Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veliyorathu Pookal
Veliyorathu Pookal
Veliyorathu Pookal
Ebook174 pages1 hour

Veliyorathu Pookal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரண்யா எனும் அழகிய பெண்ணை மணக்க நினைக்கும் ஸ்ரீராம். சரண்யாவின் மனம் இன்னொருவரை விரும்ப, அதை அறிந்த ஸ்ரீராம் சரண்யாவிடமிருந்து விலகுகிறான். சரண்யாவின் தந்தை திடீர் மரணம் எதனால் நிகழ்ந்தது? அதனால் அவள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580123904391
Veliyorathu Pookal

Read more from Indhumathi

Related authors

Related to Veliyorathu Pookal

Related ebooks

Reviews for Veliyorathu Pookal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veliyorathu Pookal - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    http://www.pustaka.co.in

    வேலியோரத்துப் பூக்கள்

    Veliyorathu Pookal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    Un paquet de letters c'crities sur du papier afleaurs commentcant toutes 'mo cher papa' et sighe'es; 'caline Bixion des ehfants de marie...

    - மரியா தெரஸின் குரலில் பிரெஞ்சு வார்த்தைகள். 'கணீரெ’ன்று வந்தன. வகுப்பறை ஒரு துல்லியமான அமைதியில் கிடந்தது. எல்லார் பார்வையும் அவள் முகத்தில் லயித்திருந்தது.

    மரியா தெரஸுக்கு எப்போதும் இந்தச் சக்தி உண்டு. லெக்சர் எடுக்கிறபோது மட்டுமில்லை. சாதாரணமாகப் பேசுகிறபோதே எதிரில் நிற்பவர்களைக் கட்டிப்போடுகிற சக்தி; பார்வையை முகத்தை விட்டு நகர்த்தாமல் பிடித்து வைக்கிற சக்தி.

    ஆனால் அந்தச் சக்தி அப்போது வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த சரண்யாவிடம் தோற்றுப்போயிற்று. ‘எங்கே இப்போது என் நினைவைக் கட்டிப்போடு பார்ப்போம்' என்று சவாலாகத்தான் இருந்தது. பாடத்தை விட்டு நழுவுகிற மனத்தை இழுத்து நிறுத்தப் பார்த்தாள் அவள். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. நினைவுகள் அவளுக்கு அடங்குவதாக இல்லை. 'நான் அப்படித்தான் என் இஷ்டப்படி அலைவேன்' என்று முரண்டுபிடித்தன. அந்த முரட்டுத்தனத்திற்குப் பணிந்து போவதைத் தவிர சரண்யாவிற்கும் வேறுவழி தெரியவில்லை.

    அதனால் அவள் லெக்சரருக்குத் தெரியாமல் மெதுவாக வகுப்பைவிட்டு நழுவிக் கொண்டிருந்தாள். யார் பார்வையிலும் படாமல் பிரெஞ்ச் புத்தகத்தின் நடுவில் இருந்த அந்த வாழ்த்துத் தந்திகளை எடுத்தாள். புத்தகத்தின் உள்ளேயே வைத்து ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்தாள். 'மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் திஸ் டே' - ஸ்ரீராம்.

    அடுத்த தந்தி, அதற்கும் அடுத்தது. மூன்றாவது, நாலாவது, ஐந்தாவது... எல்லாவற்றிலும் அதேதான்! அதே 'மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ். கீழேயும் அதே கையெழுத்து?

    ஸ்ரீராம், ஸ்ரீராம், ஸ்ரீராம். ஸ்ரீ...

    படிக்கப் படிக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அத்தனை தந்திகளா.... வரிசையாய் அரைமணி நேர அவகாசத்திலா? எதற்காக? எத்தனை பைத்தியக்காரத்தனம் இது...?

    காலை ஐந்து மணிக்கு முதல் தந்தி வந்தது. கேட்டிற்கு வெளியில் 'ஸார் டெலிகராம்...' என்ற குரலும், சைக்கிள் மணியோசையும் கேட்டது. மாடியில் படுத்துக் கொண்டிருந்த அவள் காதிலும் அது விழுந்தது. ஆனால் அப்பாவிற்கு வந்திருக்கும் என்று நினைத்துப் பேசாமல் இருந்தாள். வியாபார விஷயமாக அப்படி அப்பாவிற்கு அடிக்கடி தந்தி வருகிற வழக்கம்தான். அவசரமாக டெலிபோனில் தொடர்பு கொள்ள முடியாமற் போகிறவர்கள் தந்தியடித்து விடுவார்கள்.

    ஆனால் அந்தத் தந்தியை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்த அப்பா அவள் படுக்கை அறைக்கதவைத் தட்டினபோது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் லேசான பயமும் தட்டியது. அப்பா எதற்காக இப்போது படியேறி வந்திருக்கிறார்? அப்படி என்ன அவசரம்?

