Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீங்காத எண்ணம் ஒன்று
நீங்காத எண்ணம் ஒன்று
நீங்காத எண்ணம் ஒன்று
Ebook122 pages45 minutes

நீங்காத எண்ணம் ஒன்று

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணன் பரமுவின் டெலிபோன் பூத்திற்கு வந்தபோது பரமு கன்னத்தில் கைத்தாங்கி கவலையோடு அமர்ந்திருந்தான். பார்வையில் குழப்பமும் வேதனையும் தெரிந்தது. கண்ணாடி அறையினுள் யாரோ உறக்கப் பேசிக் கொண்டிருந்தார்.
 கிருஷ்ணனைக் கண்டதும் பரமுவின் முகத்தில் சிறு பிரகாசம். கன்னத்திலிருந்த கையை எடுத்துவிட்டு 'வாடா' என்றான். பரமுவின் எதிரே அமர்ந்தான். கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தவர் முடிக்கும் வரை அமைதியாக இருந்தனர் இருவரும்.
 "சரி...ஓ.கே...ஹ்...ஹா..." என்று பெரியதொரு சிரிப்போடு பேச்சை முடித்துவிட்டு வெளியே வந்தவர் பணம் கொடுத்துவிட்டு சென்றதும் கிருஷ்ணன்,
 "பூத் எப்படி? நல்ல லாபமா?" என்றான்.
 "பச்! எங்கே? இப்ப தெருவுக்கு நாலு அஞ்சுன்னு பூத் வச்சிருக்கானுங்க. பால் பூத்துக்கும் அதே நிலைமைதான் நஷ்டம் இல்லாம ஏதோ ஓடுது."
 "ஆள் போட்டிருக்கிறதா சொன்னே? நீ பார்த்துக்கிட்டிருக்கே?"
 "அவனை ஒரு வேலையா அனுப்பியிருக்கேன். எத்தனை நான் லீவு போட்டிருக்கே?"
 "பாட்டியோட காரியம் முடியறை வரைக்கும். ஆனா... என்னவோ மனசுக்கு வேதனையாயிருக்கு சென்னை போக பிடிக்கவில்லை!"
 "பாட்டியோட இழப்பா? நாளானா சரியாயிடும்."
 "அது மட்டும் இல்ல."
 "பின்னே...""உன்னோட வேதனையும் தான்."
 "ப்ச்! என்னோட வேதனை என்னோட..."
 "என்னால அப்படி எடுத்துக்க முடியலை."
 "அதுக்காக என்ன பண்றது? எல்லாம் விதின்னுதான் சொல்லணும்.
 "எந்த டாக்டர்கிட்ட காட்டினதா சொன்னே?"
 "தஞ்சாவூர் பாஸ்கரராவ்ன்னு ஒரு மன நல டாக்டர். வீட்டு சூழ்நிலையில் இருக்கச் சொல்றார். காலப் போக்குல மாறும்னு சொல்றார்."
 "சென்னையில் நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. என்கூட அவளை அழைச்சுட்டு வாயேன், காட்டுவோம்." நம்பிக்கையோடு நிமிர்ந்தான் பரமு. பரமு யோசித்தான்.
 "என்ன யோசிக்கறே?"
 "இல்லே... சென்னையில நெருங்கின சொந்தம்னு யாரும் இல்லை. எங்கே தங்கறதுன்னுதான்..."
 "ஏன் நான் இல்லையா? நான் இருக்கற வீட்ல தங்கு."
 "உன் வீடு...?" தயங்கினான் பரமு.
 "வாடகை வீடுதான் எல்லா வசதியும் இருக்கு."
 "அம்மாவையும் துணைக்கு கூட்டிட்டு வர வேண்டியிருக்கும். அம்மாவோட துணையில்லாம ரதனாவை கவனிச்சுக்க முடியாது. அம்மா நம்மோட வந்திட்டா அப்பாவுக்கு கஷ்டம். அப்பா ஷுகர் பேஷண்ட். ஹோட்டல் சாப்பாடு ஒத்து வராது. தவிர அல்சரும் உண்டு."
 "அங்க ரத்னவை கவனிச்சுக்க ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணிட்டா அப்புறம் என்ன? யோசிக்காம கிளம்பு."
 "ரத்னா குணமாயிடுவாளா?" ஏக்கமாகக் கேட்டான் பரமு.
 "நம்பிக்கை வைப்போம். ரதனாவை எப்படியும் குணமாக்கணும்னு வைராக்கியம் வச்சா நிச்சயம் வெற்றி கிடைக்கும்.கிருஷ்ணனின் கைகளைப் பற்றி கொண்டான் பரமு. கண்களில் நீர் எட்டி பார்த்தது.
 "கிருஷ்ணா என்னமோ நீ வந்ததுலேர்ந்து எனக்குள்ள ஏதோ தைரியம் வந்த மாதிரியிருக்கு. நம்பிக்கை வந்த மாதிரியிருக்கு. எப்படி இந்தப் பெண்ணை குணப்படுத்தப் போறோம்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன். நீ பக்கத்துலயிருந்தா அதுவே பத்து ஆள் பலமாத் தெரியுது."
 பரமுவின் தோள்களை அனுசரணையாக தட்டினான் கிருஷ்ணன்.
 "பரமு, கவலைப்படாதே ஏதோ இப்படி ஆயிட்டு. இந்தக் காலத்துல மருத்துவத்தை எங்கேயோ உச்சிக்கு கொண்டு போயிட்டாங்க. எல்லா வியாதிக்கும் வைத்தியம் உண்டு. அம்மாக்கிட்டேயும் அப்பாகிட்டேயும் விஷயத்தைச் சொல்லு."
 சொன்னான்.
 அம்மாவின் விழிகளில் நம்பிக்கையின் ஒளிவிளக்கு பிரகாசித்தது.
 "பரமு... அழைச்சிட்டுப் போடா. எனக்கு என் பொண்ணு வேணும்டா. அவ பழையபடி பேசணும், சிரிக்கணும்.
 விளையாடனும். அவளைக் கல்யாணம் பன்னிக் கொடுத்து கண்ணால பார்க்கணும். பேரப் பிள்ளைகளை மடி நிறைய சுமக்கனும்."
 "எல்லாம் நடக்கும் கவலைப்படாதம்மா."
 "பரமு நானும் வரேண்டா..."
 "வர்றதைப் பற்ற இல்லையம்மா. நானும் ஊர்ல இருக்கமாட்டேன். அப்பா பிசினஸைக் கவனிச்சுக்கணும். அவருக்கு சுகர், அல்சர்னு வியாதி. சாப்பாடு முக்கியமில்லையா?"
 "வயசுக்கு வந்த பொண்ணை நீ எப்படி கவனிச்சுப்பே."
 "ரதனாவை கவனிச்சுக்க ஒரு பொண்ணை ஏற்பாடு பண்றதா கிருஷ்ணன் சொல்றான்."
 "அவன் ஏற்பாடு செய்யற வரைக்கும் நான் இருக்கேன். அப்புறம் என்னை ரயிலேத்தி அபிப்பிடு" அப்பா சண்முகம் அதையே வலியுறுத்தினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224101887
நீங்காத எண்ணம் ஒன்று

