Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthapurathu Maharani
Anthapurathu Maharani
Anthapurathu Maharani
Ebook231 pages2 hours

Anthapurathu Maharani

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

“எனக்குச் சத்தியம் பண்ணு.”

“என்னன்னு?”

“கொள்ளுப்பாட்டனை மாதிரி மூணு கல்யாணம் பண்ணமாட்டேன். பாட்டனை மாதிரி இரண்டு கல்யாணம் பண்ணமாட்டேன். அப்பனை மாதிரியும் இரண்டு தாரத்துக்கு ஆசைப்படமாட்டேன். வம்சாவளி புத்தி எனக்கு வரவே வராது. ஒழுக்கமா, ஒருத்தியை மட்டும் நேசிச்சு, அந்த ஒருத்தியோட மட்டும் கடைசி வரைக்கும் வாழ்வேன்’னு சத்தியம் பண்ணிக்கொடு.”

“எதே? இவ்வளவு கஷ்டமான சத்தியமெல்லாம் கேட்டால், நான் எப்படி பண்ணுறது?”

“என்னால முடியாது. அப்பா இரண்டு கல்யாணம் பண்ணால் என்ன? இரண்டு பேரையும் இரண்டு கண்ணா...” என்று அவன் முடிப்பதற்குள்,

“இது வேலைக்கு ஆகாது அத்தை. ரூமைப் பூட்டுங்க. சின்னவரு திண்ணையில ஒத்தையா படுத்துத் தூங்கட்டும்.” என்றாள் தர்ஷனா.

“அடப்பாவிகளா! அண்ணிங்களா நீங்கெல்லாம்? சரியான வில்லிங்க! என் அண்ணனுங்க இரண்டு பேரும் ஏன் பல்லி மாதிரி இருக்கானுங்க’ன்னு இப்பத்தான் தெரியுது.” என்றவாறே பாலாம்பிகைக்கு சத்தியம் செய்து கொடுத்தவன், புன்னகையோடு தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக அறை நோக்கி நடந்தான்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580134510054
Anthapurathu Maharani

Read more from Hansika Suga

Related authors

Related to Anthapurathu Maharani

Related ebooks

Reviews for Anthapurathu Maharani

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthapurathu Maharani - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அந்தப்புரத்து மகராணி

    Anthapurathu Maharani

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansiga Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    நகரத்தின் மிகப் பிரபலமான இருபாலர் கல்லூரி! சந்தோஷச் சிகரங்களாய், வண்ணச் சிட்டுக்களாய் இளமைப் பட்டாளம்!

    கல்லூரிக் காம்பவுண்டுக்குள், மரங்கள் அடர்ந்த பகுதியில், சற்றே இடைவெளி விட்டு நீண்டிருந்த சிமெண்ட் இருக்கைகள்!

    காயத்ரியும், ராமும் ஒருவரையொருவர் பார்த்தபடி!

    சொல்லு காயு! பதில் சொல்ல உனக்கு இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும்? என்றான் ராம்.

    அவனது பொறுமை ஆடிக்காற்றுப் பட்டமாக! கால் ஓரிடத்தில் நிற்காமல் இங்கு மங்கும் பாவும் சுபாவத்தினன்.

    இப்போது தன்னை இழுத்துப்பிடித்து அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.

    பற்கள் நறநறக்க... இதயம் வேகமாய் முணுமுணுக்கிறது. அவளோ, வாய்திறவா மடந்தையாக அவனையே வெறிக்கிறாள்.

    தன் மனத்தில் அடைந்து கிடப்பதை, காயத்ரியிடம் சொல்ல வேண்டும் என்று பலமுறை யோசித்து, இதோ, இன்று கல்லூரியின் இறுதி நாளை தேர்ந்தெடுத்து இருக்கிறான்.

    தீவிரமான சிந்தனை ரேகைகளைக் கண்களில் பதித்து, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், ஒருவழியாக வாய் திறந்தாள்.

    நீயும் பத்தோடு பதினொன்றா ராம்? இத்தனை நாட்கள் நண்பன் போல் சாதாரணமா பழகிட்டு, இப்ப பிரிஞ்சு போற நேரத்துல, எல்லோரையும் மாதிரி ‘லவ்’ சொல்லத்தான் காலேஜ் வந்தேன் என்றால் என்ன அர்த்தம்?

