Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thuppakki Roja
Thuppakki Roja
Thuppakki Roja
Ebook118 pages1 hour

Thuppakki Roja

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Thuppakki Roja

Read more from Arnika Nasser

Related to Thuppakki Roja

Related ebooks

Related categories

Reviews for Thuppakki Roja

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thuppakki Roja - Arnika Nasser

    22

    1

    கிழக்கு வானம் வர்ண ரகளையில் ஈடுபட்டிருந்தது. நொடிக்கு நொடி சிவப்பு சார்ந்த புதிய புதிய நிறங்கள் முளைத்தன.

    ஒரு மொட்டு மலர்வது போல தூக்கத்திலிருந்து விழிநிலைக்கு பாய்ந்தான், கார்முகில். படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவனது உதடுகள் ஆத்மார்த்தமாய் முணுமுணுத்தன. இந்த பூமியை தீவிரவாதத்திடமிருந்தும், வறுமையிடமிருந்தும் நிரந்தரமாய் காத்தருள் கடவுளே!

    முகில் என்ற கார்முகிலுக்கு வயது 28. திராவிட நிறம் ‘கியூபிராஞ்ச்’சின் இளம் போலீஸ் அதிகாரி. அத்தனைக்கும் மேலாக முகில் ஓர் ஆண்மை ததும்பும் பிரமசாரி. இரவு உடை சரசரக்க நடந்தவன், குட்மார்னிங் நண்பா! என்றான்.

    புகைப்பட ராகவ் முறுவலித்தான். பதிலுக்கு ‘வெரி குட்மார்னிங் முகில்!’ என பகர்ந்தான் ராகவ் மிடுக்காய்.

    பற்பசை பிதுக்கி, பல் துலக்கினான் முகில். குளிர் நீர் இரண்டு லிட்டர் குடித்தான். யோகாசனத்தில் ஈடுபட்டு எழுந்தான். கார்கோ ‘பேன்ட்’டும், டி-சர்ட்டும் உடுத்திக்கொண்டான். இடுப்பில் வெள்ளிநிற ரிவால்வரை சொருகிக்கொண்டான். தனது புதிய கறுப்பு நிற காரை நோக்கி நடந்தான்.

    படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான், ராகவ். அவனுக்கு வயது 28. ரோஜா நிறம் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதில் நிபுணன். ராகவ்வின் உதடுகள் முணுமுணுத்தன.

    யப்பா கடவுளே! உலகத்தில் தீவிரவாதத்தை தழைத்தோங்கச் செய்யுப்பா! என்ன முழிக்கிற? தீவிரவாதம் இருந்தாத்தானே என்னை மாதிரி போலீஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு பரிசும், பாராட்டும் பெறலாம் நடந்தான். மேசைப் புகைப்படத்தை பார்த்து, ஹாய் முகில் என்றான்.

    காபி குடித்தான். வீட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஜிம்முக்குள் பிரவேசித்தான். 100 நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் செய்தான். குளித்து முடித்தான். காத்திருக்கும் பெற்றோருடன் சேர்ந்து காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டான். துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு போர்டிகோவில் காத்திருக்கும் காருக்கு நடந்தான்.

    துப்பாக்கி கழகம். இரண்டு கார்களும் மோதிக்கொள்வதுபோல் சறுக்கி, நின்றன. மின்னல் வேகத்தில் முகிலும், ராகவும் காரிலிருந்து வெளிப்பட்டனர். ஒளித்திருந்த துப்பாக்கிகளை எடுத்து, ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டனர். தோட்டா உடலில் பாயாமல் எதிர் எதிர் தரையில் பாய்ந்தன. கண்சிமிட்டி சிரித்தபடி இருவரும் பாய்ந்து, கட்டிக்கொண்டனர்.

    என்னடா சாமியார். எப்படி இருக்கே?

    நானும் நலம், எனது குருநாதரான விவேகானந்தரும் நலம்!

    இருவரும் கைகோர்த்தபடி உள்ளே நடந்தனர். வட்ட இலக்கின் முன் துப்பாக்கி உயர்த்தி சுட்டனர். இலக்கின் மையப் பகுதியை நூறு சதவீதம் அடைந்திருந்தான் முகில். இருவரும் மீண்டும் அவரவர் காருக்கு நடந்தனர். இருவரின் கார்களும் ஈக்காட்டுத்தாங்கல் நோக்கி பறந்தன.

    தோட்டாதரணியின் கைவண்ணத்தில் உள்ளரங்கம் உருவாகி இருந்தது. மூன்று கேமிராக்கள் வரிசையாக நின்றிருந்தன. நிகழ்ச்சித் தொகுப்பாளினி வளர்மதி, மயில் நீலநிற பட்டுச்சேலையில் மினுமினுத்தாள். முகில்- ராகவ் தவிர ஐந்து நண்பர் ஜோடிகள் காத்திருந்தன.

    வளர்மதிக்கு ‘மேக்கப்’ நடந்தது. அனிச்சையாக எட்டிப் பார்த்த முகில், ஆனந்தமாய் அதிர்ந்தான். இருபத்திநான்கு வயது வளர்மதி ஓர் அற்புத அழகி. அவளது அழகு முகிலை தாறுமாறாய் தாக்கி, நிலைகுலைய வைத்தது. தான் இமைகொட்டாமல் வளர்மதியை ரசிப்பதை யாராவது கவனிக்கிறார்களா என்பதை அறிய பார்வையை சுழற்றினான், முகில்.

