Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbenum Pookkal Malaratum....
Anbenum Pookkal Malaratum....
Anbenum Pookkal Malaratum....
Ebook146 pages1 hour

Anbenum Pookkal Malaratum....

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பை இழப்பதும், செலுத்திய அன்பை மறுப்பதுவும் வலியைக் கொடுக்கும். ஒருவர் மீது வைத்த நேசம் நிராகரிக்கப்பட்டால் உலகத்துல அன்பே இல்லை என முடிவெடுப்பதில் அர்த்தம் இல்லை. நிராகரிக்கப்பட்டவர்களே நம்பிக்கையோடு வாழும்போதும், தேடி வந்த உண்மையான மனிதனின் அன்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் மீராவின் கதை.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580142707088
Anbenum Pookkal Malaratum....

Read more from Chitra.G

Related to Anbenum Pookkal Malaratum....

Related ebooks

Reviews for Anbenum Pookkal Malaratum....

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbenum Pookkal Malaratum.... - Chitra.G

    https://www.pustaka.co.in

    அன்பெனும் பூக்கள் மலரட்டும்...

    Anbenum Pookkal Malaratum...

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1.

    மனதை இலகுவாக்கும் இசை அந்த அறையின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருந்தது. சலசலக்கும் நீரின் ஓசையுடன் மகிழ்ச்சியாக சப்தமிடும் பறவைகளின் குரல்களும் இணைந்த ஓர் இசையின் சங்கமம்.

    காதுகளில் பாய்ந்து மனதை அமைதிப் படுத்திய அந்த இசையின் தாலாட்டில் தனது காலை நேர யோகப்பயிற்சியை செய்து முடித்தாள் ஆராதனா.

    சில நிமிடங்களே ஆனாலும் உணர்ந்து செய்த பயிற்சியால், மனதிற்குள் புதிய உற்சாகம் படிந்து கொண்டது. அந்த எனர்ஜியுடன் தனது யோகா பாயை மடித்து வைத்தவள், ஜன்னலுக்கு அருகில் வந்து நின்றாள்.

    முகத்தில் பட்டு அறைக்குள் நுழைந்த சூரியனின் கதிர்கள் குட் மார்னிங் ஆராதனா! என கூறுவதைப் போல உணர்ந்தாள்.

    சிறிது நேரம் சூரியக் கதிர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவள் காத்திருக்கும் வேலைகளை நினைவுபடுத்திக் கொண்டு குளித்து, தயாராகி உணவு மேசைக்கு வந்தாள்.

    அவள் வருவதற்கு முன்பே அப்பா மாதவனும், அண்ணன் ஜெகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அம்மா பரிமாறிக் கொண்டிருந்தார்.

    ஆராதனாவைப் பார்த்தததும் நேரத்துல ஹாஸ்பிடல் போகணும்னு சொன்ன. வா வந்து சாப்பிடு. இல்லைனா அவசரமா சாப்பிடாம ஒடுவ

    அதட்டுவதைப் போல பேசிய அம்மா தட்டை எடுத்துவைத்தார்.

    நேரம் இருக்கு சாந்தா. எதுக்கு அவளை அவசரப்படுத்துற நீ உட்கார் ஆரா!

    அப்பாவின் அமைதியான பேச்சிற்கு தாங்க்ஸ் அப்பா எனக் கூறியவள் அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

    கண்கள் தாமாகவே எதிரில் உட்கார்ந்திருந்த அண்ணனின் முகத்தைப் பார்த்தன. அவள் வந்ததைக் கூட அவன் உணரவில்லை என்பது தெரிந்தது. அவனது ஒரு கை தட்டிலும், மறு கை போனிலும் இருந்தன.

    எதுவோ சொல்லவேண்டும் என நினைத்தவள் தன்னையே அடக்கிக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள். சட்டென இனிப்பின் சுவை உரைக்க அப்பொழுதுதான் தட்டைப் பார்த்தாள்.

    கேசரி

    அண்ணனை பார்ப்பதைவிட்டு முதலில் நீ தட்டைப் பாரு ஆரா மனம் கேலி செய்தது.

