Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abaayath Thiruppangal
Abaayath Thiruppangal
Abaayath Thiruppangal
Ebook104 pages1 hour

Abaayath Thiruppangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Abaayath Thiruppangal

Read more from Arnika Nasser

Related to Abaayath Thiruppangal

Related ebooks

Related categories

Reviews for Abaayath Thiruppangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abaayath Thiruppangal - Arnika Nasser

    10

    1

    கதைக்குள் நுழையும் முன்:

    10.3.1992 இரவு 10.40:35

    சென்னை விமான நிலையம். உலக அலுமினியப் பறவைகளின் கான்கிரீட் வேடந்தாங்கல்.

    இடமிருந்த வலமாக அண்ணா இண்டர்ஷேனல் டெர்மினல்... இணைப்புக் கட்டடம். காமராஜர் டொமிஸ்டிக் டெர்மினல்...

    இரு விமான நிலையங்களின் எதிரே T வடிவச் சாலை. சாலையின் இருபுறமும் அலங்காரத் தோட்டம். Tயின் பாதத்தில் சென்னை - திருச்சி பிரதானச் சாலை.

    போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட ‘போலோ நெஸ்’ ஃபாரின் கார் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தது. காரை பார்க்கிங்கில் நிறுத்தி இறங்கினான் அந்த குளிர்க் கண்ணாடி வாலிபன். வயது 30-35. உயரம் 5’-8" இடக் கையில் குட்கேஸ் வைத்திருந்தான். நீல பேன்ட்டும் வெள்ளைச் சட்டையின் மேல் நீல கோட்டும் அணிந்திருந்தான். மார்பில் மஞ்சள் நிற அனுமதி அட்டை புகைப்படத்துடன்.

    விமான நிலைய பிரதான வாசலில் ஒரு சப் இன்ஸ்பெபக்டரும், ஒரு ஹெட் கான்ஸ்டபிளும் ஏர்போர்ட் அதிகாரியும் ஸ்டென் கன்னுடன் நின்றிருந்தனர். உள்ளே செல்பவர்களின் பரஸ், என்ட்ரி டிக்கெட்கள், ப்ளைட் டிக்கெட்களைச் சோதித்து அனுமதித்தனர். மஞ்சள் அட்டை வாலிபனைத் தடுக்கவில்லை.

    செக்கிங் ஏரியாவில் விமான டிக்கெட் ஓகே. செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. - இமிகிரேஷனில் பாஸ்போர்ட், விசா சரி பார்த்தல் நடந்துகொண்டிருந்தது. Bohus கண்டுபிடிக்க அல்ட்ரா வயலட் ஸ்கேனர் ப்ளஸ்போரகல் வழங்குவோர் லிஸ்ட். ஒவ்வொரு பகுதியையும் உன்னித்து நடந்தான் குளிர்க் கண்ணாடி வாலிபன். பதிவுச் சுமைகள் சோதிக்கப்பட்டு ஸ்கேனிங் ஓகே. பாண்ட் ஒட்டப்பட்டன. கன்வேயரில் விரைந்தன.

    கஸ்டம்ஸ் கெளண்ட்டரில் விலை மதிப்புப்பொருள்கள், அந்நியச் செலாவணி விவரம் ஆராயப்பட்டுக் கொண்டிருந்தன. அடுத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே நடமாடும் Sterile lounge. அதனை அடுத்து Aerobridge விமான வாசலுக்குப் பாதை.

    சூட்கேஸ்வாலிபன் கையிலிருந்த வரைபடத்துடன் நிஜ இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தான்.

    பழைய விமான நிலையத்தின் மேல் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் ரூம். மஞ்சள் நிற ஒளிப் புள்ளிகள் வெளியிடும் கன்ட்ரோல் பேனலின் முன் வரிசையாக ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்கள், ரேடார் திரையில் விமான அசைவுகள்.

    விமான நிலையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

    சாரதா மில்ஸின் தனியார் விமானம் டில்லி செல்லத் தயாராய் இருந்தது.

    பைலட்டுக்கு Brifingம் Performa நகலும் தரப்பட்டன. பைலட் கேபினுக்குள் ஏறி அமர்ந்தார். ஏணி கழற்றப்பட்டு விமானக் கதவு மூடப்பட்டது. விமானம் ரன்வேயில் ஓடி ஒரு தங்க நொடியில் வானேறியது.

    குளிர்க் கண்ணாடி வாலிபன் தன் கடிகாரத்தை உன்னித்தான்,

    11:01:01 மணி.

    பெங்களூரிலிருந்து ஒரு கார்கோ விமானம் சென்னையை நோக்கி.

    11:13:59 மணி.

