Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Oonjal
Kalyana Oonjal
Kalyana Oonjal
Ebook151 pages1 hour

Kalyana Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தந்தையைச் சிறுவயதிலே பறிகொடுத்த பேத்தியின் மீது இரக்கமும் அன்பும் கொண்ட தாத்தா, அவள் வளர்ந்ததும் தன் உயிர் நண்பனின் பேரனுக்குக் கட்டி வைக்கத் தீர்மானிக்கிறார். மகளே உலகமென  வாழும் தாயோ, அவளைத் தன் அண்ணன் வீட்டிற்கு மருமகளாக அனுப்ப விரும்புகிறார். இந்தப் பாசப் போராட்டங்களின் நடுவில் நாயகி நந்தினி தத்தளிக்கிறாள். 

இறுதியில் அவள் யாருக்கு இசைந்தாள்? தாத்தாவிற்கா? அம்மாவிற்கா? அவள் யாரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்கிறாள்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கதையில் உள்ளன!!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136306350
Kalyana Oonjal

Read more from Sri Gangaipriya

Related to Kalyana Oonjal

Related ebooks

Reviews for Kalyana Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Oonjal - Sri Gangaipriya

    http://www.pustaka.co.in

    கல்யாண ஊஞ்சல்

    Kalyana Oonjal

    Author:

    ஸ்ரீ கங்கைபிரியா

    Sri Gangaipriya

    For more books

    http://www.pustaka.co.in/home/author//sri-gangaipriya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    நந்தினி நான் பார்த்து வளர்ந்த பொண். அவகிட்டே எனக்கு இல்லாத அக்கறையா? நான் சொல்றபடி கேட்டா என்ன? தப்பாவா சொல்வேன்?

    தலை முழுவதும் வெள்ளிக் கம்பிகள் ஓடப் பனைமரமளவு உயரமாக இருந்த மாமனார் பத்மனாபன் சொல்ல சொல்ல மருமகள் ரேவதிக்குக் கோபம் வந்தது. ரேவதிக்கு ஒல்லியான உடல்வாகு. தூய சந்தன நிற புடவை உடுத்தி இருந்தாள். ரேவதி மூண்டக் கோபத்தை அடக்க சிரமப்பட்டாள். லேசாக மூச்சு சமன் இல்லாமல் வெளிபட,

    பாருங்க மாமா! நீங்க தப்பா சொல்றதா நா சொல்லல. ஆனா ஒரு விசயம்னு வரும்போது எல்லோருக்கும் வேற வேற கருத்து இருக்கும்தானே? என்று கேட்டாள்.

    ஓகோ! என்ன வேற கருத்து?

    நந்தினிய உங்க நண்பரோட பேரனுக்குக் கொடுக்க விருப்பம் இல்ல.

    என்ன காரணம்? அவன் வெறும் நண்பன் மட்டுமில்ல? அதுக்கும் மேல. அந்தப் பையன் கதிரவன் அருமையான மனசு படைச்சவன். எம்மேல எவ்வளவு மரியாதை வச்சு இருக்கான் தெரியுமா? இதுக்கு மேல என்ன தேவை நம்ம நந்தினிக்கு?

    மாமா! அவங்கள யாரையும் நா குறை சொல்லல. நந்தினிய எங்க அண்ணன் பையன் கோபிக்குத் தரணும்னு விரும்பறேன்.

