Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uruthi Konda Nenjinaai... Vaa
Uruthi Konda Nenjinaai... Vaa
Uruthi Konda Nenjinaai... Vaa
Ebook134 pages48 minutes

Uruthi Konda Nenjinaai... Vaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தந்தையின் இறப்பிற்குப் பின், அவர் பார்த்துக் கொண்டிருந்த மின் மயானத்தின் பிணம் எரிப்புப் பணியினைத் தான் தொடர முன் வருகிறாள் பி.காம். பட்டதாரியான இளம்பெண் லட்சுமி. நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த உத்தியோகம் அவளுக்குக் கிடைக்கின்றது. அந்த மயானத்தின் உட்பகுதியை, ரவுடிகள் குடி, சீட்டாட்டம் என தாறுமாறாகப் பயன்படுத்த அவர்களை அன்பால் திருத்துகிறாள்.

சவ எரிப்பிற்கு வந்த ஒரு கும்பல் ஒரு சிறுமியை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விடுகிறது. அவளை அவள் வீட்டில் சேர்க்க முயல்கிறாள். ஆனால், இறந்து போனது அவளின் தாயும், தந்தையும்தான் என்பதும், தனிமரமாய் நிற்கும் சிறுமி பவித்ராவை எந்த உறவினரும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை என்பதும், தெரிய வர, தானே அச்சிறுமியை வளர்க்கிறாள்.

ஒரு நாள் மயானத்தில் உட்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பவித்ரா மேலே செல்லும் விமானத்தைப் பார்த்து விட்டு லட்சுமியிடம், “நான் பெருசாகி விமானம் ஓட்டப் போகிறேன்” என்று சொல்ல லட்சுமி, அந்த வார்த்தைகளை சிர மேற்கொண்டு அவளை பைலட்டாக்கப் பாடுபடுகிறாள்...

அவள் வென்றாளா? சிறுமி விமானியானாளா? எதற்காக பவித்ராவிற்கு ஜனாதிபதி விருது கொடுக்கிறார்? நாவலைப் படியுங்கள். உங்களுக்கே ஊக்கமும், உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580130009990
Uruthi Konda Nenjinaai... Vaa

Read more from Mukil Dinakaran

Related to Uruthi Konda Nenjinaai... Vaa

Related ebooks

Reviews for Uruthi Konda Nenjinaai... Vaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uruthi Konda Nenjinaai... Vaa - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறுதி கொண்ட நெஞ்சினாய்... வா

    Uruthi Konda Nenjinaai... Vaa

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    கல்கத்தாவிலிருந்து புறப்பட்ட அந்த தனியார் விமானம், மிஸோரம் மாநிலத்தின் தலைநகரான அய்ஸால் நகரத்தில் அமைந்திருக்கும் லெங்புய் விமான நிலையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

    கீழே பிரமிக்க வைக்கும் பசுமையான பள்ளத்தாக்குகளும், அருவிகளும், மூங்கில் காடுகளும் மண்ணில் சொர்க்கமோ? இந்த இடம் என்று எண்ண வைக்கும் விதத்தில் கண்கொள்ளாக் காட்சியாக விரிந்திருந்தன.

    முதன்மை விமானியான கோகுல்தாஸ், பெங்களூர்வாசி. பல ஆண்டுகளுக்கு முன்னரே பி.எஸ்.ஸி. (ஏவியேஷன்) பட்டத்திலும், பி.இ. (ஏர்கிராப்ட் மெயிண்டனென்ஸ்) பட்டத்திலும் யுனிவர்ஸிடி ராங்க் வாங்கிய அசாதாரண படிப்பாளி. அத்தோடு விமானம் ஓட்டும் பணியிலும் தெளிவான அனுபவம் கொண்ட அசகாயசூரர். விமானத்தின் தொழில் நுட்பங்களை கரைத்துக் குடித்தவர்.

    அவரது தனித்திறமை காரணமாகவே அவரை கல்கத்தா டூ அய்ஸால் ட்ரிப்பிற்கு விமானியாக அனுப்பியுள்ளது அவர் பணி புரியும் தனியார் நிறுவனம்.

