Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagai Manathai Parithuvittai...
Azhagai Manathai Parithuvittai...
Azhagai Manathai Parithuvittai...
Ebook239 pages2 hours

Azhagai Manathai Parithuvittai...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

ரோஷினி என்ற சுயநலவாதியின் துரோகத்தால், திருமணம் என்ற கான்செப்டை வெறுத்து பிரம்மச்சரியம் பூண்டுவிட்ட நரேன் என்னும் கனவுநாயகன்.

தாரா அவன் வாழ்வில் வந்த வசந்தம்.

ரோஷினியின் துரோகம் என்ன?

தாரா எப்படி அவனுடைய பிரம்மச்சரிய விரதத்தை முறியடித்தாள்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505633
Azhagai Manathai Parithuvittai...

Read more from Hansika Suga

Related authors

Related to Azhagai Manathai Parithuvittai...

Related ebooks

Reviews for Azhagai Manathai Parithuvittai...

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagai Manathai Parithuvittai... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    அழகாய் மனதைப் பறித்துவிட்டாய்...

    Azhagai Manathai Parithuvittai...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்

    நீ என் மனைவியாக வேண்டுமென்று..

    ஆண்டுபல காத்திருக்க வேண்டுமென்று அவன் சொன்னான்

    ஆயுள் வரை காத்திருப்பேன்.... நானும் சொல்லி வந்தேன்..

    என் ஆசை நிறைவேறுமா.....

    ஆடம்பரமான திருமண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த விமர்சையான இன்னிசைக் கச்சேரி. மிகப் பெரும் செல்வந்தரின் மகனது திருமணம்.

    சரசரக்கும் பட்டுப் புடவைகள்.... டாலடிக்கும் வைரங்கள்.... உடலின் நகைகளை மிஞ்சும் முக ஒப்பனை.... போலியான முகபாவங்கள்..... நல விசாரிப்புகள்.

    நரேனுக்கு சலிப்பாக இருந்தது. அம்மாவுக்கு உடல்நிலை நன்றாக இருந்த வரை இது போன்ற விசேஷங்களில் தலைகாட்டுவது அவர்களது கடமையாக இருந்தது. அவன் தன்னுடைய தொழிற்சாலை நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்வான்.

    முதல்முறை ஹார்ட்-அட்டாக் வந்ததில் இருந்து அவர்கள் அதிகமாக எங்கும் செல்வதில்லை. இது போன்ற நிகழ்வுகளுக்கும் அவன்தான் வேலை மெனக்கெட்டு வர வேண்டியிருக்கிறது.

    ஹலோ... மிஸ்டர் நரேந்த்ரா... ஹவ் டூ யூ டூ?கோத்தகிரி எஸ்டேட் பற்றி ஜெயதேவ் கிட்ட சொல்லியிருந்தேனே... யோசிச்சீங்களா? -இது மாதேஷ்... தொழில்முறை நண்பர்.

    அவன் வாய் திறக்கும் முன்னரே ஹாய் டேடி... என்று தந்தையை உரசிக் கொண்டு வந்து நின்றாள் ஷீதல்.

    என்னவோ இப்போது தான் அப்பாவும், மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதுபோல எதற்கு இந்த பாவனை? எந்த நிகழ்ச்சியில் அவனைப் பார்த்தாலும் வழிவதற்கென்றே ஓடிவந்துவிடுகிறாள். அவள் பார்வை வெட்கமின்றி அவனையே மேய்ந்து கொண்டிருக்க.... நல்லவேளையாக செல்போன் ஒலித்தது.

    எக்ஸ்க்யூஸ் மீ.... என்று இடத்தை விட்டு அகன்றவனை ஒரு துரோகியைப் பார்ப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள் ஷீதல்.

    திமிர் பிடித்தவன்.... ஒரு ஹாய் சொன்னால் தான் என்னவாம்? அவளை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லையா என்ன?

    அவளே கூட முதலில் சொல்லலாம் தான்... ஒரு திருமண நிகழ்ச்சியில் அவளாக ‘ஹாய்’ சொல்லப் போய் அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். அத்தனை பேர் முன்னிலையில் மூக்குடைப்பட்டது தான் மிச்சம்.

