Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sahana
Sahana
Sahana
Ebook266 pages2 hours

Sahana

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

“உங்க மனைவி சிறந்த பாடகிக்கான அவார்ட் வாங்கியிருக்காங்க. அவங்களைப் பற்றி நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?” கேமராக்கள் கைலாஷின் பக்கம் திரும்பின.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவ வாழ்க்கையோட பல உச்சங்களை அடையணும் ன்னு ஆசைப்படறவன் நான்..! கடவுள் அனுக்கிரஹத்துல அது ஒவ்வொண்ணா நடந்துட்டு இருக்குதுன்னு நினைக்கறேன். எனக்கு அவ நல்ல மனைவி. என் குழந்தைக்கு நல்ல தாய். என் அம்மாவுக்கு நல்ல மருமகள். உங்க மேடைக்கு கிடைத்த அருமையான பாடகி. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அமையற வாழ்க்கைத் துணை சரியா இருந்தா ஸ்ருதியும், லயமும் சேர்ந்த பயணமாய்... வாழ்க்கை எப்பவுமே இனிமையா இருக்கும். எங்க வாழ்க்கையும் அப்படித்தான். சஹானா எனக்குக் கிடைத்த வரம்.”

சஹானா-கைலாஷின் இனிய காதல் மேற்கொண்டு கதை வாயிலாக!

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580134506342
Sahana

Read more from Hansika Suga

Related authors

Related to Sahana

Related ebooks

Reviews for Sahana

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sahana - Hansika Suga

    http://www.pustaka.co.in

    சஹானா

    Sahana

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author//hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    'ஹா...ஆ' என்று நெற்றியைத் தடவிக்கொண்டாள் சஹானா. வண்டி சடன்-ப்ரேக் அடித்து நின்றது.

    சாரிம்மா... திடீர்ன்னு ப்ரேக் அடிக்க வேண்டியதாப் போச்சு. என்று மன்னிப்புக் கோரினான் டிரைவர் சிவநேசன்.

    கண்முன்னே இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதித் தெருவில் கிடக்க, அதில் ஒரு சின்னப்பெண்ணின் அழுகுரல் வேறு.

    உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்களே...? என்ன ஆச்சுன்னு பாருங்க? உதவி வேணும்-ன்னா நம்ம வண்டியிலேயே கூட்டிட்டுப் போங்க சிவா.

    மேடம்... உங்களுக்கு ரெகார்டிங்... க்கு...???

    நான் ஆட்டோ பிடிச்சுப் போய்க்கறேன். கூட்டம் கூடுது பாருங்க. ஒருத்தனும் உதவி செய்யமாட்டான். சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்பானுங்க.

    சில நிமிடங்களில் சிவநேசன் ஒரு சின்னப்பெண்ணைத் தூக்கிக்கொண்டு முன்னால் ஓடிவர, அவனைத் தொடர்ந்து ஒரு இளம்வயதுப் பெண்ணும், அவள் கணவனும் நொண்டிக்கொண்டே விரைந்து வந்தனர்.

    மூவருக்கும் உடலில் ஏற்பட்டிருந்த பலத்த சிராய்ப்புகள். அந்தக் குழந்தையின் நெற்றியில் புறப்பட்ட ரத்தம்... கோடாய் வழிந்து, மூக்கின் நுனியில் சொட்டிக் கொண்டிருந்தது.

    சீக்கிரம் போங்க. டேக் ஹர் டு தி நியர்பை ஹாஸ்பிடல். அவசரப்படுத்தினாள் சஹானா.

    'தேங்க்ஸ் மேடம்' என்று பெற்றவர்கள் இருவரும் கையெடுத்துக் கும்பிட,

    'அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். ப்ளீஸ் கோ.' என்று துரிதப்படுத்திவிட்டு ஆட்டோவுக்கு பார்வையைச் சுழற்று முன், மொலுமொலுவென கூட்டம் சூழ்ந்து கொண்டது.

