Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannal Pesa Vaa...
Kannal Pesa Vaa...
Kannal Pesa Vaa...
Ebook307 pages3 hours

Kannal Pesa Vaa...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

பெரிய செல்வந்தரான இந்திராணி அம்மாளின் மகன் நிரஞ்சன். நன்கு படித்தவன். வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்தவன். அவனது நெருங்கிய நண்பன் அரவிந்தன். அவர்களிடம் வேலைக்குச் சேரும் மனஸ்வினி. வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவள். கூர்க்கின் காபி எஸ்டேட் மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்களுக்கு நடுவே நடக்கும் ரசமான காதல் கதை. காதல், மோதல், சுகம், துக்கம் அனைத்து உணர்வுகளும் கலந்த மிக யதார்த்தமான காதல் கதை.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580134506591
Kannal Pesa Vaa...

Read more from Hansika Suga

Related authors

Related to Kannal Pesa Vaa...

Related ebooks

Reviews for Kannal Pesa Vaa...

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannal Pesa Vaa... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    கண்ணால் பேச வா...

    Kaannal Pesa Vaa...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author//hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மனஸ்வினிக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. இவனிடமா வேலைக்கு வந்து சேர்ந்தோம் என்றிருந்தது.

    நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்து இயந்திர கதியில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை.

    தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு தெரிந்த நிர்வாக கன்சல்டன்ட் மற்றும் காரியதரிசி தேவை என்று செய்தித்தாளில் விளம்பரம் பார்த்து இங்கு விண்ணப்பித்து இருந்தாள்.

    வேலை செய்வதற்கு ரம்மியமாக இருந்த மலைச்சரிவில் அமைந்த காபி எஸ்டேட். அங்கு வேலை பார்த்தவர்கள் தமிழும், மலைபாஷையும் கலந்து பேசினார்கள்.

    அவளுடைய பணிக்கான விண்ணப்பத்தை புகைப்படத்துடன் அனுப்பி இருந்தாள். தனக்கு இத்துறையில் அனுபவம் இல்லை.. கொடுக்கும் பணியை ஒரு பயிற்சியாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுத் தான் அனுப்பி இருந்தாள்.

    சம்பளம், மேற்படி, தங்குமிடம் என்று எல்லாம் திருப்திகரமாக பேசி எஸ்டேட்டின் முதலாளி இந்திராணி தேவியோடு கான்ட்ராக்டில் கையெழுத்து இட்ட வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது.

    இந்திராணியும் அவளை அங்கே வேலை செய்பவளாக நினைக்காமல் தனக்கு கிடைத்த ஒரு நல்ல துணையாகத் தான் நினைத்தார்.

    எஸ்டேட் கணக்கு வழக்குகள் போக வீட்டின் நிர்வாகமும் மெல்ல மெல்ல அவள் பார்த்துக் கொள்ளத் தொடங்கிய நேரத்தில்,

    அவளை இம்சை படுத்துவதற்கென்றே சபதம் கொண்டவன் போல வந்து சேர்ந்தான் ஆகாஷ்நிரஞ்சன்.

    இவன்தானம்மா என் பையன் ஆகாஷ். அமெரிக்காவுல படிச்சு முடிச்சிட்டு இப்பதான் இந்தியா திரும்பி வர்றான். ஆகாஷ் இவ மனஸ்வினி. என்னையும், இந்த எஸ்டேட்டையும் பார்த்துக்க வந்திருக்கா.

    இந்திராணி அம்மாள் அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தியபோது அசந்துதான் போனாள் மனஸ்வினி.

    ஆறடி உயரத்துக்கு ஏற்ற ஆஜானுபாகுவான உடல்கட்டு. என்னிடம் அடங்கி நட என்பதை போல மிரட்டும் பார்வை. புன்னகை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பான் போல இருந்தது.

    அவனுக்கும் சேர்த்து காரியதரிசியாக இருக்க வேண்டி வரும் என்று அப்போது தெரியவில்லை.