    உங்களால முடியுமின்னா இந்த மாதிரி விசேஷங்களுக்கு நீங்களே போயிட்டு வந்துடுங்க. எனக்குப் போகவே பிடிக்கல. அங்க யார் முகத்துலயும் உண்மையான சந்தோஷமோ, பந்தபாசமோ கிடையாது. ஒரே அலட்டல். பார்க்கவே எரிச்சலா இருக்கு.

    அன்று இரவு அம்மாவுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து விழுங்கச் செய்தபோது மகன் சொன்னதைக் கேட்டு துர்காவுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

    அவன் வயதுப் பிள்ளைகள் பேசுவதைப் போலவா பேசுகிறான்? எதைப் பார்த்தாலும் வெறுப்பு... கோபம்..! இன்னும் எத்தனை காலம் தான் இதே நிலை நீடிக்கப் போகிறது?

    நிமிர்ந்த நடை மாறாமல் செல்லும் தன் மகனை விழிகளுக்குள் நிறைத்தபடி தலையணையில் தலைபதித்தார் துர்கா. மாத்திரையின் உதவியால் அவர் சற்று நேரத்தில் உறங்கிவிடுவார். மகனோ உறக்கம் வராமல் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருப்பான் என்று தாயுள்ளம் அறியும்.

    அவனும் சராசரி ஆண்களைப் போல ரசனைகளோடு வாழ்ந்தவன் தானே...! அந்தப் பெண் ரோஷினிக்காக எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து நகைகள் வாங்கினான். அவள் ஆசைப்பட்டாள் என்று மும்பை, கொல்கொத்தா என்று... தான் செல்லும் இடங்களிலெல்லாம் புது ஃபேஷன் ஆடைகளாக வாங்கி வந்துக் குவித்தானே..!

    யூ ஆர் ஸோ ஸ்வீட் நரேன்... வருங்கால மாமியார் எதிரே இருக்கிறாள் என்பதைக் கூட மறந்து அவன் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே அத்தனையும் வாங்கிக் கொண்டாளே...!

    நிச்சயம் தான் ஆகிவிட்டதே என்ற திளைப்பில் கடைவீதி, தியேட்டர், காபி கஃபே என்று இருவரும் கைகோர்த்துச் சுற்றாத இடமில்லை.

    திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகை ப்ரூஃப் தயாராகி இருந்த நிலையில் திடுமென்று ஒருநாள் இரவு தன் மகள், உடன் பிறந்த சகோதரர்கள், அவர்களின் துணைவியார் என்று புடைசூழ வந்து இறங்கினார் பரந்தாமன். அவன் பெரிய கொலைக்குற்றம் செய்துவிட்டதைப் போல குரோதத்துடன் பார்த்தாள் ரோஷினி.

    உங்க தொழிற்சாலைப் பற்றிக் கேள்விப்பட்டது எல்லாம் அப்படி ஒண்ணும் நம்பிக்கையா இல்லையே நரேன்... மாப்பிள்ளை என்ற வார்த்தை இடம் மாறி நரேன் என்று ஒருமையில் உரைப்பதை அவன் உணரத் தவறவில்லை.

    திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் புதிதாக தொழிற்சாலை பற்றி என்ன குற்றம் கண்டுவிட்டார்?

    ஏற்கனவே சொல்லியிருக்கனே மாமா.... நான் லண்டன்ல படிச்சிட்டு இருந்தபோது முழுக்க முழுக்க அப்பாவோட நிர்வாகத்துக்கு கீழே இயங்கிக்கிட்டு இருந்த ஃபேக்டரி. சரியா கவனிக்காம விட்டதுல ஒருசில பிரிவுகள்ள ஏமாத்து வேலையெல்லாம் நடந்திருக்கு. அப்பா காலமான பிறகு நான் பொறுப்பேத்து மெல்ல மெல்ல எல்லாத்தையும் சரி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். மூழ்கிப் போயிடுவேனோன்னு பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை. உங்க பொண்ணை உள்ளங்கையில வெச்சு தாங்க வேண்டியது என் பொறுப்பு.

