Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kattil Vizhuntha Mazhaithuli
Kattil Vizhuntha Mazhaithuli
Kattil Vizhuntha Mazhaithuli
Ebook175 pages1 hour

Kattil Vizhuntha Mazhaithuli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இப்படியான இடங்களில் மட்டுமே நிகழ வேண்டும் என்ற நியதிகளோ, இவ்வளவு தாக்கத்தை தான் ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களோ… இத்தகைய காலம் தான் உனக்கானது என்பதான வரையறைகளோ… இயற்கையின் நிகழ்வுகளுக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவை சூழலின் பொருட்டும், நிலவி வரும் காலநிலையின் பொருட்டும் தன்னியல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இத்தகைய பண்புகளிலிருந்து எவ்விதத்திலும் மாறுபடாதவையே மழையும் அதன் தாரைகளும்…

அப்படிப் பொழியும் மழையின் மொத்த நீரும் பூமியை அடைவதில்லை.. அதில் ஒரு பகுதி பாதியிலேயே நீராவியாகி விட.. மீதமாகும் துளிகள் பூமியை வந்தடைகின்றன. அவைகள் மலையின் உயரங்கள், பூமியின் பரப்புகள், கடலின் ஆழங்கள், புல்லின் விளிம்புகள் என எங்கு வேண்டுமானாலும் விழலாம்… சில வினாடிகளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ எவ்வித பயனுமின்றி மறைந்தும் போகலாம். ஆனால், காட்டில் விழும் மழையின் துளிகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு துளியும் அதற்கான பயனை அடைந்தே தீரும் என்பதற்கு அழிந்து வரும் அடர் காடுகளே நமது கண்கூடு. அப்படித் தன்னலமற்ற மழையின் துளிகளையொத்த மனிதர்கள் உலவும் கதைக் களம்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580142707017
Kattil Vizhuntha Mazhaithuli

Read more from Chitra.G

Related to Kattil Vizhuntha Mazhaithuli

Related ebooks

Reviews for Kattil Vizhuntha Mazhaithuli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kattil Vizhuntha Mazhaithuli - Chitra.G

    https://www.pustaka.co.in

    காட்டில் விழுந்த மழைத்துளி

    Kattil Vizhuntha Mazhaithuli

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 1

    காற்றில் வெடித்துப் பரவும் இலவம்பஞ்சு போல சற்று ஈரப்பதத்துடன் கூடிய பனிமேகங்கள் முகத்தை முத்தமிட்டு நகர்ந்தன. மாலை நான்கரை மணிதான் இருக்கும் அதற்குள் இரவு கவிழத் துவங்கியிருந்தது.

    எப்பொழுதும் உற்சாகமூட்டும் அந்தப் பருவநிலை இந்நேரத்தில் சற்றும் கவனத்தை ஈர்க்கவில்லை சாஷாவிற்கு.

    வீட்டிற்கு முன்பு சிட் அவுட்டில் போடப்பட்டிருந்த மரநாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். கால்கள் இரண்டையும் மேலே உயர்த்தி மடக்கி குளிருக்கு இதமாக கைகளை அவற்றின் மீது கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

    கண்கள் இரண்டும் தூரத்தில் தெரிந்த மலை அடுக்குகளில் வளைந்து வளைந்து சுற்றிச் செல்லும் கார்களை வேடிக்கைப் பார்த்த வண்ணம் இருந்தன.

    மீண்டும் ஒருமுறை பனிக்காற்று மோத சட்டென்று உணர்வு பெற்றவளாக ராணா பையா அவுர் ஏக் சாய் (ராணா அண்ணா இன்னுமொரு டீ) என்றாள் ஹிந்தியில்.

    சாஷா! வந்து எடுத்துக்கிட்டு போ. தேவையில்லாம அவரை ஏன் கஷ்டப் படுத்துற வீட்டிற்குள் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.

