Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போய் வா... நதியலையே..!
போய் வா... நதியலையே..!
போய் வா... நதியலையே..!
Ebook182 pages1 hour

போய் வா... நதியலையே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அகத்தியா... அகத்தியா எழுந்திரிம்மா..." அமுதவல்லி போர்வைக்குள் முடங்கியிருந்த அகத்தியாவை எழுப்பினாள். அவளுடைய கண்கள் உருண்டு சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நின்றது.
 மணி காலை எட்டரை.
 அகத்தியா எழவில்லை.
 "அகத்தியா... மணி எட்டரை ஆயிட்டு. கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போகணும். எழுந்திரிம்மா..." அமுதவல்லி கனிவான குரலில் மறுபடியும் எழுப்பினாள்.
 அவளுடைய இரண்டாவது எழுப்பலுக்குப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு எழுந்து சட்டென உட்கார்ந்த அகத்தியா அமுதவல்லியை சுட்டெரிப்பதைப் போல் பார்த்தாள். அவளுடைய பார்வை பட்டதும் அமுதவல்லியின் முகம் ஒரு கணம் மாறியது.
 கட்டிலைவிட்டு இறங்கிய அகத்தியா அவளைப் பார்க்காமல் சுவரைப் பார்த்துக் கத்தினாள்.
 "காலையில் காட்டியும் சனியனே... ஏன் என் ரூமுக்கு வந்தே. உன் முகத்துல முழிக்க வேண்டியதாகிப் போச்சு. இன்னையப் பொழுது உருப்பட்டாப்லதான். நான்தான் உன்னை என் அறைக்குள்ள வராதேன்னு சொல்றேன்ல. அப்பறம் எதுக்கு வர்றே? ஒருதரம் சொன்னா உனக்கு உறைக்காதா?"
 அகத்தியாவின் அனல்பறக்கும் வார்த்தைகள் அவளைத் தாக்கி சுட்டெரித்தது. கூனிக்குறுகி கண்ணீர் கசிய நின்றாள். செய்வதறியாது. சில நிமிடங்கள் கழித்து அமுதவல்லி மெல்ல முனகினாள்.
 "கம்ப்யூட்டர் கிளாஸுக்கு நேரமாயிட்டுதேன்னுதான் எழுப்பினேன்" என்றாள்.
 சிலிர்த்துக் கொண்டு திரும்பினாள் அகத்தியா

ஆஹா... அடுத்தவங்க மேல என்ன அக்கறை? உனக்கு அடுத்தவங்க மேல உண்டான கரிசனம் ஆச்சரியமாயிருக்கே. அடுத்தவங்களைக் கெடுக்கணும். அவங்க வாழ்க்கையில மண்ணையள்ளிப் போடணுமின்னே நினைக்கிற உன் மனசுல கூட அடுத்தவங்களை முன்னேத்தனுமின்னு எண்ணம் வர்றது புதுமையா இருக்கே. எப்பயிருந்து இந்த நல்லெண்ணம் முளைச்சது? நேத்து மழை பொழிஞ்சதே அப்ப முளைச்சதா?" என்றாள் நக்கலாக.
 அமுதவல்லியின் கண்களில் துளிர்த்த கண்ணீர் பொலபொல வென உருண்டது கன்னத்தில்.
 "அகத்தியா..." ஏம்மா இப்படிப் பேசறே? நெருப்பை அள்ளி போடற மாதிரி பேசறே?"
 "நான் வார்த்தையிலதான் நெருப்பைக் கொட்றேன். அதையே உன்னால தாங்கிக்க முடியலையே? நீ எங்கம்மாவோட வாழ்க்கையிலேயே நெருப்பள்ளிக் கொட்டினியே. அதை எப்படி அவங்களால தாங்கிக்க முடியும்?"
 அவளுடைய கேள்வியில் மேலும் கூனிக்குறுகிப் போனாள் அமுதவல்லி.
 "என்னைக்கோ நடந்ததை தினமும் குத்திக்காட்டறியே அகத்தியா. இது உனக்கே நல்லாயிருக்கா?"
 "குத்திக் காட்டுவேன். நான் சாகறவரை குத்திக்காட்டுவேன். நீ சாகறவரை குத்திக் காட்டுவேன். என் மனசுல உள்ள ஆத்திரம் தீரும்வரை குத்திக் காட்டுவேன். என் உணர்வுகளைக் கொன்னவ நீ. அஞ்சு வயசுல உண்டான ரணம் இன்னும் ஆறலை. அந்த ரணம் என்னை எப்படி ஆக்கியிருக்குன்னு உனக்குத் தெரியுமா? உனக்கு எப்படி மத்தவங்களோட மனசைப் பத்தி தெரியும்? நீ பார்த்ததெல்லாம் வெறும் உடம்பைத்தானே. அந்த உடம்புக்காகத்தானே அலைஞ்சே?"
 "நீ ஒரு பொண்ணா இல்லை. எங்கப்பாவோட பணத்துக்கும் அவரோட உடம்புக்கும் ஆசைப்பட்ட நீ அவரை, ரகசியமா வச்சுக்கிட்டிருந்திருந்தா கூட எங்கம்மா செத்துருக்கமாட்டாங்க. தாலியைக் கட்டிக்கிட்டு நடுக்கூடத்துக்கு வந்தே பாரு. அதுதான் என் தாயை என்கிட்டேயிருந்து பிரிச்சுட்டு..."
 அவள் உணர்வுகள் கொந்தளிக்கக் கத்தினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223842866
போய் வா... நதியலையே..!