    மகன் வந்ததும் இந்திராணி தேவி எல்லா பொறுப்புகளில் இருந்தும் மெல்ல மெல்ல ஒதுங்கிக்கொள்ள, அந்த வீட்டிலும் எஸ்டேட்டிலும் அவன் வைத்தது தான் சட்டம் என்று மாறிப் போனது.

    ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ச்ட் ஆளா கிடைக்கலயா? ஷி டசின்ட் நோ எனிதிங்க்.

    அவன் வந்து சேர்ந்த முதல் நாளே இப்படி ஒரு வார்த்தையை அவன் திருவாயில் இருந்து கேட்க..... மனஸ்வினிக்கு அவன் மேல் இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டது.

    யாராவது ஒருத்தர் வேலை போட்டுக் கொடுத்தா தானடா எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். எல்லாருமே ப்ரஷர்ஸ் வேண்டாம்-ன்னு ஒதுக்கி வெச்சா எங்கிருந்து எக்ஸ்பீரியன்ஸ் வரும். எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லிக் கொடுத்தா கத்துக்கப் போறா.

    இந்திராணி தேவியின் பேச்சுக்கு அந்த எஸ்டேட்டில் எதிர்ப்பேச்சு வராது என்று மனஸ்வினிக்கு நன்றாகத் தெரியும். அப்பாடா என்று இருந்தது.

    இரத்தப் புற்றுநோய் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

    சுற்றிலும் பல புத்தகங்களை வைத்துக்கொண்டு அவன் சேகரித்துச் சொல்லும் தகவல்களை குறிப்பெடுத்து, கணினியிலும் ஏற்றித் தரவேண்டியது மனஸ்வினிக்கு மற்றொரு வேலையாகிப் போனது.

    எஸ்டேட் கணக்கு வழக்குகளோடு சேர்த்து இதையும் செய்வதற்கு அவள் தயங்கவில்லை. ஆனால் அதை செய்யச் சொல்லும் காலநேரம் எரிச்சல் மூட்டுவதாக இருந்தது.

    அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் இன்டர்காமை அலற வைத்து அவளையும் எழுப்பிவிடுகிறான். கேட்டால்.... அப்போதுதான் மனம் மிகத் தெளிவாக யோசிக்குமாம்.

    காலை ஆறு மணிக்கு சமையல் செய்யும் பர்வதம் வருவாள். அதுவரை நிரஞ்சனுக்கு தேவையான ப்ளாக் டீ முதற்கொண்டு இவள்தான் தயாரிக்க வேண்டும். மனஸ்வினிக்கு எரிச்சலாக இருந்தது.

    இவன் ஆய்வுக்கட்டுரை எழுத, தான் ஏன் தினமும் அதிகாலைத் தூக்கத்தை தொலைக்க வேண்டும் என்று குமுறிக் கொண்டு இருந்தாள்.

    சார்... இந்த ஆர்டிகிள் எப்ப முடியும்? ஐ ஆம் மிஸ்ஸிங் மை எர்லி மார்னிங் ஸ்லீப்

    துணிந்து ஒரு நாள் அவனிடமே கேட்டுவிட்டாள். என்ன அர்த்தம் என்றே புரியாத கடுமையான பார்வை மட்டுமே பதிலாக இருந்தது.

    அவன் சின்னவயசுல இருந்தே ஹாஸ்டல்ல வளர்ந்தவன்...மா. கொஞ்சம் முரட்டு சுபாவமா மாறிட்டான். எழுதி முடிக்கற வரைக்கும் தானே.... எனக்காக பொறுத்துப் போ இந்திராணி தேவியின் புன்னகை நிறைந்த முகம் அவள் எரிச்சலை அவ்வப்போது கட்டுப்படுத்திவிடும்.

    இவனும் இந்திராணி தேவியைப் போலவே புன்னகை முகத்தோடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொள்வாள் மனஸ்வினி.

    இதோ... இன்று மணி ஆறாகிவிட்டது. கண்கள் தீயாய் எரிய டைப்பிங் வேலையை முடித்து அன்றைய தேதியிட்டு ஃபைலை சேவ் செய்தாள்.