    ரோஷினியைப் பார்த்து அவன் புன்னகைத்தபோது அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நரேனுக்கு மனதுக்குள் சுருக்கென்று இருந்தது.

    சாரி நரேன்.... உங்க ஃபேக்டரில லாக்-அவுட் நடக்கலாங்கற அளவுக்கு எனக்கு தகவல் வந்திருக்கு. தொழிற்சாலை நடத்தறதுல உங்களுக்கு இன்னும் அனுபவம் பத்தலேன்னு நினைக்கறேன். நீங்க எப்ப எல்லாம் கத்துக்கிட்டு, எப்ப எல்லாத்தையும் சரி பண்றது? அதுவரைக்கும் தன்னோட புருஷன் கோடீஸ்வரனா இருப்பானா... இருக்கறதையும் தொலைச்சிட்டு நிற்பானான்னு என் பொண்ணு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கமுடியாது. நாங்க சரியா விசாரிக்காம அவசரப்பட்டு நிச்சயம் பண்ணிட்டோமோன்னு பயமா இருக்கு. இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.

    தன்னுடைய ஃபேக்டரியில் லாக்-அவுட்டா? தனக்கே அந்தத் தகவல் தெரியாதபோது இவருக்கு எப்படித் தெரிய வந்தது? நடத்தும் நாடகத்திற்கு இவர்களாக ஏதோ காரண காரியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

    நீங்க உங்க பொண்ணை தொழிற்சாலைக்கு கட்டித் தரப்போறீங்களா..... எனக்குக் கட்டித் தரப்போறீங்களா என்று கேட்க நினைத்தவன் அமைதியாக இருந்துவிட்டான். காரணம்.... அவனுக்காகப் பரிந்து பேசவேண்டிய ரோஷினி பாராமுகமாய் இருக்கிறாள்.

    ரோஷினி... ஒரே ஒரு நிமிஷம் என்கிட்ட பேசிட்டுப் போ.... என்று அழைத்தவனை திரும்பிப் பார்க்காமல் திமிர்நடையோடு அவள் சென்றபோது, அவனுக்குள் எதுவோ நொறுங்கிப் போனது.

    அன்பையும், காதலையும் யாசகமாகவா பெறமுடியும்? அது ஆண்மைக்கு அழகா?

    நரேன்.... என்னடா இதெல்லாம்..? என்று அழுதார் துர்கா.

    எனக்கும் ஒண்ணும் புரியலம்மா.... நாம எதையுமே மறைச்சுப் பேசி நிச்சயம் பண்ணலயே.... அவளும் இவ்வளவு நாள் நல்லாத்தானே பழகிட்டு இருந்தா.... பின்ன ஏன் இப்படி?

    அவன் குரலில் தெரிந்த நடுக்கம் அவரைப் பெரிதும் கலங்கடித்தது. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் என்றாலும், எந்த அளவு அவன் ரோஷினியை உயிருக்குள் வைத்துத் தாங்கினான் என்று துர்காவுக்கு நன்றாகத் தெரியும்.

    அர்த்தராத்திரியில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அழுதவரை அவசரகதியில் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தான்.

    மைல்ட் அட்டாக் மிஸ்டர் நரேன்.... நாலு நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும்...

    மருத்தவரின் ஆலோசனையை ஏற்று... தொழிற்சாலையை தன் உதவியாளர் ஜெயதேவ் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அம்மாவே கதியென்று கிடந்தான்.

    ஆஸ்பத்திரியிலிருந்து துர்க்காவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது ரோஷினியின் திருமணம் மும்பையில் இனிதே நடந்து முடிந்திருந்தது.

    திருமணத்தைப் பற்றிய தகவல்களை தேவ் மெனக்கெட்டு சேகரித்து வைத்திருந்தான்.

    புது மாப்பிள்ளை மும்பையில் பெரிய சரக்குக் கப்பலுக்குச் சொந்தக்காரனாம். ஒரு சாப்ட்வேர் கம்பெனியும் அவன் பெயரில் இருக்கிறதாம். ரோஷினி தன் உறவுப் பெண்ணின் திருமணத்திற்கு மும்பை சென்றபோது அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து அவளைப் பார்த்தானாம். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்துப் பெண் கேட்டு வந்தானாம்.

