Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Mattum!
Kaadhal Mattum!
Kaadhal Mattum!
Ebook168 pages1 hour

Kaadhal Mattum!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

“இந்த பயம், ‘யெஸ் ஆர் நோ’ டைலமா நிறைய பெண்களுக்கு ஏற்படத்தான் செய்யும் ஸ்வாகினி. எதுனால உனக்குத் திருமண வாழ்க்கையின் மீது இன்டரெஸ்ட் இல்லை? ஆர் யூ நாட் ப்ரிப்பேர்ட் ஃபாலிங் இன் லவ் வித் சம்ஒன்?”

“ஆர் யூ நாட் இன்டரெஸ்டட் இன் செக்ஸ்? ஆர் யூ நாட் அட்ராக்டட் டுவர்ட்ஸ் ஃபேமிலி லைஃப்?”

“நான் சொன்னது எல்லாமே, இந்த வயதுக்கு உண்டான நேச்சுரல் ஃபீலிங்க்ஸ் தானே!”

“உனக்கு எந்த வகையில கோளாறு? ஏன் வேண்டாம்’னு சொல்றே? உனக்கு ஏதாவது ஃபோபியா இருக்கா? நோ ப்ராப்ளம்! கன்சல்டேஷன் எடுத்துக்கலாம்.” அவன் தன் இஷ்டத்துக்கு சொல்லிக்கொண்டே செல்ல, அதிர்ந்து பார்த்தாள். “ஐயையோ! நீங்களா என்னவோ கற்பனை பண்ணிட்டுப் பேசாதீங்க சார். எனக்கு எந்த ஃபோபியாவும் இல்லை. எனக்கு இதுவரை யார்மீதும் காதல் வரவில்லை. கல்யாண ஆசையும் பொங்கவில்லை. எல்லாம் தானாகப் பொங்கி வரும்போது பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580134509550
Kaadhal Mattum!

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhal Mattum!

Related ebooks

Reviews for Kaadhal Mattum!

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Mattum! - Hansika Suga

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    காதல் மட்டும்!

    Kaadhal Mattum!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 1

    அயிகிரி நந்தினி... அமர்க்களமாய் ஒலித்துக் கொண்டிருந்த நேரம், ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, வீடு நோக்கி வேகமாக நடையைப் போட்டாள் ஸ்வாகினி.

    சின்னதாக ஒரு வாக்கிங் சென்றது போலவும் இருக்கவேண்டும். கோவிலுக்குச் சென்றது போலவும் இருக்கவேண்டும். டூ இன் ஒன். தினமும் நடப்பது!

    இன்று அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சிறப்பான நாள்! அவளுடைய பெரிய முதலாளி ராமதீர்த்தன் தன்னுடைய பொறுப்புக்களை, மகன் ஹர்ஷத் தீர்த்தனிடம் ஒப்படைத்துவிட்டு அலுவலக நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போகிறார்.

    என் மனைவியை அழைச்சிட்டு உலகம் முழுக்கச் சுற்றப் போகிறேன் டியர். டாடா... பை... பை! என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஸ்வாகினியிடம் விளையாட்டாகச் சொல்லிச் சிரித்தார் ராமதீர்த்தன்.

    தீர்த்தன் குடும்பம் யாரோ அல்ல! ஸ்வாகினியின் தாய் பத்மாசினிக்கு தூரத்துச் சொந்தம்.

    பத்மாசினி விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், தீர்த்தன் தன் கம்பெனி வேலையில் ஸ்வாகினியை அமர்த்தினார் என்றுகூடச் சொல்லலாம்.

    கொழுத்த சம்பளமாக ஐந்து இலக்கத்தை வாங்கி திவ்யமாக இருக்கிறாள் ஸ்வாகினி. அவள் செய்யும் வேலைக்கு அது அதிகப்படி! எதற்கு இந்தச் சலுகை என்று தீர்த்தனிடம் தான் கேட்கவேண்டும்.

    அவளுக்கென்று வருமானம் வந்ததும், சொந்தமாக கார் வாங்கி, அதற்கான தவணை கூட கால்வாசிக்கு மேல் கட்டி முடித்துவிட்டாள்.