    டிக்டேட் செய்வதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று அவன் டென்னிஸ் ராக்கட்டை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    பக்கத்து எஸ்டேட் அரவிந்தனும், நிரஞ்சனும் ஒன்றாக சேர்ந்து டென்னிஸ் க்ளப்புக்கு போகும் விஷயம் வரை அவளுக்குத் தெரியும்.

    அரவிந்தன் இந்திராணி தேவியைப் பார்ப்பதற்காக அவ்வப்போது இங்கே வருவான். அவனுடைய கலகலப்பான சுபாவம் மனஸ்வினிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

    அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவே பிறவி எடுத்தவன் போல பேசிக் கொண்டிருப்பான். அன்று டென்னிஸ் கோர்ட்டில் இருந்து திரும்பி வரும்போது அரவிந்தனும் வீட்டிற்கு வந்திருந்தான்.

    ஹேய் பார்பி டால்..! கார்டன்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

    நிரஞ்சனின் இனோவாவில் இருந்து இறங்கிய அரவிந்தன், நேராக அவளிடம் வர...

    குட்மார்னிங் அரவிந்த் சார். பூஜைக்கு பூ பறிச்சுகிட்டு இருக்கேன். அப்போதுதான் குளித்துவிட்டு பிங்க் நிற சல்வாரில் தோட்டத்திற்கு வந்திருந்தாள்.

    இங்க பூத்திருக்கற ரோஜாவுக்கும் உனக்கும் வித்தியாசமே தெரியலை வினி என்று அரவிந்தன் எப்போதும் போல சகஜமாக பேசிக்கொண்டிருக்க கலகலவென்று சிரித்தாள் மனஸ்வினி.

    இனோவாவின் கதவை லாக் செய்து கொண்டிருந்த நிரஞ்சன் அலையோசையாய் எழுந்த இருவரது சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

    உள்ள போகலாமா அரவிந்த்

    குரல் கேட்டு அரவிந்தன் உள்ளே செல்ல, நிரஞ்சன் பார்வையில் இருந்தது கேலியா, கிண்டலா, கோபமா ஒன்றுமே புரியவில்லை.

    ஆனால் அவன் பார்வைக்கு இருந்த ஏதோ ஒரு சக்தி அவள் முகத்தின் புன்னகையை மொத்தமாக அணைத்துவிட்டது.

    சரியான கடுவன் பூனை..! தானும் சிரிக்காது மற்றவர்களையும் சிரிக்கவிடாது என்று நினைத்துக்கொண்டே பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் மனஸ்வினி.

    இந்திராணி தேவி பூஜையறையில் அவளுக்காக காத்துக்கொண்டிருக்க, வெள்ளிப் பூக்கூடை நிறைய ரோஜாவும், அரளியும், பவழமல்லியும் நிறைத்துக்கொண்டு வந்திருந்தாள் வினி.

    அந்த வீட்டின் பூஜையறை பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். அளவான சுவாமி படங்கள். ஆனால் எல்லாமே பிரம்மாண்ட படங்களாக ஃபிரேமிடப் பட்டிருக்கும்.

    முழங்கால் அளவு உயரமுள்ள இரண்டு வெள்ளிக் குத்துவிளக்குகள்..! உபயோகிக்கும் பஞ்சபாத்திரத்தட்டு முதல் எல்லாமே வேலைப்பாடு அதிகம். இந்திராணி தேவிக்கு கடவுள் பக்தி அதிகம். அதேபோல கலாரசனையும் அதிகம்.

    நிரஞ்சன் ஒரு நாள்கூட பூஜை அறைப் பக்கம் வந்ததாக அவளுக்கு நினைவில்லை.

    ஹூம்..! அம்மாவுக்கும், பையனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

    தீபாராதனை முடியும் வரை உடனிருக்கப் பழகி இருந்தாள் மனஸ்வினி. அங்கிருந்து எழும் அந்த தூபத்தின் வாசனை அவளுக்கு நாள் முழுவதும் நிறைவைத் தருவதாக இருக்கும். குங்குமத்தை சிறுகீற்றாய் இட்டுக்கொண்டே அவள் டைனிங் ஹாலுக்கு வர.....

