Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Idam Maarum
Idhayam Idam Maarum
Idhayam Idam Maarum
Ebook233 pages2 hours

Idhayam Idam Maarum

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

"விளையாட்டு பண்ணாம நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு கார்த்திக். திவ்யா பற்றி உன்னுடைய அபிப்ராயம் என்ன?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் நிருபமா.

ஒரு கணம் திடுக்கிட்டவன் உடனே சுதாரித்துக் கொண்டு "ஷி இஸ் யுவர் ஃபிரெண்ட். அவளைப் பற்றி நான் நினைக்க என்ன இருக்கு?" என்றான்.

ஸ்வரூபனின் பதில் நிருபமாவுக்கு எரிச்சலை மூட்டியது.

"உனக்கும் அவளுக்கும் ஒண்ணும் இல்லைன்னா சார் எதுக்கு கவிதை எல்லாம் அனுப்புனீங்க? இனிமேல் நீ என்கிட்ட எதையும் மறைக்க முடியாது கார்த்திக். ஐ நோ எவரிதிங். என்ன கோபம் உனக்கு அவ மேல? உங்க ஸ்டார்ட் எப்படியோ எனக்குத் தெரியாது. பட்..நௌ ஷி இஸ் இன் லவ் வித் யூ. ஒரேயடியா அவளை நோகடிக்காத கார்த்திக். நடந்த விஷயத்துல உங்க இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. இடம், பொருள், ஏவல் தெரியாம பேசியிருக்கீங்க.”

மற்றவை கதையில்!

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580134508502
Idhayam Idam Maarum

Read more from Hansika Suga

Related authors

Related to Idhayam Idam Maarum

Related ebooks

Reviews for Idhayam Idam Maarum

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Idam Maarum - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இதயம் இடம் மாறும்

    Idhayam Idam Maarum

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-20

    அத்தியாயம்-21

    அத்தியாயம்-22

    அத்தியாயம்-23

    அத்தியாயம்-24

    அத்தியாயம்-25

    அத்தியாயம்-26

    அத்தியாயம்-27

    அத்தியாயம்-28

    அத்தியாயம்-29

    அத்தியாயம்-30

    அத்தியாயம்-31

    அத்தியாயம்-32

    அத்தியாயம்-33

    அத்தியாயம்-34

    அத்தியாயம்-35

    அத்தியாயம்-1

    ஜோதா அக்பர் பாடலை மனத்துக்குள் உருப்போட்டபடி ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தாள் திவ்யா.

    ரியர்வியூ மிரரில் அந்த லேன்சர் தன்னை பின்தொடர்வது தெரிந்தது.

    சில நாட்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. தினமும் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது அவள் ஸ்கூட்டியை ஒரு லேன்சர் கார் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    முதலில் திவ்யா அதை சாதாரண விஷயமாகத்தான் நினைத்தாள். தன்னைத் தான் அந்த வண்டி தொடர்கிறது என்பது இந்த இரண்டு மூன்று நாட்களில் நிச்சயமாகத் தெரிந்தது.

    திவி இதற்கெல்லாம் பயப்படும் ரகம் இல்லை. தன்னைத் தொடர்வது யாராய் இருக்கும் என்ற மண்டைக்குடைச்சல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு இருந்தது.

    அவள் வீடு இருக்கும் தெருமுனை வரை வந்துவிட்டு, அந்த லேன்சர் அப்படியே நேராகச் சென்றுவிடும்.

    அதில் இருப்பது, வில்லனோ, ஹீரோவோ யாராக இருந்தாலும் திவ்யாவுக்கு தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.

    ஏற்றப்பட்ட கறுப்புக் கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றும் தெரிய மாட்டேன் என்கிறதே..!

    ‘சரி விடு திவி. சம்பளம் இல்லாமல் உனக்கு ஒரு செக்யூரிட்டி கார்ட்.’ தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள் திவ்யா.

    சிநேகம் என்று கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்ட தங்க நிற எழுத்துக்கள். அழகான சிறிய பங்களா.