    பத்மனாபனுக்கு மூக்கு விடைத்தது. விவாதம் கட்டுபாடின்றிக் காரசாரமாக ஓடியது. பத்மனாபனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் வடிவேலன். இளையவன் செந்தில்வேலன். வடிவேலனின் மனைவி தான் ரேவதி. அவர்களின் ஒரே குமாரத்தி நந்தினி. வடிவேலன் நந்தினி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வியாதி கண்டு போய் சேர்ந்து விட்டான். அதன் பிறகு ரேவதி வெகு சிரமப்பட்டு வேலைக்குச் சென்று நந்தினியை ஆளாக்கி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். மாமனார் வகையிலும் அண்ணன் வகையிலும் அவ்வவ்போது உதவி வரும். கொழுந்தனுக்குச் சுந்தர் என்ற ஒரு ஆண் மற்றும் சுபத்ரா என்ற ஒரு பெண் பிள்ளைகள் உண்டு. மகா கருமி. அவன் மனைவி நாயகி ஜாடிக்கு ஏற்ற மூடி. பத்பனாபனுக்கு மூத்த பேத்தி என்றால் கொள்ளை பிரியம். தகப்பனை இழந்து பிஞ்சு முகமாய் அன்று நின்ற நந்தினியின் பிம்பம் இன்றும் அவரது அகத்தில் ஆழமாய் பதிந்து போய் இருந்தது. அன்றே அவர் எடுத்துக் கொண்ட சூழ் பேத்திக்கு உத்தமமான வாழ்வு அமைத்துத் தர வேண்டும் என்பதுவே. அதற்காக அவர் முன்னெடுக்கும் நல்ல விசயத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் மருமகளின் மீது அவருக்கு மகா ஆத்திரம் பொங்கியது.

    என் மகன் உயிரோட இருந்திருந்தா என் வார்த்தைக்கு மதிப்பு தந்திருப்பான். இதுக்கு மேல இங்க நிக்கறது எனக்கு மரியாதை இல்ல.

    அவர் கூறிவிட்டு விருட்டென நடந்தார். உள் அறையில் அமர்ந்த நந்தினி வேகமாய் எழுந்து வெளியே ஓடி வந்தாள்.

    தாத்தா! தா..த்தா!

    பேத்தியின் குரலைக் கேட்டவர் பட்டென நின்றார்.

    என்னம்மா?

    தாத்தா! எங்கே சாப்பிடாமா கிளம்பறீங்க?

    உங்க அம்மா சொன்னத கேட்ட இல்ல? எனக்கு வயிறு அதிலையே நம்பிடுச்சு.

    என்றவர் ரேவதியைக் குற்றம்சாட்டும் பார்வை பார்த்தார். நந்தினியும் தாயைக் கவனித்தாள். அவள் முகம் இறுகி இருந்தது.

    அப்படிலாம் சொல்லாதீங்க தாத்தா!

    வேற எப்படி சொல்ல சொல்ற? நீயாச்சு நான் சொல்றத கேட்பீயா?

    என்றவர் ஆர்வம் சொட்ட அவளின் முகத்தைப் பார்த்தார்.

    தாத்தா! திடீர்னு கேட்டா நா என்ன சொல்வேன். கொஞ்சம் யோசிக்கணுமே.

    பட்டென்று அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டவர்,

    நல்லா யோசி யாரு வேண்டாம்னு சொன்னா? ஆனா சீக்கிரம் தாத்தாவுக்கு ஆதரவா முடிவு பண்ணிட்டேனு சொல்லு. வந்து உன் கையால விருந்தே சாப்பிடறேன்.

    என்றவர் பிடியை விடாமல் பேசி விட்டு அகன்றார்.

    ரேவதி மகள் அருகே வந்தாள். மகளை உற்றுப் பார்த்தாள். கோதுமை நிறம். கண்கள் தாமரை மொட்டுகள் போல பெரியன. நாசி ஆட்காட்டி விரலளவு நீளம். உதடுகள் செழுமையாக இருந்தன.

    ராதை மாதிரி ரம்மியமாகக் காட்சி தரும் என் உயிரான மகளுக்குக் கண்ணன் மாதிரி மாப்பிள்ளையைத் தேடி வைத்துள்ளது இந்தப் பெரியவருக்குப் பிடிக்கவில்லை. பெற்றவளுக்கு இல்லாத அக்கறை யாருக்கு உள்ளது? மனம் படபடத்தது.

    ஆனாலும் உங்க தாத்தாவுக்கு இவ்வளவு ஆகக் கூடாது. நான் தான் விளக்கமா சொல்றேன். மகன் இருந்திருந்தா கேட்டிருப்பானாம். உங்க அப்பா யாரோ எப்படியோ போகட்டும்னு விட்டுட்டு போயிட்டார். நான் தானே பேச்சு வாங்கறேன்.

    ரேவதிக்குக் குரல் கிறீச்சிட்டது.

    ஐயோ அம்மா! நீ வேற புலம்பாத.

