Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhu Janmam Vendinean
Ezhu Janmam Vendinean
Ezhu Janmam Vendinean
Ebook148 pages55 minutes

Ezhu Janmam Vendinean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் முத்தையா ஒருவனே பொது வேலைக்காரன். தான் உபயோகித்த பழைய சட்டையொன்றை அவனுக்குத் தருகிறார் செல்வராஜ். ஆனால் அவன் அதை தான் அணியாமல் ஒரு ஊனமுற்ற ஏழைப் பிச்சைக்காரச் சிறுமிக்கு கொடுத்துவிடுகிறான். ஒரு கட்டத்தில் கடும் மழையால் ஒதுங்க இடமின்றி சாராயக்கடையில் ஒதுங்கிய அந்த சிறுமியையும், அவள் தாயையும் சில காமுகர்களிடமிருந்து காப்பாற்றி, அப்பார்ட்மெண்டின் பார்க்கிங் தளத்தில் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறான். அப்பார்ட்மெண்ட் வாசிகளில் சிலர் அதை அசிங்கப்படுத்த, அவர்களின் வாயை அடைக்கும் பொருட்டு அந்தச் சிறுமியின் தாயைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊனமுற்ற அந்தச் சிறுமிக்கு ஒரு சர்ச் பாதிரியார் கல்வி உதவி செய்ய அவள் படிப்பில் சாதிக்கிறாள். வாழ்க்கை ஏறுமுகம் காணத் துவங்குகிறது…

தொடர்ந்து நாவலைப் படியுங்கள் நற்சிந்தனைகள் வளரும்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130006334
Ezhu Janmam Vendinean

Read more from Mukil Dinakaran

Related to Ezhu Janmam Vendinean

Related ebooks

Reviews for Ezhu Janmam Vendinean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhu Janmam Vendinean - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    ஏழு ஜென்மம் வேண்டினேன்

    Ezhu Janmam Vendinean

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    கோகுலா அப்பார்ட்மெண்ட்

    அதிகாலை நேரம்.

    ஜாகிங் மற்றும் வாக்கிங் செல்லும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் வழக்கம் போல் செக்யூரிட்டி அறை முன் கூடியிருந்தனர். ஏறக்குறைய எல்லோருமே ஐம்பது வயதைக் கடந்த மூத்த ஜீவன்கள். பார்வைக்கு டைட் பேண்ட் மற்றும் டீ-ஷர்ட்டில் டிரிம்மாகத் தோன்றினாலும் அதில் பலர் சர்க்கரை காரணமாகவும், சிலர் இரத்த அழுத்தம் காரணமாகவும், வெகு சிலர் கனமான சரீரத்தைக் கரைக்கும் முகமாகவும் அந்த நடைப்பயிற்சியினை சிரமேற் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

    என்ன செல்வராஜ் சார்... உங்க பக்கத்துப் போர்ஷன் நரசிம்மன் சாரைக் காணோம்!... அவுட் ஆப் ஸ்டேஷனா? ஊதா நிற டீ-ஷர்ட் அணிந்திருந்த ‘பி’பிளாக் மல்லிகா கேட்டாள். அந்த நேரத்திலும் அபார மேக்கப்பில் வந்திருந்தாள்.

    தெரியலையே மேடம்! என்று உரத்த குரலில் சொன்ன அந்த செல்வராஜ், அவருடைய பிரியமான தோழியே இவங்கதான்... இவங்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரிஞ்சிருக்கப் போகுது?... சும்மா கேட்கணுமே?ன்னு கேட்கறது இதெல்லாம்! என்று சன்னக் குரலில் பக்கத்தில் நின்றிருந்த திருவேங்கடசாமி நாயக்கரிடம் சொன்னார் அவர்.

    சிரிப்பு பீறிட்டு வந்த போதிலும் அதை அடக்கிக் கொண்டு இறுகிய முகத்துடன் நின்றிருந்தார் திருவேங்கடசாமி நாயக்கர். தெரியாத்தனமாய் சிரிக்கப் போய் அந்த மல்லிகாவின் ஆபாச அர்ச்சனைகளுக்கு ஆளாக அவர் விரும்பவில்லை.