    சஹானா மேடம்... யூ ஹாவ் டன் எ க்ரேட் ஜாப். ஒரே ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்.

    மேடம்... ரீசன்டா ரிலீஸ் ஆன படத்துல உங்க மெலடி சூப்பர் ஹிட். அடுத்து என்ன சாங் மேடம்..?

    மேடம்... அடிபட்ட அந்தக் குழந்தை உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா?

    விதவிதமான குரல்கள்.

    கூட்டத்திலிருந்து விடுதலை தேடியவளை சரக்கென்று ப்ரேக் அடித்து நின்ற அந்தக் கறுப்பு நிறக் கார் தன்னுள் சங்கமித்துக் கொண்டது.

    கூட்டம் விலகி வழிவிட, புயலாய் வண்டியைக் கிளப்பினான் கைலாஷ்.

    ரேஸ்ல ஓட்டுறதா நினைப்பா? கொஞ்சம் மெதுவா போங்களேன். என்று அவன் வேகத்தைக் குறைக்க முயன்றாள் சஹானா.

    ரேஸ் ப்ராக்டீஸுக்குத்தான் போயிட்டு இருந்தேன். 'மேடம்... தனியா நிக்கறாங்கன்னு, சிவா கை காமிச்சிட்டுப் போனான். ஸ்பீட் ஆட்டோமேடிக்கா அதிகமாயிடுச்சு.

    இன்னமும் இந்த கார் ரேஸ்ல கலந்துக்கறத விடலயா கைலாஷ். போன முறையே ரொம்ப சிவியரா அடிபட்டதே. அம்மா எவ்வளவு கவலைப்பட்டாங்க? எதுக்கு இந்தப் பிடிவாதம்?

    பிடிவாதத்தைப் பற்றி நீ பேசறியா சஹானா? அம்மாவைப் பற்றி இவ்வளவு கவலைப்படறே? என்கிட்ட ஒரு கோரிக்கை வெச்சா மாதிரி, அம்மா உன்கிட்டயும் ஒண்ணு கேட்டாங்களே..? ஞாபகம் இருக்கா?

    கைலாஷின் குத்தலான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சாலையில் கவனத்தைப் பதித்தாள்.

    வழக்கம்போல் நினைவுகளின் பயணம்... எப்போதோ முடிந்துபோன கல்லூரி வாழ்வின் ‘கடந்தகாலம்’ நோக்கி..!

    சற்று நேரத்தில்,

    சஹா... ரிக்கார்டிங் தியேட்டர் வந்தாச்சு? எந்த லோகத்துல இருக்கே?

    கைலாஷின் குரல் கேட்டதும் தன் கல்லூரி நினைவுகளை மூட்டை கட்டிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்குள் காலடி வைத்தாள்.

    வாங்கம்மா... டைரக்டர் சார் உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்காரு... என்று சொன்ன பரமுவிடம் லேசாகத் தலையசைத்துவிட்டு இசையோடு சங்கமிக்கச் சென்றாள் சஹானா.

    ஹாய் கைலாஷ்... ஹௌ லாங் ஷுட் ஐ வெயிட் ஃபார் யூ மேன்..?

    ரேஸ் பழகும் மைதானத்தில் அவனுக்காகக் காத்திருந்தாள் ஜெனி.

    அவளைத் துளியும் சட்டை செய்யாமல் அவன் கிரவுண்ட் மேனேஜரிடம் பேசுவதற்காக நடக்க, அவனை வழிமறித்தார் போல வந்து நின்றாள் ஜெனி.

    இப்பெல்லாம் நீ என்னை ரொம்ப அவாய்ட் பண்ணறே கைலேஷ். டோன்ட் யூ அன்டர்ச்டான்ட் மி.

