Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalum Kutrame...
Kaadhalum Kutrame...
Kaadhalum Kutrame...
Ebook241 pages2 hours

Kaadhalum Kutrame...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

‘எனக்கு நானே ராஜா’ என்ற சுபாவத்துடன் தன்னுடைய ட்ராக்கில் பயணம் செய்து கொண்டிருப்பவன் இக்கதையின் நாயகன் ‘கட்டதுரை’.

கல்லூரியில் முதுகலை படிக்கும் முரட்டுக்காளை.

இளங்கலை எப்படித் தாண்டிவந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கடைசி நிமிடத்தில் படித்து, எப்படியோ பார்டரில் தாண்டி வந்துவிட்டான்.

வடக்கத்திப் பெண் ஹிமானியோடு அளவிடமுடியாத காதல். திருமண பந்தத்தில் இணைந்தார்களா?

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505639
Kaadhalum Kutrame...

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhalum Kutrame...

Related ebooks

Reviews for Kaadhalum Kutrame...

Rating: 3.5 out of 5 stars
3.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalum Kutrame... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    காதலும் குற்றமே...

    Kaadhalum Kutrame…

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பிருத்விராஜன் இல்லம் என்று பெயர் தாங்கிய அந்த வீடு வழக்கமான காலை நேரப் பரபரப்புடன் இருந்தது.

    வீட்டின் காம்பவுண்டைச் சுற்றி வளர்க்கப்பட்டிருந்த பப்பாளி மரங்களும், கொய்யா மரங்களும், மாமரங்களும் அதிகாலை வணக்கத்தைப் பசுமையுடன் தெரிவித்தன.

    வாசலை அடைத்துப் போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோலத்தை மீண்டும் ஒருமுறை ரசித்துவிட்டு, பேப்பர்காரன் வீசிவிட்டுச் சென்ற அன்றைய செய்தித்தாளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் அபராஜிதா, அந்த வீட்டின் மூத்த மருமகள்.

    குக்கரில் வைத்த இட்லி வெந்துவிட்டதா என்று, ஆவியுடன் வரும் வாசனையை வைத்துக் கணித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி, அந்த வீட்டின் இரண்டாம் மருமகள். சட்னிக்கு அரைக்கத் தேவையான பொருட்களை எடுத்து வைப்பதில் அவள் கைகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

    இவர்கள் இருவருக்கும் மாமியாரான விசாலாக்ஷி, அன்றைய தினம் அஷ்டமி என்பதால், காலபைரவ அஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டு பூஜையறையில் அமர்ந்திருந்தார்.

    குடும்பத் தலைவரான பிருத்விராஜன், இன்றும் தன் இளமை மறக்காதவராய் வெள்ளை டி-ஷர்ட், ஷாட்ஸ் அணிந்து வாக்கிங் புறப்பட, கடிகார மணியின் கச்சிதம் போல் வீட்டிலேயே அரைத்துத் தயாரித்த அருகம்புல் சாறைக் கொண்டு வந்து கொடுத்தாள் அபராஜிதா.

    சீக்கிரமா எந்திருச்சுப் பழகு. என்கூட வாக்கிங் வான்னு உன் புருஷனுக்கு எத்தனையோ முறை அட்வைஸ் பண்ணிட்டேன். ஒருநாளாவது என் பேச்சைக் கேட்டாதானே? அவனோட தொப்பையளவு இப்படியே அதிகமாயிட்டு இருந்தா, யானைக்குப் பேன்ட்டு தைக்கற மாதிரி தைக்கணும். என்று தன் மூத்த மகனான சரவணனை விமர்சனம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் பிருத்விராஜன்.

    உருட்டுச்சட்டி போல் ஆகிக்கொண்டிருக்கும் தன் கணவனின் உருவம் நினைத்து அபராஜிதாவுக்கும் கவலையாகத் தான் இருந்தது. இந்தாங்க... எந்திரிங்க... எந்திரிங்க சொல்றேன். என்று படுக்கையறையில் தன் கணவனைத் தட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டாள் அபராஜிதா.

    எதுக்கு இப்படிப் பாதித் தூக்கத்துல எழுப்பறே? என்று கேட்டுக்கொண்டே அவள் மடிமீது தலைவைத்துக் கொண்டான் சரவணன். அந்தக் காலத்துக் காதல் மன்னனை நினைவூட்டுபவன்... தோற்றத்திலும்...! மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்திலும்...!

