Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sindhum Pani Vaadai Kaatru
Sindhum Pani Vaadai Kaatru
Sindhum Pani Vaadai Kaatru
Ebook283 pages2 hours

Sindhum Pani Vaadai Kaatru

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

“டேய்.. ரேகா..டா..” என்று கத்திய வினோத்தை அதிர்ந்து பார்த்தான் மாதவ்.

“என்னடா உளர்றே? ஆவி அவதாரம் எடுத்து வந்திருக்காளா? எங்கே? அவளுக்கும் சேர்த்து ஒரு கப் டீ ஆர்டர் பண்ணவா?”

“முட்டாள் மாதிரிப் பேசாதே. சீக்கிரம் இங்கே வா. இந்த ஸ்க்ரீனைப் பாரு.”

வினோத் சுட்டிக்காட்டிய திரையில் அந்தப் பெண்ணைப் பார்த்தான் மாதவ்.

கம்பெனி ரிசப்ஷனில் பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனால், இவள் ரேகாவாக இருக்க வாய்ப்பில்லையே! சுடுகாட்டுச் சாம்பலுக்கு மீண்டும் உயிர் வருமா? “இது எப்படி ரேகாவா இருக்கமுடியும்? ரேகா மாதிரி அதே ஹைட் அண்ட் வெயிட்ல இருக்கற யாரைப் பார்த்தாலும் உனக்கு அப்படித் தோணுது.”

“இல்லடா... அந்தப் பெண்ணோட முகத்தை ஜூம் பண்ணிப் பாரு. நைன்டிநைன் பர்சன்ட் ரேகா மாதிரித்தான் இருக்கா.”

“ரொம்ப முத்திடுச்சுன்னு நினைக்கறேன். எதுக்கும் ஒரு...”

“அவ யாருன்னு ரிசப்ஷனுக்கே கேட்டுடலாம்.” இன்டர்காமை எடுத்தான் வினோத். பாய்ந்து வந்து தடுத்தான் மாதவ்.

“எ..ன்..னடா செய்யறே? நீ இந்தக் கம்பெனியோட முதலாளி. நீ போய் ஒரு பொண்ணைப் பற்றி விசாரிச்சிட்டு இருப்பியா? உனக்கு அவ யாருன்னு தெரியணும்..அவ்வளவுதானே! நானே கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இரு.”

மாதவ் வெளியே செல்ல, மீண்டும் திரையை உற்றுப் பார்த்தான் வினோத். மான்யா அந்தத் திரையில் இருந்து காணாமல் போயிருந்தாள்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580134507349
Sindhum Pani Vaadai Kaatru

Read more from Hansika Suga

Related authors

Related to Sindhum Pani Vaadai Kaatru

Related ebooks

Reviews for Sindhum Pani Vaadai Kaatru

Rating: 3.8 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sindhum Pani Vaadai Kaatru - Hansika Suga

    http://www.pustaka.co.in

    சிந்தும் பனி வாடைக்காற்று

    Sindhum Pani Vaadai Kaatru

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    ஃப்ளைட் லேட்டுன்னு இப்பதான் தகவல் வந்தது வினோத். புறப்படும் போதாவது அவகிட்ட சொல்லிட்டுப் போ.

    இவ்வளவு நேரம் நாம பேசுனதெல்லாம் கேட்டுட்டு தானே இருந்திருப்பா. தனியா அழைச்சு சொல்றதுக்கு என்ன இருக்கு? இங்கே வெட்டியா உட்கார்ந்திருக்கற நேரம், இட் வில் பி பெட்டர் ஃபார் மீ, டு பி இன் தி ஏர்போர்ட். வந்து வண்டியெடு மாதவ்.

    லக்கேஜுகளைத் தள்ளிக்கொண்டு போர்டிக்கோவுக்குச் சென்ற நண்பன் வினோத்தை, பெருமூச்சுடன் பார்த்தான் மாதவ்.

    கதவின் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மான்யாவுக்கு, கணவன் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றதில், பெரிதாகக் கண்ணீர் ஒன்றும் வரவில்லை.

    அவளுடைய திருமணம் நடைபெற்றதே விசித்திரமான ஒரு சூழ்நிலையில்!

    வேலை பார்க்கற இடத்துல பெரிய அளவுல கையாடல் பண்ணிட்டேன். போலீசுக்குப் போகாம இருக்கணும்னா, உன்னைத் தனக்கு மனைவியா தாரை வார்த்துத் தரச் சொல்றான், அந்தப் படுபாவி.