    சற்றுத் தள்ளிப் போய் நின்று தலைகளை எண்ணிய ‘ஏ’பிளாக் விசாலாட்சி, என்னது இன்னிக்கு தலைகள் எண்ணிக்கை ரொம்பவே கம்மியாயிருக்கு!... ஆஹா... இங்க சோம்பேறிகள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு போலிருக்கே? என்று சொல்ல,

    நோ... நோ... நாலு நாள் சேர்ந்தாற் போல் லீவு வருதல்ல?... எல்லோரும் வெளியூர் டிரிப் போயிருப்பாங்கஎன்றாள் மல்லிகா.

    ஏன் மல்லிகா மேடம் நீங்க எங்கேயும் போகலையா? வேண்டுமென்றே அவளைச் சீண்டும் விதத்தில் கேட்டார் செல்வராஜ். அந்த மல்லிகா கோபம் வந்தால் அபிநயத்தோடு பேசுவாள். அதை அந்தக் கூட்டத்தினர் சத்தமில்லாமல் ரசிப்பர்.

    க்கும்... அந்த தொடர் விடுமுறையெல்லாம் கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்குத்தான் என் வீட்டுக்காரர்... பிரைவேட் கம்பெனில அல்ல வேலை பார்க்கிறார்... அவருக்கு ஒரே ஒரு நாள் மட்டும்தான் லீவு வருத்தத்தோடு மல்லிகா சொல்லி முடித்த போது,

    கையில் இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக் கொண்டு, குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் என்று பாடியவாறே குதித்துக் குதித்து ஓடி வந்தான் முத்தையன்.

    சுமார் முப்பது... முப்பத்தி ரெண்டு வயது சொல்லலாம். உயரம் குறைவான கருத்த உருவம். சற்று உருண்டையான சரீரம். முகத்தில் பல வகைகளில் பல தழும்புகள். ஒன்று நீளமாய், இன்னொன்று அகலமாய், வேறொன்று கொப்புளம் போல் வீங்கி, காதோரம் ஒன்று ஒட்டை போட்டது போல். முன் மண்டையில் சொற்ப முடிகள், பின் மண்டையில் கொத்து முடிகள் சுருள் சுருளாய். இதுவே அவன் தோற்றம்.

    இதுவரை சோப்பையே பார்த்திராத ஒரு தொள... தொளா... ஜீன்ஸ். அதன் உண்மை நிறம் நீலம் என்பது அதை உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும். மேலே போட்டிருக்கும் சட்டை அவன் உடம்பை விட மூணு மடங்கு பெரிதாய் இருக்கும். அதை நெருப்பிலிட்டாலும் வேகாது. அழுக்கில் முக்கியெடுக்கப்பட்ட வஸ்து அது.

    டேய் முத்தையா... உன் சொந்த ஊரு எதுடா? என்று கேட்டால், எல்லாமே எனக்கு சொந்த ஊருதானுங்கோ என்பான்.

    ப்ச்... நீ பொறந்து... வளர்ந்தது எந்த ஊருடான்னா? என்று கோபமாய்க் கேட்டால், சீரியஸாய்ச் சொல்லுவான், அரச மரத்தடில ஒரு புள்ளார் கோயில் இருக்கும் பாருங்க?... அதான் என்று.

    த பாரு... ஓங்கி அறைஞ்சா கன்னம் பழுத்திடும்... ஒழுங்கா சொல்லு எந்த ஊர்க்காரன் நீ? என்று ஆவேசமாய்க் கேட்டால் மட்டும் தெளிவாய்ச் சொல்லுவான், நான் இருக்கற இந்த ஊர்தான் சாமி என் சொந்த ஊர் என்று.

    அதற்கு மேலும் அவனுடம் பேசி தங்களுடைய ரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் அத்தோடு நகர்வர். சில ஆத்திரக்காரர்கள், ராஸ்கல்... ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்கு உனக்கு கொஞ்சம் சரக்கை ஊத்தி விட்டு உன்னைப் பத்திய உண்மைகளையெல்லாம் கறக்கறேனா இல்லையா பாரு? என்று கத்தி விட்டுச் செல்வர்.