    சாதாரணமாக அப்பா மாடிக்கே வரமட்டார். மாடிப்பக்கம் அவர் அடி வைத்து வெகுநாட்களாகி இருந்தன. போன வருடம் லேசான ஹார்ட் அட்டாக்கில் படுத்துக்கொண்ட பின்பு படியேறுவதை நிறுத்திவிட்டார் அவர். படியேறுவது மட்டுமில்லை. அதிகம் பேசுவது, நேரம் கழித்து வீட்டிற்கு வருவது, இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, வெளியூர் போவது இப்படி எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டுவிட்டார். அவர் குறைத்துக் கொண்ட வேலைகளையெல்லாம் அவருக்காக ஸ்ரீராமே கவனிக்க ஆரம்பித்தான். அவராகச் சொல்லாமல் தானாகவே பொறுப்புக்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தான்.

    நீங்க அலட்டிக்காதீங்க மாமா! இன்கம்டாக்ஸ் ரிடர்னை நான் ஸப்மிட் பண்ணிக்கறேன்.

    இன்னிக்கு நம்ம ஆடிட்டர் பரசுராமன் போன் பண்ணினார். என்னான்னு நான் போய் கேக்கறேன்...

    பம்பாய்க்குப்போன அந்த மூவாயிரம் கேஸில் ஏதோ ‘டாமேஜாம்.' பன்சாலி போன் பண்ணி உடனே வரச்சொன்னாள். சாயந்திரம் கிளம்பறேன் மாமா...

    தொழிற்சாலையில் லேபர் பிராப்ளம் லேசா தலைதூக்கறது. யூனியன் லீடரைக் கூப்பிட்டுப் பேசலாம்னு நினைக்கறேன்...

    இந்த வருடம் ஐந்து பர்ஸெண்ட் இன்க்ரிமெண்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன் மாமா... போனஸ் கூட இருபது சதவிகிதம் கொடுக்கலாம் என்ன சொல்றீங்க?

    இப்படி ஒவ்வொன்றிலும் தலையிட்டு அப்பாவின் கஷ்டங்களைக் குறைத்து நிர்வாகப் பொறுப்புக்களை சுலபமாகத்தான் ஏற்றுக் கொண்டான்.

    'சார், இனிமேல் எதற்கும் பெரியவரைத் தொந்தரவு செய்யாதீங்க.... அவருக்குப் பதிலாக அவர் மருமகன் ஸ்ரீராமைப் போய்ப் பாருங்க. இப்போது எல்லாமே அவர்தான்.’

    அதில் அப்பாவிற்கும் சந்தோஷம்தான். பெற்ற பிள்ளை இல்லாத குறையை நிவர்த்தி செய்கிற மாதிரி ஸ்ரீராம் இருந்ததில் சொல்ல முடியாத சந்தோஷம். தன்னைப் போல் அவனும் புத்திசாலித்தனமாக நிர்வாகத்தைக் கவனிக்கிற சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் காலையில் பதினொரு மணிக்குத் தன் வெள்ளை பென்ஸ் வண்டியில் கிளம்பி ஒவ்வொன்றாக மூன்று தொழிற்சாலைகளையும் பார்த்துக் கொண்டு கால் மணிநேரம் ஒவ்வொன்றிலும் செலவிட்டு - சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து - சமையற்காரர் எடுத்து வைக்கிற சாப்பாட்டை ருசி எதுவும் தெரியாமல் சாப்பிட்டு - அதன்பின் சிறிது நேரம் புத்தகம் எதையாவது புரட்டி, பின் சாயந்திரம் மூன்று மணிவரை தூங்கி - சரியாக மூன்றரை மணிக்கு ஒரு கப் டீ, அதன்பின் கிளப். ஆறு மணிக்கு வீடு. தோட்டத்து வானில் கூடை நாற்காலியைப் போட்டுக் கொண்டு அளவாக இரண்டு பெக் விஸ்கி. ஏழு மணிக்கு ஒரே ஒரு சுக்கா ரொட்டி, ஆப்பிள், ஒரு டம்ளர் பால. அதற்குப் பின் அரைமணி நேரமாவது 'சரண்யா, என்னம்மா பண்றே..... படிக்கிறாயா? கொஞ்சம் கீழே இறங்கி வரியாம்மா..?' என்று கூப்பிட்டுப் பேசத் தவறமாட்டார்.