Read more from R.Sumathi

Related to போய் வா... நதியலையே..!

Related ebooks

Related categories

Reviews for போய் வா... நதியலையே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போய் வா... நதியலையே..! - R.Sumathi

    1

    பவித்ரனுக்கு தன்னைப்பற்றி நினைத்தாலே வெட்கமாக இருந்தது.

    எப்படியிருந்தவன் நான்? ச்சை ஏன் இப்படி மாறிப்போனேன்?

    ஒரு பெண்ணின் பொருட்டு என் உணர்வுகள் அத்தனையும் தறிகெட்டு ஓட வேண்டுமா? ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தான். அலட்சியமாகப் போனான். அவளைப் பார்த்தும் பார்க்காமல்தான் இருந்தான். ஆனால் அலட்சியமாக எதை நினைத்தானோ அதுவே வாழ்க்கையின் அவசியம் போலாகிவிட்டது. எதை உதற நினைத்தானோ அது அவனைச் சிதற வைத்துவிட்டது.

    அவள் –

    அகத்தியா.

    அழகால் கவரவில்லை. அமைதியால் கவர்ந்தவள். சுற்றுப்புற சூழ்நிலையால் பாதிக்கப்படாமல் ஒரு இயந்திரம்போல் வளையவருவது அவனை வசீகரிக்கவே செய்தது. கலகலப்பான கன்னியர்கள் மத்தியில் கடமையே கண்ணாக இருந்த அகத்தியா தனித்துத் தெரிந்தாள். கலகலவென பேசத் தெரிவில்லை. அவளுக்கு கலீரென சிரிக்கத் தெரியவில்லை. காந்தம் தேக்கிப் பார்க்கத் தெரியவில்லை. பக்கத்தில் கட்டிளம் காளை ஒருவன் அமர்ந்திருந்தாலும் ஓரப்பார்வை பார்த்து ஒருகணம் நாணப்படத் தெரியவில்லை. ஓரிரு வாக்கியங்கள் பேசினால், பதில் கூறும்போது பெண்ணுக்கே உரிய ஆர்வமான பதில்கள் அவளிடமிருந்து. வரவில்லை.

    எதிராளி ஆசையோடு பார்க்கிறான் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத ஒரு ஜடமாக அவள் இருந்தாள். பக்கத்து இருக்கையில் பவித்ரன் இருக்கும்போது சலனமில்லாமல் தன் வேலையைச் செய்கிறாள். அவளுடைய அருகாமை அவனை சிதைக்கவில்லை. சிந்திக்க வைத்தது. அவளுடைய அருகாமை ஆசையைக் கிளறவில்லை. அவளைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டியது. பிறரை சித்தம் கலங்கச் செய்யும் வயதில், பித்தம் கொள்ள வைக்கும் பருவத்தில், ஒரு புத்தனைப் போல் வந்து போகும் அவளைப் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள மனம் அலைந்தது.

