Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkaakavaa Naan
Unakkaakavaa Naan
Unakkaakavaa Naan
Ebook137 pages52 minutes

Unakkaakavaa Naan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466169
Unakkaakavaa Naan

Read more from Thilagavathi

Related to Unakkaakavaa Naan

Related ebooks

Reviews for Unakkaakavaa Naan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkaakavaa Naan - Thilagavathi

    14

    1

    நாள் அப்படித் தொடங்கியிருக்க வேண்டாமே என்றிருந்தது பிரகதிக்கு. காலை வேளையில் முதல் முதலில் அவள் கண்ணில் பட்டது சோர்ந்து, வீங்கினாற்போலச் சுரந்து போயிருந்த அம்மாவின் முகம்தான்.

    என்ன ஆச்சு? அம்மா அத்தனை காலையிலேயே அழுதிருக்கிறாளா இல்லை, இரவு அழுதபடியே தூங்கிப் போய்விட்டாளா?

    இத்தனைக்கும் அவளுடைய அம்மா கங்காவின் கெட்டிக்காரத்தனம் எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் அவளுடைய பொறுமை. அதைவிடப் பிரசித்தம் அவளுடைய நிலைகுலையாத சமநிலை. ஓவியத்தில் தீட்டியது போல அளவான, கண்கள் மட்டுமே புன்னகைக்கும் முகம், தெளிவான, ஆனால், ஒரு கோட்டுக்கு மேல் உயராத குரல்.

    ஆனால், பிரகதியின் திருமணம், மணமேடை வரை போய் நின்று போன அந்தத் தினத்திலிருந்து அவள் பழைய கங்காவாக இல்லை என்பது நிதர்சனம்.

    பிரகதி, கங்காவின் தோள்களைத் தொட்டு நிறுத்தினாள். அம்மா! என்றபடி ஆயிரம் கேள்விகள் அடைத் தேனீக்களாக மொய்த்துக் கிடந்த பார்வையை கங்காவின் முகத்திலும் குறிப்பாகக் கண்களிலும் காட்டினாள்.

    ஒண்ணுமில்ல குக்கி. சீர்காழிப் பெரியம்மா நேத்துப் பேசினா...

    எதுக்கும்மா? நான்தான் இதுவரை நீங்க பண்ணது, எடுத்துக்கிட்ட முயற்சியெல்லாம் போதும், விட்டுருங்கன்னு சொன்னேனே. கிவ் மீ எ பிரேக்மா ப்ளிஸ்.

    கங்கா, வெறுமையான தன் பார்வையால் மகளை ஆதரவாகப் பார்த்தாள்.

    வெளியே, கொல்கத்தாவின் காலைப் பொழுதின் அடையாளமாகச் ஜமாதார் காடி எனப்படும் இரு சக்கர உருளைகள் கொண்ட வண்டிகளைத் தள்ளியபடி கைவைத்த பனியனும் கம்ச்சா எனப்படும் ஈரிழைத் துண்டை இடுப்பிலும் உடுத்திய கார்ப்பரேஷன் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழிப்பறைகளையும், கழிவு நீர்க்கால்வாய்களையும் தூய்மைப்படுத்தும் தங்கள் அன்றாடப் பணியைத் துவக்கியிருந்தார்கள்.

    புதுசா நான் ஒண்ணும் உன் கல்யாணம் விஷயமா பண்ணலேடா குக்கி. சமையல் அறையை நோக்கி நடந்த அம்மாவைப் பின் தொடர்ந்தாள் பிரகதி. நடையைக் கடந்ததும் வீட்டின் நடுவே அமைந்திருந்த தொட்டையக் கடக்கும் போது பிரகதியின் பார்வை அவளையறியாமலே மேற்புறம் துண்டாகத் தெரிந்த ஆகாயத்தின் மேல் பதிந்தது. சாம்பல் பூசிக் கொண்டிருந்தது வானம். பளீரென்ற நீலம் இல்லை. ஆனாலும் புகைப்பட சட்டங்களுக்குள் புதைக்கப்பட்ட மின்சார பல்புகள் ஒளியேற்றி படங்களை வெளிச்சச் சதுரங்களாக ஆக்குவது போல அவள் கண்ணில் பட்ட ஒரு துண்டு சாம்பல் வானப் பின்னணியில் கதிரவனின் முதற் கதிர்கள் உட்புகுந்து, ஒளியைக் கசிய விட்டு உயிர் ததும்பச் செய்து கொண்டிருந்தது.