    பவுன்ராஜ் சொன்னபோது மான்யாவும், அவள் அன்னை மங்களாவும் திகைத்துப் பார்த்தார்கள்.

    நாம இப்படி வசதியா வாழ்ந்ததெல்லாம் கையாடல் செய்த பணமா? நீங்க உழைச்சுச் சம்பாதிச்சக் காசு இல்லையா? இதயம் குன்றிக் கேட்டார் மங்களா.

    பாதி உழைப்பு… மீதி… என்று குறுகிய நெஞ்சோடு செருமிக் கொண்டவர்,

    பெரியவரை என்னால ஏமாற்ற முடிஞ்சது. இப்ப வந்த அவருடைய வாரிசு கிடுக்கிப்பிடி போட்டுட்டான். என்று எங்கோ பார்த்துச் சொன்னார்.

    நீங்க செய்த தவறுக்காக என் வாழ்க்கையை நான் அடமானம் வைக்கணுமா அப்பா? தப்பு செய்தது நீங்க… தண்டனை எனக்கா? சீறினாள் மகள்.

    "தண்டனைன்னு சொல்ல என்ன இருக்கு பாப்பா? எப்படியும் எவனாவது ஒருத்தனுக்கு உன்னைக் கட்டிவைக்கத்தான் வேணும். அது ஏன் அந்த வினோத் பயலா இருக்கக்கூடாது? கண்ணுக்கு அழகா, லட்சணமா இருக்கான். பணக்காரன். படிச்சவன். என்னை மாதிரி அடுத்தவன் காசைக் கையாடல் செய்யும் பொறுக்கி கிடையாது. நீ மனசு வெச்சா மட்டுமே நான் ஜெயிலுக்குப் போகாமத் தப்பிக்கலாம் பாப்பா.

    தெய்வமா பார்த்து அந்த வினோத் கண்ணுக்கு உன்னைத் தேவதையா காண்பிச்சிருக்கு. பொண்ணைக் கொடு… உன்னை விடறேங்கறான். அதெல்லாம் முடியாது… அப்பன் கையில விலங்கு மாட்டியே தீரணுமுன்னு நீ நினைச்சா, உன் இஷ்டப்படி முடிவெடு பாப்பா. என் தலைவிதி எப்படியோ, அப்படியே நடக்கட்டும். உன்னையும், உங்கம்மாவையும் சந்தோஷமா வாழவைக்க, எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு என்னால உழைச்சு சம்பாதிக்க முடியல. கையாடல் பண்ணிட்டேன்."

    பவுன்ராஜின் புலம்பல் தொடர, தாயும், மகளும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.

    ‘வசதியான வாழ்க்கை வேண்டும் என்று நாம் கேட்டோமா அல்லது இந்த மனிதராக அதைத் தீர்மானம் செய்துகொண்டாரா’ என்ற குற்றச்சாட்டு அதில் தெரிந்தது.

    "உன்னைச் செல்லமா வளர்த்துட்டேன் பாப்பா. அதே சொகுசோட உனக்கு எதிர்காலத்தையும் குறைவில்லாம அமைச்சுத் தர நினைக்கறேன்.

    ஒருவேளை அந்த வினோத் கொடுக்கற புகார்ல நான் சிறைக்குப் போயிட்டா, அல்லது செய்த கையாடலுக்கு ஈடா இந்த வீடு நம்மை விட்டுப் போயிட்டா, அதுக்கப்புறம் என் செல்ல மகளுக்காக நான் கனவு கண்ட வாழ்க்கை இந்த ஜென்மத்துல கிடைக்காது.

    சிறைக்குப் போனவன் பொண்ணுதானேன்னு இந்தச் சமுதாயத்துக்கு இளக்காரம் வரும். வீடுவாசல் இழந்தவனை நையாண்டியா பார்ப்பாங்க. காக்கையும், கழிசடையும் வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு நிற்கும். என்னால அப்படியொரு நிலைமையைக் கற்பனை பண்ண முடியல."

    பவுன்ராஜ் கண்ணீர் உகுக்க, மான்யாவுக்கும் தன் அப்பா சொன்னதைக் கேட்டுக் கலங்கத்தான் செய்தது.

