்கள் ஒழுங்கில்லாமல் குழுமியிருந்தன. சிரமப்பட்டு ஒரு இடம் பிடித்து காரை நிறுத்தினான் ஹேமந்த்.

    நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் "டி.வி கட்டிடத்துக்குள் சென்று கொண்டிருந்தனர்.

    ரோஜா டிவி மேஜிக் திருவிழா எனும் சிறுவர் நிகழ்ச்சியை கடந்த 460 எபிஸோடுகளாகத் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது.

    மேஜிக் திருவிழா வாரத்துக்கு ஐந்து நாள் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சி. தமிழகத்தின் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்விட இதற்கு பார்வையாளர்கள் அதிகம். ஒரு மணி நேர நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியரைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும்.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான சிறுவர் சிறுமியர் விண்ணப்பிப்பர். அவர்களில் ஒரு எபிஸோடுக்கு ஐம்பது சிறுவரும், ஐம்பது சிறுமியரும் தேர்ந்தெடுக்கப்படுவர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் கட்டாயப் பரிசு உண்டு.

    மேஜிக் திருவிழாவைத் தொகுத்து வழங்கும் இளைஞனின் பெயர் சஜி. முப்பது வயது நிரம்பியவன்.அவனது முகத்தைப் பார்த்தால் நரசிம்மராவுக்கே சிரிப்பு வரும். படு பயங்கர அங்க சேஷ்டைகள் செய்வான்.

    நிகழ்ச்சி நடத்தப்படும் அரங்கம் குளிர்பதன வசதி செய்யப்பட்டிருந்தது. அலங்கார மேடை. பார்வையாளர் பகுதியில் நூறு இருக்கைகள்.

    நிகழ்ச்சியினை ஒளிப்பதிவு செய்ய வெவ்வேறு முனைகளில் ஆறு கேமிராக்கள். கூடுதலாய் ஒரு ஆட்டோ மேடிக் கேமிரா கிரேனில் பொருத்தப்பட்டிருந்தது. ஒலிப்பதிவு யூனிட் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தது கருவிகளுடன்.

    அரங்கத்துக்குள் புகும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் கோமாளி தொப்பியும், பொய் மூக்கும், தரைதவழும் கறுப்பு அங்கியும் வழங்கப் பட்டன.

    முதல் வரிசையில் ஹேமந்த் அண்ட்கோவுக்கு இருக்கைகள். நிகழ்ச்சியின் டைரக்டர் வீடியோ ஜாக்கி சஜியுடன் பேசிக் கொண்டிருந்தான். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவுக்கான ஆயத்தங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தன. அரங்கம் முழுக்க சலசலப்பான உரையாடல்கள் ததும்பின.

    ஹேமந்த் பிரகாஷிடம் திரும்பி, இன்னிக்கி காலை மலர் படிச்சியா பிரதர்? - வினவினான்.

    படிச்சேன். ஒரு வேதனையான நியூஸ் என்ன நியூஸ்? தோள்களை குலுக்கிக் கேட்டாள் சந்தியா.

    செயின்ட்பால் ஸ்கூலைச் சேர்ந்த மம்தாவும், தினேஷும் கைது செய்யப்பட்டிருக்காங்க!

    ஓ! அவங்களா? நம்ம கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்தவங்களாச்சே! – சந்தியா.

    என்ன தப்பு செஞ்சாங்களாம்? ஹோம்வொர்க் செய்யலையாக்கும்!- அருணா.

    பி சீரியஸ். அவங்க ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் ஸாப்ட்வேர்ஸ் திருடுனதுக்காக கைது செய்யப்பட்டிருக்காங்க!

    அவங்க திருடுனதை யார் நேர்ல பாத்தாங் களாம்???-

    கம்ப்யூட்டர் கண்காட்சில பொருத்தப்பட்டிருந்த வீடியோ கேமிரால அவங்க திருடுனது பதிவாகியிருக்காம் என்ற பிரகாஷ், ஆனா.. பிடிபட்ட ரெண்டு பேரும் தாங்கள் நிரபராதின்னு வாய் விட்டு கதர்றாங்களாம்!

    எல்லா குற்றவாளியும் இப்படித்தான் நடிப்பாங்க! என்றாள் சந்தியா.

    கோர்ட் குற்றவாளின்னு தீர்ப்பு சொல்ற வரைக்கும் எல்லாரும் நிரபராதிகள் தான்! என்றான் ஹேமந்த்.

    அவங்க திருடுன ஸாப்ட்வேர்ஸ் படு விசேஷமானவை. எல்லாவித கம்ப்யூட்டர் வைரசையும் அழிக்கும் திறன் கொண்டவை. அவற்றின் மதிப்பு 16 லட்சம் ரூபாய்! என்றான் பிரகாஷ். ஆனால் திருடப்பட்ட ஸாப்ட்வேர்ஸ் குற்றம்சாட்டப்பட்ட இருவரிடமிருந்தும் இன்னும் கைப்பற்றப்படவில்லையாம்!"

    நீ பேசுறதை பாத்தா அந்த கேஸ்ல குதிக்க திட்டம் போடுற மாதிரி தெரியுது! - அருணா.

    நம்ம வேலையே கொலை, கொள்ளை, கடத்தல்களை கண்டுபிடித்தும் தடுக்கிறதும் தானே? தேவைப்பட்டால் கம்ப்யூட்டர் ஸாப்ட்வேர்ஸ் திருட்டு கேசில் குதிப்போம்! பிரகாஷூக்கு ஆதரவாகப் பேசினான் ஹேமந்த்.

    வாழ்க்கையே த்ரில் மயம்! ஜெபித்தான் பிரகாஷ்.

    நீங்க ரெண்டு பேரும் ஆக்ஷன் ஹீரோஸ். நாங்க வெறும் டம்மிகள் தானே?

    எங்களிடம் தசை சக்தி. உங்களிடம் மூளைச் சக்தி. நாம் நால்வருமே யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல! - ஹேமந்த்.

    இவர்களின் உரையாடலை சிதைக்கும் வண்ணம் மேடை விளக்குகளின் வெளிச்சம் இரட்டிப்பானது. டைரக்டர் விசில் ஊதினான்.

    மேடை இருட்டானது. ஒரு வெளிச்ச வட்டம் மறைவிலிருந்து ஒரு இளைஞனை மேடையின் மையப் பகுதிக்கு அழைத்து வந்தது.

    இசை உச்சத்துக்குப் போய் மெது மெதுவாக குறைந்தது.

    மேடை வெளிச்சம் மீண்டது.

    மேடை இளைஞன் உற்சாகமாய் கூவினான். ஹாய் கண்மணிஸ்! தலையில் கறுப்பு தொப்பி. உடலில் சிவப்பு அங்கி, இடது கையில் மந்திரக்கோல் (?) மார்புச்சட்டையில் காலர்மைக் பொருத்தப்பட்டிருந்தது.

    பி.ஹெச். அப்துல் ஹமீது ஸ்டைலில் தமிழ் பேசினான் சஜி.

    உங்கள் யாவருக்கும் என் மாலை வணக்கம்! என்னுடைய மந்திர தந்திரங்களையும், அகட விகடங்களையும் ரசிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.

    ஏன்?

    நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்க நீங்கள் எல்லாம் எங்களின் விதிகளை மதித்து நடக்க வேண்டும். எங்களுக்கு சில உதவிகளும் நீங்கள் செய்ய வேண்டும்!

    என்ன விதிமுறைகள்? முணுமுணுத்தான் பிரகாஷ்.

    "இதயம் பலஹினமாய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1