    சொந்தம்... பந்தம், உற்றார்... உறவினர், பங்காளி... பகையாளி, என்று எந்த உறவுமே இல்லாமல் கடந்த பத்தாண்டுகளாய் இதே அப்பார்ட்மெண்டில்தான் ஒட்டிக் கொண்டிருக்கின்றான். கார்ப் பார்க்கிங்கில் மோட்டார் ரூமுக்குப் பக்கத்திலிருக்கும் சிறிய அறையில் அவன் வாசம். எல்லோருக்கும் உதவியாளனாய், எடுபிடியாய், குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாய், வீட்டுப் பெண்மணிகளுக்கு இலவச வேலைக்காரனாய் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் தசாவதாரம் அவன்.

    என்ன முத்தையா... ரொம்ப குஷியா இருக்க போலிருக்கு?... உன் முகத்தைப் பார்த்தால் கல்யாணம் கில்யாணம் முடிவாயிடுச்சோ?ன்னு தோணுது! சீண்டலாய்க் கேட்டாள் மல்லிகா.

    கல்யாணமா?... ஹா... ஹா... எனக்கா?... ம்ஹும்... இந்த முத்தையன் வாழ்க்கைல கல்யாணம்ங்கற பேச்சுக்கே இடமில்லை!... அபிநயத்தோடு சொன்னான் அவன்.

    அட... என்னடா இப்படிச் சொல்லிட்டே?... காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி ரெண்டு பிள்ளைகுட்டிகளைப் பெத்து போடுவியா... அதை விட்டுட்டு சாமியார் மாதிரியல்ல பேசறே? செல்வராஜ் தூண்டினார்.

    அய்ய... பல ஆம்பளைக இங்க கல்யாணம் பண்ணிக்கிட்டுப் படாதபாடு படறதை நான் பார்த்திட்டுத்தானே இருக்கேன்? என்றவன், அந்தப் பேச்சை விரும்பாதவனாய், அதை விடுங்க நான் மார்க்கெட்டுக்குப் போறேன்... உங்களுக்கு ஏதாச்சும் வேணுமின்னா சொல்லுங்க... வாங்கியாரேன் என்றான்.

    அடேய்... எனக்கு எதுவும் வேண்டாம்... மொதல்ல உனக்கு ஒரு பொண்டாட்டிய வாங்குடா? செல்வராஜ் சொல்ல,

    க்கும்..உங்களுக்கு வேற வேலையே இல்லை எப்பப் பாரு... கல்யாணம்... குழந்தை... குட்டி இதேதான் பேச்சு... போங்க நீங்கெல்லாம் கெட்டப் பசங்க உங்க கூட நான் இனிமேல் சேர மாட்டேன் என்று குழந்தையைப் போல் சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்து சென்றது அந்த முப்பது வயது குழந்தை.

    அவன் போவதைப் பார்த்து, எனக்கு இவனைப் பார்க்கும் போதெல்லாம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துல வர்ற சிவகுமார்தான் ஞாபகம் வரும்என்றாள் மல்லிகா.

    அது சரி... இன்னிக்கு இங்கியே நின்னு பேசிட்டு இப்படியே வீட்டுக்குப் போயிடலாம்!னு முடிவு பண்ணிட்டீங்களா?... வாக்கிங் போற மாதிரி ஐடியாவே இல்லையா? விசாலாட்சி கேட்க,

    எல்லோரும் சிரித்துக் கொண்டே நடைப் பயணத்தைத் துவக்கினர். அவர்களது நடைப் பயணம் என்பது பப்ளிக் ரோட்டில் அல்ல, அந்த அப்பார்ட்மெண்ட் காம்பௌண்டிற்கு உள் பகுதியில், காம்பௌண்டு ஓரமாகவே நடப்பர். ஒரு ரவுண்டு வந்தாலே அது ஒன்றரை கிலோ மீட்டர் கணக்காகிவிடும்.

    நடைப்பயணம் அமைதியாய் நடந்து கொண்டிருக்க, நீண்ட நேரம் அமைதி காத்தபடியே வந்த திருவேங்கிடசாமி நாயக்கர், "இந்த அப்பார்ட்மெண்ட்ல இத்தனை பேர் குடியிருக்கோம்!... ஏறக்குறைய எல்லோருமே அந்த முத்தையன் கிட்ட வேலை வாங்கறோம்!..ஆனா அவனுக்கு ஒரு நல்ல சட்டை எடுத்துக் குடுப்போம்... அல்லது நம்ம வீட்ல இருக்கற பழைய சட்டை ஒண்ணையாவது அவனுக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1