    வசுந்தரா வாசலிலேயே காத்துக் கொண்டிருக்க, மம்மி செல்லம். எனக்காக வாசலையே பார்த்துட்டு இருக்கீங்களா என்றபடி உள்ளே நுழைந்தாள் திவ்யா.

    வசுந்தரா-சுந்தரம் தம்பதியின் ஒரே செல்ல புத்ரி. வசுந்தரா இல்லத்து அரசி. சுந்தரம் ஒரு புகழ் பெற்ற வாரப் பத்திரிகையில் சப்-எடிட்டராக இருந்தார்.

    திவிக்கு சாஃப்ட்வேர் துறையில் உள்ளூரிலேயே ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் வேலை. ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு துள்ளல் நடையோடு உள்ளே சென்றவளைப் பின் தொடர்ந்தார் வசுந்தரா.

    முகம் அலம்பி வேறு உடைக்கு மாறி அம்மா... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்... வயிறு கா..கா..ன்னு கத்துது. என்றபடியே திவ்யா தன் அறையில் இருந்து வெளியே வர,

    டைனிங்டேபிள் மீது காலிஃபிளவர் குருமாவும், மெத்தென்ற சப்பாத்திகளும் தயாராக இருந்தன.

    குருமா வாசனையை மோப்பம் பிடித்தபடி திவ்யா அமர, மகள் சாப்பிடுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார் வசுந்தரா.

    விழிக்குள் என்னைச் சிறை பிடிக்கும் அம்மாவே... என்ன ஆச்சு? ஏன் அப்படியே பார்த்துட்டு இருக்கீங்க? திவ்யா தன் தாயை செல்லமாய் வம்புக்கு இழுக்க...

    இன்னைக்கு வசீகரன் வந்திருந்தான். என்று வசுந்தரா சொல்லி முடிக்கவும் திவ்யாவின் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போனது.

    எத்தனைமுறை சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு உறைக்க மாட்டேங்குது. கடுப்பாக முணுமுணுத்துவிட்டு கைகழுவ எழுந்து போனாள் திவ்யா.

    சரியா சாப்பிட்டுப் போ திவி. அரைகுறையா முடிச்சிருக்கே. வசுந்தரா பதட்டமாகச் சொல்ல...

    அவன் பேர் கேட்டாலே எனக்கு மூட்-அவுட் ஆகும்-ன்னு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு அவனைப் பற்றிப் பேசிக்கிட்டு? நீங்களே சந்தோஷமா சாப்பிடுங்க.

    தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். மனம் தீக்கங்குகளாய் புகைந்தது.

    திவ்யாவின் தாய்மாமன் மகன் வசீகரன்.

    தாய்மாமனுக்கு உள்ளூரிலேயே பெரிய அளவில் டிம்பர் வியாபாரம். வசீகரன் அவருக்கு ஒரே மகன். படித்தது என்னவோ விஷூவல் கம்யூனிகேஷன். ஆனால் பார்த்துக்கொள்வது அப்பாவின் டிம்பர் வியாபாரம்.

    படிப்பிலோ, அழகிலோ, அந்தஸ்திலோ எந்தக் குறையும் சொல்வதற்கே இல்லை. குணம் மட்டும் அவ்வப்போது கேள்விக்குறியாக வளைந்து விடும்.

    அவனுக்கிருந்த சிகரெட் பழக்கத்தைக் கூட ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் குடி. அது திவ்யாவால் சகிக்கவே முடியாத ஒரு விஷயம்.

    வாரம் தவறாமல் நண்பர்களோடு சேர்ந்து ஏற்றிக்கொண்டால் மட்டுமே ஜென்மசாபல்யம் என்று நினைக்கும் அளவுக்கு போதையைத் தேடுபவன்.

    அந்த ஒரு காரணத்திற்காகவே திவ்யா அவனை வெறுக்கிறாள். அவனோ திருமணத்திற்கு பின் எல்லாவற்றையும் விட்டுவிடுவதாக சத்தியம் செய்கிறான்.

    இதை யார் நம்புவது என்று திவ்யா அவனை வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். அவள் எத்தனைமுறை வெறுத்து ஒதுக்கினாலும் மீண்டும் வீடு தேடி வந்து அம்மா மனதைப் பேசிப்பேசியே கரைக்கிறானே என்று திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது.