    அவள் குரல் இழைந்து, குழைந்து வழிந்தது. அவள் மட்டுமல்ல. பல பெண்கள் முதலில் அவனுக்குத் தோழிகளாய் அறிமுகமாகி, பின்னர் வேறுவிதமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அவனிடமே அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.

    லுக் ஜெனி. ப்ரெண்ட்ஸா இருக்கற வரைக்கும் நான் யாரையுமே அவாய்ட் பண்றதில்ல. எல்லையைத் தாண்ட நினைக்கும்போதுதான்... கத்தரித்து விடுவதைப் போல விரல்களைக் காட்டினான்.

    அந்த சஹானா மட்டும் எல்லையைத் தாண்டலாமோ? கச்சேரி பண்ணுறவளை விட இந்த சாப்ட்வேர் ப்ரொக்ராமர் எந்த வகையில குறைஞ்சிட்டேனாம்?

    கைலாஷுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.

    யூ ஹாவ் காட் நத்திங் டு டாக் அபௌட் ஹர். போத் ஆஃப் யூ கான்ட் பி ஆன் ஈக்வல் ஸ்கேல். அடிக்குரலில் அவளிடம் கர்ஜித்தான்.

    ஜெனியின் கண்களில் கோபம் கொப்புளித்தது.

    சஹானாவையும், கைலாஷையும் ஒரு விருந்தில் சேர்ந்து பார்த்ததாக அவள் தோழி சம்விதா கூறியதிலிருந்து அடிமனத்தில் ஒரு எரிமலை சத்தமின்றிக் குமுறிக் கொண்டு இருக்கிறது.

    எத்தனை பெண்கள் வலை வீசினாலும் கைலாஷை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஜெனி தீவிரமாக இருக்கிறாள்.

    அவன் மீதும், அவன் கார் ரேஸ் மீதும் மட்டும் அவள் பைத்தியமாக இருக்கவில்லை. அவனுடைய தொழில் சாம்ராஜ்யம்...!

    கைலாஷ் ஃபுட் புராடக்ட்ஸ் சக்கைப் போடல்லாவா போட்டுக் கொண்டிருக்கிறது.

    அவனுடைய இரண்டு அக்காக்கள் திருமணம் முடிந்து ஒருத்தி கனடாவிலும், மற்றொருத்தி மொரீஷியசிலும் இருக்க, இங்கே அவனும், அவனது பெற்றோரும் மட்டுமே..!

    சரியாகக் குறி வைத்து அடித்தால் அத்தனை சொத்துகளுக்கும் ஜெனி தான் அல்லிராணி...!

    'மனம் தளராதே ஜெனி...! கஜினிமுகமது போல விடாமல் படை எடு. வெற்றி உனக்கே...'

    உள்மனது அவளை மீண்டும் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்க... விளைவு..?

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரும்பிப் பார்க்க, அவள் கன்னத்தில் சுளீரென்று விழுந்தது அறை.

    துடித்துப் போய்க் கைலாஷை நிமிர்ந்து பார்த்தாள் ஜெனி.

    ஹௌ மெனி டைம்ஸ் ஷுட் ஐ வார்ன் யூ? இந்த மாதிரி சீப் பிஹேவியர் எல்லாம் வேற எவன் கிட்டயாவது வெச்சிக்கோ?

    முகத்தில் மிருகத்தைக் காட்டி அடிக்குரலில் அவன் உறும, அவமானம் தாங்காமல் கிரவுண்டை விட்டு வெளியே ஓடினாள் ஜெனி.

    எரியும் கைகளைப் பார்த்துக்கொண்டே நின்றவனின் தோளைத் தொட்டான் ஷர்மா.

    ஃபேன்ஸைக் கை நீட்டி அடிச்சா மீடியாவுக்குத் தீனி போட்ட மாதிரி ஆயிடும். கன்ட்ரோல் யுவர்செல்ஃப் கைலாஷ். என்று தோள்மீது கைபோட்டு அரவணைத்து அழைத்துச் சென்றான்.