    கையில் விலங்கோடு அவளால் பவுன்ராஜை கற்பனை செய்யமுடியுமா? அல்லது பெற்றவனை கோர்ட்டில் நிறுத்திவைத்துப் பார்க்க முடியுமா?

    மகளே… மகளே… என்று மாரிலும், தோளிலும் போட்டு வளர்த்த அன்பு மனிதர்.

    யானைச்சவாரி, குதிரைச்சவாரி, உப்புமூட்டை எல்லாம் பழகியதும் அந்த மனிதரின் முதுகின் மீதுதானே!

    அவர் மடியில் அமர்ந்து எழுதப்பழகி, தந்தையின் அன்பு முத்தங்களைத் தன் கன்னத்தில் வாங்கிக் குவித்து! தந்தையின் அன்பும், பாசமும் எந்தப் பெண்ணுக்குமே ஆயுள் முழுக்கத் திகட்டாத உறவல்லவா!

    அவள் கண்ணில் சிறு தூசி விழுந்தால்கூடத் துடித்துப் போனவராயிற்றே!

    தன் வீட்டு இராஜகுமாரிக்கு எந்தக் குறையும் இல்லாத பரிபூரண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர்.

    மாளிகை என்று சொல்லுமளவுக்கு இல்லாவிட்டாலும், அழகான, கச்சிதமான வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து, ஆசைப்பட்டதை வாங்கி, நட்பும் சுற்றமும் பார்த்துப் புகையுமளவுக்கு பவுன்ராஜின் செல்ல மகளாகவே அவள் வளர்ந்துவிட்டாள்.

    அந்தச் செல்ல இளவரசியை பெற்றெடுத்த மங்களாவும் அப்படித்தான். அந்த வீட்டில் சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ, இதர வசதிகளுக்கோ என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. பீரோவைத் திறந்தால் வண்ணங்களின் அணிவகுப்பு. வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகளின் கூடாரமாக இரும்புப் பெட்டி.

    ‘டாப் -லெவல்’ கோடீஸ்வரக் குடும்பம் இல்லை. ஆனாலும், அவ்வீட்டில் அப்பெண்களுக்கு குறையொன்றும் இல்லை.

    படுக்கையறையில் ஏசி. பாலிஷான வாழ்க்கை. மின்சாரக் கட்டணம் சில ஆயிரங்களைத் தொட்டாலும் ஏன் என்ற கேள்வி எழுந்தது கிடையாது.

    சமையலறையை அலங்கரிப்பதில் அந்த அம்மணிக்கு அதீத ஆர்வம். மார்க்கெட்டில் கிடைத்த உபகரணங்கள் பெரும்பாலானவற்றை, அது என்ன விலையாக இருந்தாலும் வாங்கிப் போட்டு, தன் நட்புக்கும் உறவுக்கும் ‘என்னைப் பார்… எப்படி வாழ்கிறேன்…’ என்று பெருமை காட்டியவர்.

    கேட்டதெல்லாம் கொடுக்கும் அருமையான கணவர் வாய்ப்பது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய வரம். அப்படியொரு தங்கமான மனிதர் தனக்கு வாய்த்திருக்கிறார் என்ற பெருமிதத்தில், நிறைந்த மனத்தோடு வாழ்ந்துவிட்ட அம்மா.

    பவுன்ராஜ் அப்படித்தான் அவர்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டார். ஆடம்பரம் என்று அடுத்தவர் நினைத்ததெல்லாம் அவரைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாத அத்தியாவசியங்கள்.

    இத்தனை வருடங்கள் திகட்டலான வாழ்க்கை வாழ்ந்த பிறகு, ஒரு கையாடலைக் காரணமாக வைத்து, இந்தச் சமுதாயத்தின் முன் சிறுமைப்பட்டுப் போக அந்தக் குடும்பத்தால் முடியுமா?

    வினோத் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால், அன்பால் கட்டுண்டு கிடக்கும் அந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலையெழுத்தும் மாறிவிடும்.

    என்ன முடிவெடுத்திருக்கே? என்று கேட்கும்போதே அம்மாவின் முகத்தில் பெருத்த கலவரம் தெரிவதைப் பார்த்தாள் மான்யா.

    அவள் எடுக்கும் முடிவில்தான் அவருடைய நிம்மதி அடங்கியிருக்கிறது.

