Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Payanangal Mudivathillai
Kaadhal Payanangal Mudivathillai
Kaadhal Payanangal Mudivathillai
Ebook132 pages1 hour

Kaadhal Payanangal Mudivathillai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

சிறுவயதிலிருந்தே தாழ்வு மனப்பான்மையோடு  ரஞ்சனி வளர்கின்றாள். இவளுக்கு முன்னரே தங்கைக்கு மணம் முடிக்கச் சூழல் வருகிறது. 
தந்தையோ மூத்த மகளுக்கும் நல்ல வழி பிறக்க வேண்டி, ஒரு பையனை மணமுடிக்க அவசரமாகத் தேர்வு செய்கிறார்.  ஆனால் அந்தப் பையன்  ரஞ்சனியிடம் ரகசியமாய் ஒரு கோரிக்கை வைக்கின்றான்.

எதிர்காலமே கேள்விக் குறியான நேரத்தில் தந்தையின் நண்பர் மகனும் தன் பள்ளிக் கால பால்ய தோழனுமான குணா இவள் வாழ்வில் வருகிறான். ரஞ்சனியின் இருண்ட வாழ்வு அகல்விளக்கு போலச் சுடர் விட, குணா என்ன செய்தான்? ரஞ்சனியின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதைப் படித்துப் பாருங்கள். (இது நான் எழுதிய முதல் நாவல்.)
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136306371
Kaadhal Payanangal Mudivathillai

Read more from Sri Gangaipriya

Related to Kaadhal Payanangal Mudivathillai

Related ebooks

Reviews for Kaadhal Payanangal Mudivathillai

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Payanangal Mudivathillai - Sri Gangaipriya

    http://www.pustaka.co.in

    காதல் பயணங்கள் முடிவதில்லை

    Kaadhal Payanangal Mudivathillai

    Author:

    ஸ்ரீ கங்கைபிரியா

    Sri Gangaipriya

    For more books

    https://www.pustaka.co.in/home/author//sri-gangaipriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    குமிழ் மரங்கள் சரியான இடைவெளியில் நேர்த்தியாய், அழகாய் நடப்பட்டிருந்தன. ஏழு வருட காலத்தில் நல்ல வளர்ச்சியை எட்டி இருந்தன. தண்ணீர் கூட இந்த மரங்கள் அவ்வளவு எதிர்பார்ப்பதில்லை. மிளகு கொடியும் ஒவ்வொரு மரங்களிலும் ஒயிலாய் வளைந்து, தெளிந்து பரவி இருந்தது. இந்த வகை மரங்களில் நல்ல லாபம் இருந்தது. சுப்புராயனுக்கு மர வியாபாரம் தான் கை கொடுத்து வந்தது. அறுபது இன்ச் சுற்றளவு மரங்களை அவ்வப்போது கட்டிப் பிடித்து பார்ப்பார். விதைகளையும் சுற்று வட்டாரங்களுக்கு விற்று வந்தார். ஒரு கிலோ விதையின் விலை நூறு ருபாய் சிலர் கன்றுகளையும் வாங்கி செல்வார்கள். சுப்புராயன் சிரத்தையோடு கன்றுகளை வளர செய்வார். ஒரே விதையில் மூன்று கன்றுகள கிட்டும்.

    இதை வாங்குபவர்களிடம் அக்கறையாய் எவ்வளவு இடைவெளியில் நட்டு, வளர்த்து, லாபம் ஈட்டலாம் என்று நன்கு விளக்குவார். இதன் சிறப்புகளையும் கூறுவார். சொந்தமாக நிலம் இல்லாதவர்களிடம் கவலை வேண்டாம் என்பார். ஏன் தெரியுமா? வசிக்கும் வீட்டிலே சுற்று மதில் சுவரோரம் நட்டு வைத்தால் போதும் ஒரு டன் ரூபாய் ஏழாயிரத்துக்கு விலை போகும் என்ற நம்பிக்கை தருவார்.