    'வினி வாங்க. எங்களோட சேர்ந்து காபி சாப்பிடலாம்." என்று அரவிந்தன் அவளை சகஜமாய் அழைக்க,

    ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவள், நிரஞ்சனின் பார்வையைக் கண்டதும்...

    தேங்க்ஸ் அரவிந்தன் சார். யூ ப்ளீஸ் கேரி ஆன். நான் டிபன் முடிச்சிட்டு தான் காபி குடிப்பேன். ப்ளீஸ் டோன்ட் மைண்ட்.. புன்னகையோடு விலகிச் சமையல்கட்டுக்குச் சென்றாள்.

    நேரம் கிடைக்கும்போது சமையல்கட்டில் பர்வதத்திற்கு உதவியாக மனஸ்வினி ஏதாவது செய்து கொண்டிருப்பாள்.

    வினிம்மா. நீங்க ஏம்மா இதெல்லாம் செய்யறீங்க? ஆபீஸ் வேலைய மட்டும் பாருங்க. என்று பர்வதம் மறுத்தாலும் மனஸ்வினி கேட்பதில்லை.

    ஆபீஸ் வேலை அஷ்டலஷ்மி...! கிச்சன் வேலை அன்னலஷ்மி...! ரெண்டு வேலையும் சேர்த்துப் பழகணும் பர்வதம்மா. முத்துப் பல்வரிசை தெரிய சிரித்துக்கொண்டே மனஸ்வினி சொல்லும்போது யாருக்குமே மறுத்துப் பேசத் தோன்றாது.

    இன்னைக்கு என்ன சமையல் பர்வதம்மா? முருங்கைக்கீரை மரம் நிறைய அடர்த்தியா பரவி இருக்கே.... பறிச்சிட்டு வரவா. சின்ன வெங்காயம் சேர்த்து பொறியல் பண்ணா சூப்பரா இருக்கும். ஊர்ல அம்மா பண்ணுவாங்க பர்வதம்மா. இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தோணும்.

    தோட்டக்காரன் வந்து பறிச்சுக் கொடுக்கட்டும் வினிம்மா. பூச்சி பொட்டு ஏதாவது இருக்கப்போகுது. பர்வதம்மா சொல்லிக் கொண்டிருந்தபோதே பிளாஸ்டிக் கூடையை தூக்கிக்கொண்டு விரைந்தாள் மனஸ்வினி.

    இந்த வீட்டில் மற்ற வேலைகளை விட தோட்ட வேலைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

    இராசிபுரத்தில் அவர்கள் இருப்பது மிகவும் சிறிய வீடு. அம்மாவும், மகளும் மட்டும் தான் என்பதால் சொற்ப ரூபாய் வாடகையில் ஒரு சாதாரண வீட்டில் தங்கியிருந்தார்கள்.

    மனஸ்வினிக்கு பத்து வயது இருக்கும்போதே அவளுடைய அப்பா வேறு ஒரு பெண்ணோடு தொடுப்பு வைத்துக்கொண்டு விட, காலப்போக்கில் தந்தை என்று ஒருவன் இருந்ததையே மறக்கும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.

    வினியின் அம்மா அன்னபூரணி, டீச்சர் வேலையில் இருந்ததால் ஆண் துணை இல்லாமல் போனாலும், பெண்ணைக் கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற முடிந்தது.

    தன்னுடைய முதுகலைப் படிப்பும் கல்லூரியிலேயே முடிக்கவேண்டும் என்று வினிக்கு ஆசை தான்.

    அம்மாவுக்கு மூச்சிரைப்பு ஆரம்பித்த பிறகு தன் கண்ணாடிக் கனவுகளை அவளாகவே நொறுக்கித் தள்ளிவிட்டாள். அவள் சம்பாதிக்க ஆரம்பித்தால்தான் அன்னபூரணிக்கு ஓய்வு கிடைக்கும்.