    சோடியே மேடம். ஹமாரா பேட்டி ஹைனா? (விடுங்க மேடம் நம்ம பொண்ணுதானே) சொல்லிக்கொண்டே தட்டில் டீ கப்பை ஏந்தி வந்தார் சமையல்காரர் ராணா.

    அவர் கொண்டு வந்திருந்த தட்டில் டீயுடன் இரண்டு சமோசாவும் இருந்தன. தனது முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து ராணாவைப் பார்த்தவள் தேங்ஸ் பையா! (அண்ணா) என்றாள்.

    அவளின் பணிவான நன்றிக்கு உதடுவிரியாத சிரிப்பொன்றைக் கொடுத்த ராணா எதுவும் பேசாமல் நடந்தார்.

    அவர்களுக்கு உதவி செய்வதே அவரது பணி என்றிருக்கும் பொழுது அதற்கான நன்றியைப் பெற்றுக் கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.

    பலமுறை சொல்லிப் பார்த்தவர் இப்பொழுதெல்லாம் சிறிய புன்னகையுடன் நகர்ந்துவிடுகிறார்.

    எப்பொழுதோ தங்களது தேசமான நேபாளத்தை விட்டு மிசோரம் மாநிலத்திற்கு வேலைக்கு வந்த பல குடும்பங்களுடன் இளம் வயதில் வந்தவர் ராணாவின் அப்பா.

    அங்கிருக்கும் ராணுவம், மற்றும் துணை ராணுவப் படைப்பிரிவுகளில் கிடைத்த வேலைகளில் ஏதாவது ஒன்றில் பலரும் நுழைந்து கொண்டனர்.

    அவர்களின் உறுதியான உடலமைப்பும் நேரம் பார்க்காமல் உழைக்கும் தன்மையும் அதனை நிலைநிறுத்திவிட்டது. அப்படித்தான் ராணாவும் நுழைந்து கொண்டார்.

    உயர் அதிகாரிகளின் வீட்டில் உதவியாளராக இருப்பது அவருக்கும் பிடித்தமே.

    ஒரே இடத்தில் வேலை. இவர்கள் வீடு என்றால் அவருக்கு குஷிதான். பாதி வேலையை அம்மா செய்துவிடுகிறார். உதவிக்கு மட்டும் ராணா இருந்தால் போதும்.

    தட்டில் இருந்த சமோசாவை எடுத்தவளின் கண்முன் அந்த சிரித்த முகம் வந்து நின்றது. உதடுகளின் ஓரத்தில் ஒரு லேசான சுளிப்புடன். இவளுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியுமா என்கிற சந்தேகத்துடன் பார்த்த அவன் முக பாவத்தை மறக்கமுடியவில்லை. உண்மையிலேயே அவன் அப்படித்தான் நினைத்தானா என்று தெரியாத போதும் அவனது உடல் மொழிகள் இப்படியான முடிவுக்குத்தான் அவளை வரவழைத்தது.

    அவள் எடுக்கப் போகிற பாடத்திற்கும் அந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம்.

    மூங்கில் பூக்கள் பூத்தால் ஏன் துரதிர்ஷ்டம்ன்னு இங்கு இருக்கும் மக்கள் நினைக்கிறாங்க?

    கேள்வி காதில் விழுந்தவுடன் ஒரு நொடி அவளுக்கு கேட்டது தன்னைத்தானா என்கிற சந்தேகம் எழுந்தது. அவளது எண்ணம் மனதிற்குள் உதித்தவுடன் மீண்டும் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

    விடை தெரிந்தாலும் கணிதம் சொல்லிக் கொடுக்கப் போகிறவர்களுக்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியா இது. இரண்டு தியரம் கேட்கலாம். இவ்வளவு படிச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு எப்படி புரியவைப்பீங்க என்று கேட்டிருக்கலாம். இன்ஜினியரிங் படிச்சிட்டு ஏன் இரண்டு மாசத்து வேலைக்கு ஓகே சொல்றீங்கன்னு கூட கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு இப்படி ஒரு கேள்வி. கேட்டது மட்டும் இல்லாம கூடவே ஒரு சிரிப்பு.