    அங்கே ரிக்கார்டிங் தியேட்டர்... இசைவெள்ளத்தில் மிதந்த மகிழ்ச்சியில் இருந்தது.

    வெரி நைஸ் ரெண்டரிங் சஹானா... இந்த அளவுக்கு மெலடியா வரும்ன்னு நானே எதிர்பார்க்கல... ரொம்ப திருப்தியா அமைஞ்சிருக்கு.

    தன்னிடம் கைகுலுக்கிய மியூசிக் டைரக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, டிரைவர் சிவநேசனுக்கு அழைப்பு விடுக்க நினைத்த நேரத்தில், கைலாஷின் வண்டி மீண்டும் ரிக்கார்டிங் தியேட்டர் கேம்பசுக்குள் நுழைவது தெரிந்தது.

    ரேஸ் ப்ராக்டீஸ் போறேன்னு சொன்னீங்க... அருகில் வந்து கேட்டவளிடம் பதில் சொல்லாமல் கதவைத் திறந்துவிட்டான். அவள் ஏறி அமர்ந்த பிறகும் வண்டி கிளம்பாமல் அங்கேயே நின்றது.

    கைலாஷ்... வாட் இஸ் ராங்? அதுக்குள்ள ப்ராக்டீஸ் முடிஞ்சுபோச்சா? மென்மையான அவள் குரல், அவனுக்குள் கனன்ற கனலை மெல்ல அணைக்கத் தொடங்கியது.

    "வேற ப்ரோக்ராம் எதுவும் இருக்கா... சஹா...? இல்ல கொஞ்சநேரம் பேசிட்டு இருக்கலாமா? ஐ ஆம் கம்ப்ளீட்லி அவுட் ஆஃப் மூட். இன்னைக்கு ப்ராக்டீஸ் வேண்டாம்-ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.'

    முரண்டு பிடிக்கும் குழந்தையின் சுபாவம்..! அவன் கோபத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

    எங்க போய் தனியா உட்கார்ந்து பேசினாலும் நாளைக்கு கவர்பேஜ்ல நாம ரெண்டு பேரும்தான் இருப்போம். பேசாம உங்க வீட்டுக்கே போயிடலாம். அம்மா இருக்காங்க தானே?

    அம்மா இல்லேன்னா வரமாட்டியா சஹா... என்மேல அவ்வளவு நம்பிக்கையா?

    ஐயோ... ஏன் இப்படி மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடறீங்க...? பெரிய ரேஸ்வீரன்னு பேரு..! மனசளவுல நீங்க இன்னும் சின்னக்குழந்தைதான் கைலாஷ். வண்டியெடுங்க...

    உரிமையோடு அவள் விரட்டிய பிறகே, அவன் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.

    சஹானா சாரல் தூவுதோ...

    சஹாரா பூக்கள் பூத்ததோ...

    கனவோ... நிஜமோ...

    காதல் மந்திரமோ...

    ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...

    இதைத்தான் ஒலிக்கவிடுவான் என்று தெரியும். வேற பாட்டே இல்லையா கைலாஷ்? சலிப்புடன் கேட்டாள்.

    எனக்கு இதுதான் பிடிக்கும். பிடிவாதமாய் வந்த பதில்.

    இவனிடம் பேசி ஆகாது என்று முகத்தை சாலை நோக்கித் திருப்பிக் கொண்டாள்.

    நிமிடங்களின் இடைவெளியில் பட்பட்டென்று அவள் தோள்களைத் தட்டினான் கைலாஷ்.

    கனவு கண்டது போதும்... இறங்கி வா. வீடு வந்து சேர்ந்தாச்சு. என்று அவன் குரல் ஒலித்ததும் அவசரமாக வண்டியை விட்டு இறங்கினாள்.

    வாம்மா... எப்பவும் ரெக்கார்டிங் தியேட்டர்தானா? கைலாஷ் இப்படி உன்னைப் பிடிவாதமா இழுத்துட்டு வந்தா உண்டு. வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா? உட்காரும்மா.