    இந்திராணி தேவி சுளையாக மாதம் தவறாமல் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னபோது, இந்த உலகமே அவளுக்கு ஒரு சொர்க்க பூமியாய்க் காட்சி தந்தது. அதுபோக தங்குமிடம், சாப்பாடு எல்லாமே இலவசம் என்றாகிவிட அவள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற இளக்காரத்தில் தான் நிரஞ்சன் தன்னை வெறுப்பாகப் பார்க்கிறானோ என்று கூட சிலசமயம் அவளுக்குத் தோன்றும்.

    அவன் எப்படி இருந்தால் என்ன? இந்திராணி தேவியின் ஆதரவு இருக்கும்வரை அவளுக்கு எந்தப் பயமும் இல்லை.

    நிரஞ்சன் அறையைத் தவிர அந்தப் பெரிய வீட்டில் வேறு எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியும் சுதந்திரத்தை இந்திராணி, வினிக்கு வழங்கி இருந்தார்.

    அதிகாலையில் நடக்கும் கட்டுரை வேலைகள் கூட ரீடிங் ரூமில் தான் நடக்குமே தவிர, தப்பித்தவறி கூட அவன் அறைப் பக்கம் இதுவரை சென்றதில்லை.

    திடீரென்று வினிக்குப் பின்னால் பேச்சு சத்தம் கேட்டது.

    வீட்ல பேச்சுத் துணைக்கு ஆளில்லைன்னு மரத்துகிட்ட பேசிகிட்டு இருக்கியா வினி?

    அரவிந்தன், ஆரம்பத்திலிருந்தே அவளை ஒருமையில் அழைக்கப் பழகியிருந்தான்.

    கீரை பறிச்சிட்டு வரேன்னு பெருசா கூடைய தூக்கிட்டு வந்துட்டேன் அரவிந்தன் சார். கைக்கு எட்ட மாட்டேங்குது. மரமே... மரமே... கீரை போடுன்னு பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கேன். அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்தான் அரவிந்தன்.

    நான் பறிச்சு தர்றேன் என்று அவன் கைநீட்ட அவனது உயரத்துக்கு தானாக மரம் வளைந்து கொடுத்தது. இலையைத் தொட்ட வேகத்தில் மரத்தில் இருந்து இரண்டு கம்பளிப் பூச்சிகள் அரவிந்தின் கைமீது விழ, ஐயோ என்று கத்திக்கொண்டே தன் கையில் இருந்த பிளாஸ்டிக் கூடையின் நுனியால் கணநேரத்தில் அதைத் தட்டிவிட்டாள் மனஸ்வினி.

    ஒண்ணும் ஆகலயே என்று அவள் அரவிந்தனின் கைகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க,

    அவளின் ஐயோ சத்தம் கேட்டு வெளியே வந்த நிரஞ்சனுக்கு இவர்கள் இருவரும் நின்றிருந்த கோலம் கண்ணில்பட, ஏற்கனவே கடுகடுவென்று இருக்கும் முகம், இன்னும் இறுகி பாறையாகவே மாறிப் போனது.

    வாட் ஹாப்பன்ட் அரவிந்த்? பின்னால் இருந்து வந்த குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்தார்கள்.

    நத்திங்...டா. இலையைப் பறிக்கலாம்-ன்னு போனேன். சில பூச்சிகள் என் மேல விழுந்தவுடனே மேடம் பயத்துல அலறிட்டாங்க.

    உனக்கு ஆபீஸுக்கு நேரமாகல.... கிளம்பு..! இலை பறிக்கறது, பூ பறிக்கறது எல்லாம் தோட்டக்காரன் பார்த்துக்குவான்.

    இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு நிரஞ்சன் உள்ளே செல்ல, பை... பை... என்பதுபோல் அரவிந்தனிடம் தலையாட்டிவிட்டு வினியும் கூடையுடன் சமையல் கட்டைத் தேடிச் சென்றாள்.