    தோ! பாரு நந்தினி! உங்க தாத்தா பேச்ச விட்டுத் தள்ளு. நீ கோபிய தான் கல்யாணம் பண்ணிக்கனும். கோபி தான் இந்த வீட்டு மாப்பிள்ளை.

    என்று ரேவதி ஆணித்தரமாகப் பேசினாள்.

    நந்தினி குழம்பிப் போனாள்.

    தாத்தாவின் உரிமையான பாசத்திற்குக் கட்டுப்படுவதா? அம்மாவின் நெடுநாள் ஆசைக்கு அடிப்பணிவதா? ஆனால் ஒரு உண்மை என்ன? என்றால் இவர்கள் இருவருரில் ஒருவர் கூட உன் விருப்பம் என்னவென்று கேட்கவில்லை.

    தற்சமயம் நந்தினி கல்லூரி இறுதியாண்டில் உள்ளாள். இன்னும் 6 மாதங்கள் நிறைந்தால் படிப்பு முடிந்து விடும். அதற்குள் இந்தக் கலோபரங்கள் தொடங்கி விட்டன.

    கல்லூரியில் முக்கியமான பரிட்சை வர உள்ளது. அவள் மனம் படிப்பில் செல்லவே இல்லை. அவள் வாழ்வு என்னும் விடைத்தாளுக்குப் பதில் என்ன? என்று புரியவில்லை.

    ******

    அடுத்த நாள் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வழக்கமாக அவளுடன் துணைக்கு வரும் தோழி கவிதா வந்து சேர்ந்தாள். கவிதா அடுத்த தெருவில் வசிக்கின்றாள். கிட்டத்தட்டப் பள்ளியிலிருந்தே இருவரும் சேர்ந்துதான் படித்து வருகின்றனர். இருவருக்கும் நன்றாக ஒத்து போகும். கவிதா சற்று குள்ளம். முடி இடுப்பை தாண்டித் தொங்கும். பூசிய உடல்வாகு. சுறுசுறுப்பாக இயங்குவாள். பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தனர்.

    என்ன நந்தினி? ஒரே மௌனம்? தோழியை ஆழ்ந்து பார்த்தாள்.

    கவி! எனக்கு நிம்மதியே போன மாதிரி இருக்கு.

    ஏய்! என்ன சொல்ற? வீட்ல எதாவது பிரச்சனையா?

    ம்! என்றவள் அத்தனையையும் கொட்டித் தீர்த்தாள். எல்லாவற்றையும் கவிதா கேட்டுக் கொண்டாள்.

    ஓ! கொஞ்சம் சிரமமான சூழல் தான்.

    ம்!

    நா ஒண்ணு கேக்கடா?

    சொல்லு கவி!

    உனக்கு இவங்க ரெண்டு பேருல யார பிடிக்கும்?

    நந்தினி சிறிது யோசித்தாள். கோபியைச் சிறிய வயதில் இருந்து நந்தினி பார்த்து பழகி உள்ளாள். நல்ல சிவப்பு நிறம். உயரம். எப்போதும் முகத்தில் சிரிப்பு படர்ந்திருக்கும். யாரையும் தேவையில்லாமல் ஒரு சொல் பேச மாட்டான். சாது. பால் மாதிரி மனம். அப்பாவின் பலசரக்குக் கடைகளைப் பார்த்து வருகிறான். 3 கிளைகள் உள்ளன.

    கதிரவனோடு அவ்வளவு பழக்கமில்லை. இத்தனை வருடங்களில் ஒரு ஐந்தாறு தடவை பார்த்திருக்கக் கூடும். தாத்தாவின் நண்பர் ஐயப்பன் வீட்டுக்கு வரும் சமயங்களில் எப்போதாவது பேரனை உடன் அழைத்து வருவார். மாநிறம். ராணுவ உடற்கட்டு. கண்கள் மிகவும் கூர்மை. வண்டி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளான்.

    என்ன பதில காணோம்?

    ரெண்டு பேர்கிட்டேயும் எந்த குறையும் சொல்ல முடியாது கவி!

    "அதுக்குன்னு ரெண்டு பேரையுமா

    Enjoying the preview?
    Page 1 of 1