    நடந்தவற்றை அட்சரம் பிசகாமல் அவன் வாசித்து முடித்தபோது நரேனின் முகத்தில் ஒளி குன்றியிருந்தது.

    ஆக... பணம் தான் காரணம்.

    நரேனிடம் இருப்பதை விட அந்த மும்பைக்காரனிடம் பலமடங்கு அதிகப் பணம். தானாக வந்த திமிங்கலத்தை ஏன் விடுவானேன் என்று மொத்த குடும்பமும் அவன் காலடியில் சுருண்டு விட்டது.

    நல்லது.... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று....! தன் மனைவி என்று ஆகும் முன்பே அவள் பணத்துக்கு வீங்குபவள் என்று தெரிய வந்ததே...!

    திருமணம் என்ற வார்த்தையே அவனுக்கு வேப்பங்காயாக மாறிவிட தொழிற்சாலையும், வீடுமே அவனது உலகமானது...!

    இரண்டு குடும்பத்துக்கும் இணைப்புப் பாலமாக இருந்த நண்பர் சேகர்ராஜா நடந்த சம்பவங்களை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்.

    தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுப்பா நரேன்... இப்படி எல்லாமே தலைகீழா மாறும்-ன்னு நான் நினைக்கவே இல்லை. பரந்தாமன் இந்த அளவுக்குப் பணத்தாசை பிடிச்சவரா இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கல.

    ரோஷினி மட்டும்தான் இந்த உலகத்துல பொண்ணுன்னா நடந்ததை நினைச்சு வருத்தப்படறதுல அர்த்தம் இருக்கு சேகர் அங்கிள். உலகத்துல பொண்ணுங்களுக்கா பஞ்சம்? இவளைவிட நல்ல உத்தமமான பொண்ணு நிச்சயம் என் அம்மாவுக்கு மருமகளா அமைவா..! அப்படி வர்றவ அன்புக்கும், காதலுக்கும் கட்டுப்பட்டு வாழற பொண்ணா இருந்தா போதும். தனக்கு நல்லது செய்ய நினைத்தவரின் மனம் சங்கடப்படக்கூடாதே என்று அப்படிச் சொல்லி வைத்தான்.

    காலம் தன் போக்கில் கடமையைச் செய்து கொண்டிருக்க வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவனை கோல்ஃப் க்ளப்பில் சந்தித்தார் சேகர்ராஜா. சிறிதுநேர நல விசாரிப்புகள்....!

    குடும்ப நண்பர் என்ற முறையில் நரேன் மீது எப்போதும் தனிப்பட்ட அன்பும், பாசமும் உண்டு. மறுபடியும் எப்பப்பா சந்திக்கலாம்? அவன் தோளில் கை போட்டவாறு தோழமையோடு கேட்டார்.

    கோத்தகிரியில எஸ்டேட் வாங்கற விஷயமா ஒரு வாரம் வேலை இருக்கு. இந்த ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு தான் க்ளப் பக்கம் வரமுடியும் அங்கிள்."

    அம்மா எப்படி இருக்காங்க நரேன்? ஒரு வாரம் அவங்களைத் தனியா விட்டுட்டு கோத்தகிரி போறயேப்பா?

    நல்லா இருக்காங்க அங்கிள். வீட்ல வேலைக்காரங்க இருக்காங்க.... பார்த்துக்கச் சொல்ல வேண்டியதுதான். ஒரு ஃபோன் அடிச்சா ஜெய்யும் அவர் சம்சாரமும் ஓடி வந்துடுவாங்க.

    நான் கூட அம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. இந்த வாரம் சரோஜாவையும் அழைச்சிட்டு உன் வீட்டுக்கு வரலாம்-ன்னு இருக்கேன்.

    தாராளமா வாங்க... அம்மாவும் அதிகமா வெளிய போறதில்லே... வீட்டுக்கு நாலு பேர் வந்தாலாவது சந்தோஷப்படுவாங்க.