    தனக்குள் கனன்ற கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல் அமைதி யாகவே கேட்டாள்.

    அவள் ராமிடம் இதை எதிர்பார்க்கவில்லை. அவளைக் காதலெனும் தென்றல் இன்னும் தீண்டவும் இல்லை.

    கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து, ராம் அவளுக்கு நெருங்கிய நண்பன்.

    இருவருக்குள் காந்த நட்பு எப்படி உருவானது, ஆழம் பெற்றது என்று தெரியாது. ஆனாலும், மற்றவர்களை விட அதிகமாகவே நெருங்கிய தோழமை.

    தன்னுடைய வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்து கொண்டவள்,

    பின்னாளில் குடும்ப விஷயங்களைக் கூட அவனோடு உரையாடும் அளவுக்குத் துணிந்துவிட்டாள்.

    அவனும் தன் ஃபேமிலி பிஸினஸ், ஸ்டேட்டஸ், அம்மாவைப் பற்றி, வீட்டைப் பற்றி, உடன்பிறந்தவர்களைப் பற்றி, அண்ணிகளைப் பற்றி, தன்னுடைய கேளிக்கைகள், லட்சியங்கள் என்று எல்லாவற்றையும் ஒளிவு மறைவில்லாமல் அவளிடம் பேசுவான். நண்பர்களோடு அடிக்கும் கொட்டம் உட்பட!

    நம்மைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், ஒருசிலரிடம் மட்டுமே நம்மால் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள முடியும். அது மனித இயல்பு!

    தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் மட்டுமே மனம்விட்டுப் பேசமுடியும். குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உயரிய நட்பாக, நம் உள்ளமும் ஏற்றுக்கொள்ளும்.

    ‘வேவ்லெந்த்’ என்பது யாரோ இருவருக்கு இடையில் மட்டுமே சீராக அமையும்.

    அப்படி அமைந்தது தான் ராம்-காயத்ரி நட்பு!

    கல்லூரி முடியும் நாளன்று, ராமின் மனம் வேறு எதையோ அவளிடம் நாடுவதை, காயத்ரியால் துளியும் நம்ப முடியவில்லை.

    அவள் ஒரு கணம் கூட, அந்த வகையில் அவனைப் பற்றிச் சிந்தித்தது இல்லை.

    அவனும் அப்படியெல்லாம் சந்தேகப்படும் வகையில் என்றுமே நடந்துகொண்டது இல்லை.

    அவளிடம் மட்டுமல்ல... பொதுவாகவே பெண்களிடம் பேசும்போதும், பழகும் போதும் மிகமிக நாகரீகமாகவே நடந்து கொள்வான்.

    ஆனால், சம்மந்தப்பட்டவளே அறியாவண்ணம், இதயத்தின் ஆழத்தில் தன் நேசத்தைப் புதைத்து வைத்திருந்தான் போலும். இறுதி நாளன்று உடைத்துக் கொண்டது.

    பிளீஸ் ராம்! பிரியப்போகும் நேரத்தில், நமக்குள் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள் வேண்டாம். மகிழ்ச்சியான மனநிலையுடன் பிரிந்து செல்வோம். என்றவள்...

    ராம்! காதல் குற்றமல்ல! ஆனால், அது ‘ஆழ்ந்த காதல்’ ‘தெய்வீகக் காதல்’ என்றெல்லாம் நாமாகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. என்னைக் கேட்டால் அப்படியெல்லாம் ஒன்று இல்லவே இல்லை என்றுகூடச் சொல்வேன்.

    ‘அழியாக் காதல்’ என்று நாம் நினைப்பது, காலப்போக்கில், வெறும் மாயத் தோற்றமாகி மறைந்தும் போகலாம்."

    எனக்குள் சில கேள்விகள் ராம்! என் கேள்விகளுக்கு நீ பதில் சொன்னால் மட்டுமே, என்னிடம் கேட்டதை, நான் பரிசீலிக்க முடியும். குரலைக் கடுமையாக்கிக் கறாராகப் பேசினாள் காயத்ரி.

    திடீரென்று ஏன் தொனி மாறுகிறது என்று புரியாமல், ‘என்னவாம்’ என்று சீறும் சினத்துடன் புருவங்களை உயர்த்தினான்.

