Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Vaseegaram
Kaadhal Vaseegaram
Kaadhal Vaseegaram
Ebook244 pages2 hours

Kaadhal Vaseegaram

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சாதாரண கிராமத்தில் பிறந்து, சட்டக்கல்லூரியில் பயின்று, தன்னை ஒரு சிறந்த ஜூனியர் வக்கீல் நிலைக்கு உயர்த்திக் கொள்கிறான் குமரேஷ் என்ற இளைஞன். ஒரு கட்டத்தில், குமரேஷின் சீனியர் கோகுல் வெளிநாடு சென்றிருக்க, அனந்தவர்மன் என்ற தொழிலதிபரின் வழக்கில் குமரேஷ் சிறப்பாக வாதாடி, வர்மனின் நன்மதிப்பைப் பெறுகிறான்.

கோகுலும், வர்மனும் ஏற்கனவே சிறந்த நண்பர்களாக இருக்க, இப்போது குமரேஷும் அவர்களின் கூட்டணியில்..!

வர்மனின் மகள், வெளிநாட்டில் படித்த மாடர்ன் மாயக்காரி சரணிகா, குமரேஷின் மீது காதல் மயக்கம் கொள்கிறாள்.

சட்டம் படித்த இளைஞனும், மாடர்ன் மாயக்காரியும் வாழ்க்கையில் இணைந்தார்களா?

அத்தியாயம் டு அத்தியாயம் காதல் சொட்டும் வசீகரக் கதைக்குள் செல்வோம்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505707
Kaadhal Vaseegaram

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhal Vaseegaram

Related ebooks

Reviews for Kaadhal Vaseegaram

Rating: 3.75 out of 5 stars
4/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Vaseegaram - Hansika Suga

    http://www.pustaka.co.in

    காதல் வசீகரம்...

    Kaadhal Vaseegaram…

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 1

    இன்னும் சித்த நேரத்துல முருகன்கோவில் தேரோட்டம் ஆரம்பிச்சிடும். எல்லோரும் புறப்பட்டாச்சா? வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாகக் குரல் கொடுத்தார் முத்தையா.

    இதோ ஆச்சு... வேகநடையோடு உள்ளிருந்து வந்தார் வள்ளியம்மை.

    வந்துட்டேனுங்க மாமா... அரக்கப்பரக்க ஓடிவந்தார் மூத்த மருமகள் புஷ்பவல்லி. பின்னாலேயே பட்டு வேட்டிச்சட்டை, அங்கவஸ்திரம் சகிதம், அவர் கணவன் தேனப்பன்.

    நாங்களும் ரெடி... என்றபடி பட்டுப்புடவை அலங்காரத்தில் கூடத்திற்கு வந்தாள் அனுத்தமா. அவளுடைய கணவன் மயில்வாகனனும், வேட்டிச்சட்டை விளம்பரக்காரனாய் வந்து நின்றான்.

    எல்லோரும் வந்தாச்சு... இந்த குமரேசன் பயலை இன்னும் காணோமே? என்று முத்தையா உச்சுக்கொட்டிய நேரம், ஸ்டைலாக மாடியிலிருந்து இறங்கி வந்தான் குமரேஷ்.

    யய்யா... கோவிலுக்குப் போறோம் - ன்னு சொல்லியும், இப்படி ஆபீசர் கணக்கா சட்டையும், பேன்டுமா வந்து நிக்கறியே? கடிந்துகொண்டார் குடும்பத் தலைவர்.

    ஏன்? சட்டை, பேன்டோட வந்தா, உங்க சாமி கோவிச்சுக்குவாரா? அவரே கோவணாண்டி தானே...! பேசாம வாங்கப்பா...! வெடுக்கென்று பதிலுரைத்தான் மகன்.

    வக்கீலுக்குப் படிக்க வெச்சது... எங்கிட்ட எதிர்த்து வாதாடவா சாமீ...! உன் விருப்பம் போலச் செய்... துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு முன்னே நடந்தார் முத்தையா.

    பேரப்பிள்ளைங்க எல்லாம் முன்னமே அங்கே போயாச்சு போல...!

    ஆமாங்க... என் தம்பி கணபதி கூட அவங்க எல்லோரையும் ஒரே வண்டியில அனுப்பிட்டேன். பதிலுரைத்தார் வள்ளியம்மை.

    முத்தையா...!

    தீவிர முருகபக்தர்...! சோறுண்ணத் தவறினாலும் முருகனை வணங்கத் தவறியதில்லை.