    அதுதான் அவளை மிகவும் வருத்தப்படவைத்தது.

    அவன் செய்கையைப் போல அவனது பெயர் கூட வித்தியாசமாக இருந்தது. அவளுடன் இன்டர்வியூவிற்கு வந்த மற்றவர்கள் ஏதோ சொன்னார்களே என்ன பெயர் அது... ‘ம்ம் ஆர்யன்’ பெயர்தான் ஆரியன் ஆனால் ஆள் பார்ப்பதற்கு ஆரியமும் திராவிடமும் கலந்த கலவை போல இருந்தான்.

    முகஅமைப்பும் உருவமும் திராவிட வடிவம். நிறம் ஆரியக் கலர். இண்டெர்வியூவிற்கு வந்த மீசோ பெண்களும், ஆண்களும் அவனைத்தான் சுற்றிச் சுற்றி வந்தனர். அதிலிருந்தே தெரிந்தது. அவனின் செல்வாக்கு என்னவென்று. அதற்காக அவன்தான் அந்த பள்ளிக்கே பிரின்சிபால் மாதிரி என்ன ஒரு அதிகாரம்.

    சான்றிதழ்கள் சரிபார்க்கும் இடத்திலும் அவன்தான் பேசிக் கொண்டிருந்தான். அந்த இண்டெர்வியூ முழுவதும் அவனது மேற்பார்வையில்தான் நடந்தது போல ஒரு தோற்றம்தான் இருந்தது.

    அந்த நினைவு தந்த கோபத்தில் கையில் இருந்த சமோசாவை அப்படியே வாயிற்குள் நுழைத்தாள். அதிலிருந்த காரத்திற்கு உடனே புரையேறியது.

    மெதுவா சாப்பிட்டா என்ன சாஷா, எதுக்கு இவ்வளவு கோவம். இன்டர்வியூ போயிட்டு வந்ததிலிருந்து இப்படியே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?

    அம்மாவும் கைகளில் ஒரு டீ கோப்பையுடன் எதிரில் வந்து உட்கார்ந்தார்.

    ம்ம். ஒன்னுமில்லை

    அவங்க கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் தெரியலையா? நான்தான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்டே சொல்லிட்டுப் போன்னு நீதான் கேட்கலை

    அவர் மட்டும் என்கிட்டே சொல்லிட்டுப் போனாரா?

    இது என்ன நியாயம். அவரோட கடமை அது. இன்டர்வியூ நடத்துற தலைமை பொறுப்புல இருக்கிற அதிகாரி உன்கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் போகணுமா. வேலைக்குப் போற நீ அவர்கிட்டே சொல்லமாட்ட. அவர் உன்கிட்டே சொல்லிட்டுப் போகணுமா? கூறிவிட்டு அம்மா அமைதியாக டீயை உறிஞ்சத் துவங்கினார்.

    அம்மாவின் நிதானம் அவளுக்கு எப்பொழுதும் ஆச்சரியம்தான். சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு நறுக்குத் தெறித்தாற்போல நிறுத்திக் கொள்வார். தேவையில்லாத ஒரு வார்த்தையும் வராது.

    ராணுவத்துல அதிகாரின்னா அது அவரோட. அதுக்கு நானும் சலாம் போடணுமா?

    இன்டர்வியூ நேரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு மூன்றாம் மனுஷியைப் போல அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அப்பாவின் செயலும் அவளது கோபத்தைக் கிளறியது.

    உன்னை யார் சலாம் போடச் சொன்னது?

    குடித்த டீ கோப்பையை அவள் முன்பாக இருந்த டீபாயில் வைத்தவர் நிமிர்ந்து உட்கார்ந்தவாறு கேட்டார்.