    எண்ண ஓட்டங்களில் மூழ்கி இருந்தவளை வசுந்தராவின் குரல் கலைத்தது.

    திவ்யா. கோவிலுக்குப் போயிட்டு வரலாம் வர்றியா?வசுந்தரா அறைக்கதவைத் தட்ட...

    பத்து நிமிஷத்துல ரெடியாகி வந்திடறேன். கதவைத் திறக்காமலேயே பதில் சொன்னாள் திவ்யா.

    அன்று ஏகாதசி. பெருமாள் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு திவ்யா டோக்கன் வாங்கிக் கொண்டிருக்க, அப்போதுதான் அந்த லேன்சர் கார் கண்ணில் பட்டது.

    தேவி தரிசனத்திற்காக தினமும் அவளைப் பின்தொடர்ந்து வரும் அதே லேன்சர் வண்டி. ஒரு பெண்மணி அதிலிருந்து இறங்க,

    இறக்கிவிட்ட வேகத்தில் வண்டி வேகமெடுத்துச் சென்றது.

    திவ்யா.. என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கே. கை நிறைய துளசியும், தாமரை மொட்டும் வாங்கிக்கொண்டு வசுந்தரா நின்று கொண்டிருக்க,

    ஒண்ணுமில்லம்மா... தெரிஞ்சவங்க வண்டி மாதிரியிருந்தது. அதுதான் பார்த்துட்டு இருந்தேன். சமாளித்தாள் திவி.

    வசு..ந்..த..ரா...

    புதிய குரல் கேட்டுத் தாயும், மகளும் திரும்பிப் பார்க்க, லேன்சரில் இருந்து இறங்கிய அந்தப் பெண்மணி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அத்தியாயம்-2

    ஹேமாக்கா... திருச்சில இல்ல இருந்தீங்க... எப்ப சென்னை வந்தீங்க? வசுந்தரா மகிழ்ச்சியுடன் வந்தவரை விசாரிக்க, திவ்யா குழப்பமாகப் பார்த்தாள்.

    அவருக்கு இங்க ட்ரான்ஸ்பர் ஆகி ஆறு மாசம் ஆகுது வசுந்தரா. திருச்சில உன் உறவுக்காரங்க கிட்ட விவரம் சொல்லியிருந்தேனே. உனக்குத் தகவல் சொல்லலையா? நீதான் திருச்சி பக்கம் வந்தே நாலு வருஷம் ஆச்சே. இது உன் பொண்ணு திவ்யா தானே.. என்றார் ஹேமலதா.

    என் பொண்ணு தான் ஹேமாக்கா. பேர் கூட ஞாபகம் வெச்சிருக்கீங்க. நாங்க இப்போ திருச்சி பக்கம் வர்றதில்ல. ஒரு விஷயத்துல அவங்களுக்கும் என் வீட்டுக்காரருக்கும் வாய்த் தகராறு ஆகிடுச்சு. திவ்யா. இவங்களை ஞாபகம் இருக்கா? அத்தை வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்தாங்க. அங்கே ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தப்ப, நீ கூட அவங்க வீட்டு கார்டன் ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னியே. வசுந்தரா தன் மகளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க,

    ஆமாம்..மா. இப்ப ஞாபகம் வருது. சாரி ஆன்ட்டி. நான் ஒரே ஒருமுறை உங்களைப் பார்த்தது. திடீர்னு இங்க பார்க்கறப்ப டக்குன்னு ஞாபகம் வரல. ரியலி சாரி ஆன்ட்டி.

    ஹேமலதாவை அடையாளம் கண்டுகொண்ட தினுசில் அவள் பேச, மூவரும் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வரத் தொடங்கினர்.

    திவ்யாவின் நினைவுகளோ ஸ்வரூபனை சுற்றி வரத் தொடங்கியது.

    ஒரே ஒருமுறை அவனைப் பார்த்திருக்கிறாள். நான்கு வருடம் முன்பு திருச்சியில் ஒரு திருமணத்திற்குப் போன நேரம்.