    உடலில் தெம்பிருந்த காலத்தில் பாதயாத்திரையாகப் பழனிமலை வரை நடந்தவர்... மூப்பு எட்டி தேகம் தளர்ந்ததில் உள்ளூர் முருகனின் தரிசனமே அவருக்குப் பேரானந்தம் ஆகிவிட்டது.

    அவரின் மூத்தமகன் தேனப்பன் குடும்பத் தொழிலான விவசாயம் மற்றும் நெல் அரவைமில் பார்த்துக்கொள்ள,

    அடுத்தவர் மயில்வாகனன் தனியார் வங்கியின் வெளியூர் கிளையில் வேலை பார்க்கிறார்.

    மூன்றாவது மகன் ‘குமரேசன்’ என்ற ‘குமரேஷ்’ சட்டவல்லுநராய் இருக்க, அவனுடைய திருமணத்தைப் பற்றித்தான் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்குப் போற நேரத்துல இப்படி மூஞ்சியைத் தூக்கி வெக்காட்டி என்ன? தம்பியின் தோளைத் தட்டினார் மயில்வாகனன்.

    கடுப்பா இருக்குண்ணே...! ஊர்ல தலைக்கு மேல வேலையிருக்கு. இப்ப இந்தத் தேரோட்டாம் ரொம்ப முக்கியமா? வந்தே ஆகணும்...ன்னு வம்படியா வரவைக்கலேன்னா என்ன?

    எனக்கு மட்டும் பேங்க்ல காத்தாடிக்கிட்டா இருக்கு? சீட்டுல உட்கார்ந்தா யந்திரம் கணக்கா வேலை செய்யணும். நம்மையெல்லாம் இங்கே வரச் சொன்னதுக்கு தேரோட்டம் மட்டும் காரணமில்ல... வேறொரு காரணமும் இருக்கு.

    என் கல்யாணத்தைப் பற்றிப் பேசப் போறீங்க... அதுதானே...! எப்பவும் இதே பல்லவிதான்...! அலுத்துக் கொண்டான் குமரேஷ்.

    கரெக்ட்...! அதே பல்லவிதான்...! பக்கத்து ஊர் மிளகாய் மண்டிக்காரர் பொண்ணு... பெங்களூர்ல படிப்பை முடிச்சிட்டு ஊரைப்பார்க்க வந்திருக்கா...! அவளையே உனக்குப் பேசிமுடிக்கலாம் - ன்னு அப்பாவுக்கு எண்ணம்...!

    அந்தப் பல்லவி... பெங்களூர் போனதும் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிட்டாளாம். கிராமத்து வாடை சுத்தமா இல்லையாம். அனேகமா இன்னைக்குக் கோவிலுக்கு வந்தாலும் வருவான்னு நினைக்கறேன். முருகன் அருளால உங்க சந்திப்பு நல்லபடியா நடக்கட்டும்.

    அங்கே, பக்கத்து ஊர் என்பதெல்லாம் மைல் கணக்கில் இல்லை. பொடிநடையாகப் போய்விட்டு வந்துவிடலாம். ஊரில் இருந்த காலத்தில் அந்தப் பல்லவியை எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்.

    நவநாகரீக நங்கையாக மாறிவிட்டாளாமே? அதனால் என்ன?

    சரணிகா என்ற ஒருத்தி அவனுக்காகக் காத்திருக்கும்போது, இந்தப் பல்லவியைப் பற்றி அவன் கவலைப்படத் தேவையில்லை.

    முருகன்கோவில் தேரோட்டம் ஜனத்திரளில் நிரம்பி வழிந்தது. மற்றவர்கள் மனமுருகி வேண்டி நிற்க, பெயருக்குக் கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டமில்லாத இடமாகத் தேடி நடந்தான் குமரேஷ்.

    கோவில் மணிச்சத்தம் ஒருபுறம்... பஞ்சுமிட்டாய், ஐஸ்வண்டிகளின் மணியோசை மற்றொரு புறம்...! பக்திப்பழங்களாய் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு செல்லும் பெரியவர்கள்... சிறியவர்கள்...! பூ விற்பவர்கள்... சாமிபடம் விற்பவர்கள் என்று என்னவொரு கசகசப்பு...! வெக்கை தாங்காமல் சட்டைக்காலரை ஏற்றிவிட்டுக் கொண்டான்.

    எக்ஸ்க்யூஸ் மீ... என்ற குரல் அருகாமையில் ஒலித்தது. இந்த ஊரில் ஆங்கிலம் பேசும் அம்பிகை யாரோ என்ற கேள்விக்குறியுடன் திரும்பினான்.