    அவனுக்கு அவனால் அவன்மேலேயே வெட்கம் ஏற்பட்டது. ஒரு பெண்ணின் மேல் தனக்கு இப்படி ஒரு ஆர்வம் உண்டானதை எண்ணிச் சிரிப்பு வந்தது. ஆனால் அவளைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவளுடன் பேசிப் பழக வேண்டும் என்றும் ஆசை பிறந்துவிட்டது.

    அமைதியின் உருவமாக வளையவரும் அவளுடன் அரட்டையடித்துப் பேசும் ஆசை வந்தது. புன்சிரிப்பே என் பிரதானம் என இருப்பவளுடன் கைகொட்டிச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. உலகத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் இருப்பவளிடம் உலகத்தைப் பற்றிய விஷயங்கள் பலவற்றை பேசவேண்டும் போலிருந்தது.

    அந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் அவன் சேர்ந்த நாளிலிருந்து அங்கு பயில வரும் ஆண்கள், பெண்கள் அனைவரிடமும் சகஜமாகக் கலகலப்பாகப் பழகினான். பவித்ரன் என்றாலே கலகலப்பிற்கு பெயர் பெற்றவன்; சுறுசுறுப்பானவன்; யாருக்கும் எந்த நேரத்திலும் வந்து உதவுபவன் என்றிருந்தான்.

    அப்படிப்பட்டவனை அகத்தியா திசைதிருப்பினாள். அகத்தியா அந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் புதிதாக வந்து சேர்ந்தாள். பவித்ரன் அங்கு பயிலும் மாணவர்களிலேயே சீனியராக இருந்தான். அவனே புதிதாக வருபவர்களுக்கு சிலசமயம் கற்றும் தருவான். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பான். அதனாலேயே எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கை வந்த கலையானது. எல்லோரும் அவனை அன்புடன் ‘அண்ணா அண்ணா’ என அழைத்தனர்: பெண்கள் பேதமில்லாமல் பழகினர்.

    ஆனால் -

    அகத்தியா அவனிடம் எல்லோரையும் போல் பேசவில்லை. வந்து சந்தேகம் கேட்கவில்லை. எல்லாம் எனக்குத் தெரியும் என்பதைப் போல் ஒரு முகபாவனை அவளிடம் இருந்தது. ஒரு பொம்மையை விட கேவலமான ஜடப்பொருளைப் போல் கணிப்பொறியின் எதிரே அமர்ந்து இயக்கிக் கொண்டிருப்பாள்.

    பவித்ரனுக்கு அவளுடைய அமைதியே உலகத்தின் முக்கியமான விஷயத்தைப் போல் தோன்றியது. அவளை பேசவைக்க முயல்வதே மாபெரும் கடமையாக இருந்தது. அவளுடைய சிரிப்பைப் பார்ப்பதே அவனுடைய கண்களுக்குத் திரைப்படமாக இருந்தது.

    அவளை ஆராய்வதில் அவன் எடுத்துக் கொண்ட முயற்சியால் தெரியவந்த விஷங்கள்...

    அவள் தொழிலபதிபர் வேதரத்தினத்தின் ஒரே மகள். பணக்காரி. காரும் பங்களாவுமாக வாழ்பவள். தனது சொந்தக் காரில் கணிப்பொறி வகுப்பிற்கு வருபவள்.

    அவளுடைய அமைதியும், பிறரிடம் நடந்து கொள்ளும் பற்றில்லாத தன்மையுமே அவனை அவள்பால் ஈர்த்தது. ஆரம்பத்தில் அவளை கணிக்க மட்டுமே செய்தவன் நாளடைவில் காதலிக்கவும் செய்தான். அவளைப் பார்க்கின்றபோதெல்லாம் காதல் பெருகியது. அவளிடம் பேசிப் பழக உள்ளம் தடுத்தது. அவளுக்கு அடுத்த இருக்கையில், அமர்ந்திருந்திருக்கும் அவனால் சலனமில்லாமல் கணிப்பொறி பயில முடியவில்லை. அவளுக்குச் சந்தேகமில்லாதபோது இவனே சந்தேகத்தை கிளறிவிட்டு சந்தேகம் தீர்க்க முயல்வான். அவள் எந்தவிதச் சலனமும் இல்லாமல் கேட்டுவிட்டு தன் வேலையைத் தொடருவாள். புன்னகை சிந்தி ஒரு நன்றியை மட்டும் நவிலுவாள். அந்தப் புன்னகையும் நன்றியும் பவித்ரனுக்கு கோடிப் பொருள் கிடைத்ததைப் போலிருக்கும். ஆனால் அதுவே திருப்தியாகி விடவில்லை. அவளிடம் தன் காதலைச் சொல்லி அவளுடைய சம்மதத்தை வாங்கி தன் யமஹாவில் உட்கார வைத்துக் கொண்டு சுற்றி வரவேண்டும். மெல்ல மெல்ல காதலை வீட்டில் சொல்லி முறைப்படி பெண் பார்த்துக் கோலாகலமாய் கல்யாணம் செய்து...