    அந்தப் பங்களா முகப்பை அலங்கரித்த பிரம்மாண்ட மலர் தோட்டத்தை விழி விரிய பார்த்தபடி உள்ளே சென்றாள் திவ்யா.

    ஒற்றை ரோஜாவையே ஒரு மணி நேரம் ரசித்துக்கொண்டு இருப்பாள். அங்கே வண்ணமலர்கள் அணிவகுத்து நிற்க, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் திவி.

    வசுந்தரா ஹேமாவுடன் உரையாடியபடி வீட்டுக்குள் சென்றுவிட, அதைக் கவனிக்காமல் தோட்டத்தை ரசிப்பதில் மூழ்கியிருந்தாள் திவ்யா.

    திடீரென்று டாமியின் குறைக்கும் சத்தம் வெகு அருகில் கேட்க, அரண்டு போய் பார்த்தாள்.

    டாமி... கம் ஹியர். அவங்க நம்ம கெஸ்ட்.

    தன் பொமரேனியனை அழைத்தபடி வந்து கொண்டிருந்தான் ஹேமலதாவின் ஒரே மகன் ஸ்வரூபன். வசுந்தராவைத் தேடி உள்ளே விரைந்தாள் திவ்யா.

    திவ்யா... நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன் என்ன யோசனையில இருக்கே.

    வசுந்தராவின் குரல் பழைய நினைவுகளை கலைக்க, என்னம்மா என்றபடி அம்மாவின் கையில் இருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டாள். மீண்டும் நினைவுகள் ஸ்வரூபனிடம் திரும்ப...

    ‘இந்தம்மா வந்திறங்கிய அதே வண்டிதானே தன்னைத் தினமும் தொடர்கிறது. அப்படியானால் அந்த லேன்சரில் தன்னைத் தொடர்ந்து வருவது ஸ்வரூபனா?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் நின்றாள்.

    மூலவருக்கு அர்ச்சனை செய்து, மற்ற சந்நிதி தெய்வங்களை வணங்கி, வெளியே வந்த போது ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.

    அதற்குள் ஹேமாவும், வசுந்தராவும் போன கதை, வந்த கதை எல்லாம் பேசி முடித்திருக்க, இருவரும் தங்கள் முகவரிகளையும், அலைபேசி எண்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    திருச்சி பழக்கம் சென்னையிலும் தொடரப் போகிறதா அல்லது வாழ்க்கை வேறுவிதத்தில் வட்டமிடப்போகிறதா என்பது பெருமாளுக்கே வெளிச்சம்.

    திவ்யா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுப்பதற்கும், அந்தக் கார் மீண்டும் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

    அதிலிருப்பது ஸ்வரூபனா என்று பார்த்துவிடும் ஆவலில் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள் திவ்யா. காரிலிருந்து டிரைவர் இறங்க சப்பென்று ஆனது.

    சின்னய்யா எங்கப்பா? நீ வந்திருக்கே. என்று டிரைவரிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் ஹேமலதா.

    தம்பியும், பெரியவரும் அவசரமா ஏர்போர்ட் வரைக்கும் போயிருக்காங்க. உங்களைக் கோவில்ல இருந்து அழைச்சுட்டு வரச் சொல்லி சின்னய்யா எங்கிட்ட சொல்லிட்டுப் போனாரும்மா. டிரைவர் பணிவாகச் சொல்ல,

    பாரு வசுந்தரா. என்னைக் கூட்டிட்டுப் போக ஸ்வரூபன் வருவான். நீயும் அவனைப் பார்த்த மாதிரியிருக்கும்-ன்னு நினைச்சேன். கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு சுத்தறான். திருச்சியில கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒண்ணு நடத்தறான். இங்கே வந்த பிறகு ஒரு பிரான்ச் ஆரம்பிச்சிருக்கான். எப்ப பாரு வேலை... வேலை...

    அவனுக்கும் காலாகாலத்துல ஒரு கால்கட்டு போடணும். அந்தப் பெருமாள் என்ன நினைச்சிருக்காரோ. வரேன்மா திவ்யா. போயிட்டு வரேன் வசு. இரண்டு பேரும் அவசியம் வீட்டுக்கு வரணும்...பா. ராஜூ... வண்டி எடுங்க. என்று ஹேமலதா உத்தரவிட, திவ்யாவும் தன் ஸ்கூட்டியை முடுக்கினாள்.

