Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Mandalam
Aabathu Mandalam
Aabathu Mandalam
Ebook68 pages52 minutes

Aabathu Mandalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கிரிதர் டேவிட் ஒரு கிரிக்கெட் வீரன்.

ஜிப்ஸி குளிர்பான கம்பெனிக்கும் சாய்ஸ் கோலா கம்பெனிக்கும் வியாபார போட்டி. ஜிப்ஸி விளம்பரங்களில் கிரிதர் டேவிட் வருகிறான். அவனை பத்து மடங்கு பணம் கொடுத்து சாய்ஸ் கோலா வளைத்து போட பார்க்கிறது. டேவிட் மறுக்கிறான். காதலி ஜோதிகாவை சந்தித்துவிட்டு உலககோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா போய் விளையாட தயாராகுகிறான் டேவிட்.

சதி வலை ஆரம்பிக்கிறது. உலக கோப்பை வீரர் பட்டியிலிருந்து நீக்கப்படுகிறான் கிரிதர் டேவிட் கிரிக்கெட் போர்டுடன் போர் செய்யும் ரஞ்சித்தை சந்திக்க டியாரா தயாராகுகிறாள்.

சாய்ஸ் கோலா கம்பெனி அரவிந்தாட்சனை டியாரா சந்திக்க தாச்சன் கொலை செய்யப்படுகிறார் ரஞ்சித்தை டியாரா சந்திக்க ரஞ்சித் கொல்லப்படுகிறான்.

லஞ்சம் வாங்கும் மூன்று கிரிக்கெட் போர்டு உறுப்பினர் பெயர் விலாசம் டியாராவுக்கு கிடைக்கிறது. அடுத்து சித்தார்த் கொலை. சாய்ஸ்கோலா தலைவர் நிக்கோலஸ் கைது செய்யப்படுகிறார். ஆனால் உண்மைகுற்றவாளிகள் யார் என்பதனை முழுநாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580111006409
Aabathu Mandalam

Read more from Arnika Nasser

Related to Aabathu Mandalam

Related ebooks

Related categories

Reviews for Aabathu Mandalam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Aabathu Mandalam - Arnika Nasser

http://www.pustaka.co.in

ஆபத்து மண்டலம்

Aabathu Mandalam

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

1

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.

நெட் ப்ராக்டிஸ் மேற்கொண்டிருந்தான் கிரிதர் டேவிட். எதிராளி நனைந்த டென்னிஸ் பந்துகளை உக்கிரமாக வீசினான்.

சிலவற்றை தடுத்தாடினான். சிலவற்றை பௌன்ட்ரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் அனுப்பினான். தொடர்ந்து ஒரு மணிநேரம் கடுமையான பயிற்சி.

முடிந்ததும் சேரில் வந்தமர்ந்தான் கிரிதர் டேவிட். பூத்துவாலையால் வியர்வையை ஒத்திக் கொண்டான்.

கிரிதர் டேவிட்.

வயது 22. உயரம் 5.11. ஒடிசலான ஆனால் இறுகிய திரேகம். வகிடு இல்லாத முரட்டு கேசம். மீசை இல்லாத முகத்தில் சவரப்பாதையில் பச்சை நிற ரோமப்புள்ளிகள். கழுத்தில் சிலுவை சுமக்கும் மைனர் செயின்

கிரிதர் டேவிட் மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக DEBUT ஆனான்.

கிரிதர் டேவிட் - சுனிர் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ரவிசாஸ்திரி கலவை. VERY SOUND DEFENCE

எந்த பந்தை தடுத்தாடுவது? எந்தப் பந்தை சுழற்றியாடுவது, தூக்கியடிப்பது, கட் செய்வது, தொட்டில் அடி கொடுப்பது, பைன் லெக்குக்கு திருப்புவது, ஹுக் செய்வது என்பதை காப்பி புக் ஸ்டைலில் கிரிதர் டேவிட் அசத்துவான்

ஒரு பேட்ஸ்மேன் சிறந்த பார்மில் இருக்கிறான் என்பதை அவன் களத்தில் ஆடுவதை மட்டும் வைத்து நிர்ணயிக்க முடியாது.

களத்திற்கு புகுவதற்கு முன் கையுறை கால் மட்டை கட்டிக் கொள்வதிலிருந்து - களத்திற்கு நடந்து வருவதிலிருந்து - முதல் பந்தை எதிர்கொள்வதிலிருந்து - அடிக்கும் முனையை சகாவுக்கு ரொடேட் செய்வதிலிருந்து நிர்ணயிக்கலாம். எல்லாவற்றிலும் டேவிட் ஹாஸநூக்ஷ தான்.

அஜய் ஜடேஜா போல் ஆரவாரம் செய்யாமல் களத்துக்கு வருவான். அவுட் ஆகிவிட்டால் யோகி போல் பெவிலியன் நடப்பான்.

ஸில்லி மிட் ஆனின் சிறப்பான பீல்டர்.

ஆஃப் ஸ்பின் பார்ட்டைம் பௌலரும் கூட.

அணி தலைவன் சொல்வதை தட்டாமல் செய்வான்.

அணியில் கோஷ்டி சேர்க்க மாட்டான்.

போட்டிகளின் முந்தின நாள் இரவு எங்கும் ஊர் சுற்றமாட்டான்.

பேங்க் ஆஃப் பரோடாவின் எக்ஸிக்யூட்டிவ்வும் கூட.

இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் 35 இன்னிங்ஸ்கள் ஆடி 1867 ரன்கள் குவித்துள்ளான். சராசரி 52.57 ஐம்பதுகள் எட்டு செஞ்சுரிகள் ஆறு.

எழுபது ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2400 ரன்கள் குவித்துள்ளான். சராசரி 39.84 ஐம்பதுகள் இருபது செஞ்சுரிகள் இரண்டு.

கிரிதர் டேவிட் மதம் மாறிய கிறிஸ்துவன்.

டேவிட்டுக்கு லட்சக்கணக்கில் ரசிகைகள் இருந்தும் கிரிதர் ஸ்டெல்லா மேரிஸ் மாணவி ஜோதிகாவின் காதலன்.

-

Enjoying the preview?
Page 1 of 1