    முடிவெடுப்பதற்கு இரண்டு வாரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்திருக்கிறானாம் வினோத். நல்ல பதிலாகச் சொல்லிவிட்டால் தலை தப்புமாம். இதை மட்டும் தன் மகளிடம் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார் பவுன்ராஜ்.

    அவருடைய தலைவிதியை இனி ஆண்டவன் தீர்மானிக்க முடியாது. அவருடைய மகளும், அந்த வினோத்தும் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.

    அதிகம் யோசித்துத் தன் மண்டையைக் குழப்பிக்கொண்ட மான்யா, இறுதியாக ஒரு நல்ல முடிவுக்கு வந்தாள்.

    திருமண வயது நெருங்கிவிட்டது. யாரேனும் ஒருவனுக்குக் கழுத்தை நீட்டத்தான் வேண்டும். அது ஏன், தன் குடும்ப சூழ்நிலை நன்றாகத் தெரிந்த வினோத்தாக இருக்கக் கூடாது?

    கையாடல் குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட், ஜெயில் என்றெல்லாம் அந்தக் குடும்பமே அசிங்கப்படுவதைவிட, காதும் காதும் வைத்ததுபோல் விஷயத்தை முடித்துவிட்டால், அனைவருக்கும் நல்லதுதானே!

    ‘இவனையா கட்டிக்கொள்ளப் போகிறோம்’ என்று நினைக்கும் அளவுக்கு அந்த வினோத் ஒன்றும் மோசமானவனாக இருக்கப் போவதில்லை.

    மான்யா அவனை நேரில் பார்த்ததில்லை என்றாலும், பவுன்ராஜ் அவனைப் பற்றி சொன்னதை வைத்து, வினோத் நல்லவன் என்றே நினைக்கத் தோன்றியது.

    தவிர, தன் அப்பாவையும் அவளால் ‘தீவிரக்குற்றவாளி’ என்று எடை போட முடியவில்லை.

    மனைவி மீதும், மகள் மீதும் இருந்த அளவுக்கதிகமான பாசத்தால், தவறான வழியில் பொருளீட்டியாவது, அவர்களைக் கண்ணுக்குள் வைத்துத் தாங்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார், அந்த மனிதர்.

    தன்னை சுவாசமாய் நினைத்த தகப்பனுக்காக, மான்யாவால் பிரதியுபகாரமாய் என்ன செய்யமுடியும்? வினோத்தைக் கட்டிக்கொள்கிறேன் என்று சொல்வதைத் தவிர!

    ‘வினோத்தைக் கட்டிக்கொள்ளச் சம்மதம்’ என்று அவள் சொன்னபோது, ஆனந்தக் கண்ணீர் வடித்துவிட்டார் பவுன்ராஜ்.

    நீ என் பொண்ணில்ல. என் குலதெய்வம். என்னைக் காப்பாற்ற வந்த சாமி. என்று தன் மகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினார் மங்களா.

    தன்னைத் திருமணம் செய்துகொள்ள மான்யா சம்மதம் தெரிவித்துவிட்டாள் என்ற செய்தியறிந்து, வியப்பில் புருவங்களை உயர்த்தினான் வினோத்.

    ஆளைப் பார்க்கவில்லை, அறிமுகப்படலமும் ஆகவில்லை. எப்படி இந்தப் பெண் தந்தை சொல்லுக்குத் தலையாட்டி வைத்தாள் என்று ஆச்சரியமாக இருந்தது.

    நான் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறேன் தம்பி. அப்பா தனக்குக் கெடுதல் செய்யமாட்டாருங்கற நம்பிக்கை அவளுக்கு சின்னவயசுல இருந்தே என்மேல உண்டு. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உங்களைப் பற்றி உயர்வா என் வீட்டுல பேசியிருக்கேன். அது அவ மனசுலயும் பதிஞ்சு கிடக்கு. அதான் கேட்டவுடனே சரின்னு சொல்லிட்டா. அமைதியான தொனியில் பதில் சொன்னார் பவுன்ராஜ்.

    மகளுக்கு ஏற்படுத்திய நம்பிக்கையை மற்றவங்களுக்கும் ஏற்படுத்தியிருக்கலாமே மிஸ்டர் பவுன்ராஜ். இங்கே மட்டும் முதுகுல குத்தணும் -னு தோணுனது எப்படி? என்றவன் குரலில்,

    வேலை கொடுத்த நிறுவனத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாயே என்ற கோபம் தொனிக்க, அவமானத்தில் தலைகுனிந்து நின்றார் பவுன்ராஜ்.