    கவனிக்க ஆரம்பித்தவன் காதல் பெருகி கல்யாணம் வரை சென்று விட்டான். அவ்வளவும் கற்பனையில்தான். கனவில்தான். அவனுடைய நண்பன் முத்து அவனைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

    என்னப்பா... எப்பவும் ஒரே சிந்தனையில இருக்கே?

    ‘ஆமா! அகத்தியா பத்தின சிந்தனை’ மனதில் நினைத்தவன் சொல்லாமல் சிரித்தான்.

    என்னப்பா... கேட்டதுக்கு பதிலே சொல்லாம கோட்டையைப் பிடிக்கப் போறமாதிரி யோசனை பண்றே?

    கோட்டையை நான் எதுக்குப் பிடிக்கணும்? அகத்தியாவை எப்படிப் பிடிக்கறதுன்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன் மறுபடியும் சொல்லாமல் சிரித்தான்.

    டேய்... என்னடா என அவன் உலுக்கினான். அவன் அப்படி உலுக்கியதும்தான் கணிப்பொறி எதிரே சும்மாவே அமர்ந்து கொண்டிருப்பது அவனுக்கு உறைத்தது. இதுவரை தன்னுடைய மாறுதல்களுக்காக தானே வெட்கப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததை உணர்ந்தான். அருகில் நின்ற முத்துவை ஏறிட்டான். ஒண்ணுமில்லை! சும்மாதான் என்றான்.

    பொய், பொய் சொல்றே. க்ளாஸ் முடிஞ்சு வெளியே வா. பேசிக்கறேன் என வெளியேறினான்.

    ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு கணிப்பொறியை இயக்கியவாறே பக்கத்தில் அமர்ந்திருந்த அகத்தியாவைப் பார்த்தான். அவள், சற்று முன், முத்து அவனிடம் பேசிய பொழுதுகூட திரும்பிப் பார்க்கவில்லை. எப்படி இவளால் முடிகிறது? இப்படிப்பட்டவளிடம் எப்படிக் காதலை வெளிப்படுத்துவது? வயதுக்குரிய துடிப்புடன் விதவிதமாக உடையணிந்து அவன் வளைய வந்தான். அவளுடைய பார்வை திரும்பவில்லை.

    எப்படி என் காதலை இவளிடம் சொல்வது?

    பவித்ரனும் பணக்கார வீட்டுப் பிள்ளைதான். அவனுடைய அப்பாவும் ஒரு தொழிலதிபர்தான். அவன் இரண்டாவது மகன். மூத்தவன் அப்பாவுடன் சேர்ந்து தொழிலைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். இவன் எந்தக் கவலையும் இல்லாமல் எந்தப் பொறுப்பும் இல்லாமல் படிப்பை முடித்து விட்டு கணிப்பொறி கற்றுக் கொள்கிறான். மற்ற நேரங்களில் விளையாட்டுதான் அவனுக்கு வேலை..

    வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது முத்து, மறுபடியும் பிடித்துக் கொண்டான்.

    என்னடா... கேட்ட கேள்விக்கு பதிலையே காணோம்? என்றவாறு மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். தோளில் கைபோட்டான்.

    என்ன கேட்டே... என்று சிரித்தான் பவித்ரன்.

    வரவர ஆளே மாறிட்டே, ரொம்ப அமைதியா வர்றே, போறே என்ன விஷயம்? என்றான்.

