Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soozhchikaludan Poridu
Soozhchikaludan Poridu
Soozhchikaludan Poridu
Ebook119 pages1 hour

Soozhchikaludan Poridu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Soozhchikaludan Poridu

Read more from Arnika Nasser

Related to Soozhchikaludan Poridu

Related ebooks

Related categories

Reviews for Soozhchikaludan Poridu

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soozhchikaludan Poridu - Arnika Nasser

    11

    1

    பாராசூட்டில் பறக்கிறாள் திவ்யா. பாராசூட் அங்குமிங்கும் அலைக்கழித்து இறங்க ஆரம்பித்தது. கால்களுக்குக் கீழே அடர்ந்த காடு. மரக்கிளைகளை சிராய்த்துக் கொண்டு போய் விழுந்தாள் திவ்யா. இணைப்புகளை அகற்றிவிட்டு திவ்யா எழ சுற்றி ஆதிவாசிகள் ஈட்டிகளுடன்.

    நர மாமிசம் தின்னும் ஆதிவாசிகள்! அவர்களின் வாயோரம் சாம்பலும் மாமிசத் துணுக்குகளும். அவர்களிடமிருந்து தப்பிக்க திவ்யா ஓட ஆரம்பித்தாள். பேய் வேகம்! புயல் வேகம்!

    ஓடிக்கொண்டிருந்த திவ்யா திடீரென்று பூமியால் இழுக்கப்பட்டாள்.

    ஆபத்தான புதை மணல்.

    முழங்கால்வரை புதைந்திருந்த திவ்யா நொடிக்கு நொடி மேன்மேலும் புதைய ஆரம்பித்தாள்.

    இப்போது மூக்கு வரை புதை மணல் வந்துவிட்டது.

    தில்லை நடராஜா! என்னைக் காப்பாற்று... எனக் கூவியபடி கனவிலிருந்து விடுபட்டு எழுந்து அமர்ந்தாள் திவ்யா.

    திவ்யா, வயது 27, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தாவரவியல் படித்தவள். உயரம் 5 அடி 7 அங்குலம். மாநிறம்.

    பக்கத்தில் தூங்கும் கணவன் பிரசாந்த்தை உன்னித்தாள்.

    பிரசாந்த் வயது 33. பாதுகாப்பு அமைச்சரகத்தில் உயரதிகாரி. பிரசாந்த்தின் தந்தை ஓர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. பழமையில் ஊறிய மரபு சார்ந்த அம்மா. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்கும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஊழியன் பிரசாந்த்தின் தம்பி பாலாஜி.

    திவ்யா ஐந்து ஆண்டுகளுக்கு முன் சக மாணவியருடன் கல்விச் சுற்றுலா வந்திருந்தாள் டெல்லிக்கு.

    பாராளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிப் பார்க்கும் போதுதான் திவ்யாவுக்கு பிரசாந்த் அறிமுகமானான்.

    பார்த்தவுடன் காந்தவர்க் காதல்.

    அதன்பின் இருவரும் ஒரு வருடம் போராடினர். தத்தம் பெற்றோருடன்.

    சிதம்பரத்திலுள்ள திவ்யாவின் பெற்றோர் திவ்யாவுக்குச் சொந்தத்தில் மாப்பிள்ளையை அவசர அவசரமாகப் பார்த்தனர்.

    டெல்லியில் பிரசாந்த்தின் பெற்றோர் பிரசாந்த் திவ்யாவைத் திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர்.

    குழப்பத்திலிருந்த பிரசாந்த்துக்குத் தைரியமூட்டினான், அவனது உயிர் நண்பன் அருண். அவனும் பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணிபுரிபவன்தான். ஆனால் பிரசாந்த்துக்குக் கீழே.

    அருண் நுட்பமாகச் செயல்பட்டான்.

    திவ்யாவை டெல்லிக்கு வரவழைத்தான். திவ்யாவுக்கும் பிரசாந்த்துக்கும் பதிவுத் திருமணம் நடத்தி வைத்தான் தானே முன் நின்று.

    இன்னுமே இரு தரப்பும் ராசியாகவில்லை. நான்கு வருடம் இனிமையான தாம்பத்யம். ஒரே ஒரு குறை. குழந்தை இல்லை!

    டைம்பீஸில் நேரத்தைப் பார்த்தாள் திவ்யா. அதிகாலை 5.30 மணி. எழுந்தாள் திவ்யா.

    டெல்லியை அக்டோபர் பனி சூழ்ந்திருந்தது. அவர்களது அபார்ட்மென்ட்டில் மொத்தம் 16 வீடுகள்.

    எல்லாரும் ஹிந்திதான் பேசுவார்கள்.

    வந்து நான்கு வருடங்களாகியும் திவ்யாவுக்கு ஹிந்தி பேச வரவில்லை.

    மொத்தத்தில் வெறும் இருநூறு ஹிந்தி வார்த்தைகள்தான் தெரியும் திவ்யாவுக்கு.

    ப்ளாட் கேட்டிலிருந்த பையில் பால் பாக்கெட்டுகள் இரண்டு இருந்தன.

    எடுத்துக் காய்ச்சினாள்.

    விறுவிறுப்பாக காலை வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

    பின்னுக்கு இருந்து இரு அக்குளிலிடயே கைவிட்டு இழுத்து திவ்யாவை இறுக அணைத்து பின்னங்கழுத்து கேசத்தில் காதலாய் முணுமுணுத்தான் பிரசாந்த்.

    குட்மார்னிங் குட்டிம்மா!