    லவ்வுக்கு கூட நேர்காணலா? சரிதான்.

    உன் அப்பா மிகப் பெரிய கோடீஸ்வரர்! ஏகப்பட்ட பிஸினஸ்! நிறைய டர்ன் ஓவர்! சமுதாயத்தில் பெரிய புள்ளி! அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நீ சுயமாக என்ன சம்பாதிக்கப் போகிறாய்?

    அவர் நிழலை விட்டு விலகி வந்தால், உன்னால் தனியாக நிற்க முடியுமா?

    அவர் தயவில்லாமல் உன்னால் ஒரு நாளாவது வாழ முடியுமா?

    எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாய் காயு? நான் எதற்காக அவர் நிழலை விட்டு விலகவேண்டும்? அவர் நிழலை விட்டு விலகும் அளவுக்கு என்ன நேர்ந்து விட்டது?

    இப்போது எதுவும் நேராமல் இருக்கலாம். காதல் விவகாரம் தெரிந்த பிற்பாடு ஏதாவது நடந்தால்?

    பூக்களமாக இருக்கும் வாழ்க்கை போர்க்களமாக மாறினால் என்ன செய்வதாம்?

    ஒருவேளை நம் காதலை உன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாவிட்டால்? தப்பித் தவறி எதிர்மறையாக ஏதாவது நடந்தால்?

    ராம்! நான் உன் காதலியாகவோ, மனைவியாகவோ மாறினால், என் காதலனிடம், கணவனிடம் எனக்கென்று நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அட்லீஸ்ட், குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளாவது இருக்கும்.

    அவற்றையெல்லாம் யாருடைய தயவும் இல்லாமல் உன்னால் நிறைவேற்ற முடியுமா?

    எனக்குப் பாதுகாப்பாக என் கணவன் இருக்கிறான்... எனக்கு அவனைத் தவிர, வேறு யாருடைய நிழலும் தேவையில்லை என்று என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா?

    உன் வீட்டார், நம் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டாலும், பிற்பாடு, எந்தச் சூழ்நிலையிலும், எந்த வகையிலும் என்னைத் தரம் தாழ்த்திப் பேச மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

    என்னுடைய வசதியை, அந்தஸ்தை என்றாவது குத்திக் காட்டினால், நான் என்ன செய்வேன், ராம்?

    ஐயையோ! போதும்... போதும்... நிறுத்து காயத்ரி! ஏன் இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறாய்?

    அப்படி நடந்தால் என்ன செய்வேன்... இப்படி நடந்தால் என்ன செய்வேன்... எத்தனை கேள்விகள்... எத்தனை கற்பனைகள்! இன்னும் ஒன்றும் நடக்கவே இல்லை... அதற்குள்... எத்தனையெத்தனை கேள்விகள்! ஐயையோ!

    குழப்பங்களின் மொத்தக் குத்தகை நீ காயு! இந்த நிமிடம்வரை யாரும் உன்னை எதுவும் சொல்லவே இல்லை. நீயாக ஏன் கற்பனை செய்கிறாய்?

    காயு! நான் நம் காதலைப் பற்றிப் பேசுகிறேன். நீ ஏதேதோ சுற்றி வளைக்கிறாய்! தேவையில்லாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருக்காதே! எனக்கு உண்மையான பதில் வேண்டும்.

    அப்படியில்லை ராம்! நீ உனக்குத் தேவையானதைப் பேசுகிறாய்! நான் எனக்குத் தேவையானதைப் பேசுகிறேன். இன்றைய கால கட்டம் அப்படிப்பட்டது.

    பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணங்களில் கூட, பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்கள் சுயமரியாதை இழந்து வாழ வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் போது, காதல் திருமணம் அதைவிட ரிஸ்கானது தானே!

    எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். செய்திகளில் கேட்டிருக்கிறேன். காதல் கணவன் நல்லவனாக இருந்தாலும், புகுந்த வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் ஏளனத் தொல்லைகள் ஏராளம். அவமரியாதைகள் ஏராளம். தராசுத்தட்டு சமமாக இல்லாவிட்டால் அதோகதி தான்.