    அந்த விமானம் இறங்க வேண்டிய லெங்புய் விமான நிலையத்தின் ஓடு தளம் டேபிள்டாப் வகை ஓடு தளம். அதாவது குறுகிய ஓடு தளம். விரைவான டேக்ஆப், லேண்டிங் இருக்கும். இந்த டேபிள்டாப் ரன்வேயில் விமானத்தைச் செலுத்துவதும், இறக்குவதும் கத்தி மீது நடப்பது போலத்தான். கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் இந்த டேபிள்டாப் ரன்வே இருக்கும். அங்கு கோகுல்தாஸ் போன்ற சீனியர் பைலட்டுகளால் மட்டுமே, நிதானமாகவும், நாசூக்காகவும் விமானத்தைக் கையாள முடியும், என்பது அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கும் நன்கு தெரியும். அதன் காரணமாகத்தான் அவரை நியமித்துள்ளது.

    ர்ர்ர்ர்ருருருரும்ம்ம்ம் என்ற அளவான ஓசையுடன், மிதப்பது போல் பறந்து கொண்டிருந்தது விமானம்.

    அவர் கவனம் விமானத்தைச் செலுத்துவதில் இருந்தாலும், பார்வை அவ்வப்போது கீழே தெரியும் இயற்கை எழில்களை ரசிக்காமலில்லை.

    அவருடன் பயிற்சி மற்றும் சகவிமானியாக பயணித்துக் கொண்டிருக்கும் பவித்ரா, நூறு மணி நேரத்திற்கும் மேலாய் டூயல் ப்ளை முறையில் பயிற்சியாளருடன் பறந்தவள். ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற அனைத்துத் திறன் சோதனைகளிலும் அற்புதமாய்ச் சாதித்து வந்தவள். அவளும் பி.டெக். (ஏரோநாடிகல்) பட்டம் பெற்றவள். தாயின் ஆசையை நிறைவேற்ற, சவாலாய் விமானம் ஓட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவள்.

    விமானம் முய்பாங் மீது பறக்கையில் கிட்டத்தட்ட ஆயிரம் மீட்டர் உயர மலைகள் அதிகமாய்த் தென்பட, ஆர்வத்துடன் கவனித்தாள் பவித்ரா.

    இப்போதுதான் முதல் முறையாக மிஸோரம்க்கு பயணம் வருகிறாயா பெண்ணே? விமானி கோகுல்தாஸ் அழகு தமிழில் கேட்க,

    ஆமாம் சீனியர்

    உண்மையில் இயற்கை அன்னையின் படைப்பில் உருவான எழில் அம்சங்களை மொத்தமாய் தரிசிக்க விரும்பும் யாரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது விஜயம் செய்ய வேண்டிய பூமி இந்த மிஸோரம் பூமி

    உண்மை சீனியர்

    கீழே ஒரு ஆறு ஓடுவது கோடாய்த் தெரிய, குனிந்து பார்த்தாள் பவித்ரா.

    "அது துறியல் ஆறு. அதன் உற்பத்தி இடமே இந்த ‘முய்பாங்’ தான்.

    ஓ... ஃபண்டாஸ்டிக் சீனியர் என்றாள் பவித்ரா.

    கீழே தெரிவது ரெய்க்மலை சுமாராக ஆயிரத்து ஐநூறு மீட்டர் உயரமாவது இருக்கும்...! வானம் மட்டும் தெளிவாக இருந்தால் அதன் மீது நின்று பார்த்தால் பங்களாதேஷின் பள்ளத்தாக்குகள் கூட அழகாய்த் தெரியும்...! மலையேற்றப் பிரியர்களுக்கு இந்த மலை பொக்கிஷம் மாதிரி...! செங்குத்தான மலைப் பிளவுகள்... பள்ளத்தாக்குகள் எல்லாம் இருக்கும்

    வாவ்...

    அப்போது விமானத்தின் நேர் எதிரில் வெண்ணிறத்தில் ராட்சத பஞ்சுப் பொதி போல் வந்த பனிமேகத்தினுள் மித வேகத்தில் புகுந்து, சில நிமிடங்கள் அதனுள் பயணித்து விட்டு வெளியே மீண்டது விமானம்.