Read more from R.Sumathi

Related to நீங்காத எண்ணம் ஒன்று

Related ebooks

Related categories

Reviews for நீங்காத எண்ணம் ஒன்று

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீங்காத எண்ணம் ஒன்று - R.Sumathi

    1

    பொழுது விடிந்ததுமே தந்தியின் முகத்தில் தான் விழிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணனுக்கு.

    பாட்டி இறந்து விட்டாள். அதிர்ச்சி உண்டாகவில்லை. எதிர்பார்த்ததுதான். இன்றைக்கா நாளைக்கா என எல்லோருமே எதிர்பார்த்ததுதான்.

    பாட்டி எண்பது வயதைத் தாண்டி விட்டாள். வியாதி வெக்கை என எதுவம் வந்து தீண்டாதவள். குச்சி போல் உடம்பை வைத்துக் கொண்டு கோடி வேலை செய்வாள். தலைவலி என்று யாராவது சொன்னா போக்கை வாயைக் காட்டி நக்கலாகச் சிரிப்பாள். வீட்டு வேலைகளை பதினாறு வயசுப் பெண் போல் செய்வாள்.

    அப்படிப்பட்ட பாட்டி ஒரு மாதமாகப் படுத்த படுக்கையானாள். இத்தனைக்கும் இயற்கையாக அவளுக்கு எந்த நோயும் வரவில்லை. மாடியில் கோதுமையைக் காய வைத்து விட்டு இறங்கி வரும்போது தடுமாறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டவள்தான். அப்டியே படுத்த படுக்கையானாள். தொடர்ந்து வைத்தியம் செய்தும் எழுந்து நடமாட முடியவில்லை. நாளைக்கொரு வைத்தியம், பொழுதிற்கொரு வழியும் அவளை ஆட்கொண்டன. பாட்டிக்கு பணிவிடை செய்ய யாரும் அலுத்துக் கொள்ளவில்லை. காரணம் பாட்டி அத்தனை பேருக்கும் பம்பரமாக உழைத்தாள்.