    சரியாப் போச்சு. இதுக்குப் பேரு பாதித்தூக்கமா? வயசான அந்த மனுஷர் என்னவொரு துள்ளலோட வாக்கிங் போறார். நீங்க என்னடான்னா இப்படிச் சோம்பேறிக் கழுதையாட்டமா இருக்கீங்க? உங்க உடம்போட ஷேப் மாறிக்கிட்டே வர்றதை என்னைக்காவது கண்ணாடியில பார்க்கறது உண்டா? என்று கேட்டுக்கொண்டே அவன் கன்னத்தில் முழங்கையால் இடித்தாள் அபராஜிதா.

    அப்பாவுக்கு ஜவுளிக்கடையா... ஒண்ணா? பிள்ளைங்களைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அவர் சிவனேன்னு வீட்டுல இருக்கார். ராத்திரி ஒன்பது மணிக்கே படுத்துத் தூங்கறவருக்கு, காலையில சீக்கிரம் எழுந்து வாக்கிங் போறது கஷ்டமா ராஜி? கண்ணைத் திறக்காமலே பேசிக் கொண்டிருந்தான் சரவணன்.

    நேற்று நைட் நான் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியுமா பொண்டாட்டி? நான் வரும்போது நீ நல்லா குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்தே. என்றவாறே மனைவியின் இடையை அணைத்துக் கொண்டான்.

    எத்தனை மணிக்கு வந்தீங்களாம்? எனக்குத் தெரியவே தெரியாது. என்று உட்கார்ந்த வாக்கிலேயே குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள் அபராஜிதா.

    இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன். என்று பளிச்சென்று அவன் கண்களைத் திறக்க, அதைச் சற்றும் எதிர்பாராதவளுக்கு மிகவும் வெட்கமாகிப் போனது.

    கஷ்டப்பட்டு, லோல்பட்டு, அவஸ்தைப்பட்டு ஜவுளிக்கடைக்கு வர்ற கூட்டத்தைச் சமாளிச்சு, வியாபாரக் கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு அர்த்தராத்திரியில வந்து படுத்தா, புருஷன் வந்தது கூடத் தெரியாம என் பொண்டாட்டி தூங்குவாளாம். ஆனா, அட்வைஸ் மட்டும் முழநீளத்துக்கு...! என்றவன், அவள் கழுத்துவரை தன்னை உயர்த்தி அவளையே கட்டுக்குள் கொண்டு வந்தான்.

    ஐயோ... விடுங்களேன். இதென்ன காலங்கார்த்தால? அடுப்படியில நான் இல்லேன்னு அத்தை தேடுவாங்க. என்று சிணுங்கினாள் அபராஜிதா.

    ‘அதுக்கு நீ அடுப்படியிலேயே இருந்திருக்கணும் பொண்டாட்டி. என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண நினைச்சா இப்படித்தான்." என்று அவள் தோள் வளைவில் அவன் ஆசையுடன் முகம் புதைக்க,

    உங்க விளையாட்டெல்லாம் இருக்கட்டும். மாமா சொன்னதுக்காக இல்லை. உண்மையிலேயே உங்களை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு. உடம்பு வெயிட் கூடிக்கிட்டே போகுது. சினிமா ஹீரோ மாதிரி இல்லேன்னாலும், கொஞ்சமாவது மெயின்டைன் பண்ணப் பாருங்களேன். என்று கவலையுடன் சொன்னாள் அபராஜிதா.

    என்ன செய்யச் சொல்றே? காலையில எட்டுமணிக்கு மேல தண்டால், பஸ்கி எடுக்கச்சொல்லு. பொண்டாட்டி சொல்றாளேன்னு ட்ரை பண்ணறேன். விடிகாத்தால ஆறு மணிக்கே எந்திருச்சு அரை நிஜாரோட வாக்கிங் போன்னு சொன்னா என்னால முடியாது. என்றான் சரவணன்.

    அவ்வளவு கஷ்டமா இருந்தா கீர்த்தி ரூம்ல இருக்கற மாதிரி ஒரு ட்ரெட்மில் வாங்கிப் போடுங்களேன். எப்ப சௌகரியப்படுதோ அதுமேல ஏறி நடந்துக்கலாம். நம்ம ரூமுக்குள்ள இருந்தா, அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு சங்கோஜப்படாம நானும் யூஸ் பண்ணிக்குவேன். என்று அவன் மீசையை ஆசையுடன் திருகினாள் அபராஜிதா.