    நில்லு என்ற நிரஞ்சனின் அதட்டல் குரலுக்கு கால்கள் நிற்க,

    மூணு மாசத்துக்கான எஸ்டேட் அகௌன்ட் சம்மரி ரெடி பண்ண சொன்னேன். டிட் யூ ஃபினிஷ் தி வொர்க்

    பாதிதான் முடிஞ்சிருக்கு சார். இன்னும் இரண்டு நாள்ல கம்ப்ளீட் பண்ணிடறேன்.

    அவன் கண்களை நேருக்குநேர் பார்த்துப் பதில் சொல்ல எப்போதுமே முடிந்ததில்லை.

    ஐ தின்க் அஃபிஷியல் வொர்க் இஸ் மோர் இம்பார்டன்ட் தென் ஆல் தீஸ் ட்ராமாஸ்..! எதுக்கு இந்த எஸ்டேட்டுக்கு வந்திருக்கோம்ன்னு ஞாபகம் இருக்கணும். அம்மா உனக்கு ஓவரா இடம் கொடுத்து வெச்சிருக்காங்க...

    அவளை முறைப்பாகப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

    இன்னும் டிபன் கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் அஃபிஷியல் வொர்க் அதுஇது என்று காய்ச்சிக் கொண்டிருக்கிறான். ‘ச்சு’ என்று மனசுக்குள் அலுத்துக்கொண்டே வினி மாடிப்படி ஏற,

    வினி. வந்து சாப்பிட்டு போய் வேலைய பாரும்மா. வா என்னோடயே உக்காரு என்றபடி டைனிங்டேபிளுக்கு வந்தார் இந்திராணி தேவி.

    ஒருபக்கம் அவளை முறைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் நிரஞ்சன். இன்னொரு பக்கம் அன்பே உருவமாக இந்திராணி தேவி.

    என்ன செய்வது என்று தெரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மனஸ்வினி.

    ‘தைரியம் இருந்தால் என் முன்னால் சாப்பிட உட்காறேன் பார்க்கலாம்’ என்று அவன் பார்வை கேட்பது போல இருந்தது.

    அழைத்தது இந்திராணி தேவிதானே என்ற தைரியத்தில் டேபிளுக்கு அருகே சென்றாள் மனஸ்வினி.

    வெடுக்கென்று அவன் சேரைவிட்டு எழுந்திருக்க, முகத்தில் அறைந்தது போல இருந்தது. கண்களில் முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள்.

    நான் பர்வதம்மா கூட சாப்பிட்டுக்கறேன்...மா. தப்பா நினைக்காதீங்க. என்று நெஞ்சு விம்ம சொல்லிவிட்டு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டாள் மனஸ்வினி. இதயம் எரிமலையாய்..!

    ஆகாஷ்... ஏன் இப்படி நடந்துக்கறே? அவ ரொம்ப சின்னப்பொண்ணுடா. தேடித்தேடி அவ மனசை ரணமாக்கிட்டு இருந்தா வேலைய விட்டுப் போயிடுவா. அவ என்னோட உட்கார்ந்து சாப்பிடறதுல உனக்கு என்ன கௌரவக் குறைச்சல்? இந்திராணியின் குத்தல் நிரஞ்சனின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

    ஷி இஸ் டேக்கிங் டூ மச் ஆஃப் ஸ்பேஸ் ஹியர். யாரை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும். நம்மகிட்ட வேலை பார்க்கறவங்க கிட்ட, நீங்க வழக்கமா நடந்துக்கறதுக்கும், இவளை ட்ரீட் பண்ணற விதத்துலயும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஏன்னு எனக்கு காரணம் சொல்லுங்க?

    மகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தார் இந்திராணி தேவி. வந்ததில் இருந்து அவனும் இதைத்தான் ஒரு பெரிய பிரச்சனை என்பதுபோல கேட்டுக் கொண்டிருக்கிறான். மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

    சமையல்கட்டில் பர்வதம்மாள் வார்த்துக் கொடுத்த ஆனியன் ஊத்தாப்பம் உள்ளே இறங்க, மனஸ்வினியின் மனமோ இராசிபுரத்துக்கு பறந்தது.