    ராமதீர்த்தனுக்கு ஹர்ஷத் என்ற அருமை மகன் இருப்பதும், அவன் கனடாவில் ஒரு பிரபலமான தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததும் ஸ்வாகினிக்கு நன்றாகவே தெரியும்.

    அவன் இங்கே வருவான் என்றோ, பெரியவர் ராமதீர்த்தன் கம்பெனி நிர்வாகத்தை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வு பெறுவார் என்றோ கொஞ்சமும் அவள் நினைக்கவில்லை.

    ஹர்ஷத் பற்றி ஓரளவு பெரிய தீர்த்தன் அவளிடம் சொல்லியிருக்கிறார்.

    பழகுவதற்கு இனிய சுபாவமாம். சில நேரங்களில் rugged, சில நேரங்களில் சாக்லேட் என்று இரண்டும் கலந்த கலவையாம். இன்னும் அவனைப் பற்றி நிறையச் சொன்னார்.

    ‘அவனுக்கு இனிமேல் ரைட் ஹேன்ட், லெஃப்ட் ஹேன்ட் எல்லாம் நீதான்.’ என்று தீர்த்தன் சொன்னபோது, புரியாத மொழி கேட்டுவிட்டது போல் திருதிருவென்று விழித்தாள் ஸ்வாகினி.

    திரிபாதி, ஆரி, கமலா மேடம் என்று அலுவலகத்தில் எத்தனையோ அனுபவஸ்தர்கள் இருக்க, ஸ்வாகினி ரைட் ஹேன்டாமே! அவளுக்கு என்ன தெரியும்?

    இதுநாள் வரை, ராமதீர்த்தன் என்ன வேலைகள் சொல்லிக் கொண்டிருந்தாரோ, அதை அச்சுப்பிசகாமல் செய்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறாள்.

    இனி சின்ன தீர்த்தன் கட்டளையிடுவதைச் செய்யப் போகிறாள். அவ்வளவு தான்! இதில் ரைட் ஹேன்டாவது!

    என்னவோ ஒன்று... அவளுடைய பொழுது இப்படியே ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தால், சந்தோஷம் தான்.

    கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் ஸ்வாகினி. இன்னும் நேரமிருக்கிறது. சாவகாசமாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்பட்டால் போதும்.

    கோவில்ல கூட்டமா? அப்பவே போனவ... இப்பதான் வர்றே! என்றார் பத்மாசினி, நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டே!

    அம்பாளோட பேச்சுவார்த்தை நடத்திட்டு வர்றேன். வர்ற புது முதலாளி, தீர்த்தன் அங்கிள் மாதிரி சாஃப்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கணும். ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சு என் வேலைக்கு ஆப்பு வைக்காமல் இருக்கணும். ரெகமண்டேஷன்ல வந்தவ தானே’னு, லந்து பண்ணாமல் இருக்கணும். என்ன கிழிச்சிட்டான்னு கேட்டு, சம்பளத்தை ‘கட் ஷார்ட்’ செய்யாமல் இருக்கணும். எத்தனை ரிக்வெஸ்ட் சாமிகிட்ட வைக்க வேண்டியதா இருக்கு. என்று சிரித்தாள்.

    ஹர்ஷத் பற்றி உனக்கு வேணா தெரியாமல் இருக்கலாம். அவன் சின்னப் பையனா இருந்தபோதே எனக்கு அவனை நல்லா தெரியும். பெரியவங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கறவன். ராமதீர்த்தன் அப்பாயிண்ட் செய்த ஸ்டாஃபை அவன் வேண்டாம்’னு சொல்ல முடியுமா? சொல்லத்தான் விட்டுடுவேனா? என்று இல்லாத மீசையை முறுக்கினார் பத்மாசினி.

    அதானே! என் பத்மா ஒரு விஷயத்துல இறங்கிட்டால், அது ராங்கா போயிடுமா? அல்லது போகத்தான் விட்டுடுவாளா? என்றவாறே அங்கே வந்தார் ஸ்ரீநிவாசன்.