    தங்கம்... சஹா வந்திருக்கா பாரு. ஜூஸ் ஏதாவது பிழிஞ்சு கொண்டு வா.

    எப்போதும் போல் அன்றும் கைலாஷின் தாய் புவனாவின், அன்பான வரவேற்பு.

    எந்நேரமும் சாம்பிராணி மணம் கமழும் தெய்வீகம் நிறைந்த அழகான வீடு. பழமையின் புனிதம் மாறாமல் அந்தக் காலத்து தேக்குப்பலகை ஊஞ்சல். அதில் அமர்ந்து ஆடுவது என்றால் சஹாவுக்கு கொள்ளைப் பிரியம்.

    நீ வாட்டிக்கு ஆடிட்டே இருப்பியாம். நான் உனக்கு ஊட்டிவிடுவேனாம். என் பொண்ணுங்க காயத்ரி, வீணாவை நினைச்சு ஏக்கமா இருக்குடி. இதுக்குத்தான் பொண்ணுங்களை உள்ளூர் மாப்பிள்ளையா பார்த்துக் கட்டிக் கொடுக்கணும்-ன்னு சொல்றது. நினைச்ச நேரத்துக்கு அதுங்களைப் பார்க்கமுடியாம என்ன வாழ்க்கை இது? தன் மகள்களை நினைத்துக்கொண்டே சஹாவுக்கு ஊட்டிவிடுவார் புவனா.

    இந்தக் காலத்து அம்மாக்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் ஆயிட்டா. யாரு அம்மா யாரு பொண்ணுன்னு தெரியாத அளவுக்கு இருக்கா. ஆனால், உன் ஆன்ட்டியைப் பார் சஹு. பழைய பஞ்சாங்கம் மாதிரி புலம்பறா. என் பொண்ணுங்களுக்கு என்ன குறை? மகாராணி கணக்கா ஒருத்தி கனடாவுல ராஜயோகமா இருக்கா. இன்னொருத்தி மொரிஷியஸ் கடற்கரையே கதின்னு புருஷனோட சேர்ந்து ஆட்டம் போடறா. லெட் தெம் என்ஜாய் தேர் லைஃப். நம்ம சென்டிமன்ட்ஸ் அண்ட் ஃபீலிங்க்ஸுக்காக அவங்களை குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டவிடணுமா? என்ன நான் சொல்றது?

    வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை நையாண்டி செய்வார் சுந்தரராஜன்.

    நம்ம வீட்டுக்கும் காயு, வீணா மாதிரி ஒரு பொண்ணு வந்துட்டா என்னுடைய ஏக்கமும் குறைஞ்சிடும் இல்லையா? என்று ஜாடையாக சஹானாவைப் பார்ப்பார் புவனா.

    அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தும், புரியாதவள் போல் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருப்பாள் சஹா.

    அவள் மௌனம் எப்போது உடையும் என்று, ஊமையாய் அவள் முகத்தைப் பார்க்கும் கைலாஷ்.

    சஹா இந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் சம்பவங்கள் அன்றும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இன்னைக்கு பாவக்காய் தீயலா? சூப்பர்... வாசம் கமகமன்னு இருக்கே. என்று வழக்கமான அரட்டைக் கச்சேரி நடந்துகொண்டிருக்க,

    கைலாஷின் அறையிலிருந்து புறப்பட்டது மெல்லிய புல்லாங்குழல் இசை.

    சஹாவின் கால்கள் உரிமையெடுத்து அவன் அறை நோக்கி நடந்தன. அவன் உதட்டில் உரிமை கொண்டாடிய புல்லாங்குழலை எடுக்காமலே, ‘பாடு’ என்று கண் அசைத்தான்.

    அவள் குரலும், அவன் குழலும் இணைந்து தேன் சிந்தியது.