    அம்மாவாகட்டும், அப்பாவாகட்டும் தங்கை சௌவ்ந்தர்யாயாகட்டும் போட்டி போட்டுக் கொண்டுதான் பாட்டியைக் கவனித்தனர். கிருஷ்ணனும், அடிக்கடி சென்று பார்த்து விட்டு வருவான். பத்து நாட்களுக்கு முன்புதான் சென்று பார்த்துவிட்டு வந்தான். பாட்டி நினைவை இழந்திருந்தாள். உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.

    இதோ இறந்து விட்டாள்.

    மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் லேசான வலி உண்டானது, கிளம்பிவிட்டான்.

    அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டுப் பேருந்து பிடித்து காரைக்கால் நோக்கி பயணப்பட்டான்.

    காரைக்காலில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்ததும் வீட்டு வாசலில் சொற்ப கூட்டம் கவலையேந்தி அமர்ந்திருக்க உள்ளிருந்து அம்மா தங்கை இருவரின் அழுகுரலும் மற்ற பெண்களின் அழுகையை விட உச்ச வேகத்தில் வெளியே கேட்டது.

    ஆட்டோவிலிருந்து இறங்கியவனின் கையைப் பற்றினான் பரமு. பரமானந்தம், கிருஷ்ணனின் பால்ய சிநேகிதன். இன்று வரை அதே சிநேகம். அதே பரிவு அவனை விட பாட்டிக்குத்தான் அவன் நல்ல சிநேகிதன். பாட்டியும் அவனும் பேச ஆரம்பித்தாள் அவனே ஓர் பாட்டியாகிவிடுவான். பாட்டியின் கன்னிப் பருவக் கதையிலிருந்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்கும் குணம் அவனுக்கு.

    எவ்வளவு நல்ல பிள்ளை எத்தனை அன்பாப் பேசறான். நீயும்தான் இருக்கியே. பரமுவின் முகத்தை வழித்து திருஷ்டி கழிப்பாள் பாட்டி.

    உனக்கும் வேலை இல்லை அவனுக்கும் வேலை இல்லை என்பான்.

    பரமுவிற்கு காரைக்காலிலேயே சொந்த பிசினஸ், டெலிபோன் பூத், பால்பூத், ஃபர்னிச்சர் மார்ப் என அவனுடைய பிசினஸ் வளரும் நிலையில் இருந்தது.

    கிருஷ்ணனின் தோளில் தட்டிக் கொடுத்தவாறே அவனை உள்ளே அழைத்து சென்றான்.

    பாட்டி ரோஜா மாலைகளுக்குள் புதைந்து கிடந்தாள். முகத்தைத் தேடுவதே சிரமமாயிருந்தது.

    அம்மாவும், தங்கையும் கிருஷ்ணனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதனர். அப்பா பின்புறம் கைகளைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்தபடி நின்றிருந்தார். பாட்டியின் சமகால கிழத்தோழிகள் ஒப்பாரி வைத்தனர். அதில் இலக்கிய நயம் நிரம்பியிருந்தது.

    பரமுதான் ஆக வேண்டிய காரியங்களை முன்னின்று செய்து கொண்டிருந்தான். பம்பரமாகச் சுழன்றான். அப்பா ஆக வேண்டிய செலவுக்கான பணத்தை பாராமுவிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. அவனே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய செயல்பாடுகளில் அந்த வீட்டில் அவன் பழகியிருக்கும் விதம் தெரிந்தது. கிருஷ்ணனிடம் அவன் கொண்டிருக்குப் நட்பு புரிந்தது. பாட்டி வயதானவளாகயிருந்தாலும் சாக வேண்டிய வயதுதான் என்றாலும் எல்லோரையும் சோகம் அழுத்தியது. பாட்டி வீட்டிற்கு மட்டுமல்ல தெருவிற்கே பாசத்திற்குரியவள்.

    ஆச்சு.

    இதோ பாட்டி பிரமாதமாகக் கிளம்பி விட்டாள். புதுசு கட்டி மாலை போட்டு தூக்கியபோது பாட்டி சிரித்த முகத்துடன் உறங்குவதை போலிருந்தது.

    காடுவரை சென்று வழியனுப்பி விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது வீடு பளிச்சென அலசிவிடப்பட்டிருந்தது.