    அந்தப் பச்சைப் புல்வெளியில் அழுத்தமாக கால் பதித்து நடந்து செல்பவனைப் பெருமூச்சோடு பார்த்தார் சேகர்ராஜா.

    என்ன ஒரு கட்டுக் குலையாத ஆண்மகன் இவன். இவனை நிராகரிக்க அந்த ரோஷினிக்கு எப்படித்தான் மனம் வந்தது?

    ஜெய்.... தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்த்துட்டுப் போயிடுங்க. உங்க மனைவிக்கு நேரமிருந்தா வந்து அம்மாவோட ஸ்பென்ட் பண்ணச் சொல்லுங்க. நான் சீக்கிரம் வந்துடறேன். டேக் கேர் ஆஃப் தி ஃபேக்டரி.

    ஜெயதேவிடமும், துர்காவிடமும் சொல்லிவிட்டு அவன் கோத்தகிரி நோக்கிப் புறப்பட்டுவிட்டான். மகனின் முகம் பார்த்து நான்கு நாட்களாகி விட்டது. துர்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

    இன்னைக்கு என்னம்மா சமைக்கட்டும்? என்று கேட்டு கிரிஜா எதிரே வந்து நின்றபோது...

    அவனும் ஊர்ல இல்லை... வெறும் சாதமும், ரசமும் வைங்க போதும்... எனக்கும் ஒண்ணும் சாப்பிடப் பிடிக்கலே. என்று முடித்துக் கொண்டார்.

    அன்று மாலை தன் மனைவியை அழைத்துக் கொண்டு சேகர்ராஜா வந்தபோது வெறிச்சோடிக் கிடந்த வீட்டில் ஜீவன் வந்தது போல இருந்தது.

    உடம்பு இப்போ எப்படி இருக்கு? அடிக்கடி நீங்க வெளியே போறதில்லேன்னு நரேன் சொன்னானே.... முடிஞ்சளவு ரிலாக்ஸ்டா நடமாடுனா உடம்புக்கும், மனசுக்கும் ஆரோக்கியமா இருக்குமே.

    கேட்ட மாத்திரத்தில் துர்க்காவிடம் கண்ணீர் பெருக்கெடுக்க கணவன், மனைவி இருவருமே பதட்டத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    நான் ஆரோக்கியமா இருந்து என்ன ஆகணும்? எதைப் பார்த்து சந்தோஷப் படப்போறேன்? அவனோட வேதனைய என் முன்னால காண்பிச்சுக்காம நாடகமாடறான். என்னோட முகவாட்டம் அவனைப் பாதிக்கக்கூடாதேன்னு அவன் இல்லாத நேரத்துல நான் கண்ணீர் வடிக்க வேண்டியதா இருக்கு.

    எனக்கென்ன ஏழெட்டுப் பிள்ளைங்களா இருக்காங்க...? பெத்தது ரெண்டே ரெண்டு... அதுலயும் ஒண்ணு அல்பாயுசல போய் சேர்ந்தாச்சு. நரேனாவது நல்லபடியா வாழறதைப் பார்க்கணும்-ன்னு தான் ஆசைப்படறேன். நடந்ததையே நினைச்சு கசந்துபோறானே ஒழிய என்னோட ஆதங்கத்தைப் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறான். திடீர்ன்னு எனக்கு ஏதாவது ஆகிட்டா... மகனை வேலியில்லாத பயிரா விட்டுட்டுப் போகிறோமேன்னு என் ஆத்மா சாந்தியில்லாமத் தவிக்கும்.

    "நரேன் மனசுவிட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு சேகரண்ணா.... வெளிய மத்தவங்ககிட்ட என்ன நாடகமாடறானோ? வீட்டுக்குள்ள இறுகிப் போய்த் தான் இருக்கான். ஃபேக்டரியே கதி...! வீட்டுக்கு வந்தாலும் சாப்பிட்டோமா, நாலு புத்தகம் எடுத்து வெச்சுப் புரட்டுனோமா..... இதுதான்..! சில சமயம் விடிய விடியத் தூங்காம தோட்டத்துலயும், மொட்டைமாடிலயும்

    Enjoying the preview?
    Page 1 of 1