    சுப்புராயன் தனது நண்பர் ரங்கசாமியை எதிர்பார்த்து நின்றார். வீடு கட்டி கொண்டிருக்கிறார் ரங்கசாமி. ஜன்னல், கதவுகள் செய்ய மரம் அறுத்து போக வருவதாக சொல்லி இருந்தார். 'இன்னும் காணமே' என்று முணுமுணுத்தார். அந்த ஆறடி சுப்புராயன் அந்த ஒன்பது அடி குமிழ் மரங்களை அவ்வப்போது பார்த்து விட்டு, சாலையை யோசனையுடன் வெறித்தார். 'ஆகா ரங்கா வந்துவிட்டான்...' உற்சாகமானார்.

    தனது வேஷ்டியை மடித்து கட்டியவாறு, நண்பரை வரவேற்றார்.

    வாடா ரங்கா... எத்தினி நேரம் நான் சாலையையே பார்த்துட்டு நிக்கறது? வர நேரமாகும்னு ஒரு போன் போட கூடாது?" வருத்தப்பட்டார்.

    மன்னிச்சுக்கோடா சுப்பு கொஞ்சம் சூழ்நிலை சுகமில்லை. என்னடா...? சரி சரி நீ மொதல்ல வீட்டுக்குள்ள வா...

    எல்லாம் பேசிக்கலாம். மரம் அறுக்க, ஏத்த ஆளுங்கள, லாரிய வர சொல்லிட்டையா?"

    வரவேண்டாம்னு சொல்லிட்டேன் துண்டை உதறினார்.

    "பெரிசா ஏதாவது பிரச்சனையா? பணம் தர கஷ்டம்னா பரவாலடா. முடியறப்ப தா. இல்லாட்டி விடு, நீ ஆசையா கட்டுன வீடுனு எனக்கு தெரியாதா?

    உன்னை பத்தி எனக்கு தெரியாதா சுப்பு. இது வேற. வீட்ல யாருக்காவது உடம்பு சரிலையா? இழுத்தார்.

    ம்கூம்... கூறியவர் தனது துண்டை கீழே விரித்து உட்கார்ந்து, குமிழ் மரத்தில் சாய்ந்து கொண்டார்.

    சுப்புவும் தோதாய் அவரை பார்த்தவாறு அமர்ந்தார். சற்று நேரம் மௌனம் நீடித்தது. ரங்கசாமியின் கண்கள் கலங்கின. பெரிதாய் நண்பனின் மனதை ஏதோ ஒன்று குடைகிறது என்பது புரிந்தது.

    நண்பனின் கைகளை, ஆதரவாய் பற்றி, தோளையும் மென்மையாக தடவி கொடுத்தார். ரங்கசாமியும் உடனே சுப்புவின் கையை பிடித்து, முகத்தில் வைத்து கொண்டு லேசாக குலுங்கி அழுதார். கொஞ்சம் நிதானமாக தனது கவலையைக் கொட்டினார்.

    சு...ப்பு! உ...ன்கிட்ட நா ஏற்கனவே சொன்னேன் இல்ல. எ ரெண்டாவது பொண்ணு சிவரஞ்சனி ஒ...ரு பையன கா...தலிக்கறா'ன்னு"

    "ஆமா... ரங்கா... அவ கூட பெங்களூருல வேல செய்றவன்

    தானே... பையனும் கூட நம்ம வகை தானே. நீ அக்கா கலியாணம் முடியற வரைக்கும் காத்து இருக்க சொன்னதானே? அதுக்கென்ன இப்போ?" நண்பர் முகத்தை உற்று கவனித்தார்.