    வாங்கறதைப் பற்றி ஒண்ணுமில்ல. ஆனா, உனக்கெதுக்கு எக்சர்சைஸ்? ரெண்டு பிள்ளைங்க பெற்ற பிறகும், நீ இந்த மாதிரி நாட்டுக்கட்டையாட்டம் இருக்கறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. நீ மெலிஞ்சு குச்சிக்கணக்கா ஆயிட்டா, இந்த மாமனுக்கு வெறுத்துடும் பொண்டாட்டி. நம்ம ஊரு கலரா போயிட்டே. இல்லேன்னா நாட்டாமை பட குஷ் அக்காவுக்கும், உனக்கும் வித்தியாசமே தெரியாதுடி. என்று அலேக்காக அவளைத் தன் மீது கவிழ்த்துக் கொண்டான் சரவணன்.

    சரியான முரட்டுப் பீஸு. குஷ் அக்காவாம். உறவு கொண்டாடுறதைப் பாரு. என்று அவனிடம் அவள் செல்லமாகக் கடிந்துகொண்ட நேரம், ‘அபராஜி...தா’ என்று கீழே மாமியார் அழைக்கும் குரல் கேட்டது.

    ஐயோ... அத்தை கூப்பிடறாங்க. விடுங்க மாமா. நீங்க வாக்கிங் போனாலும் சரி... நாள் முழுக்க இப்படியே உருண்டாலும் சரி. என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே சென்றாள் அபராஜிதா.

    தன் இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் முட்டுக்கொடுத்து அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். அபராஜிதா அவன் வாழ்க்கையில் வந்த வரம் என்றே சொல்லுவான். சொந்த மாமன் மகளைக் கல்யாணம் கட்டிக்கொள்ள அவனுக்குக் கசக்கவே இல்லை. சிறு வயதிலிருந்தே ராஜியை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

    எங்கிட்டோ இருந்து ஒருத்தியைக் கொண்டாந்து, அவ என்னைப் புரிஞ்சுக்க, நான் அவளைப் புரிஞ்சிக்கன்னு தலைசுத்திச் சாயறதை விட, சின்ன வயசுல இருந்து நான் பார்த்துப் பழகுன ராஜியே போதும். என்று அவன் ஒரே முடிவாகச் சொல்லிவிட, மறுபேச்சின்றி மாமன் மகளை அவனுக்குக் கட்டி வைத்தார்கள்.

    அவள் அந்த வீட்டிற்கு வந்த நேரமோ என்னவோ? சாதாரண கட்பீஸ் கடையாக இருந்த ‘பிருத்விராஜன் டெக்ஸ்டைல்ஸ்’ நிதானமாக வியாபாரத்தில் காலூன்றி, இன்று நகருக்குள் பிரதானமான கடையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. வளர்ந்துகொண்டே வரும் பொருளாதார வசதிக்கும், சோம்பேறித்தனத்திற்கும் தகுந்தார் போல், சரவணனின் உடல்வாகு மாறிக்கொண்டு வந்தாலும், தன் மாமன் மகள் மீது அவன் வைத்த நேசம் அப்பழுக்கில்லாமல் அப்படியே இருக்கிறது.

    அபராஜிதாவும் அப்படித்தான். திருமணமான புதிதில் ‘மாமோய்’, ‘மாமோய்’ என்று வாய் நிறைய அழைத்தவள், காலப்போக்கில் ‘என்னங்க... வாங்க... போங்க...’ என்ற சகஜநிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டாள். அப்படியும் தனியாக இருக்கும் நேரங்களில் ஒருமுறையேனும், ‘மாமோய்’ என்று அவன் மீசையைப் பிடித்து இழுக்காவிட்டால், அவளுக்கு ஜென்ம சாபல்யம் கிடைப்பதே இல்லை.

    இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயானதில் அவள் வனப்பு சற்றும் குறையவில்லை. மூத்தவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். இரண்டாமவன், ஏழாம் வகுப்பு. இருவருமே படிப்பது மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பிரசத்தி பெற்ற கான்வென்டில்...! பிள்ளைகள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறார்கள் என்பதைத் தவிர, அவளுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை.