    பாட்டியின் பெருமைகள் பேசப்பட்டன. கிருஷ்ணன் பரமுவை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

    இருவரும் மௌனமாக எதிரெதிரே அமர்ந்திருந்தனர். பரமு திடீரெனக் குலுக்கினான். கிருஷ்ணன் அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.

    பாட்டியின் இறப்பு இவனைப் பெருமளவு பாதித்துவிட்டது போலும், பாட்டியிடம் மிகவும் நெருக்கமாக பழகியவனாயிற்றே, காலையிலிருந்து எல்லாவற்றையும் தன் தலை மேல் போட்டுட்க் கொண்டு செய்தவன், இப்பொழுது தனிமையில் அழுகிறான். நான் கூட இந்தளவிற்கு அழவில்லை. இவன் இப்படி அழுகிறானே என்று நினைத்த கிருஷ்ணன், நண்பனின் தோள்களை ஆதரவுடன் பற்றினான். நண்பனின் கரம் பட்டதும் பெண் பிள்ளைப் போல் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டு கதறி கதறியழுதான்.

    அவனுடைய அழுகை பாட்டிக்காக இல்லை என்பதைப் போல் தோன்றியது கிருஷ்ணனுக்கு.

    ஏனோ அவனுடைய மனம் திக்திக்கென அடித்துக் கொண்டது.

    பரமு...என்னயிது? ஏன் இப்படி அழறே? என்றான்.

    ரத்னா...ரத்னா...

    ரத்னாவுக்கு என்னாச்சு? பயத்தோடு வினவினான். பரமுவால் பேச முடியவில்லை. சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான். மிகப் பெரியதொரு வேதனையை ஜீரணிக்க முடியாமல் திணறுவதைப் போலிருந்தது. அவனுடைய செய்கை. அமைதி காத்தவன் அடுத்த சில நிமிடங்களில் கூறினான்.

    கிருஷ்ணா - ரத்னாவுக்கு சித்தபிரமை மாதிரி இருக்கு கிருஷ்ணனின் முகத்தில் அதிர்ச்சி பரவியது.

    பரமு...எப்படி இது?

    "தெரியலை. நல்லாத்தான் இருந்தா. சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக வேணாங்கண்ணிக்குப் போய்ட்டோம். அவளைக் கூப்பிட்டதுக்கு காலேஜ்ல முக்கியமான க்ளாஸ் இருக்கு நான் வரலைன்னு சொல்லிவிட்டுப் போய்ட்டா. நாங்க கல்யாணம் முடிஞ்சு சாயந்தரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தா சிலை

    மாதிரி உட்கார்ந்திருக்கா. பேசினா பேச மாட்டேங்கறா. இங்கேயே வெறிச்சுப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கா. வீட்ல சாவு நடந்த மாதிரி ஒரே அழுகை ஆர்ப்பாட்டம். பத்து நாளாகுது. அவகிட்ட எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டர்கிட்ட கொண்டு காட்டினோம். ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு அது பலமா மனசைத் தாக்கியிருக்குன்னு சொல்றாரு. ஆஸ்பிடல்ல இருக்கிறதால வீட்ல இருந்த அவளோட நிலை மாறும்னு சொல்றார். அதனால வீட்லதான் இருக்கா. எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கலை. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இடிஞ்சு போயிட்டாங்க" கண்ணீர் கசிய கசிய பரமு சொல்லிக் கொண்டே போக கிருஷ்ணாவின் இதயம் பெரிய அழுத்தத்திற்குள்ளானது.

    ரத்னா...ரத்னா...ரத்னா... அலுப்பில்லாமல் அழைத்துப் பார்த்தாள் ரங்கநாயகி.

    இந்தப் பத்து நாட்களில் அவள் ஓராயிரம் முறை அழைத்துப் பார்த்துவிட்டாள். செவி இழந்த சிலையாக வீற்றிருந்தாள் ரத்னா. ஏதோ ஒரு அழைப்பிற்காகவாவது அவளிடம் ஒரு சலனம் உண்டாகாதா என்ற நப்பாசை அவளிடம் நிறைந்திருந்தது.

    மணியோசை, அர்ச்சனைப் பாடல், பக்தர்களின் வேண்டுதல் இவை யாவற்றையும் காதில் வாங்காமல் அலங்கார சிலையாக அமர்ந்திருக்கும் தெய்வத்தைப் போல் அமர்ந்திருந்தாள் ரத்னா.

    அம்மா நிறைய அழுதுவிட்டாள், ஆனாலும் கண்ணீர் வற்றவில்லை. நினைத்த

    Enjoying the preview?
    Page 1 of 1