    லேசான புன்னகையுடன் அம்மாவைப் பார்த்தவள் என்னம்மா இன்னைக்கு விஷேசம். கேசரி செஞ்சிருக்கீங்க என்றாள்

    கேசரி மட்டுமில்லம்மா. பாயசம் கூட இருக்கு. ஆனா எனக்குத்தான் அம்மா தர மாட்டேங்குறா

    டாக்டர் கிட்டேயே பஞ்சாயத்தா? உங்க பொண்ணு சொல்லட்டும் அப்பாவுக்கு இனிப்புக் கொடுங்கன்னு நான் தரேன்

    அம்மாவின் குரல் கண்டிப்புடன் வந்தது.

    அம்மா என்ன விஷயம்னு சொல்லுங்க, அதுக்கு அப்புறம் கொடுக்கவா, வேணாமான்னு நான் சொல்றேன்

    அது வந்து ஆராம்மா..நம்ம பூபாலன் அங்கிள் இருக்காரில்லை

    ஆமாப்பா... உங்க பிஸினஸ் பார்ட்னர்

    அவருக்கு பிஸினஸ்ல மட்டுமல்ல, நம்ம சொந்தமாகவும் ஆகணும்கிற ஆசை வந்துடுச்சாம். அவங்க பொண்ணுக்கு ஜெகனை கல்யாணம் செய்யணும்னு ஆசைப்படுறார். ஜெகனும் ஓகே சொல்லிட்டான். அதான் ஸ்வீட்

    வாவ். அப்போ அண்ணாவுக்குக் கல்யாணமா. கங்கிராட்ஸ் ஜெகன்! என்றாள் உற்சாகமாக

    தாங்க்ஸ் ஆராதனா!

    கடமைக்காக சொல்லியவன் மீண்டும் போனையே பார்க்க ஆரம்பித்தான். எரிச்சல் பற்றிக் கொண்டது ஆராதனாவுக்கு.

    ஜெகன்! எவ்வளவு முக்கியமான விஷயம் நடக்குது. வாழ்த்து சொன்னாக் கூட சந்தோஷமா பதில் சொல்ல மாட்டியா?

    கல்யாணம் என்ன அவ்வளவு பெரிய விஷயமா? உலகத்துல எவ்வளவு சந்தோஷங்கள் கொட்டிக் கிடக்கு

    அக்கறையில்லாமல் பேசுபவனிடம் விவாதம் செய்வதற்கு விரும்பாதவள் அப்பாவைப் பார்த்தாள்.

    விடும்மா எல்லாம் சரியாகிடும். என்பதைப் போலப் பார்த்தார் அப்பா.

    காலையில் யோகா செய்து பெற்ற உற்சாகம் எல்லாம் வடிந்துவிட்டதைப் போல உணர்ந்தாள். என்ன விதமான மனிதன் இவன். எதிலும், பற்றில்லாமல், ஆர்வம் இல்லாமல். ஒரு விஷயத்தில் நிலை கொள்ளாமல். கோபமாக வந்தது.

    தன்னையே கண்ட்ரோல் செய்து கொண்டவள் அவனது குணம் உனக்குப் புதிதா ஆராதனா. விவரம் தெரிஞ்ச வயதிலிருந்து பார்க்கிற. விடு. என சமாதானப் படுத்திக் கொண்டாள்.

    இவனது இந்த குணத்திற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல என்பதையும் அவள் தெரிந்துதான் வைத்திருந்தாள். அளவில்லாத அப்பாவின் பணம். அம்மாவின் பாசம். எதற்கும் கஷ்டப்படாத சூழல் எல்லாமே அவனை இப்படி மாற்றி இருக்கின்றது. பணத்தை சம்பாதிக்க ஓடியாடிய அப்பா இவன் எப்படி வளர்கிறான் என்பதிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்தியிருக்கலாம் என அடிக்கடித் தோன்றும் அளவிற்கு அவனது செயல்கள் இருப்பதை எப்பவோ உணர்ந்து கொண்டாள். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிற ஆதங்கம் மனதின் ஓரமாக படிந்து இருக்கிறதுதான். ஏதாவது பிடிகொடுத்துப் பேசினால்தானே சரி செய்யமுடியும்.