    ‘பத்மாசினி - ஸ்ரீநிவாசன்! அடடா! என்னவொரு பேர் பொருத்தம்.’ என்று வாசிக்காதவர்களே இல்லை.

    அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். மூத்தவள் அகிலாவை, அதே கனடாவில் வசிக்கும் பிரேம்ஜி என்ற சாப்ட்வேர் வல்லுநனுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

    இளையவள் ஸ்வாகினிக்கு சீக்கிரமே நல்ல வரன் பார்த்து திருமணம் முடிக்கவேண்டும் என்று பத்மாசினி தன் கணவரிடம் தொணதொணக்க ஆரம்பித்துவிட்டார்.

    ஆனால், ஸ்வாகினிக்கு இப்படியே உல்லாசமாக வேலைக்குப் போய்க்கொண்டு, கைநிறைய வருமானம் பார்த்துக்கொண்டு, ஏற்கனவே பழகிய தோழிகளோடும், புதிதாகச் சேர்த்துக்கொண்ட வட்டத்தோடும் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்க ஆசை.

    டாட்! அம்மா என்னவோ சொல்லிட்டுப் போகட்டும். எப்பவும் போல, பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு, என் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டே வாங்கப்பா. மேரேஜ் இஸ் எ டிராப்[trap]. சிக்கிட்டால் அவ்வளவுதான். என்று அப்பாவிடம் செல்லம் கொஞ்சி, எப்படியோ இன்றுவரை காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்வாகினி.

    டி! ஹர்ஷத் கிட்ட நல்ல பேர் எடு. ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன். அவனே உனக்குப் ப்ரமோஷன் போட்டுத் தர்ற மாதிரி இருக்கணும். என்று பிரேக்பாஸ்ட் முடித்து, தன் காரைத் தேடிச் சென்றவளுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார் பத்மாசினி.

    என்னப்பா இது? அம்மா ஒருபக்கம் ப்ரமோஷன் பற்றியும் பேசறாங்க... இன்னொரு பக்கம் கல்யாணத்தைப் பற்றியும் பேசறாங்க. இரண்டுல எதுக்கு நான் இம்பார்டன்ஸ் தர்றது? என்றாள் மகள்.

    எல்லா அம்மாக்களும் அப்படித்தான். நம்மள மாதிரி அப்பாவிகளைக் கன்ப்யூஸ் பண்றதுக்குன்னே அவதாரம் எடுத்திருப்பாங்க. எந்த ரூட்ல போகணும்’னு நீ டிசைட் பண்ணு. அண்ட், இன்னைக்கு நான் டிரைவ் பண்ணறேன். உன்னை ஆபீஸுல டிராப் பண்ணிட்டு, பாண்டுரங்கனைப் பார்க்கப் போகணும். மதியத்துக்கு மேல காரைக் கொண்டு வந்து, உன் ஆபீஸ் வாசல்ல நிறுத்திட்டு, கீயை செக்யூரிட்டி கிட்ட கொடுத்துட்டு போறேன். என்று ஸ்ரீநிவாசன் சொல்லவும் சரியென்று தலையாட்டிவிட்டு, காரில் ஏறி அமர்ந்தாள் ஸ்வாகினி.

    மகள் லோன் போட்டு கார் வாங்கியதும், ஸ்ரீநிவாசன் தன்னிடமிருந்த பழைய காரை ஏதோவொரு பாடாவதி விலைக்கு விற்றுவிட்டார். இப்போது புதிய வாகனம் சாலையில் ஜம்மென்று வழுக்கிக் கொண்டு செல்கிறது.

    என்ன விஷயம்’ப்பா? திடீர்னு பாண்டுரங்கன் அங்கிளை மீட் பண்ணப் போறீங்க? என்றாள், செல்லும் வழியில்.

    தன் மகளுக்கு வீடுகட்டித் தரணும்’னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தான். மாப்பிள்ளையோட கோரிக்கை இல்லையாம். தன்னுடைய காலம் முடியறதுக்குள்ள பெற்ற மகளுக்குப் பெருசா ஏதாவது செய்யணுமே’னு ரங்கனுக்கு ஆசை. பிரமோட்டர் கட்டுன வில்லா ஒண்ணு ஜம்முன்னு ரெடியா இருக்கு. பார்க்கப் போகலாமா’னு கூப்பிட்டான். பந்தாவா இந்தப் புது வண்டியிலேயே போயிட்டு வந்துடறேன். என்றார் ஸ்ரீநிவாசன்.