    பவித்ரனுக்கு அவனிடம் சொல்லலாமா என்று தோன்றியது. சொல்லி ஐடியா கேட்கலாமா என நினைத்தான். பின் சொன்னான்.

    முத்து நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.

    என்ன உதவியா? நான் போய் உனக்கு உதவி செய்யணுமா? உன் கிட்ட இல்லாத பணமா? நீ ஆயிரம் பேருக்கு உதவி செய்யலாமே? ஆனா நீயே என்கிட்ட உதவி கேட்குறே? என்றான்.

    இது பண உதவி இல்லைடா.

    பின்னே?

    என் மனக்குழப்பத்திற்கு ஒரு வழி சொல்லணும்.

    என்ன மனக்குழப்பம் உனக்கு?

    நான் அகத்தியாவைக் காதலிக்கிறேன்.

    இதைக் கேட்டு உண்மையில் அதிர்ந்தான் முத்து.

    என்ன? அகத்தியாவைக் காதலிக்கிறியா? அவளைப் போயா? அவ ஒரு புத்தபிக்குன்னு சொன்னவன்? கிண்டல் பண்ணினவன் நீ. இப்ப நீயும் அவகூட சேர்ந்து புத்தபிக்குவா ஆயிட்ட. யார்கிட்டேயும் பழையபடி பேசமாட்டேங்கறே. கலகலப்பைக் காணோம். இப்ப என்னடான்னா காதலிக்கிறேன்னு சொல்றே? டேய்... அந்த ஊமையைக் கட்டிக்கிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியும்னு நீ நினைக்கிறியா? பொம்மை மாதிரி இருக்கறா. அவளைப் போய் காதலிக்கிறேங்கறியே? அவகிட்ட என்னத்துலடா நீ மயங்கினே?

    பவித்ரன் சிரித்தான்.

    அவளோட அமைதியில்தாண்டா மயங்கினேன்.

    ச்சை!

    ஏண்டா அலுத்துக்கறே. உண்மையைத்தான் சொல்றேன். எவ்வளவு அமைதியா இருக்கா பாரேன். ஆனா... மனசுக்குள்ள எனக்கு என்ன தோணுது தெரியுமா?

    என்ன தோணுது?

    அது அவளுடைய உண்மையான சுபாவம் கிடையாதுன்னு

    அவன் ஆச்சரியமாய் நிமிர்ந்தான்.

    என்ன சொல்றே?

    ஆமாம். அவளோட அமைதிக்கும், தனிமைக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு தோணுது. அவ எதனாலேயோ பாதிக்கப்பட்டிருக்கா.

    "அடப்போடா... அது ஒரு ஞானசூன்யம். சிரிக்கத் தெரியாது. பேசத் தெரியாது. நீ வேணா பாரேன். உன் காதலை அவகிட்ட சொல்லு. அவ உன்னைத் திட்டவும் மாட்டா. காதலிக்கவும் மாட்டா. அப்படியான்னு கேட்டுட்டு அவபாட்டுக்குப் போகப்போறா. காதல் உணர்வெல்லாம் வந்து தாக்குகிற ஜென்மமாடா அது? அது ஒரு மரப்பொம்மை...

    இல்லைடா முத்து... அவளோட அமைதிக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த அழகான முகத்துல ஒரு சோகம் படிஞ்சிருக்கு.

    அவ ஒரு பணக்காரி. தினம் கார்ல வந்து இறங்குறா. அது மட்டுமா... தினம் ஒரு டிரஸ். பணத்துல குளிச்சி எழுந்திரிக்கறவளுக்கு என்னடா கவலை இருக்கப் போகுது என்றான்.

    ஒரு மனிதன் மகிழ்ச்சியா இருக்கப் பணமே போதும்னு நினைக்கிறயா? பணக்காரங்களுக்கு சோகமே இருக்காதா?

    இருக்கலாம். ஆனா இவளுக்கு என்னடா? சின்ன வயசு. துள்ளித்திரிய வேண்டிய வயசுல முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு போறா. பக்கத்துல ஒரு ஆம்பளை வந்தா அவனை ஒரு ஜந்துமாதிரி அலட்சியப்படுத்திட்டும் போறா.

    பவித்ரனின்

    Enjoying the preview?
    Page 1 of 1