    இரு விமானங்களும் எதிர் எதிரே Accident zoneஐ நெருங்க -

    ஏர் கன்ட்ரோலர் ஆதிரையன் தொடரும் 100 நொடிகளுக்கு ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான்.

    அவ்வளவுதான்... நடு ஆகாயத்தில் இரு விமானங்களும் மோதி தீபாவளியாயின. விமான நிலையம் பாஸ்பரஸ் துண்டானது. விபத்துச் செய்தி அறிந்து.

    குளிர்க் கண்ணாடி வாலிபன் புன்னகை முகமானான்.

    Dry run மாபெரும் வெற்றி! என ரகசியமாகக் கட்டை விரல் உயர்த்திக் கொண்டான்.

    10.9.1992 இரவு 8- 30- 02

    மேஜை முழுவதும் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை நிற அனுமதி அட்டைகள். பல போலி ரிஜிஸ்ட்ரேஷன் கார் நம்பர்களில் என்ட்ரி பாஸ்கள், போலி ஆர்.சி புத்தகங்கள், மினி பாலிமர் துப்பாக்கி. சோடியம் தயோ பென்டால், பாவ்லோன், பொட்டாசியம் குளோரைடு திரவ வடிவில் சேமிக்கப்பட்ட டிஸ்போஸபிள் சிரின்ஜ் மூடிய நீடிலுடன். இரு கத்திகள், போலி செக்யூரிட்டி ஓ. கே. பாண்ட்கள் டைமருடன் பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், கையுறைகள், பல வகைகளில் குளிர்க் கண்ணாடிகள், ஷுக்கள், - கேசத்தைப் பழுப்படித்துக்கொண்டான். உயரத்தை இரண்டங்குலம் அதிகப்படுத்தும் ஷுவை அணிந்து கொண்டான். பாலிமர் துப்பாக்கியை இடுப்பில் மறைத்துக் கொண்டான். சூட்கேட்ஸில் பிளாஸ்டிக் வெடிகுண்டு. இம்முறை டால்பின் காருக்கு புதுப் போலி நம்பர். கையுறைகளை அணிந்து கொண்டான். நீல நிறச் சீருடை அணிந்து கொண்டான். கையில் இன்றைய விமானங்களின் பயணிகள் கம்ப்யூட்டர் ஷீட்.

    டால்பின் பிரதான சாலையில் சீறிப் பாய்ந்தது.

    விமான நிலைய பாதுகாப்புக்குத் தமிழ்நாடு பேரலீஸின் பலம். ஒரு டெபுடி கமிஷனர், இரண்டு டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர்கள் 25 சப் இன்ஸ்பெக்டர்கள், 75 கான்ஸ்டபிள்கள்.

    மப்டியில் சிவில் ஏவியேஷன் போலீஸ். மத்திய அரசாங்க அதிகாரிகள். ஒரு டெபுடி கமிஷனர் ஓர் அஸிஸ்டென்ட் கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்,

    பாதுகாப்புத்துறையில் தணியாற்றிய பாம்ஸ்குவாட் அதிகாரிகள், பெரிமீட்டர் சோதனையும் அதிகாரிகளிடம் டம்மி செக்கும் செய்யும் ஏர்போர்ட் டூட்டி ஆபீஸர்கள்.

    மூன்று ஷிப்ட்களில் டாக்டர்கள், ஆம்புலன்ஸ், தீ அணைப்பு வண்டிகள்.

    டி.எஸ்.பி. தேவச்சந்தரும் ஏர்போர்ட் டூட்டி ஆபீஸர் ராபிலும் கேன்டீனில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    ஒரு ஜோக் பாத்தியா ராபில்?

    என்ன தேவா?

    பத்து மூணு தொண்ணூத்தி ரெண்டுல சார தாமில் விமானமும் கார்கோ விமானமும் மோதி 98 பேர் செத்தாங்கள்ல...

    ஆம்...

    அது ஏர் பாக்கெட்டில் (குறைந்த காற்றழுத்த மண்டலம்) ஏற்பட்ட விபத்தாம். கமிட்டி ரிப்போர்ட் வந்திருக்கு ராபில்! நான் நம்பல. அது திட்டமிட்ட சதி!

    தேவா! விபத்து நடந்த இடம் ‘ஆக்ஸிடெண்டல் ஸோன்’ எனப் பெயர் பெற்றது. இதில் சதி என்று சந்தேகப்பட ஒரு சங்கதியும் இல்லை.

    எது எப்படியோ... சதி தொடரும் என என் உள் மனது கூறுகிறது.

    சிரித்தார் ராபில், அப்படியா?

    சதியில் ஏர் கன்ட்ரோலர் ஆதிரையன் பங்கும் இருக்கும் என நம்புகிறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1