    நல்ல படிப்புதான் படித்தான். அதற்குரிய வேலையும் கிடைத்தது. ஆறே மாதங்களில் பிடிக்கவில்லையென விட்டுவிட்டு வந்தான். அப்பாவுடன் சில மாதங்கள் வேலை செய்தான். அங்கேயும் தொடர்ந்து இருக்கவில்லை. இப்பொழுது மீண்டும் புதிதாக கம்ப்யூட்டர் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் தொடங்கி இருக்கின்றான்.

    முதல் குழந்தையாகப் பிறந்தவன். கண்டிக்கும் நிலையில் பெரியவர்கள் இல்லை. இதோ கல்யாணத்தில் கூட ஆர்வமில்லாமல் இருக்கின்றான். சில சமயங்கள் மனதில் வைத்துக் கொள்ளாமல் தங்கையாக உரிமை எடுத்துக்கொண்டு பேசினாலும் காது கொடுக்க மாட்டான்.

    டாக்டருக்குப் படிச்சிருக்க. ஒவ்வொரு மனஷனுக்கும் தனித்தனி ஆசைகள், உணர்வுகள் இருக்கும்னு தெரியாதா உனக்கு. தேவையில்லாம எப்பவும் ஏதாவது என்கிட்டே சொல்லணுமா? போ. போய் உன்னோட நோயாளிகளையே சரி படுத்தப் பாருன்னு கூறிவிடுவான்.

    சட்டென பாய்ந்து வரும் ஈட்டி போன்ற சொற்களை அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. தங்கையாகவும் பேச விட மாட்டான். நல்லது சொன்னாலும் கேட்க மாட்டான். அதனால் கொஞ்சம் தள்ளியே நிற்கப் பழகிக் கொண்டாள். ஆனால் திருமணம் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் அல்லவா? இங்குமா இவ்வளவு பெரிய ஆர்வமின்மை?

    மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்க அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

    கை கழுவ எழுந்த போது அப்பா.. ராஜீவ் மேட்டரையும் அவகிட்டே சொல்லிடுங்க? அண்ணா அப்பாவிடம் சொன்னான்.

    அவள் என்பது தன்னைத்தான் என்பதை புரிந்து கொண்டவள் என்னப்பா என்பதைப் போலப் பார்த்தாள்.

    கைகளை வாஷ்.. பண்ணிட்டு வாம்மா சொல்றேன் என்றார் அப்பா.

    அவள் மீண்டும் வந்து உட்கார்ந்ததும் அப்பா சொல்ல ஆரம்பித்தார்.

    ‘பூபாலன் அவர் பொண்ணு ரம்யாவை ஜெகனுக்குக் கொடுக்குறேன்னு சொன்னாரில்லையா?’

    அதான் சொல்லிடீங்களே அப்பா

    அதில்லைமா?

    எதுக்குப்பா இப்படித் தயங்குறீங்க. அவளுக்கும் கல்யாணம் செய்யுற வயசுதானே. இங்க பாரு ஆராதனா.. ரம்யாவை நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன். நீ ரம்யாவோட அண்ணன் ராஜீவைக் கல்யாணம் செஞ்சிக்கணும்

    இதென்ன கட்டளையா, வேண்டுகோளா?

    டக்கென வார்த்தைகள் வந்துவிட்டன.

    என்னம்மா ஆரா இப்படி கேட்கிறே

    ஜெகன் சொன்னது அப்படித்தான்பா இருக்கு. நான் சம்பந்தப்பட்ட விஷயம். என்னோட விருப்பமும் கேட்கணும். நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லணும்

    உனக்கு என்னத் தெரியும். டாக்டருக்குப் படிச்சிருக்க அவ்வளவுதான். இப்போ உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியுமா? உன்னை மாதிரி இருக்கிறவங்க எவ்வளவு அட்வான்ஸா போய்க்கிட்டு இருக்காங்கன்னு தெரியுமா? எல்லாத்தையும் கண்டுக்காம எப்பவும் ஹாஸ்பிடல், அறிவியல், சமூக சேவைன்னு இருக்கிறவகிட்டே என்னத்துக்குக் கேட்கணும். வீட்ல பார்த்துப் பார்த்துச் செய்யறதுக்குப் பெரியவங்க இருக்காங்க இல்லை. இப்போ நான் ஓகே சொல்லலை படபடவென பொரிந்தான் அண்ணன்.

    அவனது பேச்சு அப்பா மாதவனையே கலவரப்படுத்தியது. மகள் கூறுவதிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1