    சாட்சாத் பல்லவி...! அவளை அடையாளம் கண்டுகொண்ட தினுசில் அவன் புருவம் உயர, பரிச்சியமான புன்னகையை முகத்தில் படரவிட்டாள்.

    உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்? என்றபோது குரலில் தயக்கம் தெரிந்தது.

    லுக் பல்லவி...! நீங்க என்கிட்ட என்ன பேசப்போறீங்கன்னு எனக்குத் தெரியாது... நான் ஓபனா சொல்லிடறேன். எனக்கு சரணிகான்னு ஒரு கேர்ள்ஃபிரெண்ட் இருக்கா... அவளைத்தான் நான் திருமணம் பண்ணிக்கறதா இருக்கேன். இன்னும் எங்க வீட்டுல இந்த விஷயத்தை நான் சொல்லல... அதுனால ஏற்பட்ட சின்ன குழப்பம்.

    தேங்க் காட்...! மை வே இஸ் க்ளியர்...! எப்படி ஆரம்பிக்கறதுன்னு வழிமுழுக்க யோசிச்சிட்டு வந்தேன். உங்களுக்கு ஒரு கிரஷ் இருக்கற மாதிரி எனக்கும் இருக்கு... ஐ கேனாட் சே தி டீடெயில்ஸ் நௌ...! எங்க வீட்டுல விஷயம் தெரிஞ்சா மறுபடியும் பெங்களூர் பக்கம் போகவே விடமாட்டாங்க... அப்பா, அம்மாவுக்குத் தெரியாம நிறைய இடங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன். எப்படியும் ஏதாவது ஒரு வேலை கிடைச்சிடும். அதுக்கப்புறம் என் லவ் மேட்டரை வீட்டுல சொல்லலாம் - ன்னு...!

    வெரிகுட்... ஆல் தி பெஸ்ட்...! அந்த வள்ளி, தெய்வானையின் காதல் கணவன் நமக்கும் துணையிருப்பார் என்று நம்புவோமாக...! வாழ்த்தி விடைகொடுத்தான் குமரேஷ்.

    எந்தச் சூழ்நிலையிலும் என்னைக் காட்டிக் கொடுத்துடாதீங்க... என்ற அவசர கோரிக்கையுடன், அங்கிருந்து விடைபெற்றாள் பல்லவி.

    திடீரென்று மூளை சுறுசுறுப்பானது போல் தெம்பாக உணர்ந்தான் குமரேஷ்.

    இம்முறை எந்தச் சாக்குப்போக்கும் சொல்லி இங்கிருந்து தப்பிக்கக் கூடாது. ஆணியடித்தார் போல் அத்தனை பேர் முன்னிலையிலும் சரணிகாவுக்கும், அவனுக்கும் இருக்கும் காதலைச் சொல்லிவிட வேண்டும்.

    அவனது தீர்மானம் சரியே என்பதுபோல் கோவில்மணி ஓங்கி ஒலித்தது.

    சாமி கும்பிடுவேன்னு பார்த்தா... இங்கே நின்னு கலர் குடிச்சிட்டு இருக்கே... இந்தக் கலரெல்லாம் அப்புறமா குடிக்கக்கூடாதா? என்றபடி மெல்ல நடந்துவந்து அவன் நெற்றியில் விபூதியிட்டார் முத்தையா.

    வரவர நாத்திகனா மாறிட்டு வர்றியோன்னு தோணுது... ஊரே அங்கே நின்னு கும்பிடும்போது உனக்கு இங்கே என்ன வேலை? என்று அதட்டிக்கொண்டே வந்தார் தேனப்பன்.

    அப்பா... குச்சி ஐஸ் வேணும்... என்று அடம்பிடிக்கத் தொடங்கினான் தேனப்பனின் மகன் குமரன். அவரது மகள் ரோஜா தன் இரட்டை ஜடையில் சூடியிருந்த கலர் ரோஜாக்களைத் தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

    கைநிறைய பிரசாதம் கொண்டுவந்து கொடுத்தார் வள்ளியம்மை.

    கொழுந்தனாரே...! அந்தப் பல்லவி வந்து உங்ககிட்ட ரகசியம் பேசுன மாதிரி இருந்துச்சு. என் கண்ணுக்கு எதுவும் தப்பாது. நீங்க இரண்டு பேரும் சந்திச்சதை நான் பார்த்துட்டேன் இல்ல...