    அதன் முன்புற விண்ட் ஷீல்ட் கண்ணாடியில் பொட்டுப் பொட்டாய் அமர்ந்திருந்த பனித்துளிகளை, தன் தலைக்கு மேலே இருக்கும் லெப்ட் அண்ட் ரைட் வைப்பர் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டுத் துடைத்தார். சில வினாடிகளிலேயே கண்ணாடிகள் துல்லியமாகி விட உடனே ஸ்விட்ச்களை ஆஃப் செய்தார்.

    ஒரு முக்கியமான விஷயம்...! உனக்கு லெங்புய் ஏர்போர்ட் பத்தித் தெரியுமா? விமானப்பாதையில் கவனத்தை வைத்துக்கொண்டே கேட்டார் கோகுல்தாஸ்.

    ம்... தெரியும் சீனியர்...! அங்கிருக்கும் ரன்வே டேபிள்டாப் ரன்வேன்னு கேள்விப்பட்டிருக்கேன் சீனியர் ஒரு கண்ணால் விமானப் பாதையையும், மறு கண்ணால் கீழே தெரியும் இயற்கை வனப்புக்களையும் பார்த்தவாறே சொன்னாள் பவித்ரா.

    ஓ... டேபிள்டாப் ரன்வே பற்றி உனக்குத் தெரியுமா?

    படிக்கும் காலத்தில் அதைப்பற்றிப் படித்திருக்கேன் சீனியர்...! அதுவுமில்லாமல் இந்த ட்ரிப் கிளம்பும் முன் நானாக சில விபரங்களை வலியத் தெரிந்து கொண்டேன் சீனியர்

    வெரிகுட்...! ஐ அப்ரிஸியேட் யுவர் ஸ்மார்ட்னஸ்...! இருந்தாலும் ஒரு சீனியர் டிரெய்னரா நான் சிலவற்றை சொல்லிக் கொடுத்தாகணும் ஜூனியர்...! பொதுவாகவே இந்த டேபிள்டாப் ரன்வேயில் பார்வை மாயை... அதாவது பிம்ப மாயை ஏற்படும்...! சரியாச் சொல்லணும்ன்னா... விமான நிலையத்துக்கு அருகே வந்து விட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கும்... அதை நம்பி நாம விமானத்தை தாழ்வா பறக்கவிட்டால் அவ்வளவுதான் ஆக்ஸிடென்ட் உறுதி...! இன்னொரு அதிசயமும் இங்கே உண்டு... அந்த ஓடுதளத்தின் அடியில் நீரோடை இருப்பது எங்கும் இல்லாத தனித்துவம்...! சொல்லிக் கொண்டே போனவரின் முகம் லேசாய் மாறியது. ஏதோவொரு அவஸ்தையை விழுங்குவது போல் அவர் கண்களும், வாயும் அவரையுமறியாமல் அபிநயித்தன.

    அதைக் கூர்ந்து கவனித்த பவித்ரா, சீனியர்? ஆர் யூ ஆல்ரைட்? கேட்டாள்.

    அது கோ-பைலட்டின் கடமை.

    ஹேய்... ஐயாம் ஆல்ரைட் பேபி என்று வாய் சொன்னாலும் அவர் முகத்தில் ஒரு இறுக்கம் இருந்தது.

    சீனியர்... நீங்க அன்-ஈஸியா ஃபீல் பண்ணினா... ஆட்டோமேஷன்ல போட்டுட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க... நான் மேனேஜ் பண்றேன் என்றாள் பவித்ரா.

    நோ... நோ... பேபி... இந்த மாதிரி டேபிள் டாப்ரன்வேயில் இறக்கும் போதோ... ஏறும் போதோ ஆட்டோமேஷன் யூஸ் பண்ணக்கூடாது என்று சொல்லியவாறே, ஸ்டீயரிங்கிலிருந்து வலதுகையை எடுத்து தன் நெஞ்சின் இடப்பகுதியைத் தேய்த்தார் கோகுல்தாஸ்.

    "சீனியர்... உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1