    சிவரஞ்சனி கதை தான் ஒனக்கு தெரியுமே... ஒரு வருசமா ஒரு மாப்பிள்ளையும் அமைல... அழகா இல்ல, படிச்சு வேலைக்கு போகல, நல்லா பேச தெரில, பல் சரில்ல, எலும்பும் தோலுமா உடம்பு இருக்கு... எத்தனை சாக்கு சொல்லி தட்டி கழிச்சாங்க... பத்தாதுக்கு சாதகமும் சரிலையாம்... நா என்னடா பண்ணுவேன்... நீயே சொல்லு... ரஞ்சனி முகமே வாடி போச்சுடா. தெரிஞ்சவங்களாம் கூட நந்தினிய தான் பெண் கேட்கறாங்க. அவ நல்ல நிறம், அழகு இல்ல. ரஞ்சனி வேற நிறமும் கம்மி... எல்லாம் ஆண்டவன் லீலை. கா...லைல நந்தினி போன் பண்ணிச்சு... 'அ...ப்பா... இதுக்கு மேல என்னாலையும், அவரு, அவரோட வீட்லையும் வெயிட் பண்ண முடியாது... உடனே எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... இல்லாட்டி நாங்களே மேரேஜ் பண்ணிப்போம்'ன்னு சொல்றாடா சுப்பு. நான் என்ன செய்யட்டும் சொல்லு? கைகளை பிசைந்தார்.

    நீ ரஞ்சனிய பத்தி கேட்டியா? தயக்கமாய் கேட்டார். "கேட்டேன் சுப்பு. அவ அதுக்கு 'நா என்னப்பா செய்யட்டும்.

    அதான் ஒரு வருசத்துக்கு மேல காத்திருந்தேனே இனிமே என்ன பண்ண முடியும். அவளுக்கு கல்யாணம் ஆக ஒரு வருசம் ஆகலாம், ரெண்டு வருசம் ஆகலாம் ஏன் இன்னும் பல வருசமாகலாம்... நானும் அதுவரைக்கும் காத்திருக்க முடியுமா? எனக்கு என்ன தலையெழுத்துப்பா? ரஞ்சனி மேல எனக்கு அக்கறை இல்லாம போகல. அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்... கண்டிப்பா நாங்களே அதுக்கு உதவுவோம். தயவு செஞ்சு நீங்களும் புரிஞ்சுகிட்டு, வீட்லையும் புரிய வைங்கப்பா இந்த விசயத்தைன்னு சொல்லுது... ரஞ்சனிய பத்தி ஒரே கவலையா இருக்கு சுப்பு."

    ம்... ரஞ்சனி என்ன சொலிச்சு?

    "நந்தினிக்கே மொதல்ல முடிச்சுடலாம்'ன்னு தான் சொலிச்சு.

    ஆனா எனக்கு மனசு ஒப்பல. அவளவிட வயசுல மூத்த இருக்கும்போது எப்படி? அது நியாயமா இருக்காதே. ரஞ்சனி சரின்னு சொன்னாலும் அவ மனசு என்ன பாடுபடும்... ஹும்..."

    கவலைப்படாத ரங்கா ரஞ்சனிக்கும் நல்ல காலம் பொறக்கும்

    2

    மணமேடை அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நந்தினியின் அருகில் சஞ்சீவ் புன்னகையுடன் அமர்ந்து இருந்தான். ரங்கசாமி லேசான சோகத்துடன் இருந்தார். முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது. நல்ல கூட்டம். பெண்கள் ஆபரணங்களில், தங்கள் கணவன்மார்களுடன் ஜொலித்தார்கள். வாண்டுகள் சிலர் விளையாடி மகிழ்ந்தார்கள். பூக்களின் நறுமணம் நாசியில் மிகவும் சுகந்தமாய் ஏறியது.

    சுப்பு தன் குடும்பத்தோடு வந்து கொண்டிருந்தார் மனைவி சொர்ணா, மகன் குமார், அவனது மனைவி சுகந்தி, அடுத்த மகன் குணபாலன், பேத்தி மித்ரா ஆகியோர் அடங்குவர். ரங்கசாமியின் மனைவி மல்லிகா ஓடி வந்து வரவேற்றார்.

    குணபாலனின் கண்கள் சுழன்று சுற்றியது. இறுதியாய் அந்த பெண்ணிடம் நிலைத்தது. பட்டுப்புடவை ஊதா நிறம். அதில் தங்க நிற சக்கர டிசைன் மின்னின. தலை நிறைய மல்லிகைச்சரம். மாநிறம், அழகும், லட்சணமும் வழக்கத்தை விட கூடி இருந்தது. ஒல்லியான தேகம் என்றாலும் புடவையின் உபயத்தால் கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1