    உங்களுக்கு ஒரு அழகான பொண்ணு இருக்கறதால, அந்த அழகான பொண்ணு என் மனத்துக்குப் பிடிச்சவளா மாறிப்போனதால தப்பிச்சீங்க பவுன்ராஜ். நான் உங்க மகளை நம்ம கம்பெனி ரிசப்ஷன்ல வெச்சு ஓரிருமுறை பார்த்திருக்கேன். அவளுக்கும் வினோத் யாருன்னு தெரியணுமில்ல. தவிர, இது நீங்க கட்டாயப்படுத்தி அவளை முடிவெடுக்க வெச்சதா இருக்கக்கூடாது. மான்யாவுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு நேரடியா அவகிட்ட வாக்குமூலம் வாங்கணும். அவளைச் சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க.

    என் வார்த்தையில நம்பிக்கை இல்லையா தம்பி? என் பொண்ணு சொல்லித்…தான்…

    உங்களை அணுவளவுக்குக் கூட நான் நம்பமாட்டேன். அது உங்களுக்கே நல்லா தெரியும். அப்புறம் எதுக்குத் தேவையில்லாத கேள்வி. டூ வாட் ஐ சே! கணீர்க்குரலில் முடித்துக் கொண்டான்.

    பிடித்திருக்கிறதா? என்று அதே கணீர்க்குரலில் அவன் கேட்டபோது விக்கித்துப் பார்த்தாள் மான்யா.

    காலியாக இருந்த அந்தக் கம்பெனி ஹாலில், அவன் குரல் எக்கோ அடித்தது. அவனையும், அவளையும் தவிர, அங்கே வேறு ஒருவரும் இல்லை.

    அவள் என்ன நேர்முகத் தேர்வுக்கா வந்திருக்கிறாள்? இப்படி அதட்டலாகக் கேட்கிறான்.

    என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உங்க வீட்டுல யாரும் உன்னை வற்புறுத்தல இல்ல? உன் சுயவிருப்பத்தின் பேரில்தானே முடிவெடுத்தே?

    தலைக்குமேல் கத்தி தொங்கும்போது சுயவிருப்பத்தில் எடுத்த முடிவு என்று எப்படிச் சொல்ல முடியும்?

    ஆனாலும், அந்த வினோத்தை வேண்டாம் என்று சொல்ல, எந்தப் பெண்ணுக்கும் மனம் வராது. மான்யா ஒருவகையில் அவனிடத்தில் ஈர்க்கப்பட்டாள் என்றே சொல்லலாம்.

    இதுவரை அவனைப் பற்றித் தன் அப்பா வாயிலாகக் கேள்விப்பட்டவள், இப்போது முதன் முறையாக நேரில் பார்க்கிறாள்.

    உயரம், உடல்வாகு, தோற்றம், கம்பீரம் என்று பெண்களைக் கவர்வதற்கான ‘பளிச்’ அம்சங்களுடன் ஒருசில ஆண்கள் மட்டுமே வலம் வருகிறார்கள். அந்த லிஸ்டில் நிச்சயம் அந்த வினோத்துக்கு சிறப்பான மதிப்பெண்கள் உண்டு.

    ஹலோ… மொத்த அழகையும் இப்பவே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டா எப்படி? மிச்சத்தைக் கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்கலாம். என்று அவன் மர்மப் புன்னகையோடு சொல்ல,

    அவன்மீது ஒட்டியிருந்த தன் பார்வையை வேறு வழியின்றி திருப்பிக்கொண்டாள் மானு.

    அவள் மனத்தை அறிந்துகொண்ட திருப்தியுடன் அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான் வினோத்.

    திருமண நிகழ்வுகள் மளமளவென்று ஏற்பாடு செய்யப்பட்டு, திருமதி வினோத்தாக அவள் பதவியேற்றுக்கொண்ட நேரம்.

    ஹௌ ஸ்டுப்பிட் தீஸ் கேர்ள்ஸ் ஆர்! ஆள் எப்படி… என்ன… நல்லவனா கெட்டவனா… எதுவும் தெரியவேண்டாம். தாலி கட்டறேன்னு ஒருத்தன் சொன்னா உடனே அவனை நம்பி கழுத்தை நீட்ட வேண்டியது.