    அம்மாவுக்கு ஃபோன் செய்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்று மறக்காமல் செய்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கை கழுவிவிட்டு வெளியே வர, மீண்டும் அலுவல் வேலையாக அவளை அழைத்தான் நிரஞ்சன்.

    வினிம்மா. காபி கலக்கட்டா?

    பர்வதத்தின் குரலுக்கு வேண்டாம் என்று தலையசைத்துவிட்டு நிரஞ்சனை தேடிச் சென்றாள் மனஸ்வினி. எஸ்டேட் கணக்குகளை வைத்துக்கொண்டு பிழியப்பிழிய வேலை வாங்கினான்.

    இடையில் ஒருமுறை வேலைப்பளு தாங்கமுடியாமல் அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்க, அதில் மருந்துக்கு கூட கருணை இருப்பதாகத் தெரியவில்லை.

    பர்வதம் அவனுக்கு ப்ளாக் டீ கொண்டு வரும் சாக்கில் அவளுக்கும் காபி கலந்து வர, அதையும் அவன் முன்னே பருக பயந்துகொண்டு ரீடிங் ரூமை விட்டு வெளியே வந்தாள் மனஸ்வினி.

    கூண்டுக்குள் அடைபட்ட கிளி திடீரென்று வெளியே பறந்து வந்தது போல இருந்தது.

    காரிடாரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே காபியை பருகிக் கொண்டிருந்த போது, அரவிந்தனின் முகம் ஞாபகம் வந்தது. அவனோடு இருந்தால் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக்குருவியை போன்ற உணர்வு வருகிறது. அவனும் நிரஞ்சன் போல வாட்டசாட்டமான தோற்றம் உள்ளவன் தான். ஆனால் அரவிந்தனைப் பார்த்தால் பயம் வருவதில்லை. ஒரு கல்லூரித் தோழனைப் பார்த்த உணர்வு நிறைந்திருக்கிறது.

    அரவிந்தனிடம் வேலை கேட்டு அவன் எஸ்டேட்டுக்கு போய்விடலாமா என்று கூட மனஸ்வினி சிலமுறை நினைத்தாள். அது இந்திராணி தேவியை அவமதிப்பது போல இருக்கும் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

    ட்ரீமிங் அபௌட் யுவர் பாய் ஃபிரெண்ட் பின்னாலிருந்து குரல் கேட்க சட்டென்று திரும்பினாள்.

    இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் நிரஞ்சன்.

    மனஸ்வினிக்கு சுர்ரென்று ஏறியது.

    நீங்க நினைக்கற மாதிரி பாய்ஃபிரெண்ட் எனக்கு யாரும் கிடையாது. அப்படியே இருந்தாலும் தட் இஸ் எ மியர் ஃபிரெண்ட்ஷிப்..!

    கட்டுப்படுத்த முயன்றாலும் முடியாமல் போய் அவள் குரலில் கோபம் வெளிப்பட்டது.

    அப்படின்னா வந்து வேலையைப் பார்க்கலாமே..! ரீடிங் ரூம் விட்டு வெளிய வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நிரஞ்சனின் குரலில் கேலி தெரிந்தது.

    ஐ நீட் எ ப்ரேக் சார். தொடர்ச்சியா அகௌன்ட் பார்த்தது.... முடியல..! மிச்சம் இருக்கறது மதியம் பார்க்கறேனே.... ப்ளீஸ்.

    மனஸ்வினி அவனிடம் அனுமதி கேட்க, அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிச் சரி என்றான்.

    காபி பிளான்டேஷன் வரைக்கும் வரலாமே..! ப்ரேக் கிடைச்ச மாதிரியும் இருக்கும். அவுட்டோர் போன மாதிரியும் இருக்கும். இங்க வந்ததுல இருந்து எங்கயும் வெளிய போனது உண்டா?

    வேலையைத் தவிர வேறு

    Enjoying the preview?
    Page 1 of 1