    தன்னை மாதிரியே சரண்யாவும் அத்தனைப் பெரிய வீட்டில் தனியாக இருப்பதாக உணரலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அல்லது தன் மனசைப் பகிர்ந்து கொள்வதற்கு அவளுக்கு அம்மாவோ அல்லது கூடப்பிறந்தவாளோ இல்லாத குறையைத் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆதங்கப்பட்டிருக்க வேண்டும். எதுவானாலும் அப்பா அவளுக்கு ஒரு நல்ல துணை! அவரோடு அவளால் மனசுவிட்டுப் பேசமுடியும். எதையும் விவாதிக்க முடியும். எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

    ‘கல்லூரியிலோ அல்லது வெளியிலோ வேறு யாரிடமும் நெருங்கிப் பழக முடியாத தன்னால், எப்படி அப்பாவிடம் மட்டும் இப்படி நெருக்கமாகப் பழக முடிகிறது' என்று அவள் தனக்குள் ஆச்சர்யப்பட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்தத் தோழமை....? பரஸ்பரம் இரண்டு பேருக்கும் யாருமில்லாத காரணத்தினாலா? அப்படியானால் ஸ்ரீராமிற்கும்தானே யாருமில்லை..... அப்பா, அம்மா, கூடப்பிறந்தவர்கள் என்று ஒருவரும் இல்லை. அவனிடம் ஏன் இந்த நெருக்கம் ஏற்படவில்லை? அவனும் இதே வீட்டில்தானே இருக்கிறான்...?

    இல்லை. இதற்குப் பரஸ்பரம் ஏற்பட்ட சுயபரிதாபம் காரணம் இல்லை. இன்னும் ஏதோ ஒன்று.... என்ன என்று காரணம் காட்ட முடியாத ஒன்று. அடிமனசின் ஆழத்தில் புதைந்து கிடக்கிற ஒன்று. 'ப்ராய்டை’க் கேட்டால் சட்டென்று ஒரு காரணம் சொல்வார். அவர் தியரிப்படி இதற்கு ஒரு நியாயமும் இருக்கும். இது வெறும் அப்பா - பெண் பாசம் மட்டுமில்லை என்று சொல்லி மனசைக் குழப்புவார் -

    என்னம்மா, இன்னுமா தூங்கறே...? கொஞ்சம் கதவைத் திறக்கறியாம்மா?

    அப்பாவின் குரலில் திடுக்கிட்டு கலைந்து கட்டிலை விட்டு இறங்கினாள் அவள். பரபரவென்று நடந்து போய் கதவைத் திறந்தாள்.

    என்னப்பா இது... நீங்களே மேலே ஏறி வந்திருக்கீங்க? ஏதாவது ரொம்ப அவசரமாப்பா?

    அவசரமில்லேம்மா.... ஆனால் இந்த விஷயத்தைச் சொல்ல நானே வரணும்னு தோணித்து வந்தேன்.

    அப்படி என்ன முக்கியமான விஷயம்மா?

    ஏம்மா. இன்னிக்கு என்ன தேதி?

    பதினெட்டு. ஏம்ப்பா கேட்கறீங்க.... இதைக் கேட்கவா படியேறி மேலே வந்தீங்க?

    - அதைக் கவனிக்காத மாதிரி மீண்டும் கேட்டார் அவர்.

    இது என்ன மாசம் சொல்லும்மா....?

    டிசம்பர்! என்னப்பா இது? சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கறீங்க....

    சம்பந்தம் இருக்கிறதால்தான் கேட்கிறேன். இதே டிசம்பர் 18-க்கும், 1963-க்கும் என்ன சம்பந்தம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு...

    அவள் ஒரு வினாடி யோசித்து பின் சட்டென்று கணக்கைச் சொன்னாள்.

    மை குட்நெஸ். இன்னிக்கு என் பர்த்டேப்பா...

    அதை நினைவுபடுத்தக்கூட நமக்கு ஒரு ஆள் தேவையாக இருக்கு பார்த்தியாம்மா....?

    யாருப்பா நினைவுபடுத்தினது?

    ஸ்ரீராம்! பம்பாயிலிருந்து உனக்கு கிரீட்டிங் டெலிகிராம் அனுப்பியிருக்கான்.

    அவர் வாழ்த்துத் தந்தியை அவளிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு மெல்ல அருகில் வந்து தலையை வருடினார். ஒரு வினாடி கண்கள் லேசாகக் கலங்க நின்றார். பின் -

    மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்ம்மா..... இன்னிக்கு சாயந்திரம் நாம இரண்டு பேரும் வெளியில் எங்காவது டின்னர் சாப்பிடப் போகலாமா? என்று கேட்டார்.

    ஓ, ஷ்யூர் போகலாம்ப்பா... - அவர் கால் வினாடி தயங்கி, பின் சட்டென்று நினைவிற்கு வந்தவராக அவள் முகத்தைப் பார்த்தார்.

    ஏம்மா, நீ உன் சினேகிதிகள் யாரோடவாவது பிறந்த நாளைக் கொண்டாட இஷ்டப்படறீயோ என்னவோ...?

    என்னப்பா இது? உங்களைவிட எனக்குப் பெரிய சினேகிதி யார் அப்பா....? அப்படி கொண்டாடும்படி நெருக்கமாக எந்த சினேகிதமும் எனக்கு இல்லேப்பா!...

    - அந்தப் பதிலில் உணர்ச்சிவசப்பட்டு, தாங்க்யும்மா... என்று குரல் கரகரக்கச் சொன்னார்.

    "சாயந்திரம் ஏழு மணிக்கெல்லாம் ரெடியாக

    Enjoying the preview?
    Page 1 of 1