    பிடரி குறுகுறுத்தது கணவனின் சுவாசக் காற்றால்.

    எப்பங்க எந்திரிச்சிங்க?

    இப்பத்தான். சூடா காப்பி குடேன்!

    பல் விளக்காம எதுவும் குடிக்காதீங்கன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்... சோம்பேறி சோம்பேறி!

    நைட்தான் பல் துலக்கினேனே...

    வாதம் பண்ணாதீங்க. போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க... இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை நமக்கிருக்கு ஞாபகமிருக்கா?

    என்ன வேலை?

    கைனகாலஜிஸ்ட் ரேணுகாகிட்ட அப்பாய்ண்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன். இன்னைக்குக் காலைல ஒன்பது மணிக்கு நாம போகணும். பரிசோதனைக்காக உங்க உயிரணுவை எடுக்கப் போறாங்க. உயிரணுவின் நகர்ச்சித் திறன் எப்படி இருக்கு? உயிரணுக்கள் எண்ணிக்கை போதிய அளவில் இருக்கான்னு பாக்கப் போறாங்க...

    என் உயிரணுக்கள்லதான் கோளாறுன்னா என்னை வெறுத்துடுவியா குட்டிம்மா?

    ஏய்... என்ன கேள்வி இது! ஐ லவ் யூ... எது எப்படிப் போனாலும் உங்க மீதான என் அசுரக் காதல் மாறவே மாறாது!

    குட்டிம்மா! அமைச்சகப் பணி ஏராளமாக பெண்டிங். சுதந்தரப் போராட்ட வீரர் ஜஸ்வந்த் சிங் பவள விழாக் கொண்டாட்டம் இருக்கு. சம்பந்தப்பட்ட பணிகள் தலைக்கு மேல். நான் உன்னுடன் மருத்துவமனைக்கு வருகிறேன். பரிசோதனை முடிந்ததும் நான் நேரே அமைச்சகம் போய்விடுவேன். நீ ஆட்டோவில் நியூ ராஜேந்திரா நகர் திரும்பிவிட வேண்டும் என்ன சொல்ற?

    ஓ.கேப்பா! பிரசாந்த் குளிக்கப் போனான்.

    பணிப்பெண்ணுடன் சேர்ந்து டிபன் தயாரிக்க ஆரம்பித்தாள் திவ்யா.

    வாசலில் அழைப்புமணி சிணுங்கியது.

    மாஜிக் ஐ மூலம் பார்த்துவிட்டு கதவைத் திறந்துவிட்டாள். கணவனின் உயிர் நண்பன் அருண்!

    குட்மார்னிங் சிஸ்டர்!

    வாங்க அருண். என்ன ஒரு வாரமா இந்தப் பக்கம் காணோம்?

    என் வயசுக்காரன் எல்லாம் கல்யாணமாகி ரெண்டு குழந்தையோட இருக்காங்க. நான் மட்டும் எப்படி தனிக்கட்டையாக் காலம் தள்றது? சொந்த ஊர் தஞ்சாவூர் போய்ப் பெண் பாத்திட்டு வரேன். எத்தனை பாருங்க... உங்க அழகுல கால்தூசு இருக்கமாட்டேங்குதுக... பேசாம அண்ணாமலை யுனிவர்சிடிலயிருந்து கல்விச் சுற்றுலா இந்த வருஷம் எத்தனாந் தேதி வருதுன்னு கேட்டுப் போய்ப் பாக்க வேண்டியதுதான்...

    அய்யா தஞ்சாவூர்! சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுங்க. இப்பவே பாதி வழுக்கை!

    சிஸ்டர்! இந்த வழுக்கைக்குத்தான் அமைச்சகப் பெண்கள்கிட்ட செம கிரேஸ்!

    பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டான் பிரசாந்த்.

    வாடா அருண்... வா வா... என்ன வந்தவுடனே என் பொண்டாடிகிட்ட தொணதொணன்ற... திவ்யா இவன் சரியான ஜொள்ளு பார்ட்டி. எவனும் இவனை அவங்கங்க வீட்டுக்குள்ள விடுறதே இல்ல. பேசிப்பேசியே அசத்திடுவான்னு. நாந்தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வச்சவனாச்சே... உன்னை வேற சிஸ்டர் சிஸ்டர்னு நெஞ்சுருகக் கூப்பிடுரானேன்னு உள்ள விட்ருக்கேன்...

    சிஸ்டர்! இவனும் என்னைப் புரிஞ்சிக்காம பேசுறான். நான் சோக்ரிககிட்ட வழிவேன் ஜொள்ளு விடுவேன் ஆனா ஆபத்து ஏற்படுத்தாம.

    சரிசரி. புலம்பாதே. நீ நல்லவன்தான். டிபன் சாப்ட்டியா?

    இல்லப்பா... உங்க வீட்ல சாப்ட்டுக்கலாம்னு...

    முப்பது வீடுகள்ல முப்பது நாளைக்கு காலை டிபன், செம மிச்சம் உனக்கு

    சிஸ்டர்! இவன் கெடக்கான். காலை டிபன் என்ன பண்ணியிருக்கீங்க!

    தக்காளி ஊத்தப்பம்!

    தொட்டுக்க?

    தேங்காய் சட்னியுடன் பூசணி சாம்பார்!

    அய்யய்யோ... கேக்கவே நாக்குல ஜலம் சொட்டுதே... டைனிங் டேபிளில் போய் அமர்ந்து தாளம் போட்டான் அருண்.

    ஹேர் ட்ரையர் வைத்துத் தலையை உலர்த்திவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1