    நம்ம பிள்ளைங்க தைரியமா வளரணும். இப்பவே ஸ்டைலா இங்கிலீஷ் பேசணும். பிற்காலத்துல பெரிய படிப்பெல்லாம் படிக்கணும். பொத்திப்பொத்தி வளர்த்த வரைக்கும் போதும். கொண்டுபோய் ஹாஸ்டல்ல விடுவோம். என்று ஒரு வருடத்திற்கு முன்பு பிடிவாதமாய் முடிவெடுத்தவன் சரவணன். அதுவரை பிருத்விராஜன் இல்லம் அந்தப் பேரப்பிள்ளைகளால் துவம்சமாகிக் கொண்டுதான் இருந்தது.

    அந்த வீட்டு மூத்தவனின் வாழ்க்கை ஆறுபோல அமைதியானது என்றால், இரண்டாமவன் விக்கிரமனின் வாழ்க்கை கடல் போன்றது.

    ஆழ்கடல் போல் அமைதியாக இருந்தாலும் இருக்கும். திடீரென்று கடல் பொங்கி சுனாமியாக மாறியது போல், கணவனும், மனைவியும் அடித்துக் கொள்ளவும் செய்வார்கள். அந்தச் சுனாமிக்குக் காரணம், பாதிநேரம் விக்ரமனின் மனைவி கீர்த்தியாகத்தான் இருப்பாள்.

    கீர்த்தி...! பெரிய இடத்துப் பெண். செல்லமாக வளர்ந்த பெண்களுக்குப் பிடிவாதத்தில் குறைச்சல் இருப்பதில்லை. அந்தப் பிடிவாதம் சில நேரங்களில் கணவனிடத்தில் செல்லுபடியாகாதபோது, சீற்றங்கள் வாடிக்கையாகின்றன. காதலோ, கசப்போ... இருவரும் அளவுக்கு மீறியே கொட்டிக் கொள்வார்கள்.

    இன்றைய விடியல் அவர்களுக்குச் சுனாமியைக் கொண்டுவரவில்லை. அளப்பரிய காதலைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை விக்ரமனின் பார்வையே சொல்கிறது.

    என்ன கண்றாவியை அரைச்சிட்டு வந்தே? கைமுழுக்கப் பூண்டு வாசனையா இருக்கு. அவள் கையில் முத்தமிட நினைத்து முகம் சுளித்தான்.

    உங்களுக்குத் தக்காளிச் சட்னி வேணும். உங்க அண்ணனுக்கு பூண்டு சட்னி. உங்க தம்பிக்கு கொத்துமல்லி சட்னி. மூணு வகையான சட்னி அரைச்சே ஆகணும்-ன்னு அத்தையோட உத்தரவு. என்னை என்னச் செய்யச் சொல்றீங்க? என்று சிணுங்கினாள் கீர்த்தி.

    அரைவிழி தூக்கம் மிச்சமிருந்தாலும், அருகில் தெரிந்த மனைவியின் முகத்தை ஆசையுடன் பார்த்தான் விக்கிரமன். அண்ணன், தம்பி இருவருமே அர்த்தராத்திரியில் தான் வீடு வந்து சேர்ந்தார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஜவுளிக்கடையில் வியாபாரம் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

    இரவு தாமதமாகப் படுத்ததில், விக்கிரமனின் கண்கள் செவ்வரியோடிக் கிடந்தன. ஆனாலும், தன்மீது மாலையாகக் கிடப்பவளின் முகத்தை அருகில் பார்த்தபிறகு தூக்கமாவது, ஒன்றாவது...!

    கீர்த்தியின் அழகுக்காகவே அவளைக் கட்டிக்கொண்டான் விக்கிரமன். தங்களுக்குச் சொந்தமான ஜவுளிக்கடையில் வைத்துத்தான் அவளை முதன்முதலில் சந்தித்தான். கையில் பில்லை வைத்துக்கொண்டு கேஷ்-கவுன்டரில் இருந்த சிப்பந்தியிடம் அவள் வாதாடிக் கொண்டிருந்த நேரம், சர்க்யூட் கேமிராவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவனின் பார்வை, அவள்மீது பட்டு சுவாரசியமானது.

    அவளை வலிய தேடிச் சென்று பிரச்சனையைத் தீர்த்து வைத்தவன், அந்த அழகிய கண்களும், இதழ்களும் நன்றி சொல்வதை மனமுவந்து ஏற்றுக்கொண்டான். மீண்டும் இவளைச் சந்திக்கமாட்டோமா என்று அவன் மனம் குச்சி ஐஸுக்கு ஏங்கும் குழந்தையாக மாறிவிட, அதற்கான வாய்ப்புகள் ஏற்படவே இல்லை.