    கங்கா, பாத்திரங்களை எடுத்து ஹூக்ளிக் குழாய்க்குக் கீழே இருந்த தொட்டியை அடுத்த மேடையில் வைத்துத் துலக்கத் தொடங்கினாள். கங்கை நதிதான் ஹூக்ளி என்ற செல்லப் பெயருடன் கொல்கத்தாவைத் தன் மடியில் வைத்துத் தாலாட்டுகிறது. ஆகவே ஹூக்ளியின் தண்ணீர் கங்காஜலம்தான். ஆனால் அது தனிக்குழாயில் வரும். பாத்திரம் துலக்க, வீடு கழுவ, துணி துவைக்க என்ற தேவைகளுக்கும் பூஜைக்கும் கொல்கத்தாவாசிகள் அந்த கங்கைத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் குடிக்கவும், சமைக்கவும் கார்ப்பரேஷன் தண்ணீர் தனிக்குழாயில் வருகிறது.

    கங்கா, பாத்திரங்களைத் துலக்கும் பவுடரினால் பாத்திரங்களைத் தேய்த்துத் தனியே எடுத்து வைக்கவும், பிரகதி அவற்றைப் பிரஷ்ஷால் தேய்த்து ஹூக்ளி நீரில் கழுவித் துடைத்து எடுத்துத் தனியே கவிழ்த்து வைத்தாள்.

    என்னம்மா மறுபடியும் அந்த ஃப்ராடு கதிர்வேல் சங்கதியா?

    கதிர்வேல் பிரகதியைப் ‘பெண் பார்ப்பதற்கென்று’ போன மாதம் வந்து போயிருந்தான்.

    என்னடா இவன் இவ்வளவு படிச்சுட்டு, உலக நாடுகள் பலதைச் சுத்தி பத்து வருஷமா பணம் சம்பாரிச்சுகிட்டு, வீட்டுக்கு ஒரே பையனா இருந்துகிட்டு, முப்பத்தி மூணு வயசு வரை கல்யாணம் பண்ணிக்காம இருக்கானேன்னு நீங்க நெனைக்கலாம். இயற்கைதான். உண்மையைச் சொல்லணும்னா ரெண்டு காரணங்களைச் சொல்லணும். ஒண்ணு, படிப்பு, ஆராய்ச்சி, ஆராய்ச்சின்னு எம் மனசு அதுலேயே நின்னுடிச்சி. ஊர்ல, உலகத்துல சொல்வாங்களே அதுமாதிரி, எனக்கு முதல் மனைவி ஆராய்ச்சிதான்னு வச்சிக்குங்களேன். ஆனால் அது என் மனசுக்கு திருப்தியைத் தந்ததோடு மட்டுமில்லே, எனக்கு கௌரவத்தையும் கை நிறைய வருமானத்தையும் குடுத்தது. என் தொழில்லே உலக அளவிலே எனக்கு ஒரு அங்கீகாரத்தை வாங்கித் தந்தது. இல்லேன்னா ராமநாதபுரத்திலே பேர் தெரியாத குக்கிராமத்துல பொறந்த எனக்குப் போர்ச்சுக்கல்னும், ஆஸ்திரேலியான்னும், ஜப்பான், அமெரிக்கான்னும் போக சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா? கல்யாணம் இதுக்கெல்லாம் ஒரு தடையா, இல்லேன்னா ஆராய்ச்சிப் பாதையிலே என் கவனச் சிதறலுக்கு ஒரு காரணமா ஆயிடக் கூடாதுன்னு பார்த்தேன். ரெண்டாவது காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, குடும்பப் பாசம். நான்தான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஆனா, எனக்கு முன்னாலே மூணு அக்காவுங்க. பெரிய அக்காவோட மூத்த பையனுக்கும், எனக்கும் வயது வித்தியாசம் குறைச்சல் தான். அவங்க மூணு பேர் குழந்தைங்களையும் நான் என் தோளிலே மட்டுமில்லே நெஞ்சிலேயும் சுமந்தேன். அவங்களை ஆளாக்கிற பொறுப்பை வலியப் போய் நானே ஏத்துக்கிட்டேன். நீங்க உடனே எங்க அக்காவுங்க எல்லாம் ஏழைப்பட்டவங்க, திக்கத்தவங்கன்னு நெனைச்சுடாதீங்க. எல்லோரும் வசதியானவங்க. பெரிய பண்ணையார்க் குடும்பம் மாதிரியான பணக்காரக் குடும்பங்களிலேதான் வாழ்க்கைப்பட்டாங்க. மாப்பிள்ளைகளும் தங்கமானவங்க. ஆனா, படிப்பு, வெளியுலகம், வேலைன்னு வரும்போது அதிலேயெல்லாம் என்னைப் போல அனுபவப்பட்டவங்க குடும்பத்துல வேறு யாரும் இல்லை. நான் தலையிடாம இருந்திருந்தா இன்னிக்கு என்னோட அக்கா மகனுங்க லண்டன், ரஷ்யா, ஹாங்காங்னு போயிருக்க முடியாது.