    யாரும் சொல்லலை. நான் சொல்லாம போனது அவ்வளவு பெரிய தவறா. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னுதான் போனேன். அதற்காக, எதுவுமே கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பதா? கூட இருந்த மற்றவர்கள் எல்லாம சாஷா சந்திரன் என்று பெயரை சொல்லியதும் சிநேகமாக சிரித்தனர். இவர் மட்டும்தான்... சொல்லிவிட்டு மனதிற்குள் எழுந்த ஆதங்கத்துடன் டீ கோப்பையை எடுத்தாள்.

    சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபப்படுற சாஷா. நிதானமா இரு

    அம்மா! ஏற்கனவே நான் ரொம்ப கோபத்துல இருக்கேன். நீங்க வேற பேசாம இருங்க. கேம்பஸ் வேலைக்கு எடுத்தவங்க ஆறுமாசம் கழிச்சி கூப்பிடுறேன்னு சொல்லிட்டாங்க இல்லைனா... மேலே சொல்லாமல் நிறுத்தியவளை பார்த்து சிரித்த அம்மா.

    இல்லேன்னா. இங்க வந்திருக்கவே மாட்டியா?

    பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

    சாஷாவுக்கு மிகவும் பிடித்த ஊர் இது. அய்ஜல். மிசோரமின் தலைநகர். நாலு வருடத்திற்கு முன்பு அப்பா அசாமில் பணியில் இருந்தபொழுது பிளஸ்டூ விடுமுறையில் இங்கு வந்திருந்தனர்.

    இந்த இடத்தின் எழில் கொஞ்சும் பசுமையும், சுத்தமும், முகத்தை வருடியவாறே செல்லும் மேகமும் ஏதோ கனவுலகில் நுழைந்ததைப்போல இருந்தது.

    உங்களுக்கு இங்கே போஸ்டிங் ஆகாதாப்பா? ஆர்வமுடன் கேட்டவளைப் பார்த்த தந்தை சந்திரன் நீ எஞ்சினியர் முடிச்சிட்டு வா அப்போ அங்க போகலாம் என்று கூறியிருந்தார்.

    கல்வியை முடித்து வேலையும் கிடைத்தவளுக்கு ஆறுமாதத்திற்குப் பிறகுதான் ட்ரைனிங் கூப்பிடுவோம் என்று தேர்ந்தெடுத்த கம்பெனி கூறியபொழுது அளவிடாத மகிழ்ச்சியாக இருந்தது. ஆறுமாதங்கள் அப்பா... எவ்வளவு சந்தோஷம். விரும்பிய இடத்துல இருக்கலாம்.

    அப்பாவின் வேலைக்காக பல இடங்களுக்கு சென்றிருந்தாலும் ஏனோ இந்த இடம் அவளுக்கு மனதிற்குள் உட்கார்ந்து கொண்டது.

    எதுவும் பேசாமல் யோசிப்பவளை பார்த்த அம்மா, அப்படி என்னதான் நடந்தது சொல்லேன் சாஷா!

    பேசப் பிடிக்காமல் வாய்மூடி அமர்ந்திருந்தாள்.

    என்னாச்சு சொல்லு! அம்மா மீண்டும் கேட்டார்.

    எப்பொழுதும் போல அமைதியாக இல்லாமல் ஏன் இன்றைக்கு இப்படி? விடாமல் கேட்கும் அம்மாவை முறைத்தாள்.

    இங்க பார் வந்ததுல இருந்து இப்படியே உம்ம்னு இருந்தா நல்லாவா இருக்கு என்ன நடந்ததுன்னு சொல்லணும் இல்லை

    அம்மாவின் எதிர்பார்ப்பும் நியாயம் தானே என்று தோன்ற மூங்கில் பூக்கள் பூத்தால் ஏன் துரதிர்ஷ்டம்ன்னு இங்க இருக்கும் மக்கள் நினைக்கிறாங்க? என்று கேட்டாங்க உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

    அப்படினா?

    அப்படின்னா எல்லாம் இல்லை. இதுதான் கேள்வி

    "மூங்கில் பூத்தா என்ன ஆகும். அது விதையாகும். மூங்கிலரிசி கிடைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1