    முதலிரவன்று அவன் வாயிலிருந்து உதிர்ந்த முதல் முத்து.

    திகைப்புடன் அவனைப் பார்த்தாள் மானு. அவள் முகத்தின் உச்சபட்ச கலவரத்தைக் கண்டவன், மெல்ல நகைத்துக் கொண்டான்.

    இந்தக் கேள்வியும், பயமும் ஒரு புத்திசாலிப் பொண்ணுக்கு ஆரம்பத்துலயே தோன்றியிருக்கணும். அப்பா, அம்மாவைக் காப்பாத்தறேன்னு இப்படியொரு பாழுங்கிணத்துல குதிக்கலாமா?

    லேசாக எழுந்த பயத்தில் அடிவயிற்றில் அக்கினிப் பிரளயம் மூள, ஏன் இப்படிப் பேசுகிறான் என்று புரியாமல் அவனையே பார்த்தாள்.

    இவன் நல்லவனா? கெட்டவனா? எதற்காக இப்படிப் பேசுகிறான்? மிகமிகத் தாமதமாக அவளுக்குள் எழுந்த கேள்வி.

    ஏசி குளிரை மீறிப் பூத்த சன்னமான வியர்வையை மெல்ல முந்தானையால் ஒற்றிக் கொண்டாள்.

    இதுக்கே நாக்கு வறண்டு போனா எப்படி? இன்னும் நிறைய அதிர்ச்சிகளைத் தாங்க வேண்டியிருக்கும். மனசை இப்பவே திடப்படுத்திக்கோ.

    அவன் திடமான நடையோடு அருகே வர, உதடுகள் உலர்ந்து போன நிலையில், நின்ற இடத்தைவிட்டு அசையாமல் நின்றாள் மானு.

    2

    நான் அதிர்ச்சின்னு சொன்னது இதைத்தான். என்று கண்சிமிட்டிக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், பால் தம்ளரை அவள் இதழில் வைக்க,

    நானே குடிச்சிக்கறேன். என்று அவனுக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொண்டாள் மானு.

    இங்கேயும் முத்தம் கொடுடான்னா, கொடுத்துட்டுப் போறேன். என்று அவள் முதுகின் பரப்பளவில் அவன் தன் முகம் பதிக்க, கையிலிருந்த தம்ளர் நழுவிடுமோ என்ற பயத்தில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மானு.

    ‘எலக்ட்ரிஃபையிங்’ என்று எப்போதோ படித்தது, கலவையாய் அவளை அதிர வைக்க, உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

    யூ லுக் பிரெட்டி அஸ் ஐ இமாஜின்ட். என்றவாறே தன் சூடான சுவாசத்தை அவள்மீது செலுத்தியவன், அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

    உன் அப்பாவைப் பார்க்க எப்பவாவது ஆபீஸ் வருவேயில்ல. உன்னை சிசிடிவி வழியா வாட்ச் பண்ணியிருக்கேன். அண்ட் ஐ அட்மையர்ட் யுவர் ப்யூட்டி.

    அவன் மோவாய் அவள் கன்னத்தைத் தீண்ட, தன் நாவின் நுனியால் அவள் காதுமடலில் அவன் மெல்லிய ஓவியம் வரைய, மான்யாவின் தேகத்தில் சுரீரென நடுக்கம் ஓடியது.

    திடமிழந்து தடுமாறுகிறாள். அவளுக்குள் என்ன நடக்கிறது?

    பற்றிக்கொள்வதற்கு ஏதேனும் கிடைக்குமா? அல்லது துவண்டு பூமியை முத்தமிடுவாளா?

    அவள் நடுக்கத்தை உணர்ந்து அவளைத் தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டவன், ஸோ வீக் என்று மோகத்துடன் சிரிக்க,

    அவன் விரல்கள் அவள் கழுத்து வளைவில் செய்த மாயாஜாலத்தில், அவளுடைய இரத்த ஓட்டம் தாறுமாறாய்!

    அவளைக் கட்டியணைத்தவாறு கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.

    வாழ்க்கைத் துணையிடம் நிறையப் பேசவேண்டும். பிறகுதான் மற்றதெல்லாம்!

    அப்படித்தான் முன்பு

    Enjoying the preview?
    Page 1 of 1