    வீட்டுக்கு வந்ததும் கைகால் அலம்பிய பின், டிவியை ஆன் செய்தாள் திவ்யா. அதற்குள் சுந்தரத்தின் கார், வாசலில் ஹாரன் அடிக்க, துள்ளலோடு ஓடினாள்.

    சிறுவயதில் ஆரம்பித்த பழக்கம். ஹை... அப்பா வந்தாச்சு என்று குதித்துக் கொண்டே ஓடியது, இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    பார்த்துப் போ திவி. இன்னும் பாப்பான்னு நினைப்பு. வசுந்தரா சத்தமாக சொல்லிக் கொண்டிருக்க....

    அவ எப்பவுமே எனக்கு சின்னக்குழந்தை தான். நீ இங்கே இருக்கறவரை இப்படியே இருடா செல்லம். என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.

    இங்க இருக்கற வரைக்குமா? வேற எங்கேயாவது போகப் போறேனா என்ன? திவ்யா கண்களை அகல விரித்து கேட்க,

    ஒரு NRI மாப்பிளையோட ஜாதகம் வந்திருக்கு. ரொம்ப நல்ல இடம். பொருந்தி வந்தா உன்னை அவரோட ப்ளைட் ஏத்திற வேண்டியது தான். சுந்தரம் சிரித்துக் கொண்டே சொல்ல,

    உங்களுக்கும், அம்மாவுக்கும் வேற வேலைதான் என்ன? எப்ப பாரு கல்யாணம் பத்தியே பேசிட்டு... போங்கப்பா. அலட்சியமாகச் சொல்லிவிட்டு திவ்யா டைனிங்டேபிளில் அமர,

    இரவு உணவு மட்டும் மூவரும் சேர்ந்தே உண்பது என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டமாக இருந்தது.

    அத்தியாயம்-3

    மறுநாள் அலுவலக நேரம். எப்போதும் போல் திவ்யா தன் பணியில் ஈடுபட்டிருக்க...

    திவி. இன்னைக்கு ஒரு புது புராஜக்ட் உன் டேபிளுக்கு வந்திருக்குப்பா. ஹெட் உன்னை வந்து பார்க்கச் சொன்னாரு..ப்பா.

    உடன் பணிசெய்யும் சந்தியா சொல்லிவிட்டுப் போக, அடுத்த சில நிமிடங்களில் திவ்யா தன் குழுவின் தலைவியான ரீமாவின் அறையில் இருந்தாள்.

    நாற்பது வயதைத் தாண்டியவர் ரீமா. ஹெட் என்ற பந்தா எதுவும் இல்லாமல் சகதோழி போல பழகுவார்.

    பிறந்த இடம் கொல்கொத்தா என்றாலும், பல வருடம் சென்னையிலேயே தன் கணவருடன் தங்கிவிட்டதால் தமிழ் தடங்கலின்றிப் பேச வரும். எழுதும்போது மட்டும் எதற்கு எந்த எந்த என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருப்பார்.

    திவி... இது ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கேட்டிருக்கற டிசைனிங். பார்ட்டி புதுசு. நாம செஞ்சு தர்ற டிசைனிங் பெஸ்ட் இம்ப்ரஷன் க்ரியேட் பண்ணணும். உன்னால ஹேண்டில் பண்ணமுடியுமா இல்ல வேற டேபிளுக்கு அனுப்பட்டுமா? உதவிக்கு சுசிதாவையும், சந்த்யாவையும் சேர்த்துக்கலாம். வேறு எந்த டீடெயில்ஸ் வேணும்னாலும் அந்த கம்பெனி ஹெட்டையே கான்டாக்ட் பண்ண சொல்லியிருக்காங்க. ஜஸ்ட் கோ த்ரூ தி ஃபைல்.

    ரீமா சொல்லி முடிக்க ஃபைலை எடுத்துக்கொண்டு தன் டேபிளுக்கு வந்தாள் திவ்யா.

    Enjoying the preview?
    Page 1 of 1