    சீர்காழிப் பெரியம்மா, மெனக்கிட்டுக் கொண்டு அவனுடைய ஊர் வரை போய் விசாரித்து விட்டு வந்தாள்,

    கதிர்வேலை வீட்டுப்படி மிதிக்கக் கூடாது என்று அவனுடைய அப்பா கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். ஏதோ முறையில்லாத முறையாக உறவுக்காரப் பெண்ணிடம் அவனுக்கு சாவகாசம் இருப்பது வெளியே தெரிந்து பிரச்னையாகி விட்டதாம். அவனுக்கு ஊரோட இருக்கிற உறவு ஒன்றுவிட்ட தாய்மாமன் ஒருவன்தானாம். அவனோ உலக மகா கேடி. கதிர்வேலு மூலமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி நிறையப் பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவன் மேல் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். கதிர்வேலுவின் மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கிறதாம்.

    சரி... இதுக்கு ஏம்மா நீ அழுவறே. உலகம் முழுக்க முழுக்க ஜனங்க நல்லவங்களா பாலோ பாலாவாவே இருப்பாங்களே? இந்த மாதிரி ஏமாத்துப் பேர்வழிங்க இருக்கவே மாட்டாங்களா? ஏதோ இப்பவே இதெல்லாம் தெரிஞ்சுதேன்னு சந்தோஷப்படுவியா?

    அதுக்கில்ல குக்கி... சரி... எது நடந்தாலும் இப்படியே சொல்லிக்கிட்டிருந்தேன்னா என்ன அர்த்தம்? நீ காசியிலே மணவறை வரை போன கல்யாணம் நின்னப்பவே இப்படித்தான் சொன்னே... என்னாலே அப்படி எம் மனசை சமாதானப்படுத்திக்க முடியலியே குக்கி?

    கங்கா, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்துக் காய்ச்சத் தொடங்கினாள்.

    எல்லாம் அதோ தக்ஷிணேஷ்வர்லே இருக்காளே அந்தக் காளிக்கே வெளிச்சம். இந்தப் பாஷை தெரியாத ஊரிலே அவளைத் தவிர வேறு எந்த ஆதரவு நமக்கு இருக்கு. உங்க தாத்தா சொல்வாரே, இங்கே அவதாம்மா நம்ப சொந்தபந்தம் எல்லாம்னு அப்படித்தான் நெனச்சிக்கிட்டிருக்கிறேன். வர்ற துர்கா பூஜைக்கு பந்தல்லே உன்னையும் மாப்பிள்ளையும் நிறுத்திடறதுன்னு இருந்தேன்... ம்...

    பிரகதி அம்மா பேசுவதை தலையைச் சாய்த்துக் கொண்டு, ஒண்ணரை வயசுக் குழந்தையின் மழலையை ரசிக்கிற தாயைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    "என்னடா இந்தக் கதிர்வேல் இப்படி கோரமண்டல், ஹெளரா மாதிரி எக்ஸ்பிரஸ் வேகமா நிறுத்தாம பேசறானேன்னு அன்னிக்கே எனக்கு ஒரு ஷணம் தோணிச்சு. ஜென்மாவுக்கும் மௌனவிரதம் ஏத்துக்கிட்டாப்பல. பாம்பை மிதிச்சுட்டாக்கூட வாயைத் திறந்து கத்த மாட்டாரே உங்கப்பா! உனக்குத் தான் தெரியுமே அவர் வாயிலே வார்த்தையை வர வைக்கறதுங்கறது கல்லுல நாரை உரிச்சாப்லதான்னு. அந்தக் கஷ்டம் என்னங்கறது எனக்குத்தானே தெரியும். அதனால கலகலன்னு அந்தப் பையன் பேசறதைக் கேட்டு எனக்கு சந்தோஷமாக்கூட இருந்திச்சி போயேன். அவனும்

    Enjoying the preview?
    Page 1 of 1