    பார்வையின் அரைவட்டத்தில் ராகவ் சிக்கினான். ‘நீ பார்வையாலேயே அந்த பெண்ணை விழுங்குவதை நான் பார்த்துவிட்டேன்!’ என சமிக்ஞை செய்தான், ராகவ்.

    ஹி... ஹி... சும்மா! பதில் சமிக்ஞை காட்டினான், முகில்.

    விவேகானந்தர் கோபித்துக்கொள்ளப் போகிறார்! என்றான், நண்பன்.

    ஒலிப்பதிவு உதவியாளன், தேவைப்பட்ட அனைவருக்கும் ‘காலர் மைக்’ பொருத்திவிட்டுப் போனான்.

    வெல்கம் டு நட்பின் விலை...! வளர்மதி நீட்டி முழக்கி அறிவிக்க- பதிவு செய்யப்பட்ட செயற்கை கைத்தட்டல் மிகைத்தது. கேமிரா, பார்வையாளர் பக்கம் புகுந்து வளைந்தோடியது.

    "இந்நிகழ்ச்சியில் ஜோடி ஜோடியாக நண்பர்கள் அழைக்கப்படுவர். அவர்களின் நட்பின் விலையை நான் அறிவிப்பேன். இருவரில் ஒருவர் ஒப்புக்கொள்ளும்வரை தொகையை உயர்த்திக்கொண்டே போவேன். இருவரில் யார் தொகையை பெற ஒப்புக்கொண்டாலும், அந்த ஜோடி நட்பில் தோற்றதாக அர்த்தம். ஒப்புக்கொண்ட தொகையைப் பெற்றுக்கொண்டு நண்பர்கள் நிரந்தரமாய் பிரிவதாய் உறுதிப் பத்திரம் எழுதித் தரவேண்டும், நமக்கு.

    தொகையை முதலில் ஒப்புக்கொண்ட நபரோ அல்லது இருவருமோ பிரித்து எடுத்துக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் நோக்கம்- நல்ல நண்பர்களை பிரிப்பதல்ல; பணம் சார்ந்த உலகில் உறவின் முக்கியயின் மையைக் காட்டுவதே, இந்நிகழ்ச்சியில் தோற்பவருக்கு அதிகபட்சம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கக்கூடும். ஆனால், வெற்றி பெறுபவருக்கு வெறும் தங்கமுலாம் பூசிய வெற்றிப் பதக்கம்தான். இதுவரை நாங்கள் ஒளிபரப்பிய 250 ‘எபிசோடு’களில் 999 நண்பர் ஜோடிகள் தோற்றுள்ளனர். இன்று நாம் அழைக்கப்போவது ஆயிரமாவது ஜோடி! (கைதட்டல்) நண்பர்கள் கார்முகில்- ராகவ்!"

    ராகவ்வின் இடக்கையுடன் தனது வலக்கையைக் கோர்த்துக்கொண்டு- வட்ட மேசைக்கு மிடுக்காய் நடந்து வந்தான், கார்முகில். பின்னணி இசை உச்சம் உடைத்து, தூள் கிளப்பி ஓய்ந்தது. முகிலின் ஆண்மையான முகத்தை கண்கள் குறுக்கி ரசித்தாள், வளர்மதி.

    சபாஷ் சரியான ஜோடி, மிஸ்டர் கார்முகில்! மிஸ்டர் ராகவ்! உங்களை பார்வையாளருக்கு அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்!

    என் பெயர் கார்முகில். என் நண்பனின் பெயர் ராகவ். நாங்கள் இருவருமே சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்கேஜி படிக்கும்போது பரஸ்பரம் அறிமுகமானோம். போலீஸ் பயிற்சியை ஒன்றாக முடித்துவிட்டு, நாங்கள் இருவருமே ‘கியூ’ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகிறோம். எங்களின் நட்புக்கு வயது 24. நாங்கள் இருவருமே கட்டை பிரமசாரிகள்.!

    ஆகவே, நீங்கள் இருவரும் நாட்டுக்கட்டை பிரமசாரிகள். தகுதியான பெண் பார்வையாளர்கள் விண்ணப்பிக்கலாம்! குறும்பாய் அறிவித்தாள், வளர்மதி. கைத்தட்டல் எழுந்தது.

    கார்முகில்! உங்கள் கறுப்பு நிறத்தைப் பார்த்து உங்கள் பெற்றோர் உங்களுக்கு சூட்டினார்களா? நட்பை மழையாய் நண்பனின் மீது பொழிவதைப் பார்த்து உங்கள் நண்பர் ராகவ் உங்களுக்கு இப்பெயரைச் சூட்டினாரா?

    இரண்டு காரணமும் இல்லை. அப்பா ஒரு தமிழாசிரியர். மகனுக்கு தூய தமிழ் பெயர் சூட்ட விரும்பினார். மிஸ் வளர்மதி! உங்களின் பெயர் காரணப்பெயரா?

    Enjoying the preview?
    Page 1 of 1