    தேடினேன்...ஓ...என் ஜீவனே...

    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே...

    நீ என் நாயகன்... காதல் பாடகன்...

    வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த புவனாவும், ராஜனும் இவர்களின் இந்த இசைப்பயணம் வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டுமே என்று ஆதங்கப்பட்டனர்.

    கைலாஷ்...!

    முரட்டுக்குதிரையாய் ரேஸ்கார் ஓட்டுபவனுக்குள் மெல்லிய இழையாய் இனிய நாதம். மனம் அமைதியற்று இருக்கும் நேரத்தில் மட்டுமே குழலின் நாதத்தைத் தேடுபவன்.

    இன்று சஹாவும் உடனிருந்ததால், அவன் கண்கள் அவள் முகத்தில் வேறு எதையோ எதிர்பார்த்து ஆவலாய்த் தேடின.

    இமைகள் மூடியிருக்க, லயித்துப் பாடிக் கொண்டிருந்தாள் சஹானா.

    நீ என் நாயகன்... காதல் பாடகன்...அன்பில் ஓடி...

    அதற்கு மேல் குரல் வராமல் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது.

    'அன்பில் ஓடி... இன்பம் கோடி என்றும் காணலாம்...’ அடுத்த வரியை எடுத்துக் கொடுத்தான் கைலாஷ்.

    அவன் எடுத்துக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. மேஜையில் தலைகவிழ்ந்திருந்தது. அழுகையில் குலுங்கியவளை வெறித்தபடி அமர்ந்திருந்தான் கைலாஷ்.

    'முட்டாள் பெண்ணே...! என்றுதான் இந்தத் துன்பத்திலிருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்ளப் போகிறாய்?'

    அவளுக்காக அழுதது அவன் மனம். அவள் அழுகைக்குத் தாலாட்டாய் மீண்டும் தொடர்ந்த குழலின் நாதம்.

    அவன் விழிகள் அவளைச் சுற்றிவர, அவள் நினைவோ ஆர்யாவைச் சுற்றி வரத் தொடங்கியது.

    நீ என் நாயகன்... காதல் பாடகன்... அன்பில் ஓடி இன்பம் கோடி...

    யாருடைய அன்பைத் தேடி ஓடப் போகிறாள்? என்ன இன்பத்தைக் காணப் போகிறாள்?

    உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் பிரிவதில்லை. அந்த நினைவுகளே பாரமாய்..!

    சஹானா யார்..? அவள் தொலைத்துத் தேடிய ஆர்யா யார்..?

    இவர்களுக்கு நடுவே கைலாஷ் எப்படி வந்தான்?

    கடந்தகாலம் என்ற கொசுவர்த்திச் சுருள் சுருண்டால் மட்டுமே புரியும்.

    2

    பிரம்மாண்டமாக விரிந்திருந்த அந்த வளாகத்தின் பசுமைப் புல்வெளியில் பட்டாம் பூச்சிகளின் சிறகடிப்பு.

    இளமைக்கூட்டத்தின் இனிய குதூகலம்.

    இவர்கள் அடிக்கும் லூட்டியைக் காண, கதிரவன் கூட மேகத்தின் பின் ஒளியாமல் தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தான்.

    செவிக்கு உணவாய் அமைந்த சங்கீதக் குரல்கள்.

    நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...!

    உந்தன் ராஜராகம் பாடும் நேரம்

    பாறை பாலூருதே... பூவும் ஆளானதே...!

    வசந்த்... அடுத்தது நீதான். அவங்க 'தே' ல முடிச்சிருக்காங்க.

    தேன் சிந்துதே வானம்... உனை எனை தாலாட்டுதே...

    மேகங்களே தரும் ராகங்களே... எந்நாளும் வாழ்க...

    பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்...

    பனிமேடை போடும் பால்

    Enjoying the preview?
    Page 1 of 1