    ராம்! உன் அண்ணிகள் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். உன் வீட்டின் மகாராணிகளைப் போன்றவர்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லை. ஓரளவு மட்டுமே வசதி படைத்தவள்.

    வீட்டிலும் சரி... வெளியிலும் சரி! எனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். அதைப் பாதிக்கும் வகையில் எதிலும் நான் சிக்கிக்கொள்ளக் கூடாது.

    காதல் என்ற பெயரில், பெரிய புளியங்கொம்பாகக் கிடைத்ததே என்று முன்பின் யோசிக்காமல் பற்றிக்கொண்டு, என் சுயமரியாதையை இழந்துவிட நான் விரும்பவில்லை. என்று காயு திருத்தமாக முடிக்க,

    ‘அடக்கடவுளே...’ என்று தலையில் கை வைத்துக் கொண்டவன், ‘விசித்திர ஜந்து’ என்ற ரீதியில் அவளைப் பார்த்தான்.

    உண்மையில் அந்தப் பார்வைக்கு அர்த்தமே வேறு!

    மண்டையைப் பிளப்பதற்கு ஏதாவது உருட்டுக்கட்டை கிடைக்குமா என்று அவனின் மனத்துக்குள் வன்மமாக இருந்தது.

    அந்தப் பெண்ணுக்கு நான்கு அறை விட்டு, காதலை ஏற்றுக்கொள்கிறாயா... இல்லையா... என்று மிரட்ட வேண்டும் போல அவனுக்குள் வன்மமாக இருந்தது.

    கடத்திக்கொண்டு போய்... ம்ம்... இல்லையில்லை... எடுத்த எடுப்பில் வன்முறை வேண்டாம்.

    ரோஜாவின் மென்மையாகக் காதல் சொன்னவனின் கோபத்தைக் கொத்தாகக் கிளறி வேடிக்கைப் பார்க்கிறாள்.

    அவளை மதித்து, ஆராதித்து ‘லவ்’ சொன்னவன் கிறுக்கனா?

    ஷேம்! ஷேம்! இப்படியொரு ‘மொண்ணை ரம்ப’ விளக்கத்தை சத்தியமாக அவளிடம் அவன் எதிர்பார்க்கவில்லை.

    தலைக்குப் பின்னால் இரண்டு கரங்களையும் கோர்த்துக் கொண்டவன்... ஆத்திரம் அடங்க கொஞ்சம் இப்படியும் அப்படியும் நடந்தான்.

    எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்காதே காயு! என் பொறுமைக்கு ஆயுள் இல்லை. இப்போது எதற்கு இந்த சுயமரியாதைப் புராணம்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நீ பயப்படுவது போலெல்லாம் ஒன்றுமே நடக்காது.

    ஒன்றுமே நடக்காது என்று சொல்வதற்கு நீயென்ன கடவுளா ராம்? அப்படி நடந்து விட்டால்? உன்னாலும், என்னாலும் எதைச் சரி செய்ய முடியும்?

    விசித்திரமாக இருக்கிறது காயத்ரி! காதலை ஒத்துக் கொள்வதில் இத்தனை தயக்கங்களா?

    வசதியாக எவன் கிடைப்பான்... வளைத்துப் போடலாம் என்று காத்திருக்கும் காலத்தில், இப்படியும் ஒரு மடஜென்மம்! உன்னை நான் என்னதான் செய்வது?

    ச...பா...ஷ்! ச...பா...ஷ்! வார்த்தை வந்து விழுந்ததா!

    "இப்போது நீயே சொல்லிவிட்டாய் அல்லவா... ‘எவன் கிடைப்பான் என்று...’

    இதைத்தான் உன் வீட்டில் இருப்பவர்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வார்கள்."

    அவள் பட்டென்று பதில் சொல்ல, அதிர்ந்து பார்த்தான்.

    என்ன அப்படிப் பார்க்கிறாய்? வாய்தவறிய வார்த்தையாக வந்துவிட்டாலும் வலி அதிகம்தானே! அதற்குத் தான் காதல் வேண்டாமென்கிறேன். என்று அவள் முடித்துக் கொள்ள,

    ச்சை! ஒவ்வொரு பேச்சுக்கும் குதர்க்கம்! கழுதையிடம் கூடக் காதலைச் சொல்லலாம். உன்னிடம் சொல்லி மாளாது.

    இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? என்றான் தரையை ஷூ காலால் எட்டி உதைத்த மிதமிஞ்சிய கடுப்புடன்.

    கோபப்படாமல் நான் சொல்வதை மட்டும் கேள் ராம். இந்தக் கல்லூரியை விட்டுச் சென்ற சில நாட்களில், ஏதாவது வேலையில் சேரப்போகிறேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கிறது.

    என் அப்பா, வங்கியில் நல்லதொரு பதவியில் இருக்கிறார். என் அம்மா ஐந்திலக்க சம்பளம் வாங்கும் டீச்சர். இருவரின் வருமானமே எனக்கும் போதும் என்று முடங்கியிருக்க முடியாது. நானும் சுயமாக எதையாவது சாதிக்க வேண்டும்.

    சாதாரணப் பெண்களைப் போல் என் அப்பா, அம்மா என்னை வளர்க்கவில்லை. உத்வேகம் அதிகமானவளாகவே வளர்த்து இருக்கிறார்கள்.

    எனக்கு வைராக்கியம் அதிகம். பிடிவாதம் அதிகம். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவள். என்னால் யாருக்காகவும் வளைய முடியாது... குனிய முடியாது.

    ராம்! எனக்கென்று ஒரு நல்ல வேலை, நல்ல வருமானம், நல்ல தகுதியை ஈட்டிக்கொண்ட பிறகே, என்னால் காதலைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ யோசிக்க முடியும்.

    காயத்ரி நச்சென்று பேசி முடிக்க, வேறு வழியில்லாமல் ‘சிவனே’ என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

    அவளை அப்படியே இழுத்துப் போட்டு ‘டங்கு... டங்கு’ என முழங்கையால் முதுகிலேயே நாலு குத்து குத்தினால் என்னவென்று ஆத்திரமாக இருந்தது.

    வாழைத்தண்டு போல் நெகுநெகுவென்று இருப்பவளுக்கு அவன் அடிக்கும் அடியில் நடுத்தண்டு உடைந்தாலும் பரவாயில்லை.

    இவளெல்லாம் ஒரு காதலியா?

    முத்தமிட வேண்டிய நேரத்தில், முழ நீளத்திற்கு பேசிக் கொண்டிருக்கிறாள்.

    வேறொருத்தியாக இருந்தால், அவன் காதல் சொன்ன வேகத்தில், கேண்டீனுக்குள் ஓடி, கேக் வாங்கி வந்து, அவனுக்கும் ஊட்டிவிட்டு, தன் க்ரீம் அப்பிய உதடுகளால் ‘இச்... இச்...’ கொடுத்திருப்பாள்.

    இந்த ‘லூசுப்பெண்’ என்னடாவென்றால், கழுத்தையறுக்கும் வகையில் மொக்கைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறாள். சத்தியமாக இப்படியொரு ரியாக்ஷனை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

    ஹூம்... என்ற உறுமலுடன், அசாத்திய கோபத்துடன் கேசத்தைக் கலைத்து விட்டுக் கொண்டவன், அடங்காத சினத்துடன் அவளையே பார்த்தான்.

    என்னென்னவோ சொல்லித் திட்டவேண்டும் என்று நாக்கு துடித்தது.

    அவள் குரல்வளையைக் கடித்து இரத்தம் குடித்துவிடலாமா அல்லது?

    ‘கண்ட்ரோல் பண்ணு மாமே! எதிர்ல நிக்கறது நம்ம பசங்களா இருந்தால், வண்டவண்டயா வையலாம். அவனுங்களும் சொரணையே இல்லாமல் வாங்குவானுங்கோ! இவ பொண்ணு மாமே! டப்புன்னு பிச்சுக்கிட்டு ஓடிடுவா!’

    ‘இவ நீ நினைச்ச மாதிரி இல்ல மாமே! சரியான பிரசங்க பார்ட்டி! கொஞ்சம் வேற மாதிரி டீல் பண்ணணும்.’

    ‘நீ அவகிட்ட லவ் சொல்லும்போதே தலைக்கு மேல டான்ஜர் லைட் எரியுது. லைஃப்’ல ஒவ்வொரு

    Enjoying the preview?
    Page 1 of 1