    தன் மிகப்பெரும் கண்டுபிடிப்பை எண்ணி... வியந்து... தானே சிரித்துக்கொண்டார் அண்ணி அனுத்தமா.

    சும்மா இருங்க அண்ணி... நீங்க நினைக்கற மாதிரி எதுவும் நடக்காது... எனக்குப் பொண்டாட்டியா வரப்போறவ பேரு சரணிகா...! நிச்சயமா இந்தப் பல்லவி கிடையாது...

    அழுத்தம்திருத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்ற கொழுந்தனை ‘ஞே’ என்று பார்த்தார் அனுத்தமா. கையில் திணிக்கப்பட்ட பிரசாதம் அவரைப் போலவே விழித்தது.

    என்ன சொல்றவ? என்று தன் மருமகளைத் திகைத்துப் பார்த்தார் வள்ளியம்மை.

    கொழுந்தன் சொன்னதைத்தான் நானும் சொன்னேன் அத்தை... நம்பிக்கை இல்லேன்னா நீங்க அவர்கிட்டயே பேசிப் பாருங்க... விஷயத்தைக் கேட்டதும் எனக்கே திடுக்குன்னு ஆயிடுச்சு...

    வீட்டில் அடுப்படி வேலைகளைத் தான் எடுத்துக்கொண்டு, மாமியாரை அந்நேரத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆக்கினார் அனுத்தமா.

    யய்யா... குமரேசா... என்றபடி அவன் அறைக்குள் எட்டிப்பார்த்தார் வள்ளியம்மை. ஊருக்குப் புறப்படும் மும்முரத்தில் அவன்...!

    என்னய்யா பொட்டி கட்டுறே? அதுக்குள்ள ஊருக்குப் புறப்படுற எண்ணமா? விசனத்துடன் கேட்டார் வள்ளியம்மை.

    எனக்கு இங்கே வரவே நேரமில்ல... தலைக்கு மேல ஜோலி கிடக்கு... என்னவோ... வற்புறுத்தி அழைச்சதால வந்தேன்...

    அம்மா வந்திருக்கும் நோக்கம் என்னவாக இருக்கும் என்று குமரேசனால் உணர முடிந்தது. இந்நேரம் அனுத்தமா அண்ணி தன் மெசஞ்சர் சர்வீசை செம்மையாகச் செய்திருப்பார்.

    சித்த இப்படி உட்காரு... உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்... மகனை அருகில் அமரச் சொல்லி அழைத்தார் வள்ளியம்மை. தன் தாயின் முகம் பார்க்கும்படி நாற்காலியை எதிரில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

    சரணிகா யாருன்னு கேட்கப்போறீங்க... அதுதானே? பளிச்சென்று விஷயத்திற்கு வந்தான்.

    நிறைய மாறிட்டேய்யா... வெடுக்குன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு கணக்கா பேசறே... வக்கீலுக்குப் படிக்க வெச்சதுக்கு எங்ககிட்டயே வாய்ஜாலமா சாமீ...! யாருய்யா அந்தப் பொண்ணு... அவளைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னியாம்... அப்பன், ஆத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்கவேண்டாமா? இங்கே அப்பாரு உனக்கு...

    அந்தப் பல்லவியைப் பார்த்து வெச்சிருக்கார்... அதுதானே சொல்ல வந்தீங்க...! அந்தப் பல்லவி கிட்டயே என் காதல் விஷயத்தைச் சொல்லிட்டேன். இனிமே என்னைக் கட்டிக்கச் சொல்லி நீங்க கேட்டாலும் அவ சம்மதிக்க மாட்டா...!

    அடியாத்தி... நெஞ்சில் கை வைத்துக்கொண்டார் வள்ளியம்மை.

    ம்… மா... ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க எல்லோர்கிட்டயும் உடைச்சுப் பேசிடலாம் - ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க... என்று சிரித்தான் குமரேஷ்.

    அந்தப் பொண்ணு நம்ம சாதி தானா? என்று கேட்ட அன்னையின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதில்...!

    இப்படியொரு இக்கட்டுல கொண்டு வந்து நிறுத்திட்டயே? ஒருவேளை நாங்க இதுக்கு சம்மதிக்கலேன்னா... சற்றே அச்சத்துடன் மகனைப் பார்த்தார் வள்ளியம்மை.

    என் முடிவுல நான் தெளிவா இருக்கேன்… ம்மா...! சம்மதிக்கறதும், சம்மதிக்காமப் போறதும் உங்க இஷ்டம்...! எங்கோ பார்த்துகொண்டு பதில் சொன்னான்.