    ஏன்? ரங்கன் மாமா வண்டி என்னாச்சு? அவர்தான் ரெண்டு மாடல் கார் வெச்சிருக்காரே?

    ஒண்ணு ரிப்பேராகி கேரேஜ்’ல நிற்குது. இன்னொரு வண்டியை அவர் மகன் ஸ்ரீதர் எடுத்துட்டுப் போயிருக்கானாம். அவனோட மாமனார் வீட்டுல என்னவோ விசேஷம்.

    என்று உதட்டைக் குவித்தவள், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் சாலையில் கவனம் பதித்தாள்.

    அந்தப் பிரம்மாண்ட வணிக வளாகத்தின் வாசலில் அவளை இறக்கிவிட்டு, சொன்னபடி காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் ஸ்ரீநிவாசன்.

    அந்த பிஸினஸ் சென்டரில், ஸ்வாகினி வேலை செய்யவேண்டிய இடம், மூன்றாவது தளத்தில் இருக்க, லிப்டில் நுழைந்து பயணித்தாள்.

    புதிய நிகழ்வுகளை எதிர்ப்பார்த்து ஆபீஸ் அல்லோலகல்லோலமாய் இருக்கும் என்று நினைத்து வந்தால், எந்தவொரு இருக்கையிலும் ஆளில்லை.

    என்னம்மா... இங்கே நிற்கறீங்க? வழக்கமா மீட்டிங் நடக்கற ஹாலுக்குப் போங்க. எல்லோரும் அங்கேதான் அசெம்பிள் ஆகியிருக்காங்க. புது முதலாளியோட உத்தரவு அப்படி! என்று அடெண்டர் வடிவேலன் சொல்லிவிட்டு, லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு சென்றான்.

    மீட்டிங் ஹால் நோக்கி மிடுக்கான நடையுடன் சென்றாள் ஸ்வாகினி.

    சம்பிரதாயமான வணக்கங்கள், அறிமுகங்களுக்குப் பிறகு, அவள் தன் இருக்கையில் அமர, எல்லோரும் தனக்கு முன்பாகவே வந்துவிட்டதை அறிந்து மனத்துக்குள் வியந்து போனாள்.

    இன்று சீக்கிரமே அலுவலகம் வந்து சேரவேண்டும் என்று முன்னறிவிப்பு ஏதேனும் கொடுக்கப்பட்டதா? ஸ்வாகினியின் காதுக்கு அப்படி எந்தச் செய்தியும் வந்து சேரவில்லையே?

    அல்லது அவள்தான் சரியாகக் கேட்டுக்கொள்ளாமல் போனாளா? குழப்பத்துடன் அமர்ந்திருந்தவளை, ‘ஸ்வாகினி’ என்று ஹாலில் எதிரொலித்த குரல் உலுக்கிப் போட்டது.

    அழைத்தவன் ஹர்ஷத்!

    இருக்கையை விட்டு எழுந்து நின்றவள், திருதிருவென்று பார்க்க, ஐ டோல்ட் யூ டு எக்ஸ்பிளெயின் லிவேனா கான்ட்ராக்டர் டீல்ஸ்! அப்பாவுக்கு நீங்கதானே ரிப்போர்ட் ரெடி செய்து கொடுத்தீங்க. கமான்! ஸ்பீக் அவுட். என்றான் அதிகாரமாக.

    என்னத்தை ‘ஸ்பீக்’குவது?

    ராமதீர்த்தன், ஆரி ஆகிய இருவரும் கலந்தாலோசித்துச் சொன்னதை, அங்கேயே அமர்ந்து, இயந்திரம் போல் லேப்டாப்பில் ஏற்றிக்கொடுத்தாள் ஸ்வாகினி. அது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது.

    அந்த லிவேனா ஸ்பெஷல் ரிப்போர்ட்,

    Enjoying the preview?
    Page 1 of 1