    வெயிலில் கரையும் பனிபோல் அவளைப் பற்றிய நினைவுகளும் அவன் இதயத்தை விட்டுத் தேய்ந்துவிடுவேன் என்று பயமுறுத்திய நேரத்தில், கட்டிடப் பொறியாளர் சிவராமனின் மகள் கீர்த்தி என்பது தெரியவர, மனம் ஜிவ்வென்று மங்கல்யான் வேகத்தை எட்டிப் பிடித்தது.

    ஜவுளிக்கடைக்குப் புது ஷோரூம் கட்டலாம்-ன்னு இருக்கேன். சிவராமன் சார் ஸ்கெட்ச் போட்டு வெச்சிருப்பாரு. வாங்கிட்டு வந்துடு விக்கிரமா. என்று அப்பா சொன்ன அன்று, வாழ்க்கையில் தன் அதிர்ஷ்ட தேவதையை மீண்டும் சந்தித்தான்.

    "ஜிம்மி... ஓடாதே...’ என்று தன் வீட்டுப் பொமரேனியனைத் துரத்திக் கொண்டிருந்தவள், தோட்டத்தைத் தாண்டி அவன் வருவதைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினாள். திடீரென்று அவனைப் பார்த்ததில் அடையாளம் தெரியவில்லை போலும்.

    ‘பிருத்விராஜன் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற அவனது ஒற்றைவார்த்தையில், மின்னல் கீற்றாய் அவள் முகம் பிரகாசமானது. ப்ளீஸ்... உட்காருங்க. ஐ வில் கால் டாட்... என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், அவன் இதயம் திருடிச் சென்றது தனிக்கதை. புதிய ஷோரூமைக் கட்டிமுடித்தக் கையோடு அவள் கழுத்தில் தாலியும் கட்டினான் விக்கிரமன்.

    மூத்தவனைப் போன்ற ஆற்றுநீரின் அமைதியோ, இரண்டாமவனைப் போல் சுனாமியின் சுழற்சியோ எதுவும் இல்லாமல், ஒற்றையாளாய், சுதந்திரத்தின் பிறப்பிடமாய், ‘எனக்கு நானே ராஜா’ என்ற சுபாவத்துடன் தன்னுடைய ட்ராக்கில் பயணம் செய்துகொண்டிருப்பவன் இக்கதையின் நாயகன் ‘கட்டதுரை’.

    கல்லூரியில் முதுகலை படிக்கும் முரட்டுக்காளை. இளங்கலை எப்படித் தாண்டிவந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கடைசி நிமிடத்தில் படித்து, எப்படியோ பார்டரில் தாண்டி வந்துவிட்டான்.

    கஷ்டம், கவலை என்பதெல்லாம் வாழ்க்கையில் அவனுக்குப் பிடிக்காத வார்த்தைகள். யாருக்குமே அடங்கமாட்டேன் என்று மதயானை போலத் திரிபவன், தன் அன்னை விசாலாக்ஷிக்கு மட்டும் அவ்வப்போது கட்டுப்படுவான்.

    நீங்கெல்லாம் இருக்கீங்க. மிஸ்டர் கட்டதுரையைக் காணோம். என்று சொல்லிக்கொண்டே இட்லிகள் நிறைந்த ஹாட்பேக்கை கொண்டு வந்து சாப்பாட்டு மேஜை மீது வைத்தாள் கீர்த்தி.

    சரவணனும், விக்கிரமனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். தங்கள் தம்பி ‘தங்கக்கம்பி’ என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?

    சின்னவனைக் காணோம். யாருக்கு நம்பர் சொல்லப் போயிருக்கான்? ஏதாவது பிரச்சனையா அண்ணே? என்று ரகசியமாய் சரவணனின் காதைக் கடித்தான் விக்கிரமன்.

    இன்னைக்கு அடிதடி மேட்டர் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் இன்னைக்கு ஒருநாள் அஹிம்சாவாதியா இருக்கறதுன்னு துரை முடிவு பண்ணியிருக்காரு. என்று மெல்லச் சொல்லிச் சிரித்தான் சரவணன்.

    "இதைப் பாருடா. இன்னைக்கு அப்படியென்ன ஞானம் பொறக்கற நாளோ?

    Enjoying the preview?
    Page 1 of 1