    இங்கே உரையாடல் நடந்து கொண்டிருந்த அதேநேரம்... காரில் தன்னருகே அமர்ந்திருந்த மகளின் முகத்தைப் பார்த்தார் அனந்தவர்மன்.

    மீசை வைக்காத வர்மனாக அவரது மகள் சரணிகா...! அச்சுஅசல் அப்பாவைப் போன்ற ஜாடை... கம்பீரம்... அவருக்கு இருக்கும் அதே தைரியம்... தெனாவெட்டு...!

    சிறுகுழந்தையாய் மெத்தென்ற முயல்போல் அவர் முதுகில் அமர்ந்து யானைச்சவாரி செய்தவள்...

    இன்று பார்ப்பவரின் புருவம் உயருமளவுக்கு பருவமங்கையாக வளர்ந்து... வெளிநாட்டில் கல்வி முடித்து... வர்மன் ஆரம்பித்து வைத்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் நிறுவனத்துக்கு முதலாளியாகவும் பொறுப்பேற்றுவிட்டாள்.

    டெலிகா புட் பிராசஸிங் இன்டஸ்ட்ரீஸ் என்று பெயரிடப்பட்ட நிறுவன வளாகத்துக்குள் சொகுசுக்கார் நுழைந்து நின்றது.

    காரிலிருந்து மிடுக்குடன் இறங்கி நடந்தாள் சரணிகா. சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்து வந்தார் வர்மன்.

    அலுவலக அறைக்குள் நுழைந்ததும் ‘வெல்கம் பேபி...’ என்று வழக்கம்போல் புன்னகையுடன் வரவேற்றான்... பங்கஜ் அனந்தவர்மன்... சரணிகாவின் உடன்பிறந்த சகோதரன்.

    நான் உனக்கு பேபியா அண்ணா... என்று சிரித்தவள்... அப்பா... வந்துட்டு இருக்காரு... என்று சொல்ல... பயபக்தியுடன் எழுந்து நின்றான் பங்கஜ்.

    வாவ்... வாட் எ ஃபர்ஃபார்மன்ஸ்... என்று சரணிகா கேலி செய்ய... அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் வர்மன்.

    இந்த வயசுல கூட அண்ணன் உங்களைக் கண்டு பயப்படுறான்... ப்பா...

    அவன் ஏம்மா என்னைக் கண்டு பயப்படணும்? மிகப்பெரிய பிசினஸ் குரூப்ல இருந்து பொண்ணு எடுத்திருக்கான். சாரோட ஸ்டார் வேல்யூ எங்கேயோ போயிடுச்சு... கோடீஸ்வர அந்தஸ்து... நான் சாதாரண மேம்பால கான்ட்ராக்டர்... என்ன பங்கஜ்... நான் சொல்றது சரிதானே...! அந்த வயதிலும் கண்சிமிட்டிச் சிரித்தார் வர்மன்.

    ஊர்ல இருக்கற அத்தனை பெரிய புள்ளிகளையும் உங்க விரல்நுனியில வெச்சிருக்கீங்க... நீங்க சாதாரண மேம்பால கான்ட்ராக்டரா? சுவர்ணா என் வாழ்க்கையில கிடைச்சதுக்குக் காரணமே நீங்கதான்...! இன்னைக்கு நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும், என்னுடைய குரு, தெய்வம் எல்லாமே நீங்கதான்...ப்பா... என்றவன், தனது நாற்காலியை தந்தைக்கு விட்டுக் கொடுத்தான்.

    ஹச்... என்று மிகப்பெரிய தும்மல் ஒன்றைப் போட்டாள் சரணிகா.

    ஐஸ் வைக்கறதுக்கும் ஒரு அளவு இருக்கு பிரதர்... மொத்த அன்டார்டிகா ஐஸ் - பெர்க்கையும் தலையில வைக்கக்கூடாது... என்று அவள் மேலும் சிரிக்க...

    ஒரு கோடீஸ்வரனைக் கேலி செய்த குற்றத்துக்காக உனக்குத் தண்டனை காத்திருக்கிறது பெண்ணே...! ஊருக்குப் போன வக்கீல் திரும்பி வரட்டும்... எந்த செக்ஷன்ல தண்டனை தரலாம் - ன்னு கேட்போம்... என்று சிரித்துக்கொண்டே தன் மகனை

    Enjoying the preview?
    Page 1 of 1